Monday, July 21, 2025
Home Blog Page 43

அதிமுக எம்பி சீட்டுக்கு தேர்வான தேமுதிக… எடப்பாடி பழனிச்சாமி எடுக்க போகும் முடிவு!!

மாநிலங்களவைத் தேர்தல் வரவுள்ள நிலையில் திமுகவுக்கு 4 இடங்களும் அதிமுகவுக்கு இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திமுக எம்பி சீட்டு குறித்து அறிவிப்பை வெளியிட்ட நிலையில் அதிமுக எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடாமல் ஆலோசனை நடத்தி வந்தனர். இந்நிலையில் 2024 மக்களவைத் தேர்தலின் பொழுது தேமுதிகவிற்கு மாநிலங்களவை எம்பி இடம் தருவதாக அதிமுக உறுதி அளித்ததாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கூறினார். ஆனால் எம் பி சீட்டு குறித்து எந்த ஒரு உறுதியும் தரவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். இந்நிலையில் தேமுதிகவிற்கு ஒரு மாநிலங்களவை எம்பி சீட்டு தருவது அதிமுகவின் கடமை எனவும் பிரேமலதா வலியுறுத்தி பேசினார். அதனைத் தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தேமுதிக பொருளாளர் சதீஷ் நேரில் சந்தித்து பேசினார். அப்போது தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை எம்பி சீட் தர வேண்டும் என சதீஷ் வலியுறுத்தியதாக கூறப்படுகின்றது. அதனை தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில் தேமுதிகவுக்கு சீட்டு வழங்குவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் தற்போது சதீஷ் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு நிகழ்ந்துள்ளதால் தேமுதிகவுக்கு சீட் வழங்குவது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எம் பி சீட் பெற வாய்ப்புள்ள சதீஷ் கடந்த 2006, 2009 மற்றும் 2014, 2019 என பல்வேறு தேர்தல்களில் போட்டியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல துடித்துக் கொண்டிருக்கிறேன்… அன்புமணி பேச்சு!!

பாமக கட்சி நிறுவனர் ராமதாக்கும் அக்கட்சியின் தலைவர் அன்புமணிக்கும் இடையே ஏராளமான மோதல்கள் இருந்து வருவதாக என அரசியல் வட்டாரங்கள் பேசி வருகின்றனர். இந்நிலையில் சோளிங்கநல்லூரில் இரண்டாம் கட்டமாக ஐந்து மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அன்புமணி கலந்து கொண்டு பேசினார். அப்போது புதிய உறுப்பினர் அடையாள அட்டையில் க்யூ ஆர் கோடு உள்ளது. கட்சியின் உறுப்பினர்கள் அந்த க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்து நிதி செலுத்தி கொள்ளலாம். உறுப்பினர் அடையாள அட்டை பெற்ற பிறகு ஐந்து ரூபாய் உறுப்பினர் கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் கட்சிக்கு அதிகளவு நிதி தேவைப்படுகிறது. அதன் காரணமாக ஒவ்வொரு உறுப்பினரும் கட்டணமாக ஐந்து ரூபாய் உடன் கூடுதல் தொகை செலுத்தலாம். மேலும் சித்திரை மாநாட்டை நடத்தியது நான் கிடையாது, உறுப்பினர்கள் ஆகிய நீங்கள் தான். சித்திரை முழு நிலவு மாநாடு வெற்றி பெற பாமக தொண்டர்களே முழுக்க முழுக்க காரணம். சிறு பிரச்சனை கூட ஏற்படாமல் லட்சக்கணக்கான தொண்டர்கள் ஒன்று சேர்ந்தார்கள். சித்திரை மாநாட்டிற்கு பிறகு இளைஞர்களின் மனநிலை மாறி இருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இந்த வகை டிஜிட்டல் உறுப்பினர் அடையாள அட்டையை தயார் செய்து விட்டேன். ஆனால் அதை வெளியிடும் சூழல் இல்லாததால் தற்போது அது வெளியிடப்பட்டுள்ளது. பாமக உறுப்பினர் அடையாள அட்டைகளை அடுத்தடுத்து டிஜிட்டல் மையப்படுத்த இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் திலக பாமாவை நீக்கியதாக அறிக்கை வந்த சில நிமிடங்களில் அவர்தான் பொருளாளர் என நான் அறிக்கை கொடுத்தேன். கட்சியில் இருப்பவர்களை பொதுக்குழு மூலமே நீக்க முடியும். நான் பொதுக்குழுவாள் தலைவராக தேர்வு செய்யப்பட்டேன். மேலும் பாமகவில் இருந்து யாரை நீக்கி அறிவிப்பும் வந்தாலும் அடுத்த பத்து நிமிடத்தில் நீங்கள் பொறுப்பில் தொடர்வதாக நான் அறிக்கை வெளியிடுவேன். மேலும் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து அடுத்தடுத்த செயல்திட்டம் இருக்கிறது. உரிமை மீட்பு பயணத்தை விரைவில் தொடங்க இருப்பதாகவும் தெரிவித்தார். கட்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல நான் துடித்துக் கொண்டுள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த சிவப்பு கலர் ஜூஸ் குடித்தால்.. ஆயுசுக்கும் ஹார்ட் அட்டாக் பிரச்சனையே வராது!!

