வாகன ஓட்டிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பெட்ரோல் டீசல் விலை!

0
188

இந்தியாவைப் பொறுத்தவரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து நாள்தோறும் நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில் பெட்ரோல் டீசல், விலை நாள்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை இந்திய எண்ணெய் நிறுவனங்களால் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஆக இருந்து வரும் இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் போன்ற பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்யப்பட்டு வருகின்றன. நோய்த்தொற்று காரணமாக, கடந்த மார்ச் மாதம் முதல் மே மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படாமல் இருந்தது.இந்த சூழ்நிலையில் ஜூன் மாதம் முதல் இந்த எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் உயர்த்த தொடங்கிவிட்டனர்.

இந்த சூழ்நிலையில், சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை சற்று அதிகரித்து இருக்கின்றது. பெட்ரோல் ஒரு லிட்டர் 23 காசுகள் உயர்ந்து 98 ரூபாய் 14 காசுக்கும் டீசல் ஒரு லிட்டருக்கு 67 காசுகள் உயர்ந்து 92 ரூபாய் முப்பத்தி ஒரு காசுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை நிலவரம் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்து இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

Previous articleமறுத்து பேசியதால் பெண்ணுக்கு சூடு வைத்த கொடுமை! தாய் மீது சிறுமி கொடுத்த புகார்!
Next articleமக்களுக்கு மகிழ்ச்சி செய்தி! மின் கட்டணம் கட்ட தேவையில்லை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here