இந்தியாவுடன் இணைய… தன்னுடைய விருப்பத்தை தெரிவித்த வார்னர்!

0
199

இந்தியாவுடன் இணைய… தன்னுடைய விருப்பத்தை தெரிவித்த வார்னர்!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் டேவிட் வார்னர் தற்போதைய ஆஸ்திரேலிய அணியின் மூத்த வீரரும் மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் ஆவார். ஐபிஎல்-லில் தன்னுடைய அபாரமான ஆட்டத்தால், இந்தியாவில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார் டேவிட் வார்னர்.

ஐபிஎல்லில் 2014ம் ஆண்டிலிருந்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ஆடிவந்த ஆஸ்திரேலிய அதிரடி வீரரான டேவிட் வார்னர், 2016 ஐபிஎல்-லில் சன்ரைசர்ஸ் அணிக்கு ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்தார். சன்ரைசர்ஸ் அணிக்கு தனது அபாரமான பேட்டிங் மற்றும் கேப்டன்சியின் மூலம் ஏராளமான வெற்றிகளை பெற்றுக்கொடுத்தவர் வார்னர்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் ஐ.பி.எல் தொடர்களின் மூத்த வீரராகவும் திகழ்கிறார். இதுவரை 150 ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடி 5449 ரன்கள் குவித்துள்ள அவர், அதிக ரன் குவித்த வீரர்களின் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளார்.

டேவிட் வார்னர்  ஐ.பி.எல்.தொடரில் 50 அரை சதங்கள் அடித்து புதிய சாதனையும் படைத்துள்ளார். இந்நிலையில் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீயுடனான கலந்துரையாடல் ஒன்றில் அவர் பேசுகையில்:

ஐபிஎல் உலகின் சிறந்த போட்டித் தொடர். நான் இந்தியாவுக்கு செல்லும்போது, உலகின் சிறந்த போட்டியில் விளையாடுவதை பார்க்கிறேன். டெஸ்ட் அல்லது ஒருநாள் போட்டியாக இருந்தாலும், பயிற்சி மற்றும் நுண்ணறிவு எனக்கு நிறைய கிடைக்கிறது.

இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்யும் போதெல்லாம் உள்ளூர் மக்களின் வரவேற்பால் மகிழ்ச்சி அடைகிறேன். இந்திய ஆதரவாளர்களிடமிருந்து கிடைத்த ஆதரவு அமோகமானது. எதிர்காலத்தில் இந்தியாவில் விளையாட்டு மேம்பாட்டிற்காக இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்.

இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளாக என் குடும்பத்தையும்  என்னையும் வெளிப்படையாக இருகரம் நீட்டி வரவேற்றுள்ளனர். நான் வெளியே செல்வதையும், அங்குள்ள மக்களைச் சந்திப்பதையும் விரும்புகிறேன். உள்ளூர் மக்களுடன் இணைந்திருப்பது எனக்குப் பிடிக்கும். அவர்கள் எனக்கு அவ்வளவு கொடுத்திருக்கிறார்கள். நாங்கள் இந்தியாவுக்கு கடன் பட்டிருக்கிறோம் என்று நினைக்கிறேன். இவ்வாறு வார்னர் கூறியுள்ளார்.

Previous articleவிஜய் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ள இயக்குனர்!
Next articleபள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறையா? விரைவில் வெளியாகிறது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here