தவறான உணவுப் பழக்க வழக்கத்தால் இதய ஆரோக்கியம் கடுமையாக பாதிக்கப்படுகிறது.இளம் வயதில் இதயம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்பட உணவுமுறை பழக்கமே முதன்மை காரணமாக இருக்கிறது.

நாளுக்கு நாள் இளம் வயது மாரடைப்பு பாதிப்பு தலைதூக்கி கொண்டிருக்கிறது.கொரோனா காலகட்டத்திற்கு பிறகு மாரடைப்பு உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது.இந்நிலையில் இதய ஆரோக்கியத்தை காக்க பீட்ரூட்,மாதுளை போன்ற காய்களை கொண்டு ஜூஸ் செய்து பருகுவதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)பீட்ரூட் – ஒன்று
2)மாதுளம் பழம் – ஒன்று
3)கருப்பு உப்பு – சிட்டிகை அளவு

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு பீட்ரூட்டை தோல் நீக்கி வைத்துக் கொள்ளுங்கள்.பிறகு இதனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்து ஒரு மாதுளம் பழத்தை தோல் நீக்கிவிட்டு அதன் விதைகளை சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள்.பிறகு மிக்சர் ஜார் எடுத்து நறுக்கிய பீட்ரூட் துண்டுகளை போட்டுக் கொள்ள வேண்டும்.

அடுத்து ஒரு மாதுளம் பழத்தின் விதைகளை அதில் போட்டுக் கொள்ள வேண்டும்.பிறகு அதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் இந்த ஜூஸை கிண்ணத்திற்கு வடித்து சிட்டிகை அளவு கருப்பு உப்பு சேர்த்து பருக வேண்டும்.இந்த ஜூஸை தொடர்ந்து பருகி வந்தால் மாரடைப்பு பாதிப்பு வராமல் இருக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)தக்காளி – ஒன்று
2)உப்பு – சிட்டிகை அளவு

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு பழுத்த தக்காளி பழம் எடுத்துக் கொள்ளுங்கள்.இதனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் மிக்சர் ஜாரில் இந்த தக்காளி துண்டுகளை போட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள்.அதன் பிறகு தக்காளி பழத்தை மைய்ய அரைத்து ஜூஸாக்கி கொள்ளுங்கள்.

இந்த ஜூஸை கிளாஸிற்கு வடிகட்டி உப்பு கலந்து பருகுங்கள்.இப்படி தொடர்ந்து குடித்து வந்தால் இதய ஆரோக்கியம் மேம்படும்.

