உங்களின் தொண்டை கரகரப்பாக இருக்கின்றதா? அதை குணப்படுத்த இதோ இரண்டு வழிமுறைகள்!!

0
173
#image_title

உங்களின் தொண்டை கரகரப்பாக இருக்கின்றதா? அதை குணப்படுத்த இதோ இரண்டு வழிமுறைகள்!!

நமக்கு சளி பிடித்திருந்தால் நம்முடைய தொண்டை கரகரப்புத் தன்மை கொண்டதாக மாறும். ஒரு சில சமயங்களில் தண்ணீர் மாற்றி குடிக்கும் பொழுது தொண்டை கரகரப்பாக மாறும். அதே போல ஒரு சிலருக்கு திடீர் பருவநிலை மாற்றம் காரணமாக சளி பிடித்து பின்னர் தொண்டை கரகரப்பாக மாறும்.

இதற்கு உடனே நாம் ஆங்கில மருந்துகள் வாங்கி பயன்படுத்த தேவையில்லை. இந்த தொண்டை கரகரப்பு நீங்குவதற்கு இந்த பதிவில் இரண்டு மருத்துவ முறைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

மருத்துவ முறை 1…

தேவையான பொருட்கள்…

* பொடித்த பனங்கற்கண்டு
* அதிமதுரப் பொடி
* தேன்
* பால்

செய்முறை…

ஒரு டம்ளர் அளவிலான காய்ச்சிய பாலில் பொடித்த பனங்கற்கண்டு, அதிமதுரப் பொடி, தேன் இவற்றை சேர்த்து நன்கு கலக்க வேண்டும். பின்னர் இதை அப்படியே குடித்தால் தொண்டை கரகரப்பு சரியாகி விடும்.

மருத்துவ முறை 2…

தேவையான பொருட்கள்…

* சுக்கு
* மிளகு
* தேன்
* திப்பிலி

செய்முறை…

முதலில் சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்றையும் வறுத்து பொடியாக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் இந்த பொடியை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் தொண்டை கரகரப்பு நீங்கும்.