Saturday, July 19, 2025
Home Blog Page 42

கருணாநிதியை பாத்துக் கத்துக்கோங்க.. குடும்ப அரசியலை கையாள தெரியாத ராமதாஸ்!!

DMK PMK: அரசியல் வட்டாரத்தில் பாமக குறித்த செய்திதான் தினம்தோறும் வந்த வண்ணமாகவே உள்ளது. அப்பா மகன் இருவருக்குமிடையே உள்ள பிரச்சனை தீவிரமடைந்து வெளியுலகத்தினர் ஆலோசனை சொல்லும் அளவிற்கு வந்துவிட்டது. இதனால் பலரும் திமுகவை கூட புகழாரம் சூட்ட ஆரம்பித்துவிட்டனர். திமுகவும் வாரிசு அரசியலை தற்போது வரை முன்னிறுத்தி தான் கட்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறது. அப்படி கருணாநித்திக்கும் அவரது மகன் என்று பல்வேறு அழுத்தங்கள் இருந்தது.

குறிப்பாக கனிமொழியை கட்சிக்குள் கொண்டு வரும் பொழுது பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் நேரம் பார்த்து ஸ்டாலின் அவரை களம் காண வைத்து பதவி ஒதுக்கினார். அடுத்தபடியாக முட்டுக்கட்டையாக நின்றது அழகிரிதான். கட்சியின் முக்கிய பொறுப்புகள், பதவிகள் என அனைத்தும் அவருக்கு கிடைக்க வேண்டும் என்பதில் மும்மரம் காட்டி வந்தார். அதேபோல கருணாநிதியும் அவருக்கு சட்டமன்றம் செட் ஆகாது என கருதி மத்திய அமைச்சரவையில் பதவி வாங்கி கொடுத்தார். அப்படி இருந்தும் நாளடைவில் அழகிரியை கட்டுப்படுத்த முடியவில்லை.

இதனால் கட்சியை விட்டே நீக்கம் செய்தார். அதேபோல உயிர் போகும் நொடி வரை தலைவராகவே கருணாநிதி இருந்தார். யாருக்கும் அந்த பதவியை கொடுக்கவில்லை. இவருக்கு உடல்நிலை சரியில்லாத போது ஸ்டாலினுக்கு செயல் தலைவர் என்ற பதவி மட்டுமே கொடுக்கப்பட்டது. இப்படி கட்சியை தங்கள் குடும்ப உறுப்பினர்கள் வைத்து கருணாநிதி எப்படி செதுக்கியுள்ளார் இந்த சாமர்த்தியம் ராமதாஸுக்கு இல்லாமல் போய்விட்டது என கூறுகின்றனர்.

அதேபோல அன்புமணியும் கட்சி பதவி அதன் உரிமை என அனைத்தையும் தனது குடும்ப கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என நினைக்கிறார். ஆனால் அது மிகவும் தவறு எனக் கூறுகின்றனர். கருணாநிதி இறப்பதற்கு முன் தனது வாரிசுகளை நிலை நிறுத்தி கட்சி அங்கீகாரத்தை நிலைநாட்டி சென்றார். ஆனால் தலைவர் பதவியிலிருந்து ராமதாஸ் விலகி அவரது மகனால் புலம்பும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது கட்சியை பின்னடைவுக்கு தான் எடுத்துச் செல்லும். இதைவிட யாரும் இறுதி வரை கருணாநிதியை எதிர்த்து நிற்கவில்லை, ஆனால் பாமகவில் அப்படி கிடையாது. ராமத்தஸ்ஸையே எதிர்க்க துணிந்துவிட்டனர்.

அன்புமணியின் பதவிக்காலம் முடிந்தது! வேல்முருகனை மீண்டும் பாமகவில் இணைக்க ராமதாஸ் வியூகம்?

பாமகவில் குடும்ப உறுப்பினர்கள் இடையே நிலவி வந்த தலைமைத் தகராறு தற்போது கட்சி பிளவிற்கு செல்லும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இருவரும் தற்போது சட்ட ரீதியான அதிகார உரிமை குறித்து தனித்தனியாக சட்ட வல்லுநர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தலைமை பதவிக்காலம் முடிந்ததா?

