இப்படியும் உயிர் போகும்! அதனுடன் இதை சேர்த்ததால் வந்த வினை!
தமிழகத்தில் ஏப்ரல் 10 ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளதால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக மதுப்பிரியர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.இதன் காரணமாக ஓரகடம் அருகில் உள்ள குன்ன வாக்கம் பகுதியில் சங்கர்(40) என்ற கூலி தொழிலாளி வசித்து வருகிறார்.
அதே பகுதியில் கிருஷ்ணா (58) மற்றும் சிவசங்கர் (44 ) ஆகியோரும் கூலி தொளிலாளர்களாக உள்ளனர். தின்னர் என்பது வர்னிஷுடன் கலக்கும் திரவம் ஆகும். இவர்களும் சங்கருடன் சேர்ந்து போதைக்காக தின்னருடன் எலுமிச்சை பழச்சாறு குடித்துள்ளனர்.
இதில் சங்கர் அதே இடத்தில் மயங்கி விழுந்துள்ளார்.உடனே அவரை மீட்டு ஸ்ரீபெரும்புதூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.ஆனால் போகும் வழியிலேயே சங்கர் பரிதாபமாக உயிர் இழந்தார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் சிவசங்கர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையிலும், கிருஷ்ணா ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து ஒரகடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.