பெங்களூரில் கடத்தப்பட்ட சிறுமி செங்கல்பட்டு அருகே பத்திரமாக மீட்பு!
பெங்களூரை சேர்ந்த விநாயகம்(பெயர் மாற்றப்பட்டுள்ளது)என்பவரின் மகள் தனியார் பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.நேற்று முன்தினம் காலை அந்த சிறுமியின் தந்தை நடைபயிற்சிக்கு சென்றுவிட்டார்.அவரது மகள் பால் வாங்க அருகில் உள்ள கடை ஒன்றிற்கு சென்றுள்ளார்.அப்பொழுது வேனில் வந்த சில மர்ம நபர்கள் சிறுமியிடம் அவரது தந்தைக்கு அடிபட்டுவிட்டது மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்று கூறி அந்த சிறுமியை அழைத்துள்ளனர்.ஆனால் சந்தேகம் அடைந்த சிறுமியோ, இந்த செய்தியை தன் தாயிடம் தெரிவித்துவிட்டு அவரையும் அழைத்து வருவதாக கூறியுள்ளார்.ஆனால் அந்த மர்ம நபர்கள் அச்சிறுமியை வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றி உள்ளனர்.அப்பொழுது அந்த சிறுமி செய்வதறியாமல் கூச்சலிட்டு உள்ளார்.இதனால் அந்த சிறுமியின் வாய் மற்றும் கைகளை கட்டி அந்த நபர்கள்,பெங்களூரில் இருந்து தமிழகத்திற்கு வந்துள்ளனர்.பின்னர் அந்த சிறுமியை செங்கல்பட்டு அருகே உள்ள திம்மவரம் என்னும் பகுதியில் இறக்கி விட்டு சென்றுள்ளனர்.
அந்தச் சிறுமி அந்த இடத்தில் அழுது கொண்டிருந்ததை கண்டு,அங்கிருந்த ஆட்டோ ஓட்டுனர்கள் செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியை ஒப்படைத்தனர்.பின்னர் போலீசார் அந்த சிறுமியிடம் விசாரணை நடத்திய போது இரண்டு நபர்கள் தன்னை வலுக்கட்டாயமாக கடத்தி இங்கே இறக்கிவிட்டுச் சென்று விட்டதாகவும்,ஆனால் அவர்கள் தனக்கு எந்தவிதமான தொந்தரவும் கொடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.இதனை தொடர்ந்து அந்த சிறுமியை குழந்தைகள் நல காப்பகத்திடம் ஒப்படைத்தனர் காவல்துறையினர்.பின்னர் இந்தச் சிறுமியின் தந்தைக்கு தகவல் அழிக்கவே அவர் நேற்று காலை வந்து தனது மகளை பெங்களூருக்கு அழைத்துச் சென்றார்.மேலும்
முன்பகையால் சிறுமி கடத்தப்பட்டு இருக்கலாமா?சிறுமிக்கு ஏதாவது நேர்ந்ததா? என்ற கோணத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.