Sunday, July 20, 2025
Home Blog Page 4564

ஆழ்கடலில் 2.5 நிமிடம் சைக்கிள் ஓட்டி சென்னையை சேர்ந்த நபர் சாதனை!

0

நேற்று உலக சைக்கிள் தினம் கொண்டாடப்பட்டது. அதை முன்னிட்டு சென்னையை சேர்ந்த ஆழ்கடல் பயிற்சியாளர் ஒருவர் ஆழ்கடலில் சைக்கிள் ஓட்டி சாதனை படைத்துள்ளார்.

சென்னையில் உள்ள நீலாங்கரை சேர்ந்த ஆழ்கடல் பயிற்சியாளர் அரவிந்த் எந்த ஒரு உபகரணங்களும் இல்லாமல் ஆழ்கடலில் சைக்கிள் போட்டி நேற்று சாதனை புரிந்தார்.

அமெரிக்காவில் பணிபுரியும் போலந்து சமூக விஞ்ஞானி பேராசிரியர் லெஸ்ஸெக் சிபில்ஸ்கி, உலக சைக்கிள் தினத்திற்கான ஐ.நா. தீர்மானத்தை ஊக்குவிப்பதற்காக தனது சமூகவியல் வகுப்போடு ஒரு அடிமட்ட பிரச்சாரத்தை நடத்தினார், இறுதியில் துர்க்மெனிஸ்தான் மற்றும் 56 பிற நாடுகளின் ஆதரவைப் பெற்றது. அசல் ஐ.நா. ப்ளூ அண்ட் வைட் ,ஜூன் 3 வேர்ல்ட் பைசைக்கிள் லோகோ ஐசக் ஃபெல்ட் வடிவமைத்தார், அதனுடன் அனிமேஷன் பேராசிரியர் ஜான் ஈ. ஸ்வான்சன் செய்தார். இது உலகம் முழுவதும் சவாரி செய்யும் பல்வேறு வகையான சைக்கிள் ஓட்டுநர்களை சித்தரிக்கிறது என கூறப்படுகிறது. லோகோவின் கீழே ஜூன் 3 வேர்ல்ட் பைசைக்கிள் டே என்ற ஹேஷ்டேக் உள்ளது. முக்கிய செய்தி என்னவென்றால், சைக்கிள் மனிதர்களுக்கு சேவை செய்கிறது என்பதைக் குறிக்கிறது.

ஒவ்வொரு வருடமும் ஜூன் மூன்றாம் தேதி அனுசரிக்கப்படும் உலக சைக்கிள் தினத்தில் அரவிந்து ஆழ்கடல் பயிற்சியாளர் செய்த சாதனை பேசப்பட்டு வருகிறது.

நீங்களே கடற்கரையில் இருந்து ஆறு கிலோமீட்டர் 55 அடி ஆழத்தில் சைக்கிள் ஓட்டி உள்ளார். பொதுவாக ஆழ்கடலுக்கு செல்வோர்கள் சுவாச பிரச்சனை ஏற்படுவதற்கு சுவாச உபகரணங்களை பயன்படுத்துவார்கள் ஆனால் இவர் எந்த ஒரு உபகரணத்தை எடுத்துக் கொள்ளாமல் இந்த சாதனையை புரிந்துள்ளார்.

மூச்சைப் பிடித்து சைக்கிளில் ஆழ்கடல் சென்றவர் பாறை மற்றும் மணல் பரப்பு இடையே இரண்டு நிமிடம் சைக்கிள் ஓட்டியுள்ளார்.

இவரிடம் எடுத்த பேட்டி ஒன்றில் அவர் கூறியதாவது, சிறு வயதிலிருந்தே சைக்கிள் ஓட்டும் பழக்கமுடையவன் நான். அதோடு மட்டுமில்லாமல் 16 ஆண்டுகளாக ஆழ்கடலில் பயிற்சி அளித்து வருகிறேன்.என்னிடம் பயிற்சி எடுத்த ஒரு மாணவர் ஒரு ஐடி ஊழியர் பிப்ரவரி மாதம் ஆழ்கடலில் திருமணம் செய்து கொண்டார். மேலும் அதன் பின் ஆழ்கடலில் உடற்பயிற்சி செய்தல் மற்றும் ஆழ்கடலில் உள்ள குப்பைகளை அகற்றுவது போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளதாக தெரிவித்தார். தான் ஒவ்வொரு முறை கடலில் இறங்கும் போதும் கடலோர பாதுகாப்பு படையினர் அனுமதி பெற்றுதான் இறங்குவேன் என்று தெரிவித்தார். மேலும் கடல் வளம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி தான் ஒவ்வொரு நிகழ்ச்சியும் நடத்தி வருவதாக கூறினார்.

