புதிய உச்சத்தை தொட காத்திருக்கும் இந்தியாவின் பொருளாதாரம்!

0
152

இந்திய பொருளாதாரம் ஜூன் காலாண்டில் வரலாற்று உச்சத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இருந்தாலும் இந்த வளர்ச்சி நாட்டின் பொருளாதார வளர்ச்சிப் பாதையை பலிக்காது என்றும் பங்குச் சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.ஏப்ரல்-ஜூன் காலாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 20 சதவீதம் வரையில் ஏற்றம் காணும் என்று ரீயூடர்ஸ் தளத்தில் 40 பொருளாதார வல்லுனர்கள் இணைந்து கணித்திருக்கிறார்கள். அதேபோல எஸ்பிஐ வங்கியின் ஒரு அறிக்கையில் நாட்டின் பொருளாதாரம் இந்த காலகட்டத்தில் 18.5 சதவீதம் வரையில் வளர்ச்சி அடையும் என்று தெரிவித்துள்ளது.

அதோடு ரிசர்வ் வங்கி ஜூன் காலாண்டு பொருளாதார வளர்ச்சி அளவீட்டை 26.2 சதவீதத்திலிருந்து 21.4 சதவீதமாக குறைந்திருக்கிறது. அதேபோல இந்தியா ரெடிங்ஸ்& ரிசர்ச் ஜூன் காலாண்டில் நாட்டின் வளர்ச்சி 9.4 சதவீதமாக இருக்கும் என்று கணித்து இருக்கிறது.சென்ற நிதி ஆண்டில் இதே காலாண்டில் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி யாரும் எதிர்பார்க்காத விதத்தில் நோய்த்தொற்று மற்றும் நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் உள்ளிட்டவற்றின் மூலமாக 24.4 சதவீதம் வரையில் சரிந்து இருந்தது.

இதனை ஒப்பிட்டுப் பார்க்கும்போது தற்சமயம் நாட்டின் பொருளாதாரம் 20 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியை காணக் கூடும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. இது low base effect அடிப்படையிலான வளர்ச்சி தான் என்பதை முதலில் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அளவீடுகள் பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஒரு சில அதிர்வுகளை எதிர்பார்க்கப்படுகின்றது இந்த தரவுகள் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கும் முக்கிய காரணியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.அதேபோல இந்தியாவில் ஜூன் காலாண்டில் ஆர்டிஓ கலெக்சன் மின்சார பயன்பாடு போக்குவரத்து ஜிஎஸ்டி வரி வசூல் பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாடு அளவு உள்ளிட்ட அனைத்து காரணிகளும் வளர்ச்சி அடைந்து நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் முக்கிய காரணமாக அமைந்து உள்ளது.

அதோடு இந்திய பொருளாதாரம் ஜூன் காலாண்டில் 20 சதவீதம் வரையிலான வளர்ச்சியை கண்டால் இந்தியா மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருவதை உறுதி செய்வதாக எடுத்துக்கொள்ளலாம் இருந்தாலும் அரசு வெளியிடும் தரவுகளில் நாட்டின் பொருளாதாரத்தின் நிலை என்ன மார்ச் காலாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி அளவீடு 1.6 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.