Sunday, July 20, 2025
Home Blog Page 4562

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் வாழ்க்கை வரலாறு படத்திற்கு தடை விதித்த நீதிமன்றம்!

0

சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவருக்கும் தெரிந்தது. இன்னும் அவரது தற்கொலை நிமிடங்களை யாராலும் மறக்க முடியாது. இது கொலையா தற்கொலையா என்ற வழக்கு நீதிமன்றத்தில் இன்னும் முடிவுக்கு வரவில்லை. பாலிவுட்டில் வாரிசுகளின் ஆதிக்கத்தால் இவருக்கு படவாய்ப்புகள் பறிக்கப்பட்ட மன அழுத்தத்திற்கு உள்ளாகி இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்பட்டது. போதை பழக்கம் ஒரு பக்கம் காதல் தோல்வி என ஒருபக்கம் எனில் இவரது தற்கொலைக்கு காரணம் என்று பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வருகிறது.

 

இந்நிலையில் இவரது வாழ்க்கை வரலாற்றை NYAY: The Justice என்ற தலைப்பில் திரை படம் தயாராகி வருகிறது. இந்த திரைப்படத்தை திலீம் குலாட்டி இயக்குனர் இயக்கி உள்ளார். இதில் சுஷாந்த் சிங் ராஜ்புட் ஆக ஜூபர் கான் நடித்துள்ளார். அவரது காதலியான ரியா சக்கரவர்த்தியாக ஸ்ரேயா சுக்லா நடித்துள்ளார். இவர்கள் தவிர பலர் இந்த திரைப்படத்தில் நடித்து உள்ளார்கள்.

 

விகாஷ் புரொடக்ஷன் சரோகி, ரகுல் சர்மா ஆகியோர் தயாரித்துள்ளனர். இந்த படம் வருகின்ற 11ம் தேதி வெளிவருவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் சுஷாந்த் சிங்கின் தந்தை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

 

சுஷாந்த் சிங்கின் தந்தை இப்படம் வெளிவருவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தற்போது சுஷாந்த்தின் கொலை வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் இந்த படம் வெளிவந்தால் வழக்கின் போக்கை மாற்றும் என குறிப்பிட்டிருக்கிறார்.

 

இந்த மனுவை விசாரித்த டெல்லி நீதிமன்றம், சுஷாந்த்தின் வழக்கில் தீர்ப்பு வரும் வரை இந்த படத்தை வெளியிட தடை விதித்துள்ளது.

 

 

 

 

சேலத்தில் 2 மையங்களுக்கு “சீல்” மக்களை பதட்டத்துக்கு ஆளாக்க வேண்டாம்- அமைச்சர்!

0

சேலம் மாவட்டத்தில் உள்ள குறிஞ்சி மருத்துவமனை மற்றும் சண்முக மருத்துவமனைகளில் உள்ள கொரோனா பரிசோதனை மையங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

 

கொரோனா இல்லாமலே கொரோனா உள்ளது எனக்கூறி தவறான பரிசோதனைகளை கொடுத்த இரண்டு பரிசோதனை மையங்களும் சீல் வைக்கப்பட்டுள்ளது.

 

அதை பற்றிய பேசிய அமைச்சர், சேலம் இரும்பாலையில் 500 ஆக்சிஜன் கொண்ட படுக்கைகள் போர்க்கால அடிப்படையில் விரைந்து பணி நடந்துகொண்டிருக்கிறது. இன்னும் ஐந்து நாட்களில் முதல்வர் அந்த அறிவிப்பை தெரிவிப்பார் எனவும் கூறியுள்ளார்.

