Sunday, July 20, 2025
Home Blog Page 4563

நாற்பதாயிரம் பாடலுக்கு மேல் பாடி உலக சாதனை படைத்த பாடல் சக்கரவர்த்தியின் பிறந்த தினம் இன்று!

0

சுமார் 40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடியிருக்கிறார் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் கடந்த 1946 ஆம் வருடம் ஜூன் மாதம் நான்காம் தேதி ஆந்திர பிரதேச மாநிலத்தில் பிறந்தார் என்று சொல்லப்படுகிறது.

1966ம் வருடம் கோதண்டபாணி இசையமைத்த தெலுங்குத் திரைப்படத்தில் முதன் முறையாக எஸ்பிபி ஒரு பாடலை பாடியிருக்கிறார். இந்த நிலையில், கடந்த 2016ஆம் வருடம் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய திரைப்பட பிரமுகர் விருது எஸ்பிபி அவர்களுக்கு வழங்கப்பட்டது.

தமிழ் மொழியில் முதன் முதலாக சாந்தி நிலையம் என்ற திரைப்படத்தில் இவர் பாட தொடங்கியிருக்கிறார். அதனை அடுத்து எம் எஸ் விஸ்வநாதன், இளையராஜா, ஏ ஆர் ரஹ்மான் ,யுவன் சங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ் என்று அனைத்துத் தரப்பு இசையமைப்பாளர்களின் இசையிலும் இவர் பாடி இருக்கின்றார்.

உலக அளவில் சாதனை படைத்த பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்களுக்கு கடந்த 2001ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது, அதேபோல கடந்த 2011ஆம் ஆண்டு இவருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. அதோடு கலைமாமணி விருது ஆறு முறை சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருது, ஆந்திர அரசின் நந்தி விருது போன்றவற்றை 25 முறையும் பாடகர் எஸ் பி பி பெற்றிருக்கிறார். 1960 களில் ஆரம்பித்த இவருடைய இசை பயணமானது அரை நூற்றாண்டை தாண்டி இன்றும் அதே சுறுசுறுப்புடன் வலம் வந்துகொண்டிருக்கிறது இவர் 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி இயற்கை எய்தினார் என்ற அதிர்ச்சி செய்தி வெளியானது.

விஜய்யின் கல்லூரி பருவ கெட்டப் எப்படி இருக்கும் தெரியுமா? அடேங்கப்பா செம க்யூட் புகைப்படம்!

0

பிரபல நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் சென்ற ஜனவரி மாதம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. சென்ற வருடம் நோய் பரவல் மிக தீவிரமாக இருந்ததால் மாஸ்டர் திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. அதன் பிறகு திரையரங்குகள் திறக்கப்பட்ட உடன் முதல் திரைப்படமாக மாஸ்டர் திரைப்படம் வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், நடிகர் விஜய்யின் கல்லூரி பருவ புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கின்றது. இது தற்போது வலைதளங்களில் வைரல் ஆகி வருவதாகச் சொல்கிறார்கள்.


லயோலா கல்லூரியில் நடிகர் விஜய் கல்வி பயின்ற போது எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று தற்சமயம் சமூக வலைதளங்களில் வெளியாகி இருப்பதாக தெரிவிக்கிறார்கள். இதில் நடிகர் சஞ்சீவ் உட்பட விஜய்யின் அனைத்து நண்பர்களும் ஒன்றாக நிறைந்திருக்கிறார்கள். இதில் இப்போது போலவே அப்போதும் கைகட்டி சாந்தமாக நின்று கொண்டிருக்கிறார். அதோடு நடிகர் விஜய் ஒரு வித்தியாசமான உடை அணிந்து அந்த புகைப்படத்தில் காட்சி தருவதாக சொல்லப்படுகிறது.

மிஸ் யூ அப்பா! கருணாநிதிக்காக உருகிய குஷ்பு அதிர்ச்சியில் பாஜக!

0

திமுகவின் முன்னாள் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி கடந்த 2018ஆம் ஆண்டு மரணம் அடைந்தார். அதனை தொடர்ந்து அவருடைய மகனான ஸ்டாலின் அந்தக் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி அடைந்து ஆட்சியில் அமர்ந்தது.