கடந்த 2022 ஆம் ஆண்டு மே 28 அன்று பாமக பொதுக்குழுவில் அன்புமணி தலைவராக நியமிக்கப்பட்டார். கட்சி விதிமுறைகளின்படி தலைவரின் பதவிக்காலம் 3 ஆண்டுகள் என்பதால், 2025 மே 28 அன்று அவரது பதவிக்காலம் முடிந்ததாக ராமதாஸ் ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து ராமதாஸ் தனது ஆடிட்டர் மற்றும் சட்ட ஆலோசகருடன் பேசியதாகவும் கூறப்படுகிறது.

ராமதாஸ் அதிகாரம்

தலைவரின் பதவி காலாவதி ஆகியதால், பாமக ஒழுங்கு விதிகளின்படி, கட்சியின் முழுப்பட்ட அதிகாரமும் நிறுவனரான ராமதாஸுக்கு தானாகவே வந்துவிட்டதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளதை அடுத்து, அவர் கட்சியின் நிர்வாகம் மீதான முழு கட்டுப்பாட்டையும் கைப்பற்றி புதிய நிர்வாகிகளை நியமிக்கத் தொடங்கி விட்டார்.

மாறி மாறி கூட்டங்கள் – இரண்டு தரப்பும் களம் இறங்கும்!

அதே நேரத்தில் அன்புமணி ராமதாஸ் தரப்பு, தலைமைக்கு மீண்டும் தங்களை நியமிக்க கட்சிக்குள் தனது ஆதரவாளர்களை திரட்டத் தொடங்கியிருக்க, ராமதாஸ் தரப்பு விரைவில் பொதுக்குழு கூட்டம் நடத்தி புதிய நிர்வாகிகளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பழைய தலைவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்கும் முயற்சி

இந்நிலையில் கடந்த சில தினங்களாக கட்சிக்கு புதிய நிர்வாகிகளை ராமதாஸ் நியமித்து வருகிறார். அந்த வகையில் பாமகவில் முன்னர் சிறப்பாக செயல்பட்டு சில கருத்து வேறுபாடுகளால் ஒதுங்கியுள்ள முன்னாள் நிர்வாகிகளை அழைத்து பேசி அவர்களுக்கு புதிய பொறுப்புகளை வழங்கவும் அவர் திட்டமிட்டு வருகிறார். அதன் அடிப்படையில் பாமக முன்னாள் மாநில தலைவர் வேல்முருகனை மீண்டும் கட்சிக்குள் அழைத்து, முக்கிய பதவி அளிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், கட்சியிலிருந்து வெளியேறிய மூத்த நிர்வாகிகள் பலரும் மீண்டும் பாமகவில் இணைவதன் மூலம் தனக்கான அதிகாரத்தை மீண்டும் பெறவும் கட்சியை மீண்டும் அதே கட்டுப்பாட்டுடன் நடத்தவும்  ராமதாஸ் செயல்படத் திட்டமிட்டு வருகிறார்.

தேர்தல் ஆணையம் முடிவு?

இவ்வாறெல்லாம் நடக்கும்போது, கட்சித் தலைமை தொடர்பான உரிமையை தேர்தல் ஆணையம் நிரூபிக்க வேண்டிய கட்டாய நிலை உருவாக வாய்ப்பு உள்ளது. அப்போது இருதரப்பும் தனித்தனியே தங்கள் அதிகாரங்களை முன்வைத்து தங்களுடைய பதவியையும் அதிகாரத்தையும் நிலை நிறுத்த செய்யும் சூழலுக்கு வரலாம். அப்போது கட்சி யாருடைய கட்டுப்பாட்டில் செல்லும் என தொண்டர்கள் மத்தியில் குழப்பம் உருவாகியுள்ளது.

ஒருமையில் பேசிய ஆதவ்!! எடப்பாடிக்கு போன் அடித்த விஜய்.. அவரே சொன்ன பரபர தகவல்!!