வயிற்று ஊளைச்சதை கரைய.. இந்த ஒரு ஜூஸை தினமும் படுக்கும் முன் குடிங்க!!

இந்த காலத்தில் உடல் எடையை கட்டுப்பாட்டில் வைப்பது சவாலான விஷயமாக இருக்கிறது.உடலில் கெட்ட கொழுப்புகள் அதிகமாக படிந்தால் பல நோய் பாதிப்புகளை நாம் சந்திக்க நேரிடும்.உடலில் குவிந்து கிடக்கும் கொழுப்புகளை கரைத்து தள்ள தினமும் பீட்ரூட்,மாதுளை,சுரைக்காய் போன்வற்றில் ஜூஸ் செய்து பருகலாம்.

கெட்ட கொழுப்பு அதிகரிக்க காரணங்கள்:-

**கொழுப்பு உணவுகள்
**சோம்பல் வாழ்க்கைமுறை
**எண்ணெய் உணவுகள்
**துரித உணவுகள்
**அசைவ உணவுகள்
**மருந்து விளைவுகள்
**உடல் நலக் கோளாறு

கெட்ட கொலஸ்ட்ராலை கரைக்கும் மேஜிக் ஜூஸ் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:-

1)இலவங்கப்பட்டை
2)தண்ணீர்
3)எலுமிச்சை சாறு

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு இலவங்கப்பட்டையை வாணலியில் போட்டு வாசனை வரும் வரை வறுக்க வேண்டும்.பட்டை நன்கு வறுபட்டு வந்த பின்னர் அடுப்பை அணைத்துவிட்டு சிறிது நேரம் ஆறவிட வேண்டும்.

அதன் பிறகு மிக்சர் ஜாரில் இந்த இலவங்கப்பட்டையை போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ள வேண்டும்.பின்னர் அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்க வேண்டும்.

பிறகு அரைத்த பட்டை பொடியை அதில் கொட்டி 5 நிமிடங்களுக்கு குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.

இந்த இலவங்க பானத்தை கிளாஸிற்கு வடிகட்டி கொள்ள வேண்டும்.பின்னர் எலுமிச்சம் பழத்தை நறுக்கி அதன் சாறு கால் தேக்கரண்டி அளவு இலவங்கப்பட்டை தேநீரில் ஊற்றி கலக்க வேண்டும்.இந்த பானத்தை தொடர்ந்து பருகி வந்தால் கெட்ட கொலஸ்ட்ரால் தானாக குறைந்துவிடும்.

தேவையான பொருட்கள்:-

1)சுரைக்காய்
2)எலுமிச்சை சாறு

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு பிஞ்சு சுரைக்காய் எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.பிறகு இதனை மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி ஜூஸாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த சுரைக்காய் ஜூஸை கிளாஸிற்கு ஊற்றி ஒரு எலுமிச்சையின் சாறை அதில் பிழிந்து பருகலாம்.இப்படி தொடர்ந்து ஒரு மாத காலம் இந்த ஜூஸை பருகினால் கெட்ட கொழுப்பு மளமளவென குறைந்துவிடும்.

Low BP பிரச்சனைக்கு உடனடி தீர்வு!! 100% பலன் தரும் வீட்டு வைத்தியம்!!

குறை இரத்த அழுத்தம்: நமது உடலில் இரத்த அழுதத்தை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டியது முக்கியம்.இரத்த அழுத்தத்தில் உயர் இரத்த அழுத்தம்,குறை இரத்த அழுத்தம் என்று இருவகைகள் இருக்கிறது.இவை இரண்டிற்கும் மருந்து,மாத்திரை இருக்கின்றது.

இந்த இரத்த அழுத்தத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைக்க இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் வீட்டு வைத்தியத்தை பின்பற்றுங்கள்.

குறை இரத்த அழுத்தம் ஏற்பட்டால் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்படும்?

