சதத்தை தவறவிட்ட வில்லியம்ஸன்:ஆறுதல் அளித்த இஷாந்த் சர்மா! இரண்டாவது நாளில் நியுசிலாந்து ஆதிக்கம் !

0
133

சதத்தை தவறவிட்ட வில்லியம்ஸன்:ஆறுதல் அளித்த இஷாந்த் சர்மா! இரண்டாவது நாளில் நியுசிலாந்து ஆதிக்கம் !

இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளின் முடிவில் நியுசி 216 ரன்கள் சேர்த்துள்ளது.

நியுசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 5 டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. அதன் பின் நடந்த ஒருநாள் தொடரை நியுசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நேற்று வெல்லிங்க்டன் மைதானத்தில் தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற நியுசிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன் படி களமிறங்கிய இந்திய அணயில் மயங்க் அகர்வால் (34), ரஹானே (46) மற்றும் முகமது ஷமி (21) ஆகியோரைத் தவிர அனைவரும் சொதப்பியதால் இந்திய அணி 165 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அபாரமாக வீசிய டிம் சவுத்தி மற்றும் ஜேமீஸன் ஆகியோர் தலா 4 விக்கெட்களைக் கைப்பற்றினர்.

இதையடுத்து இன்று தங்கள் இன்னிங்ஸை துவங்கிய நியுசிலாந்து அணி நிதானமாக விக்கெட்களைப் பறிகொடுக்காமல் விளையாடியது. அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் 89 ரன்களில் அவுட் ஆகி சதமடிக்கும் வாய்ப்பை இழந்தார். மற்றொரு வீரரான ராஸ் டெய்லர் 44 ரன்கள் சேர்த்தார். இதையடுத்து இரண்டாம் நாள் ஆட்டமுடிவில் நியுசிலாந்து 216 ரன்கள் சேர்த்து 5 விக்கெட்களை இழந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவை விட 51 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.

இந்தியா சார்பில் இஷாந்த் ஷர்மா 3 விக்கெட்டும், ஷமி மற்றும் அஷ்வின் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.