ADMK TVK: விடுதலை சிறுத்தை கட்சியிலிருந்து ஆதவ் அர்ஜுனா தமிழக வெற்றிக் கழகத்திற்கு மாற்றமடைந்ததை அடுத்து தற்போது புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். இவர் புஸ்ஸி ஆனத்திடம் பேசிய காணொளியானது வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதில், பாஜக வே அதிமுகவை விரட்டிவிடும். எடப்பாடியை நம்பி யாரும் கூட்டணிக்கு வர மாட்டார்கள். அண்ணாமலையாவது 10 பேரை வைத்துக் கொண்டு 18 சதவீதம் வாக்கு வாங்கி இருக்காங்க என ஒருமையில் பேசியிருந்தார்.

இப்படி அதிமுகவையும் பாஜகவையும் விமர்சனம் செய்தது குறித்து பல கண்டனங்கள் எழுந்த நிலையில் தான் பேசியது தவறுதான் என  ஆதவ் அர்ஜுனா அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார். இப்படி இருக்கையில் ஆதவ் அர்ஜுனா பேசியதற்கு, விஜய் எடப்பாடிக்கு அழைப்பு விடுத்து இது ரீதியாக பேசியுள்ளார் என்றும் தகவல்கள் வெளியானது. அதேபோல ஆதாவ் அர்ஜுனா மன்னிப்பு கூறியதற்கும் அதுதான் காரணம் என்று தெரிவித்தனர். எடப்பாட-யிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் நேரடியாக கேட்கையில், என்னிடம் நடிகர் விஜய் ஏதும் பேசவில்லை ஆதவ் அர்ஜுனா தங்களை விமர்சனம் செய்ததற்கு அவரே பதில் கூறிவிட்டார் என தெரிவித்தார்.

மேற்கொண்டு திமுக நடத்திய பொதுக்குழு கூட்டத்தில் தங்களை “துரோக அதிமுக” என்று தெரிவித்ததற்கு பதிலடி கொடுத்து பேசியுள்ளார். நாங்கள் துரோகம் செய்தவர்கள் இல்லை திமுக தான் தமிழகத்திற்கு துரோகம் செய்துள்ளது. அம்மாவின் மறைவுக்குப் பின்னும் அதற்கு முன்பு மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்து சட்ட ஒழுங்கும்  சீராக இருந்தது. தற்போது தினம்தோறும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்டவற்றை கண்டு வருகிறோம். இது அனைத்தும் இந்த மாடல் ஆட்சியில் தான் நடக்கிறது அப்படி பார்க்கையில் இதுதான் துரோக ஆட்சி என்று பேசினார்.

1% கூட வாக்கு பெற முடியவில்லை.. உங்களுக்கு MP சீட் கேக்குதா!! பிரேமலதாவை விளாசும் EPS!!

ADMK DMDK: தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஆறு மாநிலங்களவை பதவிகளுக்கு வரும் 16ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆளும் கட்சிக்கு நான்கு இடங்களும், அதிமுகவிற்கு இரண்டு இடங்களும் ஒதுக்கியுள்ளனர். அந்த வகையில் ஆளும் திமுகவானது தனது கட்சியை சேர்ந்த வில்சன், சல்மா, சிவலிங்கம் ஆகிய மூன்று பேரை நிறுத்தியுள்ளனர். மேற்கொண்டு மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசனுக்கு கொடுத்த ஒப்புதலின்படி ஒரு சீட் வழங்கியுள்ளனர். ஆனால் எதிர்க்கட்சியான அதிமுக யாருக்கு எம்பி சீட் வழங்கப் போகிறது என்பது குறித்து எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.

மற்றொரு பக்கம் தேமுதிக எங்களுக்கு ஓர் மாநிலங்களவை உறுப்பினர் பதவி வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தது. ஆனால் அதிமுக தனது கட்சி சார்ந்தவர்களையே நிற்க வைத்துள்ளது. மேற்கொண்டு தேமுதிகவிற்கு அடுத்த ஆண்டு சீட்டு ஒதுக்குவதாக தெரிவித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. இதற்கு முன்பாகவே கடந்த மக்களவைத் தேர்தலில் கூட்டணி வைத்துக்கொண்டால் ஒரு எம்பி சீட் வழங்குவதாக அதிமுக ஒப்பந்தம் கொடுத்தது என தேமுதிக கூறிவந்தது.

