தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 22651 கெடுக்கும் அது பிணியைத் உறுதியாகி இருக்கிறது. இந்த நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 27 லட்சத்து 95 ஆயிரத்து 402 ஆக அதிகரித்திருக்கிறது. நேற்று 463 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 26 ஆயிரத்து 328 அதிகரித்திருக்கிறது. 33 ஆயிரத்து 646 பேர் குணமடைந்ததை அடுத்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை1900036 ஆக அதிகரித்து இருக்கிறது.
தலைநகர் சென்னையை பொருத்தவரையில் நேற்று ஒரே நாளில் 1971 பேர் இந்த நோய்த் தொற்று நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். சென்னை மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 13 ஆயிரத்து 729 ஆக அதிகரித்திருக்கிறது. தமிழ்நாட்டில் இருக்கின்ற மருத்துவமனைகளில் மொத்த சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2.68 லட்சமாக இருக்கிறது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 2810 பேருக்கு இந்த நோய் தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.
இந்த சூழ்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது, தமிழகத்தில் நோய்த் தொற்று பாதிப்பு வேகமாக குறைந்து வருகிறது. அதோடு ஒரு வாரங்களில் தமிழகம் இயல்பு நிலைக்கு திரும்பி விடும் என்றும் பரிசோதனைகள் அதிமுக ஆட்சியில் ஒரு நாளைக்கு 60 ஆயிரமாக இருந்தது. தற்சமயம் ஒரு நாளைக்கு ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 700 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது என்று தெரிவித்திருக்கிறார். தமிழ்நாட்டில் 37 நாட்களில் 19 மாவட்டங்களில் நோய்தடுப்பு பணிகள் தொடர்பாக ஆய்வுகள் முடிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் மீதம் உள்ள மாவட்டங்களிலும் ஆய்வு செய்யப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.
சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்ட செய்தி! மகிழ்ச்சியில் மக்கள்!
450 படங்களில் நடித்த அற்புத நடிகர்! கொண்டாடிய பிறந்தநாள்!
450 படங்களில் நடித்த அற்புத நடிகர்! கொண்டாடிய பிறந்தநாள்!
80 களில் இருந்த அனைவருக்கும் மட்டுமல்ல, தற்போதுள்ள மக்களும், அவரை தற்போது வயது மூப்பு மற்றும் சர்கரை வியாதியின் காரணமாக படங்களில் நடிக்கவில்லை, என்றாலும் அவரை அவ்வளவு எளிதில் யாரும் மறக்க மாட்டார்கள். தற்போது வரை அவரது நகைசுவைக்கு தனி பட்டாளமே உள்ளது என்பது குறிப்பிட தக்கது.
நகைச்சுவை நடிகர் கவுண்டமணிக்கு கடந்த மாதம் 25-ந் தேதி பிறந்தநாள். வழக்கம்போல் தனது பிறந்தநாளை அவர் எளிமையாக கூட கொண்டாடவில்லை. ஆனால் அவருடைய ரசிகர்கள் கொண்டாடினார்கள். அவரைப் பற்றிய விசேஷ பதிவுகளை வெளியிட்டார்கள். அதில் உள்ள சுவாரஸ்யமான தகவல்கள் பார்க்கலாம்.
கவுண்டமணியின் சொந்த ஊர், பொள்ளாச்சியில் இருந்து திருமூர்த்திமலைக்கு செல்லும் வழியில் உள்ள வல்லகுண்டாபுரம் கிராமத்தில் மே 25, 1939 ம் ஆண்டு பிறந்தார். இவர் ஆரம்ப காலத்தில் பல நாடகங்களில் நடித்து வந்துள்ளார். ஒரு நாடகத்தில் கவுண்டர் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததால், கவுண்டமணி என்று அழைக்கப்பட்டார்.
நாகேஷ் நடித்த சர்வர் சுந்தரம் படம் மூலம் திரையுலகில் நுழைந்தார். அந்த படத்தில் அவருக்கு வசனம் கிடையாது. கூட்டத்தில் ஒருவராக வந்து போனார். அப்போது அவருக்கு 26 வயது தான். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த ராமன் எத்தனை ராமனடி படத்தில்தான் முதன்முதலாக வசனம் பேசி நடித்தார்.
