இந்திய அணியின் நியூசிலாந்து தொடரின் படு தோல்விக்கு பின் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, தலைவர் ரோஜர் பின்னி மற்றும் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் இணைந்து கவுதம் கம்பீர் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோருடன் 6 மணி நேரம் விவாதம் நடைபெற்றது தெரியவந்துள்ளது.
இந்திய அணி கிரிக்கெட் வரலாற்றின் 92 ஆண்டுகளில் டெஸ்ட் போட்டிகளில் சொந்த மண்ணில் ஒயிட் வாஷ் தோல்வி அடையாத நிலையில் முதல் முறையாக நியூசிலாந்து தொடரில் சொந்த மண்ணில் 0-3 என்ற ஒயிட் வாஷ் தோல்வியை அடைந்துள்ளது. 12 ஆண்டுகளுக்கு பின் டெஸ்ட் போட்டியில் சொந்த மண்ணில் தொடரை இழந்துள்ளது. இந்த தோல்வி பிசிசிஐ க்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது கம்பீர் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பின்னர் இலங்கைக்கு எதிரான தோல்வி மற்றும் நியூசிலாந்து அணிக்கு எதிரான தோல்வி குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் இந்த தோல்வி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு சிக்கலாக மாறியுள்ளது. இதனால் பயிற்சியாளர் கம்பீர் மற்றும் ரோஹித் சர்மா மீது கடும் விமர்சனம் முன் வைக்கப்பட்டது.
மேலும் தன்னிச்சையாக நிதீஷ் குமார் ரெட்டி மற்றும் ஹர்ஷித் ராணா இரு வீரர்களை தேர்வு செய்தது குறித்து விவாதம் மேற்கொள்ளப்பட்டது. அடுத்த நடக்க விருக்கும் ஆஸ்திரேலியா இந்திய அணி வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்பது குறித்து ஏற்பாடு செய்யப்பட்ட மீட்டிங் 6 மணி நேரமாக தொடர்ந்துள்ளது. ஜெய் ஷ நவம்பர் இறுதியில் ராஜினாமா செய்ய உள்ள நிலையில் சில கருத்துகள் பரிமாறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.