மீண்டும் கசிந்த +2 வினாத்தாள்! பள்ளிக்கல்வித் துறை ஆணையர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

0
181

தமிழ்நாட்டில் எதிர்வரும் 17ஆம் தேதி நடைபெறவுள்ள 10ம் வகுப்பு திருப்புதல் தேர்வுக்காண ஆங்கில வினாத்தாள் இணையதளத்தில் கசிந்திருக்கிறது. இன்று நடைபெறவுள்ள 12ஆம் வகுப்பு உயிரியல் பாட வினாத்தாள் கசிந்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

ஏற்கனவே 12ம் வகுப்பு வினாத்தாள்கள் கடந்த 2 நாட்களாக கசிந்து வந்த சூழ்நிலையில், மீண்டும் ஒருமுறை வினாத்தாள் கசிந்திருப்பது அதிர்ச்சியை உண்டாக்கியிருக்கிறது.

இந்த சூழ்நிலையில், தமிழக அரசின் பார்வைக்கு இந்த விவகாரம் செல்ல, தமிழக அரசு அதிரடி முடிவொன்றை அறிவித்திருக்கிறது. திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் வெளியாகியிருந்தாலும் தேர்வு அட்டவணையில் எந்தவிதமான மாற்றமுமி ல்லை என்று பள்ளிக் கல்வித்துறை ஆணையர் அறிவித்திருக்கிறார்.

அதோடு வினாத்தாள்கள் வெளியானது குறித்து 2 தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளவிருப்பதாக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் விளக்கமளித்திருக்கிறார்.அதோடு வினாத்தாள் வெளியாகியிருப்பது குறித்து 2 பள்ளிகள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறியிருக்கிறார்.

Previous articleவீட்டு வாடகை கொடுக்க பணமில்லை! வறுமையால் தற்கொலை செய்துகொண்ட 2 நபர்கள் விழுப்புரத்தில் சோகம்!
Next articleஅடப்பாவமே கழிவறை கதவு என நினைத்து விமானத்தின் கதவை திறக்க முயன்ற பயணி! காபி கோப்பையால் அடித்த விமான பணியாளர் நடுவானில் பரபரப்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here