 

அரசு மருத்துவமனைகளிலும் கொரோணா பரிசோதனை 5300க்கும் மேற்பட்ட சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்படுகின்றன. அதில் 11 -12 சதவீதம் மட்டுமே கொரோனா பாசிட்டிவ் வருகிறது.ஆனால் தனியார் மருத்துவமனைகளில் 1300 சாம்பிள்கள் செய்யப்படுகின்றன. 50 சதவீதத்துக்கும் மேல் கொரோனா பாசிட்டிவ் வருகின்றது.இந்த சந்தேகத்தின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையின் பொழுது தனியார் மருத்துவமனைகள் தவறான முடிவுகளை வெளியிட்டது தெரியவந்தது. இதனால் சேலம் குறிஞ்சி மற்றும் சண்முகா மருத்துவ பரிசோதனை மையங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

 

இரும்பாலை மையத்தில், 230 படுக்கைகளில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள, 270 படுக்கைகள் காலியாக உள்ளன. படுக்கைகள் இல்லை என தவறான தகவல்களை பரப்பி, மக்களை பதட்டத்துக்குள்ளாக்க வேண்டாம் என கூறினார்.

தமிழகத்தில் 22651 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு! பலி குறையாததால் அதிர்ச்சி!

0

தமிழகத்தில் 22651 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு! பலி குறையாததால் அதிர்ச்சி!

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையில் 36 ஆயிரம் என்ற உச்சத்தை எட்டி, தற்போது பாதிப்பு குறைந்து வருகிறது. தொடர்ந்து 15வது நாளாக படிப்படியாக குறைந்து, கடந்த 24 மணி நேரத்தில் 22,651 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.  இதில், கோவையில் 2,810 பேருக்கு அதிகபட்சமாக பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் 1,971 பேரும், ஈரோட்டில் 1,619 பேரும், சேலத்தில் 1,187 பேரும், திருப்பூரில் 1,161 பேரும் தஞ்சையில் 1,004 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் ஆயிரத்திற்கு குறைவாக கொரோனா பாதிப்பு இருந்தாலும், அதிக எண்ணிக்கையிலேயே கண்டறியப்பட்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 33,646 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம், தற்போது சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 2,68,968 ஆக உள்ளது.

தொடர்ந்து பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து, குணமடைவோரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை குறைந்து கொண்டு இருக்கிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா பாதிப்பால் செல்வோர் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் குறைந்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் 463 பேர் உயிரிழந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில், சென்னையில் 71 பேரும், செங்கல்பட்டில் 38 பேரும், கோவையில் 31 பேரும், திருவள்ளூரில் 29 பேரும், குமரி மற்றும் பெரம்பலூரில் 22 பேரும், திண்டுக்கல்லில் 21 பேரும், சேலத்தில் 20 பேரும் உயிரிழந்துள்ளனர். தருமபுரியைத் தவிர அனைத்து மாவட்டங்களிலும் உயிரிழப்பு பதிவாகியுள்ளது.

உயிரிழந்த 463 பேரில் 102 பேருக்கு கொரோனா தொற்றைத் தவிர வேறு எந்த இணை நோயும் (comorbidities) இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் சூழலில், உயிரிழப்போரின் எண்ணிக்கை மட்டும் குறையாமல் இருப்பது பொதுமக்களிடையே அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளது.

இனி நீங்கள் Whatsapp-ல் இதைப் பண்ணலாம்! செம்ம அப்டேட்!

0

வாட்ஸ்அப் மெசேஜ் க்கு Fast Playback என்ற சேவையை தொடங்கியுள்ளது. அனைத்து வாய்ஸ் மெசேஜ் க்கும் ஃபாஸ்ட் பிளேபேக் என்ற புதிய அம்சத்தை சேர்த்துள்ளது. அது உபயோகிப்பவர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு நமது வாய்ஸ் மெசேஜை நாம் விரைவு செய்து கொள்ள முடியும். 1x, 1.5x , 2x என்று அடிப்படையில் விரைவுபடுத்தி கொள்ள முடியும்.

அனைத்து வாய்ஸ் மெசேஜ்க்கும் வாட்ஸ்அப் ஒரு புதிய அம்சத்தை அதாவது “Fast Playback” சேர்த்துள்ளது. ஆடியோ மற்றும் குரல் பதிவுகளுக்கு பிரபலமான ஒன்று தான் வாட்ஸ்அப். குறிப்பாக பயனர்கள் தங்கள் ஸ்மார்ட் போனில் அதிக தொழில்நுட்பம் ஆர்வலராக இருப்பவர்கள் மற்றும் தட்டச்சு செய்யாமலே வாய்ஸ் மெசேஜ்களை பயன்படுத்துபவர்கள் அதிகம். அப்படிப்பட்டவர்கள் இந்த அம்சத்தை விரும்புவார்கள் என்பதாக சொல்லப்படுகிறது.