இவரும், செந்திலும் இணைந்து நடித்த படங்கள் அமோக வெற்றியை பெற்றன. குறிப்பாக, கரகாட்டக்காரன் என்ற படம் வெற்றியின் உச்சத்தை தொட்டது. அவர் இதுவரை 450 படங்களில் நடித்து இருக்கிறார்.
கவுண்டமணி பேசிய வசனங்களில், இந்த காரை வச்சிருந்த சொப்ன சுந்தரியை இப்ப யாரு வச்சிருக்காங்க, அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா, நாராயணா இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலப்பா, டேய் இந்த டகால்டி வேலையெல்லாம் எங்கிட்ட வச்சுக்காதே ஆகிய வசனங்கள் தலைமுறைகளை தாண்டி, கவுண்டமணியின் பெயர் சொல்பவையாக உள்ளது.
சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்த குட்நியூஸ்!
சேலம் மாவட்டத்தில் இருக்கின்ற குமாரமங்கலம் அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அந்த சந்திப்பின்போது அவர் தெரிவித்ததாவது தமிழ்நாட்டில் இருக்கின்ற 17 மாவட்டங்களில் நோய்த்தொற்று பரவல் வெகுவாக குறைந்திருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.
தமிழ்நாட்டிற்கு தேவைப்படும் ஆக்சிஜன் தொடர்வண்டிகள் மூலமாக வருகை தருகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறை உண்டான காரணத்தால், கூடுதல் சிகிச்சை மையங்கள் மற்றும் ஆக்ஸிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
நோய்த்தொற்று பரவல் அறிகுறி யாரிடமாவது தென்பட்டால் உடனே அருகில் இருக்கின்ற மருத்துவமனைக்கு சென்று சோதனை செய்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருக்கின்றார். தமிழ்நாட்டில் நோய்த் தொற்றில் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து இருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார். ஒரு நாளைய குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 32000 நபர்கள் என்று அதிகரித்திருக்கிறது என அவர் தெரிவித்திருக்கிறார்.
இவ்வாறு வெகுவாக தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருவதும் குணமானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதன் காரணமாகத்தான் தற்சமயம் முழு ஊரடங்கு ஒரு வார காலம் நீட்டிக்கப்பட இருப்பதாக தெரிவிக்கிறார்கள். ஒருவேளை இந்த ஒருவார கால ஊரடங்கு நீட்டிபினால் தமிழகம் முற்றிலுமாக நோய் தொற்றுகளில் இருந்து விடுபடலாம் என்றும் சொல்லப்படுகிறது. அவ்வாறு விடுபட்டு விட்டால் அது மிகப்பெரிய சாதனையாக இருக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்து வருகிறார்கள்.
இனி ஆன்லைன் வகுப்புகளில் இது கட்டாயம்! இன்று முதல் அமல்!
இனி ஆன்லைன் வகுப்புகளில் இது கட்டாயம்! இன்று முதல் அமல்!
கொரோனா தொற்றானது ஓராண்டு காலமாக மக்களை பாதித்து வருகிறது.கடந்த ஆண்டு கொரோனா தொற்றின் முதல் அலையானது அதிகளவு மக்களை பாதிக்காமலிருக்க அரசாங்கம் முழு ஊரடங்கை அமல்படுத்தியது.அவ்வாறு அமல்படுத்தியதில் மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்லாமல் செல்போனில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் பயின்று வந்தனர்.இந்த ஆன்லைன் வகுப்புகளில் முழு சதவீதம் மாணவர்கள் பயில முடியா காரணத்தினால் தேர்வின்றி ஆள் பாஸ் செய்தனர்.
