மானம் ரோசம் உள்ளவராக இருந்தால் சம்பளத்தை திருப்பி தர வேண்டும்! அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி!

0
287

அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் எஸ்.வி.சேகர் க்கும் இடையே அவ்வப்போது கடும் வாக்கு வாதம் நிகழ்ந்த வண்ணம் இருக்கிறது.

அண்மையில் மத்திய அரசு கொண்டு வந்த புதிய கல்விக் கொள்கையில் உள்ள மும்மொழி கொள்கையை தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது,இருமொழிக்கொள்கையே தொடரும் என்று முதல்வர் எடப்பாடி பயனிசாமி அறிவித்திருந்தார் இதற்கு எதிராக கருத்து தெரிவித்த எஸ்.வி.சேகர் அதிமுகவின் கொடியில் இருந்து அண்ணாவின் நீக்கி எம்ஜிஆர்,ஜெயலலிதா படத்தை வைத்து அனைத்திந்திய அம்மா திராவிட முன்னேற்ற கழகம் என்று பெயரை வையுங்கள் அப்பதான் அதிமுக உருப்படும் அப்பதான் நீங்க திரும்ப வருவதற்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த கருத்துக்கு இன்று பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார் எஸ்.வி.சேகர் மானம் ரோசம் உள்ளவராக இருந்தால் அதிமுக எம்.எல்.ஏ வாக அவர் 5 ஆண்டுகள் பெற்ற சம்பளம் மற்றும் பென்சனை திருப்பி தர வேண்டும்.எஸ்.வி.சேகர் தருவரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.மானம் ரோசம் உள்ளவராக இருந்தால் சம்பளத்தை திருப்பி தர வேண்டும்! அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி!

ஏற்கனவே ஒருமுறை பெண் பத்திரிகையாளர் ஒருவரின் கன்னத்தில் ஆளுநர் கை வைத்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து ஆளுநர்க்கு அந்த பெண் பத்திரிக்கை யாளர் கடிதம் எழுதினார் அதன் பின் ஆளுநரும் மன்னிப்பு கடிதம் எழுதி இருந்தார் அப்போது எஸ்.வி. சேகர் அந்த பெண் பத்திரிக்கையாளரை விமர்ச்சித்தும் பத்திரிக்கையாளர்களை தரக்குறைவான வார்த்தைகளாலும் பேசினார்.

இதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர்களை தரக்குறைவாக பேசியிருப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது இது தொடர்பாக பத்திரிகையாளர்கள் புகார் அளித்தால், அவர்கள் மீது வழக்கு பதியப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கப்படும் மேலும் ,தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் சமூக வலையதளங்களில் பேசிவரும் எஸ்.வி சேகர் சைபர் சைக்கோ என விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleஎம்.எஸ் தோனி சாதனையை முறியடித்து இங்கிலாந்து கேப்டன் மோர்கன் உலக சாதனை
Next articleபிரபல பாடகருக்கு கொரோனாவா? யாரும் என்னை தொடர்பு கொள்ள வேண்டாம்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here