வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்! இனி ஓட்டுனர் உரிமம் ஆர்சி எதுவும் தேவை இல்லை!
நமது இந்தியாவில் ஏதேனும் வாகனங்கள் சாலையில் ஓட்ட வேண்டும் என்றால் கட்டாயம் ஓட்டுனர் உரிமம் என்பது முக்கியமான ஒன்று. ஓட்டுநர் உரிமம் மட்டுமின்றி அந்த வண்டியின் ஆர் சி போன்றவை எப்பொழுதும் கையில் வைத்திருப்பது அவசியம்.ஏனென்றால் பல இடங்களில் போலீசார் வாகன சோதனை இடுவர். இம்மாதிரியான சோதனைகளில் நூற்றுக்கு 35 சதவீதம் பேர் ஆர்சி மற்றும் ஓட்டுனர் இல்லாமல் பயணிப்பவர் தான் அதிகம்.மீதமுள்ள சிலர் ஓட்டுனர் உரிமம் ஆர்சி இருப்பினும் கைகளில் வைத்திருக்காமல் வீட்டிலோ அல்லது வெளியிலோ வைத்துவிட்டு மறந்து வந்துவிடுவர்.
அந்த மாதிரி சூழ்நிலைகளில் போலீசாருக்கும் பதில் கூறமுடியாமல் அபராதம் செலுத்தும் நிலை ஏற்படும். இதையெல்லாம் மாற்றும் வகையில் தற்போது டெல்லி அரசு வாகன ஓட்டிகளுக்கு ஒரு புதிய விதிமுறையை கொண்டுவந்துள்ளது.அது என்னவென்றால் வாகன ஓட்டிகள் இனி எப்பொழுதும் ஓட்டுனர் உரிமம் ,ஆர் சி போன்றவற்றை கையில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.அதற்கு பதிலாக டிஜி-லாக்கர் அல்லது எம்_பரிவாஹன் போன்ற ஆப்க்களை அவர்களது மொபைல் போனில் இறக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.அந்த ஆப்களிள் இவர்களுடைய சான்றிதழ்களை பூர்த்திசெய்து கொள்ள வேண்டும்.
போலீசார் சோதனையிடும் பொழுது இந்த ஆப்பிகளிள் உள்ள சான்றிதழ்களை காட்டினால் போதுமானது என்று கூறியுள்ளனர்.மேலும் இந்த ஆவணங்களை போக்குவரத்து மற்றும் அமலாக்கப் பிரிவு காவல்துறையினர் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும் கூறியுள்ளனர்.அதேபோல ஓட்டுனர் உரிமம் மற்றும் ஆர் சி போன்றவை வேறு எந்த வடிவில் இருந்தாலும் அவைகள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்றும் தெரிவித்துள்ளனர்.இதன் மூலம் பல வாகன ஓட்டிகள் பயனடைவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தற்பொழுது டெல்லியில் உள்ளதை போன்றே கூடிய விரைவில் மற்ற மாநிலங்களுக்கும் இந்த நடைமுறை கொண்டு வரப்படும் என்றும் கூறுகின்றனர்.