1)அடிக்கடி தலைசுற்றல்
2)உடல் சோர்வு
3)கண் பார்வை குறைபாடு
4)கடும் தலைவலி
5)உணவு சாப்பிட்ட பிறகு மயக்க உணர்வு

குறை இரத்த அழுத்தத்தை குணமாக்கும் வீட்டு வைத்தியம்

**வாழைப்பழம்
**பால்
**தேன்

ஒரு கிளாஸ் பசும் பாலை பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்துங்கள்.பின்னர் ஒரு வாழைப்பழத்தை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் பால் பச்சை வாடை நீங்கும் வரை கொதிக்க வைத்து கிளாஸிற்கு வடிகட்டி கொள்ளுங்கள்.பின்னர் அரைத்த வாழைப்பழத் துண்டுகளை பாலில் போட்டு ஒரு தேக்கரண்டி அளவிற்கு தேன் கலந்து பருக வேண்டும்.

இந்த வாழைப்பழ பாலை தினமும் ஒரு கிளாஸ் அளவிற்கு இரவு நேரத்தில் பருகி வந்தால் குறை இரத்த அழுத்தம் குணமாகும்.

**பாதாம் பருப்பு
**பால்

அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பசும் பால் ஊற்றி குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.

பால் நன்றாக கொதித்து வந்த பிறகு நான்கு அல்லது ஐந்து பாதாம் பருப்பை பொடியாக நறுக்கி பாலில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

பாதாம் பால் கொதித்து வந்த பிறகு அடுப்பை அணைக்க வேண்டும்.இந்த பாலை கிளாஸிற்கு மாற்றி பருகினால் குறை இரத்த அழுத்தம் குணமாகும்.

எந்நேரமும் வயிறு எரிச்சலா இருக்கா? அப்போ குடிக்கும் மோரில் இது ஒன்னு சேர்த்துக்கோங்க!!

சிலருக்கு உணவு சாப்பிட்டாலும் சாப்பிடாவிட்டாலும் வயிறு எரிச்சல் உணர்வு இருந்து கொண்டே இருக்கும்.இந்த வயிறு எரிச்சல் உணர்வு குணமாக மோரில் கற்றாழை துண்டுகளை போட்டு குடிக்கலாம்.

வயிறு எரிச்சல் வர காரணங்கள்:

*அல்சர்
*கார உணவுகள்
*உணவு உட்கொள்ளாமை
*சூடான உணவுகள்

வயிறு எரிச்சலை குணமாக்கும் வீட்டு வைத்தியங்கள்:

தேவையான பொருட்கள்:-

1)கற்றாழை துண்டுகள் – ஒரு கப்
2)பாதாம் பிசின் – ஒரு தேக்கரண்டி
3)மோர் – முக்கால் கப்

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு தேக்கரண்டி பாதாம் பிசினை கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி இரண்டு மணி நேரத்திற்கு ஊறவைக்க வேண்டும்.

பிறகு கெட்டி தயிர் கால் கப் அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள்.இதனை மிக்சர் ஜாரில் போட்டு அரை கப் தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் ஒரு கற்றாழை மடலை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் போட்டு அலசி எடுத்துக் கொள்ளுங்கள்.பிறகு இதனை தயாரித்து வைத்துள்ள மோரில் போட்டு மிக்ஸ் செய்து கொள்ளுங்கள்.

அடுத்து ஊறவைத்த பாதாம் பிசினை அதில் போட்டு கலந்து பருகுங்கள்.உணவு சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னர் இந்த பானத்தை பருக வேண்டும்.மோரில் இந்த பொருட்களை போட்டு பருகி வந்தால் வயிறு எரிச்சல் முழுமையாக குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)புதினா இலைகள் – 10
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்துங்கள்.பின்னர் அதில் 10 புதினா இலைகளை போட்டு குறைவான தீயில் கொதிக்க வையுங்கள்.

