அருணாசலபிரதேசத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து தமிழக ராணுவ வீரர் பலி
வடகிழக்கு மாநிலமான அருணாசலப் பிரதேசத்தில் ராணுவ மையம் செயல்பட்டு வருகிறது. இந்த ராணுவ மையத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான ராணுவ வீரர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த ராணுவ மையத்திலிருந்து நேற்று காலை ராணுவ மேஜர் மற்றும் லெப்டினன்ட் அதிகாரி, என இருவர் அருகிலுள்ள அசாம் மாநிலத்தின் மிஸ்ஸாமாரி பகுதிக்கு விமானத்தில் சென்றனர். விமானத்தை இயக்குவதற்கு யாரும் இல்லாததால் அவர்களாகவே விமானத்தை இயக்கி குறிப்பிட்ட பகுதிக்கு செல்ல ஆயத்தமாகினர்.
இராணுவிமானத்தில் தமிழகத்தை சேர்ந்த ஜெயன்ந்த் என்ற அதிகாரியும் உடனிருந்தார். விமானம் சரியாக நேற்று காலை 9 மணிக்கு கிளம்பியது. அதன் பின்னர் 9-15 மணிக்கு திடிரென்று கட்டுபாட்டு மையத்துடனான தொடர்பை இழந்தது, இந்நிலையில் மன்டலா என்ற கிராமத்தின் மேலே பறந்த போது திடிரென விபத்துக்குள்ளானது.
இந்த விபத்து குறித்து அப்பகுதி கிராம மக்கள் ராணுவத்திற்கு அளித்த தகவலை தொடர்ந்து, விமானத்திலிருந்து பெறப்பட்ட கடைசி தகவல் எப்பகுதிலிருந்நு பெறப்பட்டது என்பதை வைத்து ராணுவ வீரர்கள் கிராம மக்கள் அளித்த தகவலின் படி, விபத்து நடைபெற்ற இடத்திற்கு மதியம் 12-30 மணிக்கு சென்று ஆய்வு நடத்தினர்.
இந்த விபத்தில் ஹெலிகாப்டர் முழுவதுமாக கருகிய நிலையிலும், அதில் பயணம் செய்த இரண்டு ராணுவ அதிகாரிகள் உடல் கருகிய நிலையில் கண்டதை ராணுவ அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த அதிகாரிகளின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு, பெயர்கள் கண்டறியப்பட்டது.
ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் பலியான லெப்டினனட் ரெட்டி என்பவர் விமானத்தை இயக்கியவர் என்பதும், மற்றொருவர் பெயர் மேஜர் ஜெயன்ந்த் என்பதும் இவர் விமானம் இயக்குவதற்கு உதவியாக செயல்பட்டார் என்பதும் தெரியவந்தது.
இந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்து குறித்து ராணுவ தலைமை அதிகாரிகள் தற்போது தீவிரமாக விசாரித்து வருகின்றனர், மேலும் இந்த விபத்தில் பலியான ஜெயன்ந்த் என்ற அதிகாரி, தமிழகத்தில் உள்ள தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது ராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்டாலா என்ற பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் பறந்த போது தான் அதன் கட்டுபாட்டு மையத்துடனான தொடர்பை எப்படி இழந்தது, தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று ராணுவ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
நேற்று நடைபெற்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் உடல் கருகிய நிலையில் உடலை மீட்டிருப்பது, அவரது குடும்பத்தாருக்கு பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.