இதிலுள்ள அறிக்கையின் படி, ஒருவர் வாய்ஸ் மெசேஜ் அனுப்பும் பொழுது அவர்களது குரலில் ஒலியை மாற்றாமல் அவர் அனுப்பிய குரலிலேயே 1x அமைப்பிலிருந்து , 1.5x , 2x என்ற வேகம் வரை தேர்வு செய்ய முடியும். இதற்கான காரணமாக பயனர்கள் நீண்ட நேரம் வாய்ஸ் மெசேஜ் அனுப்பும் பொழுது மற்ற தரப்பினர் கேட்க நேரம் இல்லாததால் இந்த புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தி உள்ளதாக கூறுகிறது.

இது தகவல்களை சீக்கிரமாக பரிமாற்றம் செய்யப்படுவதாகவும், அதேபோல் அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் வாய்ஸ் மெசேஜ்களை பயனர்கள் கேட்கும் நேரத்தை குறைப்பதாகவும் உள்ளது.

நீங்கள் ஆண்ட்ராய்டு மற்றும் Ios இன் சமீபத்திய அப்டேட்டை உறுதிப்படுத்தினால் இந்த புதிய அம்சம் உங்களுக்கு வாட்ஸ் அப்பில் தோன்றும்.

அதை எப்படி பயன்படுத்துவது என்பதற்கு வாட்ஸ்அப் கூறியுள்ளது, எப்பொழுது ஒரு வாய்ஸ் மெசேஜ் உங்களுக்கு வருகிறதோ, அப்பொழுது அந்த ஃபாஸ்ட் பிளேபேக் ஸ்பீடு என்ற ஒரு ஆப்ஷன் தோன்றும், அதை நீங்கள் கிளிக் செய்து உங்களுக்கு தேவையான ஸ்பீடை பயன்படுத்தி கேட்டுக் கொள்ளலாம். Default ஆக அது 1x ஸ்பீடை கொண்டிருக்கும்.

இத்துறையையும் கவனியுங்கள்! முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்த சேரன் ! நிறைவேற்றப்படுமா?

0

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் பிறந்த நாள் அன்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார். அதைப் பார்த்த சேரன் முக ஸ்டாலினுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். நிறைவேற்றப்படுமா என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

நேற்று மறைந்த கலைஞர் கருணாநிதி அவர்களின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அப்பொழுது பல திட்டங்களை முதல்வர் அவர்கள் அறிவித்தார். அதில் ஆண்டுதோறும் மூன்று இலக்கிய மாமணி விருது எழுத்தாளர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்படும் என்று கூறினார். தென் சென்னையில் உயர் சிறப்பு மிகுந்த மருத்துவமனையை திறக்கப்படும், மதுரையில் கலைஞர் நூலகம் திறக்கப்படும், திருவாரூர் மாவட்டத்தில் சேமிப்புக் கிடங்குகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கும் இலவச பயண அனுமதி என திட்டங்களை அறிவித்தார்.

பின் மேலும் உயரிய விருதுகள் வென்ற தமிழ்நாட்டு எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் விதமாக அவர்கள் மாவட்டம் அல்லது அவர்கள் விரும்பும் அவ்விடத்திலேயே வீடு வழங்கப்படும் என்றும் ஸ்டாலின் அறிவித்தார்.

அந்த அறிவிப்பை பார்த்த நடிகர் சேரன் ஸ்டாலினின் ட்விட்டர் பக்கத்தில் அதற்கு கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதில் சேரன் கூறியதாவது, மாநில விருது தேசிய விருதைப் பெற்ற இயக்குனர்கள் திரை எழுத்தாளர்கள் நிறைய பேர் தங்கள் வாழ்வியல் பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். எல்லா துறைகளிலும் சிறந்தவர்களை கவனிக்கும் தாங்கள் இத் துறையின் முன்னோடி களையும் கௌரவிக்க வேண்டும் என்பதுதான் தாழ்மையான வேண்டுகோள் என்று தெரிவித்துள்ளார்.