குறிப்பாக நமது தமிழகத்தில் 10 –ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றி ஆள் பாஸ் செய்தது இதுவே முதல் முறையாகும்.அதனையடுத்து தொற்று பரவலானது சற்று குறையவே மீண்டும் சில தளர்வுகளுடன் மக்கள் வெளியே செல்ல அனுமதித்தனர்.பள்ளிகளும் திறக்கப்பட்டது.அவ்வாறு மாணவர்கள் பள்ளிகளுக்கு வந்து பாடம் பயின்றதில் ஆசிரியர்கள் உட்பட மாணவர்களுக்கும் கொரோனா தொற்று பரவியது குறிப்பிடத்தக்கது.மக்களும் அவ்வாறு முதலில் வெளியே செல்லும் போது போதுமான பாதுகாப்புடன் செயல்பட்டனர்.நாளடைவில் கொரோனாவை மறந்து பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்காமல் செயல்பட ஆரம்பித்துவிட்டனர்.அதன் விளைவாக கொரோனா தொற்றின் 2 வது அலை அதி வேகமாக பரவ ஆரம்பித்துவிட்டது.
அதிகள உயிர்களையும் இழக்க நேரிட்டது.மேற்கொண்டு மக்கள் பாதிக்கப்படாமலிருக்க மீண்டும் அந்தந்த மாநில முதல்வர்கள் முழு ஊரடங்கை அமல்படுத்தினர்.மீண்டும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடம் நடத்தப்பட்டு வருகிறது.அவ்வாறு நடத்தப்படும் ஆன்லைன் வகுப்புகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளனர்.நேரடி வகுப்புகளை போன்றே ஆன்லைன் வகுப்புகளுக்கும் ஆடை கட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டும் என கூறியுள்ளனர்.அதுமட்டுமின்றி ஆன்லைன் வகுப்புகளுக்கான புதிய விதிமுறைகளை அமல்படுத்த 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.இந்த கட்டுப்பாட்டை அடுத்து மேற்கொண்டு பல நடவடிக்கைகள் அமலுக்கு வரும் என கூறுகின்றனர்.
பெட்ரோல் டீசல் விலை! நிம்மதி பெருமூச்சு விடும் வாகன ஓட்டிகள்!
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாள்தோறும் எண்ணெய் நிறுவனங்களால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது டீசல் விலையை நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் இந்தியாவில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
பொதுத்துறை நிறுவனங்களாக இருந்து வரும் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம், போன்ற எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் என்னையும் செய்துவருகின்றன. நோய்த்தொற்று காரணமாக, கடந்த மார்ச் மாதம் முதல் மே மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படாமல் இருந்தது. ஆனால் அந்த மாற்றம் செய்யப்படாமல் இருந்ததற்கு காரணம் சமீபத்தில் நடைபெற்ற தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல்கள் தான் காரணம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருக்கிறது. பெட்ரோல் ஒரு லிட்டர் 96 ரூபாய் 23 காசும் டீசல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் 45 காசுகள் விற்பனை ஆகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
தொழிலாளி தற்கொலை! அதிர்ச்சியில் குடும்பம்!
தொழிலாளி தற்கொலை! அதிர்ச்சியில் குடும்பம்!
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சனை. தற்போதெல்லாம் மக்கள் சின்ன மன வருத்தம் அடைந்தாலே உயிரை மாய்த்து கொள்ளும் அளவுக்கு முடிவெடுத்து விடுகின்றனர்.
எவ்வளவோ கஷ்டங்களை தாங்கி சிலர் தங்கள் குடும்பங்களை பார்த்து வரும் நிலையில் ஒன்றுமே இல்லாத விசயங்களுக்காக மக்கள் தற்கொலை செய்வது அவர்களின் குடும்பத்தை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள அட்டவளை கிராமத்தை சேர்ந்தவர் ராஜகோபால்(வயது38). தொழிலாளி. இவருக்கு திருமணமாகி திவ்யா(28) என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். இந்த நிலையில் ராஜகோபால் கடந்த சில ஆண்டுகளாக ரத்தசோகை நோயால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்தார். நேற்று முன்தினம் மதியம் ராஜகோபால் வீட்டில் இருந்து வெளியே சென்றார். மாலை நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்பாததால், சந்தேகமடைந்த உறவினர்கள் அவரை தேடினர்.