இந்த புதினா பானத்தை வடித்து தேன் கலந்து பருகி வந்தால் வயிறு எரிச்சல் முழுமையாக குணமாகும்.

சுய உதவிக்குழு பெண்களுக்கு சூப்பர் குட் நியூஸ்!! ரூ.10 லட்சம் வழங்கும் தமிழக அரசு!!

பெண்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த மத்திய மாநில அரசு பல சிறப்பாக நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.தற்பொழுது பெண்களுக்கு அரசு நலத் திட்டங்களில் முன்னுரிமை அளிப்பதால் அவர்களின் பொருளாதாரம் மேம்பட்டு வருகிறது.

குறிப்பாக சுய உதவிக் குழுக்களில் உள்ள பெண்களுக்கு குறைவான வட்டியில் மானியத்துடன் கடன் உதவிகள் வழங்கப்படுகிறது.கிராமபுற பெண்களை தொழில் முனைவோராக மாற்ற மத்திய மற்றும் மாநில அரசு தொடர்ந்து கடனுதவி மற்றும் பயிற்சிகளை வழங்கி வருகிறது.

அந்தவகையில் தமிழகத்தில் உள்ள 1 லட்சம் பெண்களை தொழில் முனைவோராக மாற்ற ஒவ்வொரு சுய உதவிக் குழுவிற்கும் ரூ.10,00,000 வரை கடன் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு தொடங்க உள்ளது.சிறு,குறு நடுத்தர தொழில் துறை இதை செயல்படுத்த இருக்கிறது.

பெண்களின் சுய வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் விதமாக அடுத்த 5 ஆண்டுகளில் சுமார் 1 லட்சம் பெண்களை சிறந்த தொழில் முனைவோராக மாற்ற தமிழக அரசு முடிவு செய்திருக்கும் நிலையில் இதற்கான அரசாணை விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மகளிர் சுய உதவிக் குழுக்களில் இருக்கும் பெண்களுக்கு குறைவான வட்டியில் ரூ.10 லட்சம் வரை கடனுதவி வழங்கப்பட உள்ளது.இதற்கு 6% வட்டி நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.அரசு சார்பில் 20% வரை கடனுக்கு மானியம் வழங்கப்படும்.இந்த திட்டத்திற்காக ரூ.225 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

ஒரு ஆண்டில் 20 ஆயிரம் பெண்களை தேர்வு செய்து சுயத் தொழில் செய்ய கடனுதவி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.சுய உதவிக் குழுவில் இருக்கின்ற ஒவ்வொரு பெண்ணிற்கும் அதிகபட்சம் ரூ.1.25 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுய உதவிக்குழு தொடங்கி குறைந்தது 6 மாதம் நிறைவடைந்திருக்க வேண்டும்.சுய உதவிக் குழுவில் அதிகபட்சம்ம் 20 உறுப்பினர்கள் மட்டுமே இருக்க வேண்டும்.குழு உறுப்பினர்கள் 18 முதல் 60 வயதிற்குள் இருக்க வேண்டும்.

குழு உறுப்பினரின் ஆண்டு வருமானம் ரூ.3,00,000 மிகாமல் இருக்க வேண்டும்.இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று சிறு தொழில் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு ஜாக்பாட்!! உடனே உங்கள் வங்கி கணக்க செக் பண்ணுங்க!!

மத்திய மற்றும் மாநில அரசுகள் விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்த பயிர் கடன்கள் உள்ளிட்ட பல நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.இதனால் கோடிக்கணக்கான விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.