திட்டங்கள் அனைத்தும் சிறப்பு சார் எழுத்தாளர்களை கௌரவிப்பது பாராட்டுக்குரியது தான். அதேபோல திரைத்துறையிலும் மக்களுக்கு அணை சமூக சீர்திருத்தப் படங்களை எடுத்த எத்தனையோ இயக்குனர் மற்றும் பிற எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இன்னும் வியாபாரச் சந்தையில் புறந்தள்ள படுகிறார்கள். இல்லை படைப்புகளை மக்களிடம் கொண்டு செல்ல முடியாத நிலைக்கு அவர்கள் தள்ளப்படுகிறார்கள். அதையும் கவனத்தில் கொண்டு பாருங்கள் என்று கூறியுள்ளார்.

அதற்கு ரசிகர்கள் அருமையான வேண்டுகோள் உங்களது வேண்டுகோள் நிறைவேற வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளனர். இதை முதல்வர் அவர்கள் செய்வார்கள் என்று நம்புகிறோம் என்றும் கூறியுள்ளனர்.


https://twitter.com/directorcheran/status/1400636558240219136?s=20

கூடுதல் விலைக்கு பால் விற்பனை அமோகம்! ஆவின் நிர்வாகம் எடுத்த அதிரடி நடவடிக்கை!

0

கூடுதல் விலைக்கு ஆவின் பால் விற்பனை அமோகம்! ஆவின் நிர்வாகம் எடுத்த அதிரடி நடவடிக்கை!

தமிழகத்தில் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட மு.க.ஸ்டாலின் பால் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும் என அறிவித்தார். இதைத் தொடர்ந்து அரசாணை வெளியிடப்பட்டு நடைமுறைக்கு வந்தது.

அனைத்து ஆவின் பார்லர்கள் மற்றும் சில்லறை விற்பனை கடைகளில் லிட்டர் ஒன்றுக்கு மூன்று ரூபாய் குறைத்து, ஆவின் பால் விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதனை தொடர்ந்து பால் வளத்துறை அமைச்சர் சா.மு.நாசரின் ஆணையின்படி, ஆவின் மேலாண்மை இயக்குநர் உடனடியாக சிறப்பு குழுவை அமைத்து சென்னையில் உள்ள அனைத்து சில்லறை விற்பனை கடைகளிலும் ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டார்.

அந்த ஆய்வுகளின் அடிப்படையில் 21.05.2021 அன்று 11 சில்லறை விற்பனை உரிமங்கள் ரத்து செய்யப்பட்டதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்தது. தற்பொழுது மேலும் சிறப்பு குழு பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்ட போது கீழ்கண்ட 10 சில்லறை விற்பனை கடைகளில் ஆவின் பால் கூடுதல் விலைக்கு விற்பதாக தெரியவந்தது.

சில்லறை விற்பனையாளரின் உரிமம் (FRO) எண், விற்பனையாளரின் பெயர், விற்பனை செய்யப்பட்ட பகுதி பின்வருமாறு

  1. 2271 நேதாஜி ஈட்டியாபுரம்
  2. 2316 அமிர்தக்கவி ஓல்டு பெருங்களத்தூர்
  3. 1686 ரூப் பிரசாத் நியூ பெருங்களத்தூர்
  4. 2097 ஜெயந்தி நியூ பெருங்களத்தூர்
  5. 1986 லக்ஷ்மணன் வெஸ்ட் தாம்பரம்
  6. 1639 கோதண்டராமன் வரதராஜபுரம்
  7. 403 சாய் ஸ்டோர்ஸ் நியூ பெருங்களத்தூர்
  8. 2169 முரளிதாஸ் சூளைமேடு
  9. 1594 வினோத் குமார் வண்ணாரப்பேட்டை
  10. 2197 S.M மில்க் நிலையம் திருவொற்றியூர்

மேற்கண்ட நபர்களுடைய சில்லறை விற்பனை உரிமங்கள் உடனடியாக ரத்து செய்யப்பட்டன. இது போன்ற தவறுகளை சில்லறை விற்பனை உரிமையாளர்கள் செய்யும் பட்சத்தில் அவர்கள் உரிமம் ரத்து செய்யப்படும் என ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

50% ஊழியர்களுடன் இனி நிறுவனங்கள் இயங்கும்! மாநில அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு!

