உடுமலையில் கும்பலாய் கோவிலுக்குள் நுழைந்த இஸ்லாமியர்கள்!!

0
183
#image_title

உடுமலையில் கும்பலாய் கோவிலுக்குள் நுழைந்த இஸ்லாமியர்கள்!!

உடுமலைமாரியம்மன் கோவிலுக்கு பட்டுசீலை,சீர் வரிசைதட்டுடன் தேர் திருவிழாவிற்க்கு வாழ்த்து சொல்ல வருகை.

பதிலுக்கு பொன்னாடை அனுவித்து வரவேற்று ரம்ஜான் வாழ்த்து தெரிவித்த கோவில் நிர்வாகிகள்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ளபிரசித்தி பெற்ற அருள்மிகு மாரியம்மன் கோவிலில் வருடம் தோறும் தேர்திருவிழா வெகுவிமர்ச்சையாக நடைபெறும்

தேர்திருவிழாவிற்காக உடுமலை நகரமே திருவிழா கோலம் பூண்டு களைகட்டிவரும் நிலையில் உடுமலை பூர்வீக பள்ளி ஜமாத்தை சார்ந்த இஸ்லாமியர்கள் உடுமலை நகராட்சி சேர்மேன் மத்தீன் தலைமையில் அம்மன்னுக்கு சாத்த பட்டுசேலை மற்றும் பழங்கள் கொண்ட சீர் வரிசை தட்டுடன் கோவிலுக்கு வந்தனர்.

அவர்களைபொன்னாடை போர்த்தி வரவேற்ற கோவில் நிர்வாகிகள் அவர்களுக்கு ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

நூற்றுக்குமேற்பட்ட சுற்றுப்புறகிராமங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் பக்தியுடன் வடம் பிடித்து தேர் இழுக்கும் உடுமலை
மாரியம்கோவில் தேர்திருவிழா அணைத்து மத ஒத்துழைப்புடன் அணைவரும்கொண்டாடும் திருவிழாவாக திகழ்ந்து வருவதாகவும், அதற்கு காலம் காலமாக தாங்கள் ஒத்துழைப்பு அளித்துவருவதாகவும் இந்தவருடமும் தேர்திருவிழா சிறப்படைய வாழ்த்துகளை தெரிவிக்க வந்ததாகவும் கோவிலுக்கு வந்த இஸ்லாமியர்கள் தெரிவித்தனர்.

மதமாச்சர்யங்களுக்கிடையே தேர் திருவிழா சிறப்படைய வாழ்த்து சொல்லவந்த இஸ்லாமியர்களின் செயலும் அவர்களுக்கு ரம்ஜான் வாழ்த்து கூறிய கோவில் நிர்வாகிகளின் அன்பும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

author avatar
Savitha