இதேவேளை நேற்றைய தினம் அவருடைய 98 ஆவது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. தமிழ்நாட்டின் பல வீடுகளில் அவருடைய புகைப்படமும் வைத்து பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார்கள். அதோடு சென்னை மெரினா கடற்கரையில் இருக்கின்ற அவருடைய நினைவிடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த சூழ்நிலையில், கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சி சார்ந்த நடிகை குஷ்பு உருக்கத்துடன் தன்னுடைய வலைதளப் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து விடுகிறார். இதில் அவர் தெரிவித்திருப்பதாவது, நான் ஒருநாள் கூட கருணாநிதியை உணராத நாளில்லை எனக்கு ஒரு கடவுளுக்கு மேல் அவர் இருந்து வந்தார் எனவும், அவர் என்னுடைய மிகச்சிறந்த ஆசிரியராக இருந்தார் என்றும், தெரிவித்திருக்கிறார். உங்களுடைய ஆசிர்வாதம் எப்போதும் என் மீது பொழியும் என்று நான் நம்புகிறேன் என பதிவிட்டு இருக்கிறார். இந்த பதிவு தற்சமயம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆன “Shame On You Samantha” !

0

பாலிவுட் வெப் சீரியஸ் ஒன்றில் தீ ஃபேமிலி மன் 2 என்ற வலை தொடர் ஒன்றில் சமந்தா தமிழ் சமூகத்தை தவறாக சித்தரித்து நடித்து உள்ளதால், Shame On You Samantha என்ற கருத்து ட்விட்டரில் பிரபலமாகி வருகிறது.

இதேபோல் சமந்தாவின் ரசிகர்கள் அவரை ஆதரிப்பதாகவும் இடுகைகள் பகிர்ந்து வருகிறார்கள்.

இந்த வெப் சீரியஸ் வியாழக்கிழமை முதல் அமேசான் ப்ரைம் மீடியாவில் வெளியிட திட்டமிட்டுள்ளது. சமந்தாவின் நடிப்புக்காக வெளிவந்த பாராட்டுக்கள் ஒரு பக்கம் இருந்த பொழுதிலும், தமிழின் வேரிலிருந்து வந்த ஒரு நடிகை தீவிரவாதி என்ற பாத்திரத்தை ஏற்று கொண்ட நடித்ததற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

திஸ் ஃபேமிலி மன் 2 ட்ரெய்லர் வெளியான உடன் இது ‘தமிழ் குடும்பங்களுக்கு எதிரானது’ என்ற கருத்து ட்விட்டரில் பரவி வருகிறது.

சமீபத்தில்கூட திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் அரசியல்வாதியான சீமான் ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டிருந்தார். சமந்தா அந்த தொடரை வெளியிட்டால் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரித்தார். சமீபத்தில் வெளியான ட்ரெய்லரில் அதில் குறிப்பிடப்பட்ட உரையாடல்கள் தற்செயலாக இல்லை என்று கூறினார். தமிழ் மக்களை ‘ என்று சித்தரிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துவதால் இந்த தொடரை தடை செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இந்த ஃபேமிலி மன் 2 ட்ரெய்லர் முழுவதும் சமந்தா தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் சீருடையை அணிந்திருப்பதை காணமுடிகிறது. சென்னையில் பணயக்கைதிகள் இருப்பதாகவும் இதில் வரும் உரையாடல்கள் தெரிவிக்கின்றன. பல காட்சிகள் சென்னையில் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது அந்த  தொடரின் வெளியீடு நெருங்கி வந்த நிலையில் Shame On You Samantha என்ற ஹாஷ்டக் பிரபலமானது.

https://twitter.com/Sjk46459958/status/1400084808672239622?s=20

https://twitter.com/p_thamilarasu/status/1400331200602861569?s=20

அதற்கு பதில் அளிக்கும் விதமாக நடிகைய சமந்தாவின் ரசிகர்கள் அவருக்கு ஆதரவு அளிக்கிறோம் என்ற ஹாஷ்டகை பிரண்டிங் செய்ய தொடங்கியுள்ளார்கள்.

 

ஊரடங்கை நீட்டிக்கலாமா வேண்டாமா? அவசர ஆலோசனையில் ஸ்டாலின்!

0

தமிழ்நாட்டில் நோய் பரவல் அதிகமாகி வருகிறது இதனைக் கட்டுப்படுத்துவதற்கு கடந்த மே மாதம் பத்தாம் தேதி முதல் 24ஆம் தேதி வரையில் அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது இந்த நிலையில், கடந்த 24 ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரையில் மீண்டும் அந்த ஊரடங்கு ஒரு வார காலத்திற்கு நீட்டிக்கப்பட்டது.

