அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் எதிர்வரும் 23ஆம் தேதி நடைபெறும் என்று அந்த கட்சியின் தலைமை கழகம் அறிவித்திருக்கிறது.
ஆண்டு தோறும் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் செயற்குழு மற்றும் பொதுக் குழுவைக் கூட்டி கட்சியின் தலைமையை தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதும் பொது விதியாக இருந்து வருகிறது.
அதோடு இந்த செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்களில் கட்சி ரீதியாக பல முக்கிய முடிவுகளை அரசியல் கட்சிகள் மேற்கொள்கின்றனர் என்பது அனைவரும் அறிந்தது தான்.
அந்தவகையில், இந்த வருடம் எதிர்க்கட்சியான அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வருகின்ற 23ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிமுக அதன் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் உள்ளிட்டோர் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார்கள்.
அதில் அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வருகின்ற 23 ஆம் தேதி கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவின் தற்காலிக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் சென்னை வானகரத்தில் இருக்கின்ற ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் மண்டபத்தில் கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.வரும் 23ஆம் தேதி கூடுகிறது
கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பிவைக்கப்படும் என்றும், உறுப்பினர்கள் தவறாமல் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்களில் பங்கேற்று கொள்ள வேண்டும் என்றும், அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.