வன்னியர்கள் மீது திமுகவிற்கு இவ்வளவு வன்மமா? மக்களே உஷார்!

0
72

வன்னியர்களுக்கான கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையை சுமார் 40 ஆண்டு காலமாக முன்வைத்து வருவது பாட்டாளி மக்கள் கட்சி. அதற்காக அந்த கட்சி எண்ணற்ற போராட்டங்களையும் நடத்தி இருக்கிறது. பல தியாகங்களையும் புரிந்திருக்கிறது.இந்த இட ஒதுக்கீடு போராட்டத்தில் தான் கடந்த 1987 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி சுமார் 21 வன்னியர்கள் பலியானார்கள் அதனைத் தொடர்ந்து பல்வேறு சமயங்களில் பல்வேறு இடங்களில் பல போராட்டங்களையும் கைதிகளையும் பாட்டாளி மக்கள் கட்சி சந்தித்திருக்கிறது.அதேபோல இந்த போராட்டத்தில் பலமுறை பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்களும், முன்னாள் வன்னியர் சங்கத்தின் தலைவரும் முன்னாள் சட்ட சபை உறுப்பினருமான காடுவெட்டியார் என்று அழைக்கப்படும் ஜெ குரு அவர்களும் எண்ணற்ற முறை சிறைக்கு சென்று இருக்கிறார்கள்.

அதேபோல பாட்டாளி மக்கள் கட்சியை சார்ந்த இளைஞர்களும், அந்த கட்சியை சார்ந்தவர்களும், பலமுறை இதற்கான போராட்டங்களை முன்னெடுத்து இருக்கிறார்கள்.
பாட்டாளி மக்கள் கட்சியின் நீண்ட கால போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக சமீபத்தில் சட்டசபையில் வணிகர்களுக்கான கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தனி இட ஒதுக்கீடாக சுமார் 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சட்டம் இயற்றினார்.இதனால் பாட்டாளி மக்கள் கட்சியை சார்ந்தவர்களும், வன்னியர் இனத்தைச் சார்ந்தவர்களும். பெருமகிழ்ச்சி அடைந்தார்கள். அதேபோல இந்த சட்டம் இயற்றி அதன் காரணமாக, வன்னியர் மக்களிடையே தற்போது முதலமைச்சராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிச்சாமிக்கு மாபெரும் ஆதரவு உருவாகியது.

இதனை பொறுத்துக் கொள்ள முடியாத திமுக மற்ற சமூகத்தினரை தூண்டிவிட்டு மறைமுகமாக இந்த இட ஒதுக்கீடு சட்டத்திற்கு எதிராக வழக்குத் தொடுத்தது.
ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் போதுமான ஆதாரங்கள் எதுவும் இல்லாமல் இந்த சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்று மறுத்துவிட்டது.
திமுகவைப் பொறுத்தவரையில், அவ்வப்போது தன்னுடைய அரசியல் லாபத்திற்காக மட்டுமே வன்னியர்களை பயன்படுத்திக் கொண்டு வருகிறது இதனை தற்போதுதான் வன்னியர் இன மக்கள் உணரத் தொடங்கியிருக்கிறார்கள்.

தேர்தலுக்கு முன்னர் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நிச்சயமாக தனி இட ஒதுக்கீடு பெற்றுத் தருவோம் என்று தெரிவித்த திமுக அந்தக் கட்சியின் தேர்தல் அறிக்கையில் அது தொடர்பாக ஒரு வார்த்தை கூட குறிப்பிடவில்லை. அந்தக் கட்சியின் தேர்தல் அறிக்கையை வன்னியர்கள் தொடர்பான திமுகவின் நிலைப்பாட்டை மக்களுக்கு உணர்த்தி விட்டது. என்று தெரிவிக்கிறார்கள்.

ஆகவே வன்னியர் இன மக்களின் வாக்குகளை கவர்வதற்காக தான் அதிமுகவின் மீது கலங்கம் விளைவிப்பதற்காக இந்த வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு சட்டத்தை இரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்து மற்ற சமுதாயத்தினரை தூண்டிவிட்டு அவர்கள் மூலம் வழக்குப் போட்டு இந்த சட்டத்தை ரத்து செய்துவிட்டு அதன் மூலமாக மக்களிடையே அதிமுக அதை குறைகூறி அதன் மூலம் வாக்குகளை வாங்கி வெற்றி பெற்று விடலாம் என்ற எண்ணத்தில் திமுக செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அதோடு திமுக ஒரு வேளை ஆட்சிக்கு வந்து விட்டால் நிச்சயமாக அந்தக் கட்சி வன்னியர்களுக்கு மாபெரும் துரோகம் கிடைக்கும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது இதேபோல வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு கொடுக்கிறோம் என்று சொல்லி சுமார் 108 சாதிகளை ஒன்றிணைத்து ஒரு பிரிவினரை உண்டாக்கி அந்த பிரிவிற்கு 20 சதவீத இட ஒதுக்கீட்டை கொடுத்துவிட்டு நாங்கள் வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீட்டை கொடுத்துவிட்டோம் என்று திமுக மார்தட்டிக் கொண்டது.

ஆனால் திமுக கொடுத்த இட ஒதுக்கீட்டால் வன்னியர் இன மக்களுக்கு எந்தவித பிரயோஜனமும் ஏற்படவில்லை என்பதுதான் உண்மை. ஆனால் இப்பொழுது அதிமுக அரசு கொடுத்திருக்கும் இந்த 10.5 சதவீத தனி இட ஒதுக்கீட்டின் மூலமாக வன்னியர் இனத்தைச் சார்ந்த பலர் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் அதிக முன்னேற்றம் அடைவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் அதனை பொறுத்துக்கொள்ள முடியாத திமுகவும், அதன் கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி போன்ற கட்சிகளும் எப்படியாவது சூழ்ச்சி செய்து இந்த இட ஒதுக்கீட்டை நீர்த்துப்போகச் செய்ய வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

அதன் ஆரம்பப் புள்ளியாக தான் இந்த இட ஒதுக்கீட்டிற்கு எதிராக பல வழக்குகளை திமுக மறைமுகமாக நீதிமன்றத்தில் தொடுத்து இருக்கிறது என சொல்கிறார்கள்.அதோடு வன்னியர் இன மக்களின் பரம விரோதியாக இருந்து வரும் திருமாவளவனை தன்னுடைய கூட்டணியில் வைத்துக்கொண்டிருக்கும் திமுக எப்படி வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீட்டை பெற்றுத்தரும் என்ற கேள்வியும் மக்களிடையே எழுந்திருக்கிறது.