வெண்ணெய் எப்படி உருகுகிறதோ அதைப்போல ராம நாம ஜெபத்தால் ஆஞ்சநேயரும் தன் உள்ளம் உருகுகிறார் என செல்லப்படுகிறது. வெண்ணெய் குளிர்ச்சி தருவதாகும், போர்க்களத்திலே வீர ஹனுமான் பாறைகளையும், மலைகளையும், பெயர்த்தெடுத்து கடுமையான போர் புரிந்தார்.
அவர் கடுமையாக போர் புரிந்ததின் விளைவாக அவருடைய உடலுக்கு குளிர்ச்சி ஏற்பட வேண்டும் என்பதற்காக வெண்ணெய் சாத்தி வழிபட்டு வருகிறோம். ஹனுமன் போர்க்களத்தில் மூர்க்க குணம் கொண்ட அரக்கர்களை தன்னுடைய உடல் வலிமை காரணமாக, வடை தட்டுவதைப் போல தட்டி துவம்சம் செய்தவர்.
ஆகவே தான் கொழுப்பு சத்து நிறைந்த உளுந்தை சேர்த்து அவருக்கு வடை மாலை செய்து சாத்துகிறார்கள்.