ஆனால் நாங்கள் அப்படி ஏதும் தெரிவிக்கவில்லை என அதிமுக திட்ட வட்டமாக தெரிவித்துவிட்டது. மேற்கொண்டு தேமுதிக , எம்பி சீட் கொடுத்தால் தான் வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி என்றும் பேச்சுக்கள் அடிபட்டது. அப்படி இருக்கையில் அதிமுக தரப்பு தேமுதிக தலைமை மிகவும் கடினமாக நடந்து கொள்கிறது. சொல்லப்போனால் கூட்டணி கட்சிக்கு அழுத்தம் தருகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் ஒரு சதவீதம் கூட வாக்குப்பெற முடியவில்லை, ஆனால் எம்பி சீட்டுக்கு மட்டும் எப்படி கெடுபிடி போட முடியும் என பேசி வருகிறார்களாம்.

குறிப்பாக கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் தேமுதிக இணைந்து 2.59 சதவீதம் வாக்கு பெற்றாலும், இதில் தேமுதிக விற்கு 0.43 சதவீதம் மட்டுமே கிடைத்தது. இதனை வைத்து தான் எடப்பாடி பிரேமலதா விஜயாகாந்த்தை வசைபாடி வருகிறார்.

திமுகவுடன் கைகோர்க்கும் தேமுதிக.. ஹின்ட் கொடுத்த பிரேமலதா விஜயகாந்த்!!

மதுரையில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பொழுது அதிமுக துணை பொதுச்செயலாளர் கேபி முனுசாமி, கட்சியின் மாநிலங்களவை வேட்பாளர்களாக இன்ப துரை, செய்யூர் தனபால் ஆகியோரை அறிவித்துள்ளார். அதிமுக கூட்டணியில் தேமுதிக தொடரும் எனவும் வரும் 2026 ஆம் ஆண்டு மாநிலங்களவை தேர்தலில் தேமுதிகவுக்கு ஒரு சீட்டு தரப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன் பிறகு சென்னையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது தேமுதிகவை பொறுத்த வரை அனைத்து நிகழ்வுகளையும் அரசியல் நிகழ்வாக தான் பார்க்கிறோம், 2026 ஆம் ஆண்டு ஜனவரி ஒன்பதாம் தேதி கடலூர் மாவட்டத்தில் நடைபெறும் மாநாடு எங்களுடைய நிலைப்பாடு கூட்டணி எல்லாவற்றையும் அறிவிப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.மேலும் அடுத்த சில நாட்களில் 234 தொகுதிகளுக்குமான பொறுப்பாளர்களை நியமிக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் திமுக பொதுக் குழுவில் விஜயகாந்த் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளதற்கு நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம், அரசியல் என்பது தேர்தலை நோக்கி தான் செல்கிறது. அரசியல் என்பதே தேர்தலை ஒட்டிதான் அதுதான் எங்கள் நிலைப்பாடு என பிரேமலதா விஜயகாந்த் கூறி இருக்கின்றார். திமுக கூட்டணியில் தேமுதிகவை சேர்ப்பது தொடர்பாக தற்போது பேச்சுவார்த்தை நடந்து வருகின்றது. இந்த பேச்சு வார்த்தையை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு நடத்தி வருவதாகவும் கூறப்படுகின்றது.

அதிமுகவுக்கு பிடி கொடுக்காமல் பிரேமலதா விஜயகாந்த் பேசியிருக்கின்றார். அதனால் திமுக கூட்டணியை நோக்கி தேமுதிக நகர்கிறதா என அரசியல் வட்டாரம் பேசி வருகின்றது.

பள்ளிகள் திறந்து ஒரே வாரத்தில் 3 நாள் தொடர் விடுமுறை.. ஆட்சியர் சொன்ன ஹேப்பி நியூஸ்!!

ஏப்ரல் மாதம் அனைத்து பள்ளிகளிலும் முழு ஆண்டு தேர்வு முடிவடைந்த நிலையில் கோடை விடுமுறை விடப்பட்டது. ஒரு மாதத்திற்கு மேலாக விடுமுறை விடப்பட்டதால் மக்கள் தங்களது குடும்பத்துடன் ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் குவிந்த வண்ணம் இருந்தனர். கோடை விடுமுறை முடிந்து இன்று முதல் தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வரும் ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி வைகாசி விசாகத் திருவிழா கொண்டாடப்பட இருக்கின்றனர்.