அப்போது அங்குள்ள சுடுகாட்டில் தகர கொட்டகையில் ராஜகோபால் தூக்கில் தொங்கி கொண்டு இருந்தார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ராஜகோபால் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இந்த சம்பவம் குறித்து கோத்தகிரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த செய்தி அந்த பகுதியில் உள்ள அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது குரிப்பிடதக்கது.
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு! இன்று அறிவிக்கப்படும் முக்கிய முடிவு!
தமிழ்நாட்டில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துவது குறித்து கல்வித்துறை அதிகாரிகளுடன் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அண்மையில் ஆலோசனை நடத்தினார். அதன்பின்னர் முதலமைச்சருடன் ஆலோசனை மேற்கொண்டார். இரண்டு தினங்களுக்கு முன்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்தார். அப்போது இரு தினங்களில் இது தொடர்பாக கருத்து கேட்கப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும் மாணவர்கள், ஆசிரியர்கள், உள்ளிட்டோரிடம் கருத்து கேட்கப்பட்டு பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு அறிவிக்கப்படும் என்று அவர் அப்போது தெரிவித்திருந்தார்.
அதன்படி தமிழ்நாட்டில் இருக்கின்ற பள்ளிகளில் நேற்று முந்தினம் இணையதளம் மூலமாக கருத்து கேட்பு நடத்தப்பட்டது.அதன்படி அறுபது சதவீத பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்திருக்கிறார்கள் என்று தகவல் கிடைத்திருக்கிறது.
நேற்று முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி காணொளி மூலமாக ஆலோசனையை மேற்கொண்டதாக தெரிவிக்கிறது. இந்த சூழ்நிலையில், இன்றைய தினம் சட்டமன்ற கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்த இருப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருக்கிறார். அதன் பின்னர் தமிழ்நாட்டில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துவது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
நடிகர் சூரி செய்த அதிர்ச்சிகரமான செயல்! உதயநிதியின் சூப்பர் பதிலடி!
நடிகர் சூரி செய்த அதிர்ச்சிகரமான செயல்! உதயநிதியின் சூப்பர் பதிலடி!
கொரோனா தொற்றானது சென்ற ஆண்டு 1 அலை பரவியது.அப்போது அதிக அளவு நமது இந்தியா உயிர் சேதத்தை காணவில்லை.அரசாங்கம் முழு ஊரடங்கை அமல்படுத்திய நிலையில் சென்ற ஆண்டு தொற்று சிறிதளவு குறையவே மக்கள் மீண்டும் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.அதனையடுத்து மக்கள் கொரோனா தொற்றை மறந்து வாழ ஆரம்பித்த காரணத்தினால் மீண்டும் கொரோனாவானது 2 வது அலையாக உருமாறி பரவ ஆரம்பித்துவிட்டது.அந்தவகையில் இந்த கொரோனா தொற்றின் 2-வது அலையில் இந்தியா பெருமளவு பாதிப்படைந்தது.
இந்த 2 வது அலையில் இந்தியா அதிகப்படியான உயிர்களை இழந்து நிற்கிறது.தொற்று பரவல் குறையா காரணத்தினால் மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்தினர்.அதனையடுத்து நமது தமிழகத்தில் அதிகளவு தொற்று பரவல் காணப்பட்டதால் மக்கள் சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளில் போதுமான அளவு படுக்கை வசதிகள் இன்றியும்,ஆக்சிஜன் பற்றாக்குறையாலும் தொடர்ந்து பாதித்து வந்தனர்.அரசாங்கம் மக்கள் கூறும் புகார்களுக்கு தேவையான செயல்பாடுகளை அமல்படுத்தியும் அது மக்களுக்கு போதுமானதாக இல்லை.அதனால் தமிழக அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
மக்கள் தங்களால் முடிந்த உதவியை கொரோனா தொற்று நிவாரண நிதியாக தரலாம் எனக் கூறியது.அதனையடுத்து பல சினிமா பிரபலங்கள் தங்களால் முடிந்த உதவியை மேற்கொண்டனர்.அந்தவகையில் நடிகர் சூர்யா குடும்பத்தினர் ரூ.1 கோடி ரூபாயை நேரடியாக முதலமைச்சரிடன் கொடுத்தனர்.அதனையடுத்து அஜித் போன்ற பல பிரபலங்கள் கொடுத்து உதவினர்.அந்தவகையில் சூரி அவர்கள் செய்த செயல் அனைவரையும் வியப்படைய செய்தது.நடிகர் சூரி அவர்கள் ரூ.10 லட்சம் ரூபாயை கொரோனா நிவாரண நிதிக்காக உதயநிதியிடம் வழங்கினார்.