இந்நிலையில் தென் மாவட்டமான கன்னியாகுமரியில் உள்ள விவசாயிங்களின் நலனிற்காக குறுவை தொகுப்பு திட்டத்தின்கீழ் ரூ.4000 வரை மானியம் வழங்கப்பட உள்ளது.கன்னியாகுமரி மாவட்ட வேளாண்மைத்துறை இணை இயக்குனர் முருகேசன் அவர்கள் நெல் விளைவிக்கும் விவசாயிகள் எந்திர நெல் நடவு முறையை பின்பற்றினால் ஏக்கருக்கு ரூ.4000 மானியம் வழங்கப்படும் என்று தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

விவசாய நிலங்களில் வேலை பார்க்க ஆள்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கடுமையான சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.நெல் நாற்று நடவு செய்ய கூட ஆள்பற்றாக்குறை ஏற்பட்டுள்ள காரணத்தால் நெல் சாகுபடி விளைச்சல் குறையத் தொடங்கியுள்ளது.இந்நிலையில் எந்திர நெல் நாற்று நடவு முறையை பின்பற்றினால் அதிக செலவின்றி விவசாயிகள் லாபம் பார்க்கலாம் என்பதை ஊக்குவிக்கும் வகையில் மானியம் வழங்கப்பட இருக்கிறது.

இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட வேளாண்மைத்துறை இணை இயக்குனர் முருகேசன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாட்டின் நெல் சாகுபடிப் பரப்பினை அதிகரித்து உணவு தானிய உற்பத்தியினை உயர்த்திடும் நோக்கில் நடப்பு ஆண்டின் வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் டெல்டா அல்லாத 29 மாவட்டங்களில் சிறப்பு தொகுப்பு திட்டம் வழங்கப்படும் என வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சரால் அறிவிக்கப்பட்டது.குமரி மாவட்டத்தில் 2025-2026-ம் நிதி ஆண்டில் சிறப்பு தொகுப்புத் திட்டத்தின்கீழ் நெல் எந்திர நடவு மானியம்,நுண்ணூட்டச்சத்து வினியோகம் மற்றும் திரவ நுண்ணுயிர் உரங்கள் மானிய விலையில் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆள் பற்றாக்குறை,கூடுதல் செலவினம் போன்ற காரணத்தால் விவசாயிகள் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.இந்த பிரச்சினையை சமாளிக்க விவசாயிகள் எந்திர நெல் நடவு முறையைக் கடைபிடித்தால் குறைந்த செலவில் அதிக லாபம் பெறலாம்.குறுவை தொகுப்பு திட்டத்தின்கீழ் ஏக்கர் ஒன்றுக்கு பின்னேற்பு மானியமாக ரூ.4 ஆயிரம் மட்டும் வழங்கப்பட உள்ளது.எந்திர நடவு முறையில் குறைந்த விதைகளை பயன்படுத்தி ஒரு சென்ட் பரப்பில் பாய் நாற்றங்கால் அல்லது நாற்றங்கால் தட்டுகளில் நாற்று விடப்படுகிறது.

10- 15 வயதுடைய நாற்றுகளை குத்துக்கு ஒன்று வீதம் வரிசை நடவு முறையில் நடப்படுகிறது.இம்முறையால் உரங்களை உட்கிரகிக்கும் திறன் அதிகரிக்கிறது.செடிகளுக்கு போதிய இடம், சூரிய ஒளி மற்றும் காற்றோட்டம் கிடைக்கிறது.களை மேலாண்மை எளிதாகிறது.தூர்களின் எண்ணிக்கை அதிகரித்து மகசூல் அதிகரிக்கிறது.விவசாயிகள் நெல் எந்திர நடவு மானியம் பெற உழவன் செயலி மூலம் முன்பதிவு செய்திட வேளாண்மை இணை இயக்குனர் கேட்டுக்கொள்கிறார்.