இந்த ஊரடங்கில் அத்தியாவசியத் தேவைகளான காய்கறி மளிகை கடைகள் போன்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் மொத்தத்தில் பாதிப்பு படிப்படியாக குறைந்துவிடுகிறது ஊரடங்கு சமயத்தில் பொதுமக்கள் தேவை அறிந்து தமிழக அரசு காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் தடையின்றி கிடைப்பதற்கு ஏற்பாடு செய்திருப்பதாக தெரிவிக்கிறார்கள்.

இதற்கிடையில் முழு ஊரடங்கு இவ்வாறு நீட்டிக்கப்பட்டு கொண்டே சென்றால் மிகப் பெரிய பிரச்சனை ஏற்படும் ஆகவே அதற்கு விரைவாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று ஸ்டாலின் தெரிவித்து இருக்கிறார். இந்த சூழ்நிலையில், தமிழ்நாட்டில் தளர்வுகள் எதுவும் இல்லாத ஊரடங்கு சில நாட்களில் முடிவடைய இருக்கிறது. இந்த சூழ்நிலையில், முழு ஊரடங்கை நீட்டிக்கலாமா? வேண்டாமா? அல்லது தளர்வுகள் கொடுக்கலாமா போன்றவை தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி இருக்கிறார். இந்த ஆலோசனையின் போது எந்த மாதிரியான தளர்வுகள் அறிவிக்கலாம் என்பது தொடர்பாக அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து விரைவில் அறிவிப்பு வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுகவிற்கு அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுக்கும் சசிகலா!

0

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சிறை தண்டனை அடைந்த திகார் சிறையில் இருந்து விடுதலையான பின்னர் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற்று எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சட்டசபை தேர்தல் சமயம் என்ற காரணத்தால், சசிகலா அரசியல் பிரவேசம் என்பது எல்லோராலும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சிறையில் இருந்து விடுதலையான பின்னர் சென்னைக்கு வருகை தந்த சசிகலா அரசியலில் இருந்து விலகி இருப்பதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டு எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். அதன் பின்னர் இருவருக்கும் பொது எதிரியான திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்று நினைத்திருந்தார். இந்த நிலையில், சட்டசபை தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்தது.

இதனை அடுத்து சில நாட்களாக சசிகலா மற்றும் கட்சித் தொண்டர்களிடையே உரையாற்றிய காணொளி ஒன்று வெளியானது இதில் நோய்த்தொற்று முடிவடைந்த உடன் அரசியலுக்கு வருவேன் என சொல்லி இருக்கிறார் இது எதிர்க்கட்சியான அதிமுகவினர் இடையில் மிகப் பெரிய பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.

இந்த சூழ்நிலையில், அரக்கோணம் சிறு கிராமத்தின் அதிமுகவைச் சேர்ந்த நிர்வாகி ஒருவரிடம் தோசைகளாக உரையாற்றிய மற்றொரு ஆடியோ வெளியாகியிருக்கிறது தொண்டர்கள் மன வருத்தத்தில் இருக்கிறார்கள் எனக்கு எல்லாம் புரிகிறது. நோய்தொற்று முடிவடைந்த உடன் தொண்டர்களை சந்தித்து வருகிறேன் நீங்கள் பயப்படத் தேவை இல்லை என்று ஆறுதலாக தெரிவிக்கும் விதமாக உரையாற்றியிருக்கிறார். அரசியலுக்கு முழுக்கு போட்டுவிட்டதிலிருந்து வெளியே வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நோய்த்தாக்கம் முடிவடைந்த பின்னர் தொண்டர்களை சந்திக்க வருகை தருவேன் நீங்கள் வருத்தப்படாதீர்கள் என்று ஆறுதல் தெரிவிக்குமாறு சசிகலா உரையாற்றி இருக்கிறார். சசிகலா அரசியலுக்கு முழுக்கு போட்டு விட்டார் என்று இருந்த நிலையில் தற்போது எதிர்பார்க்கலாம் தெரிவித்து வருகிறார்கள்.

காங்கிரஸ் கட்சியில் இணைய 3 சட்டசபை உறுப்பினர்கள்! அதிர்ச்சியில் முக்கிய கட்சி!

0

பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியில் சட்டசபை உறுப்பினர்கள் மூன்று பேர் கட்சியின் தலைமையுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, நேற்று பஞ்சாப் மாநில முதலமைச்சர் அமரீந்தர் சிங் நிலையில் தங்களை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டதாக தெரிகிறது.