https://www.instagram.com/p/CPsy9BYByuw/?utm_source=ig_web_copy_link
அவர் வழங்கியது மட்டுமில்லாமல் அவரது மகன் சர்வான்,மகள் வெண்ணிலா ஆகியோரின் சார்பிலும் ரூ.25 ஆயிரம் ரூபாயயை நிவாரண நிதியாக கொடுத்தார்.அவ்வாறு சூரி செய்தது அனைவரயும் வியப்படைய செய்தது.அதற்கு உதயநிதியும் சூரிக்கு நன்றி சொல்லும் விதத்தில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் செய்ததை கூறி நன்றி தெரிவித்திருந்தார்.அதற்கு சூரி,அரசு மற்றும் முன்கள பணியாளர்களும் இந்த கொடுந்த்தொற்றுடன் மக்களுக்காக போர் புரியும் இந்த தருணத்தில் என்னால் இயன்ற பங்களிப்பை தந்துள்ளேன்.ஊர் இழுக்க வேண்டிய தேர் இது இணைந்து செயல்படுவோம் விரைவில் வெல்வோம் என பதிலளித்துள்ளார்.
காதலியை கொலை செய்த கொடூரன்! கைதான கள்ளகாதலன்!
காதலியை கொலை செய்த கொடூரன்! கைதான கள்ளகாதலன்!
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நாச்சியார் பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை மகள் எழில்செல்வி(வயது 22). இவரும் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நைனாகுப்பம் கிராமத்தை சேர்ந்த சிவா என்பவரும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் உளுந்தூர்பேட்டை தாலுகா ஒலையனூர் கிராமத்தை சேர்ந்த அய்யப்பன் என்பவருடன் எழில்செல்விக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. அதன் காரணமாக குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறிய எழில்செல்வி உளுந்தூர்பேட்டையில் வாடகை வீட்டில் அய்யப்பனுடன் வசித்து வந்தார்.
இதற்கிடையே எழில்செல்வியின் நடவடிக்கைகளில் அய்யப்பனுக்கு சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து அவர்களுக்கிடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று காலையிலும் இது தொடர்பாக இருவருக்கும் இடையே மீண்டும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது ஆத்திரம் அடைந்த அய்யப்பன், எழில்செல்வியின் கழுத்தை நெரித்துள்ளார்.
இதில் மயங்கி விழுந்த அவரை, அய்யப்பன் தனது உறவினர்கள் சிலர் உதவியுடன் ஆட்டோவில் ஏற்றி சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
அங்கு தனது மனைவிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் டாக்டர்களிடம் அய்யப்பன் கூறினார். இதையடுத்து எழில்செல்வியை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதற்கிடையே இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்த உளுந்தூர்பேட்டை போலீசார், அய்யப்பனிடம் விசாரித்தபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், எழில்செல்வியை கொலை செய்ததை அய்யப்பன் ஒப்புக்கொண்டார்.