பயிர்களின் சீரான வளர்ச்சிக்கு நுண்ணூட்டச்சத்து மிக அவசியம். நுண்ணூட்டச் சத்துக்களான காப்பர், போரான்,துத்தநாகம்,மாங்கனீசு,மெக்னீசியம் முதலியவை மண்ணில் மிகக்குறைந்த அளவிலேயே காணப்படுகிறது.மேலும்,இந்த சத்துக்கள் பயிர்களால் உட்கிரகிக்க இயலாத நிலையில் மண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதால்,சத்துக்குறைவு ஏற்பட்டு பயிரின் வளர்ச்சி குன்றி காணப்படும்.இதனை தவிர்த்திட 50 சதவீத மானியத்தில் குறுவை தொகுப்பு திட்டத்தின்கீழ் நுண்ணூட்டக் கலவை வழங்கப்படுகிறது.

நெல் நுண்ணூட்டக் கலவையினை ஏக்கருக்கு 5 கிலோ வீதம் மணலுடனோ,தொழு உரத்துடனோ கலந்து நடுவதற்கு முன்பு வயலில் இட வேண்டும்.திரவ நுண்ணுயிர் உரங்கள் விதை நேர்த்தி செய்வதற்கும்,நாற்று நனைப்பதற்கும் நேரடியாக வயலில் இடுவதற்கும் பயன்படுகிறது.நெல்லுக்கு அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போபாக்டீரியா திரவ நுண்ணுயிர் உரம் அளிப்பதன் மூலம் மண்ணிலுள்ள நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.

திரவ அசோஸ்பைரில்லம் காற்றில் உள்ள தழைச்சத்தினை மண்ணில் நிலைநிறுத்தி பயிரின் வளர்ச்சிக்கு உதவுகிறது.திரவ பாஸ்போபாக்டீரியா மண்ணில் கிட்டா நிலையில் உள்ள மணிச்சத்தைக் கரைத்து பயிர்களுக்கு அளிக்கிறது.குறுவை தொகுப்பு திட்டத்தின்கீழ் ஏக்கருக்கு 500 மி.லிட்டர் அசோஸ்பைரில்லம் மற்றும் 500 மி.லிட்டர் பாஸ்போபாக்டீரியா 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது.

நமது மாவட்டத்தில் நெல் நுண்ணூட்டக் கலவை மற்றும் திரவ உயிர் உரங்கள் வேளாண்மை விரிவாக்க மையங்கள் மற்றும் துணை வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டு குறுவை சிறப்பு சாகுபடி தொகுப்புத் திட்டத்தின்கீழ் 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளது.மேலும் எந்திர நெல் நடவு மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.4 ஆயிரம் பின்னேற்பு மானியமாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வழங்கப்பட உள்ளது.இந்த தொகுப்பின் கீழ் பயன் பெற விரும்பும் விவசாயிகள் உழவன் செயலியில் முன்பதிவு செய்திடவும்,வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அக்குளில் சிவந்த கொப்பளங்கள் வருதா? இதை வலியின்றி மறைய வைப்பது எப்படி?

சிலருக்கு அக்குள் பகுதியில் சிவந்த கொப்பளங்கள் உருவாகி அதிக வலி மற்றும் எரிச்சலை உண்டாக்கும்.இந்த கொப்பளங்களால் கைகளை அசைப்பது கூட கடினமாகிவிடும்.இந்த அக்குள் கொப்பளங்களை குணப்படுத்திக் கொள்ள இந்த வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்யலாம்.

தேவைப்படும் பொருட்கள்:-

1)மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி
2)ரோஸ் வாட்டர் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

கிண்ணம் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள்.அதில் ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் மற்றும் ஒரு தேக்கரண்டி ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு குழைத்துக் கொள்ளுங்கள்.பிறகு இதை அக்குள் கொப்பளங்கள் மீது பூசினால் அவை சீக்கிரம் மறைந்துவிடும்.

தேவைப்படும் பொருட்கள்:-

1)வேப்பிலை – இரண்டு கொத்து
2)மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

முதலில் இரண்டு கொத்து வேப்பிலையை விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து கால் தேக்கரண்டி மஞ்சள் தூளை வேப்பிலை பேஸ்ட்டில் போட்டு மிக்ஸ் செய்ய வேண்டும்.

