இந்த இருநாடுகளுக்கும் உதவ தயாரா இருக்கிறேன் – டிரம்ப்

0
193
இந்தியாவிடம் சீனா அத்துமீறலில் ஈடுபடுகிறதா? என டிரம்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது . இதற்கு பதிலளித்த டிரம்ப், இல்லை என்று நம்புகிறேன். ஆனால்,  ஆனால் அவர்கள் (சீனா) நிச்சயமாக அதற்கு போகிறார்கள். நிறைய பேர் புரிந்துகொள்வதை விட அவர்கள் மிகவும் வலுவாக செல்கிறார்கள்” என்றார். இந்த நிலையில், இந்தியா- சீனா இடையேயான எல்லைப் பிரச்சினையில் இருநாடுகளுக்கும் உதவ தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த டிரம்ப் இவ்விவகாரம் குறித்து பேசுகையில், “ இந்தியா – சீனா இடையேயான எல்லை பிரச்சினை மிகவும் மோசமாக உள்ளது.  சீனர்கள் எல்லைப் பிரச்சினையில் மிகவும் வலுவாக செல்கின்றனர். சீனா – இந்தியா ஆகிய இருநாடுகளுக்கும் எல்லைப் பிரச்சினையில் உதவ தயாராக இருக்கிறோம். இருநாடுகளிடமும் இது பற்றி தொடர்ந்து பேசி வருகிறோம்” என்றார்.
Previous articleகொலம்பியாவில் ஏழு லட்சத்தை நெருங்கி வரும் கொரோனா பாதிப்பு
Next articleஇந்த வைரஸ் ஒன்றும் அவ்வளவு கொடியது அல்ல

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here