அமைச்சர் சொன்ன நற்செய்தி! மகிழ்ச்சியில் மாணவர்கள்!

0
120

கடந்த கல்வி ஆண்டில் சுமார் 2 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க வில்லை. அதனால் அந்த மாணவர்களுக்கு கைக்கணினி வழங்கப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.

 

அரசு பள்ளிகளில் பயிலும் ஒவ்வொரு பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் பல்வேறு ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் பல மாணவர்கள் உதவி பெறுகிறார்கள். கடந்த ஆண்டில் சுமார் 2 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க வில்லை என்று புகார் எழுந்த நிலையில், அந்த மாணவர்களுக்கு கைக்கணினி வழங்கப்படும் என்று அமைச்சர் பொய்யாமொழி அன்பில் மகேஷ் அவர்கள் கூறியுள்ளார்.

 

கிவ் டூ ஏசியா மற்றும் கிராமாலயா தொண்டு நிறுவனம் திருச்சியில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு வெண்டிலெட்டர்கள், செறிவூட்டிகள், குளிர்சாதன பெட்டி, டிஜிட்டல் வெப்பமானிகள், நீராவிக் கருவிகள், 1 லட்சம் கையுறைகள் என ரூ.73 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்களை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பொய்யாமொழி அன்பில் மகேஷ் கலந்து கொண்டுள்ளார்.

 

அதில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் பேட்டியில், கடந்த கல்வி ஆண்டில் சுமார் 2 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க வில்லை. திமுக தேர்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்ட மாணவர்களுக்கு கைக்கணினி வழங்கும் திட்டத்தின் மூலம் அந்த 2 லட்சம் மாணவர்களுக்கு கைக்கணினி வழங்கப்படும். இப்பொழுது அனைத்தும் ஆன்லைன் வகுப்புகள் ஆக இருப்பதால் இது மாணவர்களுக்கு பெருமளவில் உதவும் என்று அவர் கூறியுள்ளார்.