கொரோனா நோயாளிக்கு தோல் பூஞ்சை நோய் கண்டுபிடிப்பு! அதிர்ச்சியில் மக்கள்!

0

கொரோனாவின் அலைகளே இன்னும் முடியாத நிலையில் இப்பொழுது புதிதாக கொரோனா பாதித்த நோயாளிகளை தோல் பூஞ்சை நோய் தாக்கி உள்ளதாக தகவல் பரவி வருகிறது.

கருப்பு வெள்ளை மஞ்சள் பூஞ்சை என பல நோய்களுக்கு மத்தியில் இப்பொழுது முதல் முறையாக தோல் பூஞ்சை நோய் கர்நாடகாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது மக்களிடையே பல அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள சித்ரதுர்கா என்ற மாவட்டத்தில் சிக்கலா புரம் என்ற ஒரு கிராமத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஒரு நபருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் கொரோணா பரிசோதனையை மேற்கொண்ட பிறகு அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

பின் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து உள்ளனர். கொரோனாவில் இருந்து மீண்ட அவர் நலமுடன் இருக்கும் நிலையில் உள்ள அவருக்கு காது பகுதியில் ஏதோ ஒரு பூஞ்சை உருவாகி இருந்தது தெரியவந்தது.

உடனே அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மேலும் கூடுதலான சிகிச்சை தேவைப்படுகிறது என கூறி மைசூரில் உள்ள அரசு காது மூக்கு பிரிவு சிறப்பு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அந்த நபரை மருத்துவர்கள் பரிசோதித்து உள்ளனர்.

அப்பொழுது தான் அவருக்கு தோல் பூஞ்சை நோய் ஏற்பட்டுள்ளது என மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர். கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு கருப்பு மஞ்சள் போன்ற பல பூஞ்சைகள் தாக்கப்பட்டு வந்த நிலையில் இப்பொழுது இந்தியாவிலேயே முதல் முறையாக கர்நாடகத்தில் தான் தோல் பூஞ்சை நோய் தாக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது மாபெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது அவர் மைசூரில் உள்ள காது மூக்கு பிரிவு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால் மருத்துவர்கள் இதனால் அச்சப்படத் தேவையில்லை என கூறி வருகின்றனர்.

இது ஒரு தோல் பூஞ்சை நோய் அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்தி விடலாம் என்று கூறியுள்ளனர். மேலும் இது பரவக்கூடிய நோய் கிடையாது என்றும் தெரிவித்துள்ளனர். வேறு எந்த வகையிலும் இந்த நோய் பாதிப்பை ஏற்படுத்தாது அதனால் மக்கள் யாரும் பயப்படாமல் இருக்கலாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகிறார்கள்.

இந்தியாவின் மோசமான மொழி இதுதான்! கூகுள் சொன்ன பதிலால் ஆத்திரமடைந்த மக்கள்!

0

கூகுள் என்பது ஒரு search Engine. நாம் என்ன தேடினாலும் அதற்கான விஷயங்களை நமக்கு பதில்களைத் தருவது தான் அதனுடைய வேலை. நமக்கு தெரியாத பல விஷயங்களை அதிலிருந்துதான் தேடி படித்து வருகிறோம் தெரிந்து வருகிறோம். பல மாணவர்கள் இதன் மூலமாகத்தான் படித்து அனைத்தையும் தெரிந்து கொள்கிறார்கள்.