அதனால் அந்த திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகின்ற ஒன்பதாம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. சனி, ஞாயிறு மற்றும் திங்கள் என மூன்று நாட்கள் தொடர்ந்து விடுமுறை விடப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் அந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஜூன் 14ஆம் தேதி சனிக்கிழமை அலுவலக வேலை நாளாக கணக்கிடப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஒன்றாக உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

மேலும் வார விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் பக்தர்களின் வருகை சற்று அதிகரித்து காணப்படுகின்றது. மேலும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட முருகப்பெருமானிற்கு உகந்த நாட்களில் அதிகளவு கூட்ட நெரிசல் ஏற்படுவதினால் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சார்பாக உள்ளூர் விடுமுறை அறிவிப்பது வழக்கம். அதுபோல ஜூன் ஒன்பதாம் தேதி திங்கட்கிழமை அன்று வைகாசி விசாக திருவிழா கொண்டாடப்பட இருப்பதினால் தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மாஸ்க் போட்டு தனியாக அமர்ந்த உதயநிதி.. மதுரை பொதுக்குழு கூட்டத்தில் நடந்தது என்ன!!

மதுரையில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மேடையில் அமராதது பேசும் பொருளாக மாறி உள்ளது. திமுக தொண்டர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு பிறகு மதுரையில் ஊத்தங்குடி பகுதியில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு க ஸ்டாலின் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. பொதுக்குழு மேடையில் பேரறிஞர் அண்ணா, கலைஞர் பெரியார் பேராசிரியர் அன்பழகன், உள்ளிட்டோரின் உருவப்படங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட திமுகவினர் இந்த பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டனர். அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற பொழுது மேடையில் முக்கிய நிர்வாகிகள், துணை பொதுச்செயலாளர் ஆகியோர் அமர்ந்திருந்தனர் அமைச்சர்கள் பலரும் கீழே முன்வரிசையில் அமர்ந்திருந்தனர். ஆனால் துணை முதலமைச்சர் ஸ்டாலின் மேடையில் அமருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அவர் மேடையில் அமராமல் அமைச்சர்களுடன் கீழே முதல் வரிசையில் அமர்ந்திருந்தார். இதற்கு என்ன காரணம் என பலரும் யோசனை செய்து வந்த நிலையில் அவருக்கு காய்ச்சல் இருப்பதாகவும் மாஸ்க் அணிந்து கொண்டு காரில் தனியாக சென்றார் என கூறப்படுகின்றது.கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மாஸ்க் அணிந்து வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்காலிக ஆசிரியர்களுக்கு பணி நியமனம்!! பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பறந்த உத்தரவு… முழு விவரம் இதோ!!

தமிழக பள்ளி கல்வித்துறையின் கீழ் சுமார் 37,554 அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றது. இந்த பள்ளியில் 52 லட்சம் மாணவ மாணவிகள் பயின்று வரும் நிலையில் இவர்களுக்கு பாடம் நடத்துவதற்காக 2.2 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இந்நிலையில் பணி ஓய்வு உட்பட பல்வேறு காரணங்களுக்காக மாநிலம் முழுவதும் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றது. இவற்றில் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்து கற்றல் கற்பித்தல் பணிகளை பள்ளி கல்வித்துறை மேற்கொண்டு வருகின்றது.

அதன் அடிப்படையில் நடப்பு ஆண்டில் தற்காலிக ஆசிரியர்களை பணி நியமனம் செய்து கொள்ள வேண்டும் என பள்ளி கல்வித்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கல்வித்துறை அலுவலர்கள் இது குறித்து கூறுகையில் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை பட்டதாரி மற்றும் முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை அந்தந்த பள்ளி மேலாண்மை குழு மூலமாக நிரப்பிக் கொள்ள வேண்டும் எனவும் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போதுதான் மாணவர்களின் படிப்பு எந்த விதத்திலும் பாதிக்கப்படாமல் இருக்கும்.