இதை அக்குள் புண்கள் மீது தடவி வந்தால் மூன்று தினங்களில் அவை காய்ந்து உதிர்ந்துவிடும்.

தேவைப்படும் பொருட்கள்:-

1)வேப்பம் பூ – இரண்டு தேக்கரண்டி
2)குப்பைமேனி இலை – இரண்டு தேக்கரண்டி
3)மஞ்சள் கிழங்கு – ஒரு பீஸ்

செய்முறை விளக்கம்:-

முதலில் வேப்பம் பூ மற்றும் குப்பைமேனி இலையை சொல்லிய அளவுபடி எடுத்துக் கொள்ளுங்கள்.அதேபோல் குப்பைமேனி இலையை எடுத்து வைத்துக் கொள்ளுஙகள்.

பிறகு இவை இரண்டையும் மிக்சர் ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்டாக அரைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்து ஒரு பீஸ் மஞ்சள் தூளை அதில் போட்டு நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளுங்கள்.இதை அக்குள் மீது தடவினால் கொப்பளங்கள் சீக்கிரம் மறையும்.

இந்த அறிகுறி தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகுங்கள்.. புற்று நோயாக இருக்க அதிக வாய்ப்பு!!

உலகிலேயே மக்கள் மிகவும் அஞ்சப்படும் நோய்களில் ஒன்றாக இருப்பது புற்றுநோய். பெரும்பாலான மரணத்திற்கு காரணம் இதுவாகவே இருக்கின்றது. உடலின் எந்த பகுதியில் வேண்டுமானாலும் புற்றுநோய் செல்கள் உருவாக கூடும் நமது உடலில் பல்வேறு வகையான செல்கள் உள்ள நிலையில் அந்த செல்கள் இயல்பான செயல்பாட்டை பராமரிப்பதற்காக நாள் ஒன்றுக்கு பலமுறை விரிவடைந்து பெருகும். ஆனால் எப்போதாவது இந்த செல் பிரிவு பாதிக்கப்பட்டு அசாதாரண செல் வளர்ச்சி ஏற்படும் பொழுது இது புற்று நோயாக மாறுகின்றது.

இந்நிலையில் உடலின் ஒரு சிறிய பகுதியிலோ அல்லது உறுப்பிலோ தோன்றி பிறகு மற்ற உறுப்புகளுக்கும் பரவக்கூடிய தன்மை கொண்டது. மருத்துவம் மற்றும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி புற்றுநோய் சிகிச்சையிலும் முன்னேற்றத்திற்கு வழி வகுத்து வருகின்றது. ஆரம்ப காலகட்டத்திலேயே அறிகுறிகளை கண்டு சிகிச்சை பெற்றுக் கொண்டால் மரணத்தை தடுக்கலாம் எனவும் கூறப்படுகின்றது. புற்றுநோய் ஏற்படும் அறிகுறியாக வாயு பிரச்சனை அல்லது காய்ச்சல் அறிகுறியாக இருக்கலாம்.

ஆனால் கல்லீரல் மற்றும் கணைய புற்று நோய்க்கு ஆரம்ப அறிகுறி கிடையாது. வயிற்று வலி, இரத்தப்போக்கு, குடல் அல்லது சிறுநீர்ப்பை செயற்பாட்டில் ஏற்படும் மாற்றங்கள், பசியின்மை, வயிற்று கோளாறு, எடை குறைதல், தொடர்ந்து இருமல், சுவை இழப்பு ஆகியவை அறிகுறியாக கூறப்படுகின்றது. இந்த அறிகுறிகளை கண்டவுடன் நாம் அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை செய்து கொண்டால் நோயின் ஆபத்தை கண்டறிந்து உடனடியாக சிகிச்சை பெற்று மரணத்திலிருந்து தப்பிக்கலாம் எனவும் கூறப்படுகின்றது.