மோசமான ஆம் ஆத்மி கட்சியில் இருந்து காங்கிரஸ் கட்சியில் இணைந்த சுக்பால்,கைரா,பிர்பால்சிங்,ஜெக்தேவ்சிங்,கமாலு 7வது சட்டசபை உறுப்பினர்களின் பால் தயிரா சட்டசபை உறுப்பினர் ஏற்கனவே காங்கிரஸ் கட்சியில் இருந்தவர். இவர் கடந்த 2015ஆம் வருடம் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார் என்று சொல்லப்படுகிறது.

பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த வருடம் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கின்ற நிலையில், ஆம் ஆத்மி சட்டசபை உறுப்பினர்களின் வருகை காங்கிரஸ் கட்சிக்கு மேலும் வளத்தை பெருக்கும் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அதேசமயம் மாநில காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. இதனை ஒரு முடிவுக்கு கொண்டு வருவதற்காக காங்கிரஸ் கட்சியின் மேலிட தலைவர்கள் கடந்த சில தினங்களாக பஞ்சாப் மாநிலத்தில் முகாமிட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

“காணாமல் போன இரண்டு நிமிட பெருமைக்கு வாழ்த்துக்கள்”! பாலாஜிக்கு சனம் ஷெட்டி கொடுத்த பதிலடி!

0

சமீபத்தில் Behind wood கொடுத்த அவார்டு திருப்பி தருவதாக பாலாஜி முருகதாஸ் வெளியிட்ட கருத்திற்கு சக போட்டியாளரான பிக்பாஸில் புகழ்பெற்ற சனம் செட்டி கொடுத்த பதிலடி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி என்றால் பிக் பாஸ். பிக் பாஸ் சீசன் 4 பங்கேற்ற ஆரீ, பாலாஜி முருகதாஸ், ஆஜித், ரமேஷ், ரம்யா பாண்டியன், அர்ச்சனா ,ஷிவானி நாராயணன், சுரேஷ் சக்ரவர்த்தி, வேல்முருகன், அனிதா, சோம்சேகர், ரியோ, ரேகா ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் ஆரி முதலிடத்தையும் பாலாஜி முருகதாஸ் இரண்டாவது இடத்தையும் பெற்றார்.

மிகவும் சர்ச்சைக்குரியவராக இருந்த பாலாஜி முருகதாஸ் அனைவரிடமும் விவாத வார்த்தைகளை பயன்படுத்தி பிக்பாஸில் இருந்தபொழுது பலரின் பேச்சுக்கு ஆளாக்கினார் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அவருக்கு இரண்டாவது பரிசு கொடுக்கப்பட்டது மக்களிடையே பெரும் அதிருப்தி அடைந்தது உண்மையே.

சமீபத்தில் Behind wood சார்பாக பிக்கஸ்ட் சென்சேஷனல் ரியாலிட்டி டெலிவிஷன் என்ற பட்டம் பாலாஜி முருகதாசுக்கு வழங்கப்பட்டது. ஆனால் தற்போது இந்த பட்டத்தை திருப்பி கொடுக்கப் போவதாக பாலாஜி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசிய வீடியோவை வெளியிட்டு, அவர் கூறுகையில் , ரிவ்யூ என்ற பெயரில் மற்ற போற்றியாளர்களை பற்றி தவறாக பேசாதீர்கள். இது அவர்களது எதிர்காலத்தை பாதிக்கும். ரிவ்யூவர்ஸ் எல்லாம் காந்தியோ மதர் தெரசாவை இல்லை என்று தான் பேசினேன். ஆனால் அந்த வீடியோவை அவர்கள் ஒளிபரப்பவில்லை என்று கூறி தன் மேடையில் பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். வீடியோவை வெளியிடாத காரணத்தால் அவார்டை திருப்பி கொடுக்கப் போவதாக அறிவித்திருந்தார்.

இந்த பாலாஜியின் பதிவுக்கு அனைவருக்கும் பிக்பாஸில் மிகப்பிடித்த போட்டியாளரான சனம் ஷெட்டி பதிலளித்துள்ளார். அதில் சனம் ஷெட்டி ” என்னையும் இல்லாத பெண்களின் கேரக்டரை பற்றி பேசியபோது போட்டியாளர்களின் எதிர்காலத்தைப் பற்றி நினைத்துப் பார்க்க வில்லையா? அவ்வாறு தவறான வார்த்தைகளைப் பேசும் பொழுது என்னை அசிங்கப் படுத்திய பொழுதும் இளம் பெண்களை பற்றி நீங்கள் யோசித்தீர்களா? காணாமல் போன உங்களின் இரண்டு நிமிட பெருமைக்கு என்னுடைய வாழ்த்துக்கள்” என்று அவர் பதிலடி கொடுத்துள்ளார்.