வேறு ஒருவருடன் பேசிவந்ததால் ஆத்திரம் இது தொடர்பாக அவர் போலீசாருக்கு அளித்த வாக்குமூலத்தில் எழில் செல்வியின் நடத்தையில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டதால் அவருடன் வாக்குவாதம் செய்ததாகவும், தனக்கு துரோகம் செய்துவிட்டு வேறு ஒருவருடன் செல்போனில் பேசி வந்தது தெரியவந்ததால் ஆத்திரம் அடைந்த நான் எழில் செல்வியின் கழுத்தை நெரித்து கொலை செய்ததாகவும் கூறினார்.
அதைத்தொடர்ந்து அய்யப்பனை போலீசார் கைது செய்தனர்.
சசிகலாவை நெருங்கிய ஓபிஎஸ்! அதிர்ச்சியில் இபிஎஸ்!
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான முன்னாள் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் கடந்த 10 வருடகாலமாக சென்னை பசுமை வழி சாலை யில் இருந்த அரசு இல்லமான தென்பெண்ணை இல்லத்தில் வசித்து வந்தார். அவர் தற்போதைய சட்டமன்ற கட்சி தலைவராக அதாவது எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தால் அவருடைய அரசு இல்லத்தில் தொடர்ச்சியாக வசிப்பதற்கான வாய்ப்பு அவருக்கு கிடைத்திருக்கும் என்கிறார்கள். ஆனால் எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டதால் அவரே தொடர்ச்சியாக அரசு இல்லத்தில் தங்கி இருக்கிறார்.
ஆகவே ஓபிஎஸ் தன்னுடைய அரசு வீட்டை காலி செய்து விட்டு நேற்று வாஸ்து நாள் என்ற காரணத்தால் டி நகர் கிருஷ்ணா தெருவில் இருக்கும் ஒரு வீட்டில் குடியேறி இருக்கின்றார். என்று சொல்லப்படுகிறது. முதலில் மிகவும் எளிமையான முறையில் நேற்று அவர் அந்த வீட்டில் குடியேறி இருக்கிறார்.
நேற்றைய தினம் அதிமுகவில் தலைமையகத்தில் முன்னாள் முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிச்சாமி நல்ல நாளாக இருப்பதன் காரணமாக வருகை தந்து ஒரு சில மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி இருக்கின்றார். அந்த கூட்டத்தின் முடிவில் பத்திரிக்கையாளர்களும் உரையாற்றியபோது சசிகலா காட்சியும் இல்லை. அவர் முன்னரே அரசியலிலிருந்து விலகுவதாக தெரிவித்துவிட்டார். அதோடு அவர் அதிமுக தொண்டர்களுடன் தொடர்பில் இல்லை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தொண்டர்களுடன் அவர் பேசி வருகிறார் என்று தெரிவித்திருக்கிறார்.
ஒரு சில நாட்களுக்கு முன்னர் கேபி முனுசாமி தெரிவித்த அதே கருத்தை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கிறார். இருந்தாலும் இந்த விவகாரம் தொடர்பாக கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓபிஎஸ் எந்தவிதமான கருத்தையும் இதுவரை வெளிப்படுத்தவில்லை என்று சொல்லப்படுகிறது.
அதே சமயம் தன்னுடைய நடவடிக்கைகள் மூலமாக பன்னீர்செல்வம் ஒரு சில செய்திகளை மற்றவர்களுக்கு உணர்த்துவதாக தெரிவிக்கிறார்கள் அவருடைய தரப்பைச் சேர்ந்தவர்கள்.
நேற்று பன்னீர்செல்வம் பால் காய்ச்சிய புது வீட்டிற்கு தற்சமயம் சசிகலா தங்கியிருக்கும் இருக்கும் வீட்டிற்கு இடையே சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம்தான் என்று சொல்கிறார்கள். அவர்கள் இருவரும் தேவைப்பட்டால் நடைபயணத்தில் சென்று சந்தித்துவிட்டு வந்துவிடுவார் ஓபிஎஸ் என்று சொல்லப்படுகிறது. அவர்கள் இருவருக்குமான தகவல் பரிமாற்றத்திற்கு இது மிகவும் எளிதாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. அந்த விதத்தில் சசிகலாவை பன்னீர்செல்வம் நெருங்கி விட்டார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.