இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டதன் காரணமாக, பல மாநிலங்களில் தடுப்பூசி இயக்கங்கள் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில், நேற்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி தடுப்பூசிகள் இது தொடர்பாக ஆய்வு நடத்தியதாக சொல்லப்படுகிறது. காணொளி மூலமாக நடைபெற்ற இந்த ஆய்வு கூட்டத்தில் நாட்டின் தடுப்பு மருந்து வழங்கும் நடவடிக்கையை பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு செய்து இருக்கிறார்.
இப்போது இருக்கும் தடுப்பூசி மருந்துகளின் இருப்பு தொடர்பாகவும், அதனை அறிவிக்க செய்வதற்கான திட்டம் தொடர்பாகவும், பிரதமர் மோடியிடம் எடுத்துரைக்கப்பட்டது. தெரிவிக்கப்படுகிறது. தடுப்பூசி உற்பத்தியைப் பெருக்குவதற்காக தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களுக்கு உதவுவதற்காக முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியிடம் விளக்கம் அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சுகாதார பணியாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் 40 வயதிற்கும் அதிகமானோர் மற்றும் 18 முதல் 44 வயது வரை இருப்பவர்கள் உள்ளிட்டோருக்கு தடுப்பூசி வழங்கல் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு செய்திருக்கிறார். பல மாநிலங்களில் தடுப்பு மருந்து தொடர்பாக ஆய்வு செய்த பிரதமர் நரேந்திர மோடி அதிக அளவில் தடுப்பு மருந்து வீணாவதாகவும் அதனை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.
தடுப்பூசி இருப்பு தொடர்பாக மாநிலங்களுக்கு முன்கூட்டியே தெரிய படுத்துவதாகவும், அந்த தகவலை மாவட்டங்களுக்கு அனுப்பி பொதுமக்கள் சிரமமின்றி இருப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்று அதிகாரிகளிடம் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டதாகவும் தெரிகிறது.
இந்த நிலையில், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், போன்ற முக்கிய அமைச்சர்கள் பிரதமரின் முதன்மைச் செயலாளர் அமைச்சரவை செயலாளர் சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் இதர முக்கிய அலுவலர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்று இருக்கிறார்கள்.
தடுப்பூசி வீணாவதை தடுக்க வேண்டும்! பிரதமர் நரேந்திரமோடி அதிரடி உத்தரவு!
மீண்டும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பா? முதலமைச்சர் திடீர் ஆலோசனை!
தமிழ்நாட்டில் ஜூன் மாதம் ஏழாம் தேதியுடன் தற்போது இருக்கும் போது ஊரடங்கு முடிவுக்கு வருகிறது. இந்த நிலையில், அந்த ஊரடங்கை இன்னும் ஒரு வார காலத்திற்கு நீட்டிக்கலாம் என நேற்று நடைபெற்ற முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
தமிழ்நாட்டில் இதுவரையில் 35 ஆயிரத்தை தாண்டிய ஒரு நாள் நோய் தொற்று பாதிப்பு நேற்றைய நிலவரப்படி 22 ஆயிரமாக குறைந்து இருக்கிறது. இதற்கு காரணம் முழு ஊரடங்கு அமலில் இருப்பது தான் என்று சொல்லப்படுகிறது.
கடந்த மே மாதம் 10 ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் ஊரடங்கு போடப்பட்டது. முதலில் மே மாதம் 24ஆம் தேதி வரையில் அந்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நோய்த்தொற்று பரவல் அதிகரித்த பின்னர் மே மாதம் 31-ஆம் தேதி வரை அந்த ஊர் எனக்கு நீட்டிக்கப்பட்டது. அதன் பிறகு மருத்துவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சி தலைவர்களுடன் ஆலோசனை செய்த முதலமைச்சர் ஸ்டாலின் அந்த ஊரடங்கை ஜூன் மாதம் ஏழாம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தார்.
இவைகளுக்கு நடுவே தமிழகத்தில் பாதிப்பு குறைந்து வருகிறது, ஆனாலும் கூட அது திருப்தி தரும் விதமாக இருக்கவில்லை என்று ஸ்டாலின் தெரிவித்தார். அதேநேரத்தில் ஊரடங்குக்கு விரைவாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் அதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது என்றும் தெரிவித்தார்.
