வீட்டில் தங்கம் குவிந்து கொண்டே இருக்க இந்த பொருட்களை நகைகளுடன் சேர்த்து வையுங்கள்!!

0
37
#image_title

வீட்டில் தங்கம் குவிந்து கொண்டே இருக்க இந்த பொருட்களை நகைகளுடன் சேர்த்து வையுங்கள்!!

நம் அனைவருக்கும் வாழ்க்கையை நகர்த்த பணம் இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது.இந்த பணத்தை முதலீடு செய்தால் எதிர்கால வாழ்க்கைக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று நினைப்பவர்கள் தங்கத்தில் தான் அதிகளவில் முதலீடு செய்கின்றனர்.இந்த தங்கத்தின் விலை தினந்தோறும் அதிகரித்து கொண்டே இருக்கிறது.இதனால் தங்கத்தில் முதலீடு செய்வதினால் நமக்கு எப்பொழுதும் லாபம் கூடி கொண்டே தான் இருக்கும்.

இந்நிலையில் இந்த தங்கத்தை பெருக்க சில வழிகளை கடைபிடிப்பதன் மூலம் வீட்டில் அதிகளவில் செல்வம் தடை இன்றி சேர்ந்து கொண்டே இருக்கும்.

வீட்டில் தங்கம் அதிகளவில் சேர்ந்து கொண்டே இருக்க வழிகள்:-

*வீட்டில் பணம் அல்லது தங்க நகைகளை ஒரு சிவப்பு நிற துணியில் வைத்து அதற்கு உரிய மரியாதை தர வேண்டும்.அப்பொழுது தான் தங்கம்,பணம் வீட்டில் நிறைந்து காணப்படும்.

*வாசனை நிறைந்த பொருளான பச்சை கற்பூரத்தை செல்வம் இருக்கும் பெட்டியில் வைப்பதினால் அவை குறையாமல் கூடிக் கொண்டே இருக்கும்.காரணம் பச்சை கற்பூரம் மகா லட்சுமி தாயாருக்கு பிடித்த பொருளாகும்.இதை நகை பெட்டிகளில் வைப்பதன் மூலம் செல்வதை அள்ளி கொடுக்கும் மகா லட்சுமி தயார் செல்வங்களில் நிறைந்து காணப்படுவார்.இதனால் செல்வம் பெருகி கொண்டே இருக்கும்.

*அதோபோல் அதிக வாசனை நிறைந்த பூஜை பொருட்களில் ஒன்றான துளசி இலைகளை நகை பெட்டியில் வைப்பதன் மூலம் செல்வம் சேர்ந்து கொண்டே இருக்கும்.

*அதேபோல் ஏலக்காய்,இலவங்கம்,பிரிஞ்சி இலை,சோம்பு உள்ளிட்டவற்றை நகைப் பெட்டி மற்றும் பணப் பெட்டியில் வைப்பதினால் வீட்டில் செல்வம் நிறைந்து காணப்படும்.

*வாசனை நிறைந்த இந்த பொருட்களில் துளசி சில தினங்களில் வாடிவிடும் தன்மை கொண்டது.எனவே இந்த துளசி இலைகளை மட்டும் வாடும் பொழுது மாற்றி விட வேண்டும்.அதேபோல் பச்சை கற்பூரம் கரைந்த உடன் அதனை மீண்டும் வாங்கி நகைப் பெட்டியில் வைக்க வேண்டும்.

*அதேபோல் தங்கம் வாங்கி வந்த உடன் அதனை அணியவோ அல்லது நகை பெட்டியில் வைக்க கூடாது.அதை முதலில் மஞ்சள் கலந்த தண்ணீரில் சிறிது நேரம் வைத்து விட்டு பிறகு தான் பயன்படுத்த வேண்டும்.