யசோதா படக்குழுவினரோடு சமந்தா மோதல்?… இதுதான் காரண்மா?

0
284

யசோதா படக்குழுவினரோடு சமந்தா மோதல்?… இதுதான் காரண்மா?

சமந்தா நடித்துள்ள யசோதா மற்றும் சகுந்தலம் ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்து பிரபலமானார். இவர் பிரபல தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு பதிப்பில் இணைந்து நடித்த போது நட்பாகி அந்த நட்பு காலப்போக்கில் காதலாக மலர்ந்தது. அதையடுத்து திருமணம் செய்துகொண்டு சில ஆண்டுகளிலேயே கருத்து வேறுபாட்டால் பிரிந்தனர்.

இதையடுத்து தற்போது அவர் சினிமாவில் மீண்டும் பிஸியாக நடிக்க ஆரம்பித்துள்ளார். அவர் நடிப்பில் யசோதா மற்றும் ஷகுந்தலம் ஆகிய திரைப்படங்கள் அடுத்து ரிலீஸூக்கு காத்திருக்கின்றன. சில வாரங்களுக்கு முன்னர் ஷகுந்தலம் திரைப்படம் நவம்பர் 4ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு ஆனால் பின்னர் அந்த தேதியில் ரிலீஸாகாது என அறிவித்தனர்.

இந்நிலையில் இப்போது யசோதா திரைப்படம் நவம்பர் 12 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவித்துள்ளனர். இந்த படக்குழுவோடு சமந்தா மோதலில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியுள்ளன. இந்த படத்துக்காக சமந்தா தானே தனது சொந்தக் குரலில் டப்பிங் பேசவேண்டும் எனக் கேட்டுள்ளாராம். ஆனால் வழக்கமாக சமந்தாவுக்கு தெலுங்கில் பாடகி சின்மயிதான் டப்பிங் பேசுவார். இதனால் சமந்தாவின் முடிவுக்கு அவர்கள் தயங்க, இதனால் கோபமான சமந்தா படக்குழுவோடு சண்டை போட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Previous articleதீபாவளிக்குப் பிறகும் ஓடும்… வேற லெவலில் மாஸ் காட்டும் பொன்னியின் செல்வன்!
Next articleநீங்க இந்த ராசியா? அப்படின்னா இன்னைக்கு பணமழை தான் போங்க!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here