இதன் காரணமாக, தான் ஜூன் மாதம் 7ம் தேதியுடன் ஊரடங்கு முடிவுக்கு வரும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் நேற்றைய தினம் மறுபடியும் முதலமைச்சர் ஸ்டாலின் இது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார். அந்த ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு, டிஜிபி திரிபாதி. நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் போன்றோர் இதில் பங்கேற்றார்கள்.
அந்த சமயத்தில் சென்னை போன்ற நெருக்கடி மிகுந்த பகுதிகளில் பாதிப்புகள் குறைந்து இருந்தாலும் ஒரு சில மாவட்டங்களில் நோய் தொற்று வராமல் இன்னும் குறையவில்லை என்று மருத்துவ வல்லுநர்கள் குழு தெரிவித்திருக்கிறது. ஆகவே இன்னும் ஒரு வார காலம் இந்த ஊரடங்கு நீடிக்கலாம் என்று பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி தமிழ்நாட்டில் சிற்சில தளர்வுகளுடன் மேலும் ஒரு வார காலத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று முடிவெடுக்கபட்டிருப்பதாகவும், சிறுசிறு தளர்வுகள் கொடுப்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருவதாகவும், அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
டிரம்பின் ஃபேஸ்புக் 2 ஆண்டுக்கு முடக்கம்! அசிங்கப்படுத்தி விட்டதாக டிரம்ப் அட்டாக்!
டிரம்பின் ஃபேஸ்புக் பேஜ் 2 ஆண்டுகளுக்கு முடக்கப்பட்டுள்ளது. இது தனக்கு வாக்களித்த மக்களை அசிங்கப்படுத்தி விட்டதாக டிரம்ப் பதிலடி கொடுத்துள்ளார்.
அமெரிக்க அதிபராக இருந்த டொனால்டு டிரம்ப் கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஜோபைடனிடம் தோல்வியடைந்தார். இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோபைடன் பதவியேற்க தேவையான நடவடிக்கைகள் வாஷிங்டன் டிசியில் உள்ள நாடாளுமன்ற கட்டிடமான கேப்பிட்டலில் மேற்கொள்ளப்பட்டன.
அப்போது, தோல்வியை ஏற்றுக் கொள்ளாத டிரம்ப் பேசிய வீடியோ சமூக வளைதளங்களில் பரவியதால், ஜனவரி 6ம் தேதி கேப்பிட்டல் கட்டடத்தில் ஆதரவாளர்கள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். இதையடுத்து வாஷிங்டன் டிசி நகரம் முழுவதும் ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்து நிலைமையை சரிசெய்தனர்.
இதைத் தொடர்ந்து, டிரம்பின் பக்கங்களை டிவிட்டர் நிறுவனம் நீக்கியது. அதே நேரத்தில் பேஸ்புக் நிறுவனம் தற்காலிகமாக மட்டுமே தடை விதித்திருந்தது. இந்நிலையில், டிரம்பின் பேஸ்புக் பக்கத்தை 2 ஆண்டுகளுக்கு நீக்குவதாக அந்நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஜனவரி 7ஆம் தேதி முதல் கணக்கில் கொண்டு 2023ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி வரை டிரம்பின் பேஸ்புக் பேஜ் முடக்கப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 ஆண்டுகளுக்குப் பிறகு பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதை உறுதி செய்த பிறகே மீண்டும் டிரம்பின் பேஸ்புக் பேஜை அனுமதிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ளது. இதற்கு கருத்து தெரிவித்துள்ள முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், தனக்கு வாக்களித்த 52மில்லியன் மக்களை அவமதித்துவிட்டதாக கூறியுள்ளார். மீண்டும் நாங்கள் வெற்றி பெறுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை தயாரிக்கிறது சீரம் நிறுவனம்! மத்திய அரசு அனுமதி!
ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை தயாரிக்கிறது சீரம் இந்தியா நிறுவனம்! மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
உலக நாடுகளை கொரோனா எனும் பெருந்தொற்று அச்சுறுத்தி வந்த போது முதன்முதலில் தடுப்பூசியை தயாரித்தது ரஷ்யா தான். ஸ்புட்னிக்-வி எனப் பெயரிடப்பட்ட அந்த தடுப்பூசி 91% பயனளிக்கக் கூடியது என்று ரஷ்யா அறிவித்தது. அதே நேரத்தில் இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் தடுப்பூசிகளை தயாரித்தன.
இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் தடுப்பூசியை தயாரித்தது. அதே நேரத்தில் மற்றொரு இந்திய நிறுவனமான சீரம், ஆக்ஸ்போர்டு நிறுவனத்துடன் இணைந்து கோவிஷீல்டு தடுப்பூசியை தயாரித்து விநியோகித்து வருகிறது. இந்நிலையில், நாடு முழுவதும் உடனடியாக தடுப்பூசி போட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதால், தடுப்பூசி தயாரிப்பை அதிகப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன்படி, ரஷ்யா தயாரித்த ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை ஐதராபாத்தில் உள்ள டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் தயாரித்து விநியோகிக்க அனுமதி பெற்றுள்ளது. இந்நிலையில், கோவிஷீல்டை தயாரிக்கும் சீரம் நிறுவனமும் ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசியை தயாரிக்க அனுமதிக்குமாறு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்புக்கு விண்ணப்பித்திருந்தது.
இதற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு தற்போது அனுமதி வழங்கியுள்ளது. இதனால், ரஷ்யாவின் தொற்றுநோய்வியல் மற்றும் நுண்ணுயிரியலின் காமாலேயா ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து பூனேவில் உள்ள ஹடாப்ஸர் மையத்தில் சீரம் நிறுவனம் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை தயாரிக்க உள்ளது.
அதே நேரத்தில், தொழில்நுட்பட பரிமாற்றம், மூலப்பொருட்கள் இறக்குமதி போன்றவற்றுக்கான ஒப்பந்த நகலை வழங்க வேண்டும் என நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. 3 ஆண்டுகளுக்கு மட்டுமே உரிமம் வழங்கப்படும் என்றும், அதன் பிறகு உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வண்டலூர் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா! பெண் சிங்கம் உயிரிழந்துள்ளதால் அதிர்ச்சி!
வண்டலூர் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா! பெண் சிங்கம் உயிரிழந்துள்ளதால் அதிர்ச்சி!
வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள 13 சிங்கங்களுக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பது நேற்று முன்தினம் கண்டறியப்பட்டது. இதில், நீலா என்ற 9 வயது பெண் சிங்கம் அன்று மாலை உயிரிழந்தது. இது போன்று, ஐதராபாத், ஜெய்பூர் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் உள்ள இட்டவா ஆகிய இடங்களில் உள்ள ஆசிய சிங்கங்களுக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால், அனைத்து சிங்கங்களையும் பூங்கா அதிகாரிகள் தனிமைப்படுத்தினர்.
தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தினருடன் பூங்கா அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு, சிங்கங்களுக்கு நோய் எதிர்ப்பு மருந்துகள் மற்றும் இதர மருந்துகள் வழங்கப்பட்டன. தொற்று பாதிப்புக்கு ஏற்ப மருத்துவ சிகிச்சையும் வழங்கப்பட்டு வருகிறது. சிங்கங்களின் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, இந்திய தேசிய மருத்துவ கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள போபாலில் உள்ள ICAR-NIHSAD என்ற ஆய்வகத்திற்கு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக மருத்துவ வல்லுநர்கள் குழு பூங்காவின் கால்நடை மருத்துவர்களுக்கு உதவி வருகின்றனர். இந்த குழுவினர் பூங்காவில் உள்ள மற்ற விலங்குகளுக்கு கொரோனா தொற்று பரவாமல் பாதுகாப்பது குறித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மேலும், தடுப்பு நடவடிக்கையாக விலங்குகளை கையாளும் பணியாளர்கள் உரிய மருத்துவ ஆய்வுகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பூங்காவில் உள்ள விலங்குகளின் நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த ஏப்ரல் 20ம் தேதி முதல் தமிழகத்தின் அனைத்து உயிரியல் பூங்காக்களிலும், பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த நேற்று முன்தினம் விலங்குகளை கையாளும் 61% பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
விலங்குகளிடம் இருந்து எடுக்கப்பட்ட கொரோனா வைரஸ் நுண்ணுயிரியின் மரபணுவினை வகைப்படுத்தும் பணியினை மேற்கொண்டு வரும் LaCONES-CCMB என்ற ஆய்வகம் விலங்குகளுக்கு அளிப்பது குறித்து அறிவுரைகளையும் வழங்கியுள்ளது. மேலும், தேசிய அளவில் உள்ள துறை வல்லுநர்களுடனும், விஞ்ஞானிகளுடனும் அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர்.
இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான நாளாக இருக்கும்! இன்றைய ராசி பலன்கள்:
இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான நாளாக இருக்கும்! இன்றைய ராசி பலன்கள்:
மேஷ ராசி:
உங்களது பணிகளில் நீங்கள் உணர்ச்சி வசப்படாமல் இருக்க வேண்டும். உங்கள் துணையுடன் அனுசரித்து போகவும்.வணவரவு திருப்தி அளிக்காது. செலவுகள் ஏற்படும். அமைதியின்மை உணர்வு ஏற்படலாம்.
ரிஷப ராசி:
உங்களுக்கு பணியில் புதிய வாய்ப்புகள். அது உங்களுக்கு நன்மை அளிக்கும். உங்களின் பணிகளில் திறமை வெளிப்படும். காதலுக்கு உகந்த நாள். உங்கள் துணையுடன் நேரம் செலவிடுவீர்கள். இன்று பண வரவு சிறப்பாக இருக்கும்.
மிதுன ராசி:
உங்களின் பணி மகிழ்சிகரமாக இருக்கும். மேலதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள்.இன்று லாபம் அதிகமாக இருக்கும். நன்கு சம்பாதிப்பீர்கள். பெற்றோருடன் நேரம் செலவிடுவீர்கள். பணவரவு திருப்தி அளிக்கும்.
கடக ராசி:
இன்று உங்களுக்கு ஆன்மீக சிந்தனைகள் அதிகரித்து காணப்படும். பணிகள் அதிகமாக இருக்கும். உங்கள் துணையுடன் நட்பு பாராட்டுவீர்கள். கூடுதல் செலவுகள் எபடும் அதனால் வருத்தமடைவீர்கள்.
சிம்ம ராசி:
உங்களுக்கு கூடுதல் பொறுப்புகள் ஏற்படும். அது உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும். இன்று காதல் குறைந்து காணப்படும். பண வரவு குறைவாக இருக்கும்.
கன்னி ராசி:
இன்று உங்களுக்கு மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். நீங்கள் இன்று நகைசுவையாக சிந்திப்பீர்கள். உங்களிடம் இருக்கும் பணம் உங்களுக்கு திருப்தி அளிக்கும்.
.துலாம் ராசி:
உங்களின் நம்பிக்கை உங்களுக்கு சிறந்த அதிர்ஷ்டம் ஏற்படுத்தி தரும். பணிகளை தரமாக முடிப்பீர்கள். மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பெற்றோருடன் நல்லுறவு ஏற்படும்.பணவரவு அதிகமாக இருக்கும்.
விருச்சிக ராசி:
இன்று எந்த முடிவு எடுத்தாலும் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்து எடுக்கும். இசை கேட்பதிலோ அல்லது வேறு பிடித்த விசயங்களில் மனதை திசை திருப்பவும். உங்கள் துணையுடன் சண்டை ஏற்படலாம்.
தனுசு ராசி:
உங்கள் பணிகளில் தவறுகள் ஏற்படலாம். எனவே பதற்றப்படாமல் திட்டமிட்டு பணியாற்றவும். இந்த நேரத்தில் பொறுமையாக இருக்க வேண்டும். இன்று அதிக செலவுகள் ஏற்படும்.
