உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க வியூகம் வகுத்த தமிழக பாஜக! அண்ணாமலை அதிரடி!

0
197

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலை எதிர்கொள்வதற்காக தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.அதன்படி தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை தேர்தலை சந்திக்க 17 பேர் கொண்ட தனிக் குழுவை அமைத்து இருக்கின்றார்.

அந்தக் குழுவில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் இடம் பெற்றிருக்கிறார். அவர் தலைமையின் கீழ்தான் அந்த குழு அமைக்கப்பட்டு இருக்கிறது மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன், சட்டப்பேரவை பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன், துணை தலைவர்கள் விபி துரைசாமி, எம் எம் ராஜா, பொதுச்செயலாளர்கள் ராகவன், செல்வகுமார், ஸ்ரீனிவாசன், நாகராஜன், மாநிலச் செயலாளர் கார்த்தியாயினி, பொதுக்குழு உறுப்பினர்கள் காந்தி ,சரஸ்வதி, சசிகலா புஷ்பா, செய்தி தொடர்பாளர் நரசிம்மன், சிறப்பு அழைப்பாளர்கள் ராமலிங்கம், செல்வம், சம்பத், போன்றோர் இந்த குழுவில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

Previous articleவெங்கலப் பதக்கம் வென்றது இந்திய ஆண்கள் அணி! கொண்டாட்டத்தில் பெண்கள் ஹாக்கி அணி!
Next articleஅயோத்தியில் ராமர் கோவில் எப்போது திறக்கப்படும் தெரியுமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here