0

50% ஊழியர்களுடன் இனி நிறுவனங்கள் இயங்கும்! மாநில அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு!

கொரோனா தொற்றானது ஓராண்டு காலமாக மக்களை பாதித்து வருகிறது.சென்ற ஆண்டு மக்கள் நலன் கருத்தி ஊரடங்கை அமல்படுத்தினர்.அதன் பலனாக கொரோனா பரவலானது சற்று குறைய ஆரம்பித்தது.அதனையடுத்து மக்கள் வெளியே செல்லவே கொரோனாவின் 2 வது அலையானது கோரதாண்டவம் எடுத்து ஆட ஆரம்பித்துவிட்டது.மக்கள் நலன் கருதி தொற்று பரவாமல் இருக்க அரசாங்கம் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.கொரோனா தொற்றின் ஊரடங்கு காலத்தில் மக்கள் வேலைவாய்ப்புகள் இன்றி பெருமளவு பாதித்துள்ளனர்.அரசாங்கம் மக்களின் நலனுக்காக பல செயல்படாகளை அமல்படுத்தினாலும் அது மக்களுக்கு போதுமானதாக இல்லை.

மக்கள் நலனுக்காக அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறும் அரசாங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.அந்தவகையில் தற்போது கேரளாவில் தொற்று எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது.அதனால் கேரளா முதல்வர் மேலும் சில கட்டுப்பட்டுக்களை அமலப்டுத்தியுள்ளார்.தொற்று அதிகமுள்ள பகுதிகளில் அதிகளவான கட்டுப்பாட்டை அமல்படுத்தியுள்ளார்.அதுமட்டுமின்றி தொற்று குறைந்த பகுதிகளில் கட்டுமான பொருட்கள் விற்கும் கடைகள் இயங்கவும் அனுமதி அளித்துள்ளார்.

அதனையடுத்து ஜூன் 10ம் தேதி முதல் கேரளாவில் அரசு பொதுத்துறை நிறுவனங்கள் 50 சதவீதம் ஊழியர்களுடன் இயங்க அனுமதி அளித்துள்ளார்.அத்தோடு 50% தொழிலாளர்களுடன் தொழிற்சாலைகளும் இயங்க அனுமதி தந்துள்ளார்.குறிப்பாக கேரளாவில் மலபுரம் என்ற பகுதியில் ஓர் நாளில் மட்டும் 2,500 பேருக்கு கொரோனா தொற்றானது உறுதியாகியுள்ளது.அதனால் அப்பகுதியில் மட்டும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என சுற்றுவற்றநகல் கூறி வருகின்றனர்.

தமிழகம் புதுச்சேரி காரைக்காலில் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு!

0

தென்மேற்கு பருவமழையில் முன்னேற்றம் காணப்படுவதால், தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் உட்பட நாட்டின் பல பகுதிகளில் இன்று முதல்  5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு அரபிக் கடல், மத்திய அரபிக் கடலின் சில பகுதிகள், கேரளா மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைய வாய்ப்புள்ளது.  இதன் காரணமாக தமிழகம் , புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளிலும், நாட்டின் பிற மாநிலங்களிலும் ஒரு சில இடங்களில் இன்று முதல் 8ம் தேதி வரை இடி, மின்னலுடன்  கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அப்போது மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில் பலத்த காற்றும் வீசலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கம், சிக்கிம், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், அசாம் மற்றும் மேகாலயாவில் வரும் 8ம் தேதி கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிபிஐ அதிகாரிகள் இனி இப்படித்தான் இருக்கனும்! புதிய இயக்குநர் அதிரடி உத்தரவு!