மகர ராசி:
இன்று உங்களுக்கு வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கும். அது உங்களுக்கு தைரியத்தை ஏற்படுத்தும். பனியின் காரணமாக பயணம் மேற்கொள்ள நேரும். பணவரவு திருப்தி அளிக்கும்.
கும்ப ராசி:
இன்று நீங்கள் அனைவரையும் அனுசரித்து போக நேரும். அமைதியாக இருங்கள். துணையுடன் தேவையற்ற வாக்குவாதம் ஏற்படும்.பண விசயங்களில் சுமை அதிகரித்து காணப்படும்.
மீன ராசி:
உங்கள் விருப்பங்கள் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். கூடுதல் பணிகள் ஏற்படும். சில முக்கிய முடிவுகளை எடுக்க புத்தியை பயன்படுத்தவும். பொறுப்புகளை கவனமாக கையாள வேண்டும். கூடுதல் செலவு ஏற்படும்.
12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுமா? அமைச்சர் விளக்கம்!
12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுமா? அமைச்சர் விளக்கம்!
கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதற்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர் தரப்பில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், மதிப்பெண்களை எப்படி வழங்குவது என்பது குறித்து இரண்டு வாரங்களில் தெரிவிக்கப்படும் என சிபிஎஸ்இ கூறியுள்ளது.
சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட பிறகு, உத்தரப்பிரதேசம், கோவா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்துள்ளன. இதைத் தொடர்ந்து தமிழகத்திலும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுமா? என்ற எதிர்பார்ப்பு மாணவர்களிடையேயும் பெற்றோர்களிடையேயும் எழுந்துள்ளது.
இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று ஆலோசனை மேற்கொண்டார். இதையடுத்து, பத்திரிக்கையாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது, தேர்வுகள் நடத்தப்படுவதில் பல்வேறு கருத்துக்கள் பெற்றோர் மற்றும் மாணவர்களிடையே இருப்பதை, மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக கூறினார்.
இதனால், இன்று மருத்துவ வல்லுநர்களுடனும், அனைத்துக்கட்சி பிரதிநிதிகளுடனும் ஆலோசனை நடத்தப்படும் என்றும், அதன் பிறகு முதலமைச்சர் ஸ்டாலின் உரிய அறிவிப்பை வெளியிடுவார் என்றும் அன்பில் மகேஷ் தெரிவித்தார். மற்ற மாநிலங்களில் உடனடியாக 12ம் வகுப்பு பொத்தேர்வை ரத்து செய்துள்ள நிலையில், தமிழகத்தில் அறிவிப்பு வெளியிட தாமதமாவதால் மாணவர்களும் பெற்றோர்களும் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில் ரூ.70 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருள் பறிமுதல்! இரண்டு பெண்கள் கைது!
சென்னை விமான நிலையத்தில் ரூ.70 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருள் பறிமுதல்! இரண்டு பெண்கள் கைது!
போதைப் பொருள் கடத்திவரப்படுவதாக கிடைத்த உளவுத் தகவலையடுத்து, ஜோகனஸ் பர்க்கிலிருந்து தோகா வழியாக சென்னை வந்த கத்தார் ஏர்வேஸ் விமான பயணிகளை, சுங்க அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அந்த விமானத்தில் வந்த 2 ஆப்பிரிக்க பெண்களின் நடவடிக்கை சந்தேகிக்கும் வகையில் இருந்தது. ஒருவர் வீல் சேரில் அமர்ந்தும், மற்றொருவர் ஆரோக்கியமாகவும் இருந்தார். வீல்சேரில் அமர்ந்திருந்தவரின் உடல் நிலை குறித்து சுங்க அதிகாரிகள் விசாரித்தனர். அவர் பதற்றம் அடைந்து முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.