ரேஷன் கடைகளுக்கு பிறப்பிக்கப்பட்ட புதிய உத்தரவு! நாளை முதல் இது அமல்!

0

நாடு முழுவதும் நோய்த்தொற்று பரவாமல் இரண்டாவது அலை காரணமாக, பொதுமக்கள் பலர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் காரணமாக, மாநில அரசுகள் மக்களுக்கு உதவி புரிந்து கொள்கிறார்கள் என்ற சூழ்நிலையில், என்ன செய்வது அரசுகளுக்கு மத்திய அரசு சார்பில் கூடுதல் அரிசி வழங்கப்பட இருக்கிறது. மே மற்றும் ஜூன் மாதங்களில் அந்தியோதயா ரேஷன் கார்டுதாரர்களுக்கு இதற்கு முன்னர் கொடுத்த அரிசி உடன் சேர்த்து குடும்ப அட்டையில் இருக்கின்ற ஒவ்வொரு நபருக்கும் கூடுதலாக தலா 5 கிலோ அரிசி இலவசமாக மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

இது தொடர்பாக ஆட்சியர்கள் நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குனர் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உள்ளிட்டோருக்கு உணவு வழங்கல் துறை ஆணையர் ஒரு சுற்றறிக்கையை அனுப்பி இருக்கின்றார். அதில் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா மற்றும் முன்னிரிமை முன்னிரிமை அற்ற அரிசி அட்டை தாரர்களின் இருக்கின்ற அனைத்து பயனாளிகளுக்கும் கூடுதலான அரிசி இலவசமாக வழங்குவதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

இதன்படி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அரசு ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. நேரம் கூடுதலாக வழங்கப்பட வேண்டிய அரசு ஜூலை மாதத்திற்கு வழங்கப்படும் அரிசியுடன் இணைந்து ஜூன் மாதத்திற்கான ஒதுக்கீட்டுடன் ஒதுக்கீடு வழங்க அரசாணை வெளியிடப்பட்டு இருக்கிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவையில் உள்ள இந்த மருத்துவமனைக்கு அரசு தடை விதித்துள்ளது!

0

கொரோனாவால் பலரின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சிகிச்சைக்காக கூடுதல் கட்டணம் வசூலித்த கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு புதிய கொரோனா நோயாளிகளை அனுமதிக்கவோ , சிகிச்சை அளிக்கவும் அதிகாரிகள் தடைவிதித்துள்ளனர்.

கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் அனைவரின் பொருளாதாரமும் முடங்கிப் போயுள்ளது. நோய்வாய்ப்பட்ட நோயாளிகள் அரசு மருத்துவமனையில் இடம் கிடைக்காமல் தனியார் மருத்துவமனைகளில் அலை மோதுகின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக அதிகாரிகளுக்கு புகார்கள் வந்துள்ளன.

இதனால் ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத்துறையினர் அளித்த பேட்டி ஒன்றில், கோவையில் உள்ள முத்தூஸ் தனியார் மருத்துவமனையில் நோயாளிகளை அனுமதிக்கக் கூடாது எனவும் சிகிச்சை அளிக்க அரசு தடை விதித்துள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.

இதுபோன்று கோவையில் நான்கு தனியார் மருத்துவமனைகள் மீது புகார் எழுந்துள்ளது. கோவையில் உள்ள சரவணம்பட்டியில் உள்ள முத்தூஸ் மருத்துவமனை விசாரணைக்கு மறுத்ததால் அரசு தடை விதித்துள்ளது. இந்த மருத்துவமனைக்கு மட்டும் புதிதாக கொரோனா நோயாளிகளை சிகிச்சை அளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் குணம் அடையும் வரை சிகிச்சை அளிக்க வேண்டும். அவர்களுக்கு அரசு விதிக்கப்பட்ட கட்டணத்தையே பெற வேண்டும் என்று கூறியுள்ளது. மற்றும் மருத்துவமனைகள் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமாக வசூலிக்கும் தனியார் மருத்துவமனை மேல் புகார் அளிக்க மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு கட்டளை மையத்தை அழைக்கலாம். 1077 என்ற எண்ணிற்கு அழைக்கலாம். 1800 425 3993 இந்த கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என அறிவித்துள்ளது. மேலும் வாட்ஸ்அப் மூலமும் புகார் அளிக்கலாம் என 94884-40322 என்ற வாட்ஸ்அப் எண்ணை அளித்து உள்ளது. புகார் குறித்து விசாரணை நடத்தி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.