0

சிபிஐ அதிகாரிகள் இனி இப்படித்தான் இருக்கனும்! புதிய இயக்குநர் அதிரடி உத்தரவு!

சிபிஐ அமைப்பின் 33வது இயக்குநராக சுபோத் குமார் ஜெய்ஸ்வால்  கடந்த வாரம் பொறுப்பேற்றுக் கொண்டார்.  அதன்பின்னர் பல்வேறு நிர்வாக மாற்றங்களை செய்து வருகிறார். இந்நிலையில், சிபிஐ அதிகாரிகள் அனைவரும் எவ்வாறு உடை அணிய வேண்டும் என புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.

சிபிஐ அதிகாரிகள் இனி ஜீன்ஸ், டி-சர்ட், சாதாரண செருப்புகள், ஸ்போர்ட்ஸ்  ஷூ அணியக் கூடாது. ஃபார்மல் உடைகள், ஃபார்மல் ஷூ மட்டுமே அணிய வேண்டும். தாடி வைத்திருக்கக் கூடாது. நன்றாக ஷேவ் செய்து வர வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

பெண் அதிகாரிகள் சேலை, ஃபார்மல் உடைகள், சூட்ஸ் மட்டுமே அணிய வேண்டும். அவர்களும் ஜீன்ஸ், டி-சர்ட், சாதாரண செருப்புகள் அணியக் கூடாது. இந்த உத்தரவு நாடு முழுவதும் உள்ள அனைத்து சிபிஐ அலுவலகங்களுக்கும் பொறுந்தும் என்றும், அந்தந்த கிளையின் தலைமை உத்தரவை கடுமையாக செயல்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக, சிபிஐ அதிகாரிகள் சிலர் ஜீன்ஸ், டி-சர்ட் அணிந்துகொண்டு, தாடி வைத்துக்கொண்டு சென்றதாகவும், இதனை யாரும் கண்டுகொள்ளவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது புதிதாக பதவியேற்றுள்ள சுபோத் குமார் ஜெய்ஸ்வால், அதிரடியாக இப்படி உத்தரவிட்டுள்ளதால், அடுத்தடுத்து என்னென்ன மாற்றங்களை செய்யப்போகிறார் எனத் தெரியாமல் சிபிஐ அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர்.

எஸ்பிபிஐ நினைத்து உருகிய பிரபல பாடகி!

0

ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்பிரமணியம் என்ற இயற்பெயரை உடைய பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் என்று பன்முகத் தன்மை கொண்டவர் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி கின்னஸ் சாதனை படைத்த ஒரு மாமனிதர் எஸ் பி பாலசுப்பிரமணியம். அவருடைய 75வது பிறந்த நாள் இன்றைய தினம் கொண்டாடப்படுகிறது.

இந்த சூழலில் நிறைந்த பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு ரசிகர்களும், திரை பிரபலங்களும், சமூக வலைதளங்கள் மூலமாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த விதத்தில் பிரபல பின்னணி பாடகர் ஸ்வேதா மோகன் பாட்டு பாடி எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

https://twitter.com/explore/tabs/covid-19?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1399713782520115201%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fnewstm.in%2Ftamilnadu%2Fcongratulations-to-actress-pooja-hegde-for-her-action-%2Fcid3160786.htm


இது தொடர்பாக அவர் தன்னுடைய வலைதளப் பக்கத்தில் பாடும் நிலாவே பாடலைப் பாடி எஸ் பி பாலசுப்பிரமணியம் அவருடைய குரலும், இசையாலும், நம்முடைய வாழ்க்கை என்றைக்கும் நிறைந்திருக்கும் என நம்புகிறேன் என்று தெரிவித்திருக்கிறார். அதோடு அவர் நம்முடன் தான் இருக்கிறார் என நான் உறுதியாக நம்புகிறேன் எஸ்பிபி சார் நீங்க எங்க இருந்தாலும் உங்களுக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உங்களை ரொம்ப மிஸ் பண்றேன் என உருக்கமாக பதிவிட்டு இருக்கிறார்.