அவர்கள் கொண்டு வந்த பைகளை பரிசோதித்த போது, அதில் 8 பிளாஸ்டிக் பைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் மசாலா பொடிகள் தூவப்பட்டிருந்தன. பரிசோதனையில் அவை வெள்ளை நிற ஹெராயின் பவுடர் என உறுதி செய்யப்பட்டது. 9.87 கிலோ எடையில் இருந்த இந்த ஹெராயின் போதைப் பொருளின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.70 கோடி. இவைகள் போதைப் பொருள் மற்றும் சுங்க சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னை விமான நிலைய சுங்கத்துறை: ஜோஹன்னஸ்பர்க்கிலிருந்து QR 528 விமானம் மூலம் தோஹா வழியாக சென்னை வந்த 2 ஆப்பிரிக்க நாட்டு பெண் பயணிகளிடமிருந்து ரூ. 70 கோடி மதிப்புள்ள 9.87 kg ஹெராயின் கைப்பற்றப்பட்டது. இதை ஸ்ட்ராலர் பேக்கில் மறைத்து வைத்திருந்தனர். NDPS சட்டப்படி இருவரும் கைது. pic.twitter.com/bhMJGdOKCi
— Chennai Customs (@ChennaiCustoms) June 4, 2021
இவற்றை கடத்திவந்த இரு பெண்களிடம் நடத்திய விசாரணையில், ஒருவர் ஜிம்பாப்வே நாட்டிலிருந்து தில்லியில் உள்ள ஒரு பல்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்தார் என்றும், அவருக்கு உதவியாக தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுன் நகரில் வசிக்கும் மற்றொரு பெண்ணும் வந்தது தெரியவந்தது.
கொவிட் அச்சுறுத்தல் காரணமாக அவர்கள் சென்னையில் இறங்கினர். இருவரும் போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக மேலும் விசாரணைகள் நடைப்பெறுவதாக, சென்னை சர்வதேச விமான நிலைய சுங்க ஆணையர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? தளர்வு அறிவிக்கப்படுமா? இன்று முக்கிய முடிவு!
தமிழகத்தில் முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? தளர்வு அறிவிக்கப்படுமா? என்பது குறித்து இன்று முக்கிய முடிவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையை தடுக்க தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இந்த முழு ஊரடங்கு நாளை மறுநாளுடன் முடிவடைய உள்ளதால், ஊரடங்கு நீட்டிக்கப்படுமோ? என்ற அச்சம் பலரிடம் உள்ளது. அதே நேரத்தில், கொரோனா தொற்று குறைந்து வந்தாலும், நேற்று 22 ஆயிரம் பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதால், முழு ஊரடங்கு நீட்டிக்கவே வாய்ப்புகள் உள்ளன.
அதே நேரத்தில், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், குறிப்பிட்ட நேரத்திற்கு தளர்வுகளை அறிவித்து ஊரடங்கை நீட்டிக்கலாம் என சிலர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்நிலையில், நேற்று தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலாளர் இறையன்பு, தலைமை காவல்துறை இயக்குநர் திரிபாதி, பல்துறை செயலாளர்கள் உள்ளிட்டோருடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது ஊரடங்கை ஒருவாரத்திற்கு நீட்டிக்கலாம் என்றும், கொரோனா வைரஸ் தொற்று குறைந்த மாவட்டங்களில் தளர்வுகளை அறிவிக்கலாம் என்றும் வல்லுநர்கள் பரிந்துரைத்தது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
இதையடுத்து, முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? அல்லது தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? என்பது குறித்து இன்று மதியம் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு முழு ஊரடங்கு அறிவிப்பை சனிக்கிழமை மதியம் தான் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். மதியம் திடீரென அறிவித்ததால், காலை 10 மூடப்பட்ட கடைகள் அனைத்தும் மீண்டும் அவசர அவசரமாக அனைவரும் திறந்து விற்பனையில் ஈடுபட்டனர். பொதுமக்களும் ஒரே நாள் தான் உள்ளது என சந்தைகளில் கூட்டம் கூட்டமாக கூடினர்.
தளர்வுகள் அனைத்தும் அடுத்த ஒன்றரை நாட்கள் நீக்கப்பட்டு போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டதால் அனைவரும் சொந்த ஊர்களுக்கு படையெடுத்தனர். அதே போன்று, இன்றும் சனிக்கிழமை என்பதால் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார் என வணிகர்கள் சிலர் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
சற்று முன்: கொஞ்ச நேரத்தில் உயிர் போய்டும்! எடுத்துட்டு போங்க!- சேலம்!
