Kerala Recipe: சுவையான ரெட் மீன் குழம்பு கேரளா ஸ்டைலில் செய்வது எப்படி?
கேரள மக்கள் விரும்பி உண்ணும் ரெட் மீன் குழம்பு அதே சுவையில் செய்வது குறித்து சொல்லப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்:-
1)மீன் – 1/2 கிலோ
2)சின்ன வெங்காயம் – 10
3)பூண்டு பற்கள் – 10
4)இஞ்சி – 1 துண்டு
5)தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு
6)கடுகு – 1/2 தேக்கரண்டி
7)வெந்தயம் – 1/4 தேக்கரண்டி
8)காஷ்மீரி மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
9)மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
10)கொத்தமல்லி தூள் – 1/2 தேக்கரண்டி
11)கறிவேப்பிலை – 1 கொத்து
12)குடம் புளி கரைசல் – 1/2 கப்
செய்முறை:-
ஒரு கிண்ணத்தில் குடம் புளி சேர்த்து சூடான நீர் ஊற்றி 15 நிமிடங்களுக்கு ஊற விடவும்.
அதன் பின்னர் பூண்டு, வெங்காயம் மற்றும் இஞ்சியை தோல் நீக்கி உரலில் போட்டு இடித்து எடுத்துக் கொள்ளவும்.
பின்னர் அடுப்பில் ஒரு வாணலி வைத்து தேவையான அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் வெந்தயம்,கடுகு சேர்த்து பொரிய விடவும்.
பின்னர் கறிவேப்பிலை,இடித்த சின்ன வெங்காயம்,பூண்டு,இஞ்சி சேர்த்து வதக்கவும்.பிறகு
மஞ்சள்தூள் மற்றும் கொத்தமல்லி தூள் சேர்த்து பச்சை வாடை நீங்கும் வரை மிதமான தீயில் வதக்கவும்.
அதன் பின்னர் காஷ்மீரி மிளகாய் தூள் மற்றும் ஊறவைத்த குடம்புளி கரைசலை ஊற்றி 10 நிமிடங்கள் குறைவான தீயில் வேக விடவும்.
குழம்பு நன்கு கொதித்து வந்ததும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிண்டவும்.பிறகு மீன் துண்டுகளை போட்டு 2 நிமிடங்கள் குழம்பை கொதிக்க விட்டு இறக்கினால் சுவையான ரெட் மீன் குழம்பு ரெடி.