பயங்கர பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் சுதந்திர தின விழா! போலீசார் செய்யும் செயல்!
ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர விழா நம் நாட்டில் கொண்டாடப் படுகிறது. அந்த வகையில் இது நமக்கு 75 வது சுதந்திர தினமாகும். அதே போல் இந்த ஆண்டும் நாடு முழுவதும் சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இந்த சுதந்திர தின விழாவை முன்னிட்டு அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுப்பதற்காக, டெல்லி முழுவதும் பாதுகாப்புகள் மிகவும் பலப்படுத்தப்பட்டுள்ளன.
இரவு பகலாக போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். டெல்லியில் உள்ள தங்கும் விடுதிகளில் கூட சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. உரிய அடையாள அட்டை இல்லாமல் சிம் கார்டுகள் வழங்கக்கூடாது என்று செல்போன் நிறுவனங்களுக்கும், போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் வாடகை வீடுகளில் வீட்டு உரிமையாளர்கள் உரிய அடையாள சான்று வைத்திருக்கின்றனரா? என்று சோதிக்கவும், டெல்லி போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
அதன் ஒரு பகுதியாக போலீசார் தீவிர சோதனையில் டெல்லி முழுவதும் அந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் மூலம் முழுமையாக சோதனை செய்யப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுகின்றன. அதேபோல் இரவு ரோந்து பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத் தகுந்தது. அதே போல் எல்லை பகுதியிலும் பாதுகாப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதிலும் தீவிரவாதிகளின் பல சதி செயல்கள் அரங்கேற்றி வருவதால் போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளையெல்லாம் செய்து வருகின்றனர். இதே போல் இமாச்சல் பிரதேசத்திலும் ஏதோ ஒரு பயங்கரவாதியின் மிரட்டல் காரணமாக பனிரெண்டாம் தேதியே அனைத்து அமைச்சர்களும் சேர்ந்து கொடியேற்றியதும் குறிப்பிடத்தக்கது.