இன்னும் கொஞ்ச நேரத்தில் உயிர் போயிடும் கூட்டிகிட்டு போய் விடுங்கள் என்று சேலம் மருத்துவமனை மருத்துவர்கள் மெத்தன போக்கால் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் அரசு மருத்துவமனையில் சுமார் 8 மணி அளவில் நடந்த சம்பவம் ஒன்று மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்ட ஒரு அம்மாவுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. உடனே பதறிப்போய் உடனிருந்தவர் ஒருவர் அங்கிருந்த செவிலியர் ஒருவரிடம் அந்த அம்மாவிற்கு ஆக்சிஜன் அளவு குறைந்துள்ளதால் மூச்சுத் திணறல் ஏற்படுகிறது என்று சொல்ல , அந்த செவிலியர் ஆக்சிஜன் சரிபார்க்கும் கருவியை எடுத்துக் கொண்டு வந்து ஆக்சிஜனை பார்த்துவிட்டு எதுவும் சொல்லாமல் போயுள்ளார்.
பின்பு மற்றொருவர் வந்து ஆக்சிஜன் அளவை பரிசோதித்து விட்டு எதுவும் சொல்லாமல் ஆக்சிஜன் அளவு 53 தான் இருக்கிறது என கூறி ஊசி போட்டு உள்ளார்கள்.
ஊசி போட்டும் ஆக்சிஜன் அளவு அதிகரிக்க வில்லை. அதனால் உடனிருந்தவர் பதறிப்போய் மருத்துவர்களை அழைத்து வாருங்கள் என கெஞ்சியுள்ளார்.
போய் டாக்டரை அழைத்து வருகிறேன் என்று கூறி சென்றவர்கள் யாரும் வரவில்லையாம். மறுபடியும் சென்று கூறியதற்கு பின்னும் ஆக்சிஜன் கருவியை எடுத்து வந்து பரிசோதித்துவிட்டு சென்று விட்டார்களாம்.
அருகிலிருந்தவர் போய் கேட்கையில் அங்கு உள்ள மருத்துவர்களைச் கேட்கும் பொழுது, அந்த அம்மாவின் உயிரை காப்பாற்ற முடியாது வேண்டுமென்றால் கூட்டிப் போகச் சொல்லுங்கள் என்று கூறியுள்ளனர்.
ஐசியூ, வென்டிலேட்டர் என எவ்வளவோ சிகிச்சை இருந்தும் அது எல்லாம் பண்ண முடியாதா என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள் கொஞ்ச நேரத்தில் உயிர் போய்விடும் அதை எல்லாம் பண்ண முடியாது போங்க சார் என்று தெரிவித்துள்ளனர்.
நாடி இருக்கே காப்பாற்ற முடியாதா என கதறி உள்ளனர். கொஞ்சம் கொஞ்சமாக உயிர் போய்விடும் அந்த ஆக்சிஜன் மாஸ்க் எடுத்துவிட சொல்லுங்கள் என்று கூறியுள்ளனர். அதற்கு என்ன சார் இப்படி சொல்றீங்க என்று கேட்டதற்கு ,நான் என்ன சார் பண்றது, போங்க சார், என்று பதில் சொல்லி போக சொல்லியுள்ளார்.
அவர் சொன்ன கொஞ்ச நேரத்திலேயே அந்த அம்மாவின் உயிரும் பிரிந்து விட்டது.
தான் சொந்த செலவில், ஊரடங்கு காலத்தில் பொருளாதாரத்திற்கும் எவ்வளவோ கஷ்டப்பட்டு நிலைமையிலும் , ஏழைகள் எவ்வளவோ உதவிகளை செய்து வருகிறார்கள். இந்த மாதிரியான செயல்கள் தான் அரசு மருத்துவமனைகள் மீதும் மருத்துவர்கள் மீதும் மிகப்பெரிய அதிருப்தியை உண்டாக்குகிறது.
அன்புக்குரியவர்களை இழக்கும் தருணம் மரண வலியை விட கொடுமையானது என்று அவர்களுக்கு புரியுமா என்று தான் தெரியவில்லை.