வேகமாக பரவும் டெல்டா வகை கொரோனா! சென்னையில் ஒருவர் பாதிப்பு! மருத்துவத் துறை செயலாளர் உறுதி!

0
210

வேகமாக பரவும், உடலில் வேகமாக செல்களில் ஊடுருவும் தன்மை கொண்ட டெல்டா வகை கொரோனா சென்னையில் ஒருவருக்கு ஏற்பட்டுள்ளது. இதை மருத்துவ துறை செயலாளர் ஜே ராதாகிருஷ்ணன் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்தியாவில் இரண்டாவது அலையே இன்னும் முடியாத நிலையில் கடும் பாதிப்புகள் ஏற்பட்டு உருமாற்றம் அடைந்த டெல்டா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

இந்து உருமாறிய வைரஸ் தடுப்பூசி மூலம் உருவான நோய் எதிர்ப்பாற்றலை தாக்கி தன்னை பாதுகாத்துக் கொள்ள உரு மாற்றமடைந்துள்ளது. கடந்த இரு மாதங்களில் மட்டும் இது 80% உருமாறி இருக்கிறது.

ஆல்பா வகையை விட டெல்டா வைரஸ் வேகமாக பரவும் தன்மை கொண்டது பிரிட்டனில் கூட புதிதாக தொற்று ஏற்படுவதற்கு 91% இந்த டெல்டா வகை வைரஸ் தான் காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

டெல்டா வைரஸ் வேகமாக பரவி அது மட்டுமில்லாமல் உடலில் வேகமாக செல்களில் ஊடுருவி இரண்டு வகை பிறழ்வுகள் ஏற்படுத்திக் கொள்கிறது. ஒன்று உடலை தாக்குவதற்கு மற்றொன்று நோய் எதிர்ப்பாற்றலை குறைக்க இரண்டு பிறழ்வுகள் ஏற்படுத்திக் கொள்கிறது.

டெல்டா மிகத் தீவிரமான பாதிப்பு களை உருவாக்கி கட்டாயமாக மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலைமை வந்துவிடும். உதாரணமாக ஒருவரிடம் இருந்து ஆல்பா வகை குரானா 4 முதல் 5 பேருக்கு பரவும் என்றால், இந்த வகை டெல்டாவை குறைந்தது 5 முதல் 8 பேருக்கு பரவும்.
உதாரணமாக ஆல்ஃபா தாக்கிய ஒருவரிடம் இருந்து தொற்று ஏற்பட்ட மூன்று முதல் நான்கு நாட்களில் 12% நோயாளிகளின் உடல்நிலை கவலைக்கிடமாக மாறிவிடும்.

இந்நிலையில் சென்னையில் உள்ள ஒருவருக்கு டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல் சொல்லி உள்ளார்.

டெல்டா வகை கொரோனா வைரஸ் சென்னையில் ஒருவருக்கு ஏற்பட்டுள்ளது. இப்பொழுதுதான் அனைத்தும் முடிந்தது என்று பெருமூச்சு விட்ட மக்களுக்கு இது ஒரு பேரிடி ஆகவே இருக்கும்.

மற்ற மாநிலங்களில் ஏற்கனவே டெல்டா பிளஸ் கோரொனா கண்டறியப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் சென்னையில் இதுவே முதல் முறை.