கடந்த ஆண்டு நியமனம் செய்யப்பட்ட தற்காலிக ஆசிரியர்கள் தொடர்ந்து பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நீண்ட கால விடுப்பில் உள்ள அல்லது மகப்பேறு விடுமுறையில் சென்று ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய தலைமையாசிரியர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அரசு ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடிக்கும் ஜாக்பாட்… முதலமைச்சர் மு க ஸ்டாலின் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் உள்ள அரசு ஊழியர்களுக்கு தற்போது பல்வேறு விதமான அறிவிப்புக்கள் வெளியாகி வருகின்றது.  தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த அறிவிப்பில் தமிழக அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையின் மூலம் அமைச்சர் சிவசங்கர் தலைமையில் 6 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் 14 வது ஊதிய ஒப்பந்தம் கடந்த 2023 ஆம் ஆண்டு முடிவடைந்தது. அரசு ஊழியர்களுக்கு கட்டணம் இல்லாமல் ஆயுள் காப்பீடு, விபத்து காப்பீடு குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஆயுள் காப்பீடு மற்றும் விபத்து காப்பீட்டை கட்டணமின்றி வழங்குவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி தமிழ்நாடு சட்டசபையில் அறிவித்துள்ளார். டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஒரு 2000 ஊதிய உயர்வானது ஏப்ரல் ஒன்றாம் தேதியிலிருந்து கணக்கிட்டு வழங்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். 50 ஆயிரம் விவசாய மின் இணைப்பு இந்த ஆண்டு வழங்கப்படும் எனவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளதுளார். மேலும் அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காக வழங்கப்படும் பண்டிகை காலம் முன்பணம் பத்தாயிரம் ரூபாயிலிருந்து 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கல்வி முன்பணம் தொழிற்கல்வி ஒரு லட்சம், கலை அறிவியல் மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளுக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். திருமண முன்பணமாக 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படக்கூடிய பண்டிகை கால முன்பணம் 4000 ரூபாயிலிருந்து தற்போது 6 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது . மேலும் மகப்பேறு விடுப்பு காலமானது முன்பு இருந்த விதிகளின்படி தகுதித்தான் பருவத்தில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாததால் பெண் ஊழியர்களின் பதவி உயர்வு பாதிக்கப்பட்டது என முதலமைச்சர் மு க ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்துள்ளார். அரசு ஊழியர்களுக்கு பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி வருவதினால் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அதிமுக எம்பி சீட்டுக்கு தேர்வான தேமுதிக… எடப்பாடி பழனிச்சாமி எடுக்க போகும் முடிவு!!

மாநிலங்களவைத் தேர்தல் வரவுள்ள நிலையில் திமுகவுக்கு 4 இடங்களும் அதிமுகவுக்கு இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திமுக எம்பி சீட்டு குறித்து அறிவிப்பை வெளியிட்ட நிலையில் அதிமுக எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடாமல் ஆலோசனை நடத்தி வந்தனர். இந்நிலையில் 2024 மக்களவைத் தேர்தலின் பொழுது தேமுதிகவிற்கு மாநிலங்களவை எம்பி இடம் தருவதாக அதிமுக உறுதி அளித்ததாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கூறினார். ஆனால் எம் பி சீட்டு குறித்து எந்த ஒரு உறுதியும் தரவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். இந்நிலையில் தேமுதிகவிற்கு ஒரு மாநிலங்களவை எம்பி சீட்டு தருவது அதிமுகவின் கடமை எனவும் பிரேமலதா வலியுறுத்தி பேசினார். அதனைத் தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தேமுதிக பொருளாளர் சதீஷ் நேரில் சந்தித்து பேசினார். அப்போது தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை எம்பி சீட் தர வேண்டும் என சதீஷ் வலியுறுத்தியதாக கூறப்படுகின்றது. அதனை தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில் தேமுதிகவுக்கு சீட்டு வழங்குவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் தற்போது சதீஷ் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு நிகழ்ந்துள்ளதால் தேமுதிகவுக்கு சீட் வழங்குவது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எம் பி சீட் பெற வாய்ப்புள்ள சதீஷ் கடந்த 2006, 2009 மற்றும் 2014, 2019 என பல்வேறு தேர்தல்களில் போட்டியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.