ரயில்வேயில் புதிய வழிமுறை அறிமுகம்! இனி இவர்களின் சிரமம் குறையும்!

0
158
Introducing a new method in the railways! Now their difficulty will decrease!

ரயில்வேயில் புதிய வழிமுறை அறிமுகம்! இனி இவர்களின் சிரமம் குறையும்!

இன்று மதுரை ரயில்வே கோட்ட அலுவலகத்தில் சிறப்பு கூட்டம் நடைபெறுகின்றது.அந்த கூட்டத்தில் வர்த்தகர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் பார்சலை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு அனுப்புவதற்கு மிகுந்த சிரமம் கொள்கின்றனர்.அதனால் அவர்களின் சிரமத்தை குறைக்கும்  வகையில் இந்திய ரயில்வேயும் இந்திய தபால் துறையும் இணைந்து ரயில்வே பார்சல் சர்வீஸ் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சூரத் வாரணாசி இடையே தப்தி கங்கா எக்ஸ்பிரஸ் ரயிலில் இந்த சேவை நடைபெற்று வருகிறது.இதில் தபால் துறை வாடிக்கையாளர்களிடமிருந்து சரக்குகளை பெற்று ரயில் மூலம் அனுப்ப ஏற்பாடு செய்யப்படும்.

பின்னர் பார்சல் சேரும் ரயில் நிலையத்திலும் ரயிலில் வரும் பார்சலை பெற்று வாடிக்கையாளரிடம் தபால் துறையே ஒப்படைக்கும் வசதியும் இருக்கின்றது.மேலும் சென்னை,மதுரை,கோவை போன்ற பெரிய நகரங்களில் அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் நடிப்பெற்று வருகின்றது.இதனால் வாடிக்கையாளர்கள் பார்சல் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு அனுப்புவதில் சிரமம் ஏற்படாமல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.