இந்த நிலையில் இந்தியாவிலேயே எது மோசமான மொழி என கூகுளில் தேடிய பொழுது, கன்னடம் என்ற பதில் வந்துள்ளது. இதை அறிந்த கன்னடம் பேசும் பல மக்கள் ஆவேசமடைந்து உள்ளனர்.

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பல அரசியல் கட்சியினரும் கூகுள் நிறுவனத்திற்கு எதிராக போர்க்கொடி உயர்த்த ஆரம்பித்துள்ளனர். அத்துடன் கன்னட மொழி வளர்ச்சி அமைச்சர் அரவிந்த் லிம்ப்வலி இதற்கு கண்டனம் தெரிவித்ததுடன் இதுகுறித்து கூகுள் மன்னிப்பு கேட்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இந்த விவகாரம் மிகப் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுத்தக் கூடும் என தெரிந்த கூகுள் நிறுவனம் இதுகுறித்து மன்னிப்பு கேட்டுள்ளது. அது மட்டுமின்றி கன்னட மக்களின் உணர்வை புண்படுத்தியதற்கு மிகவும் வருந்துகிறோம் என்றும் தெரிவித்துள்ள கூகுள் நிறுவனமும் கன்னட மொழி தொடர்பான கூகுள் தேடுதளத்தில் உள்ள தவறான பதிவுகளையும் நீக்கியுள்ளது.

மாநில அரசின் செயல்பாடு திருப்திகரமாக இல்லையாம்! எந்த திட்டத்தில் தெரியுமா?

0

மத்திய அரசின் திட்டமான பிரதமர் கல்யாண் அண்ண யோஜனா மற்றும் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு போன்ற திட்ட செயல்பாடுகள் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அதன் பிறகு அந்தத் திட்டம் தொடர்பாக காணொலிக் காட்சி மூலமாக மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் திட்ட துறையின் செயலாளர் சுதன்சு பாண்டே நேற்று பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர் நோய் பரவல் இருக்கின்ற சூழலில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பயன்பெறும் பொதுமக்களில் அதிகம் பாதிக்கப்பட்டு இருக்க கூடியவர்களுக்கு பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருப்பவர்களுக்கும் பயனடைவது மாநில அரசுகள் உறுதி செய்வது அவசியம். இதனை மனதில் வைத்து நகர மற்றும் ஊரக பகுதிகளில் வாழ்ந்து வரும் பொருளாதாரத்தில் பின் தங்கி இருக்கின்ற பிரிவை சார்ந்த பொதுமக்களை கண்டறிந்து அவர்களுக்கு தேசிய உணவு பாதுகாப்பு சட்ட குடும்ப அட்டை வழங்குவதற்கான சிறப்பு திட்டத்தை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கிறது.

தெருக்களில் குடியிருப்பவர்கள் குப்பைகளை சேகரிப்பவர்கள் திரு தெருவாக சென்று பொருட்களை விற்பனை செய்பவர்கள் சைக்கிள் ரிக்ஷா இழுப்பவர்கள் உள்ளிட்டவர்களை கண்டறியுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பயன்பெறும் தனி நபர்களையும், குடும்பங்களையும் கண்டறிந்து ரேஷன் கார்டுகளை வழங்குவது போன்ற பொறுப்புகள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இடம் தான் இருக்கின்றன.

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் 32 மாநிலங்களில் செயல்படுத்தப்படுகிறது. இதன் வழியாக மாதம் ஒன்றிற்கு நாடு முழுவதும் 1.35 கோடி மக்கள் பயன் பெறுகிறார்கள். ராஜஸ்தான், பீகார், ஆந்திரா, தெலுங்கானா, உத்தரப் பிரதேசம், கர்நாடகா, கேரளா, அரியானா, மராட்டியம், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் மிக சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று தெரிவித்திருக்கிறார்.

ஆனால் தமிழ்நாட்டை பொறுத்தவரையில் இந்த திட்டத்தில் மாநில அரசின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை. ஆகவே இந்த திட்டத்தை நன்றாக செயல்படுத்த வேண்டும் என்று தமிழக உணவுத்துறை அதிகாரிகளை தொடர்ச்சியாக அறிவுறுத்தி வருகிறோம் என்று தெரிவித்திருக்கிறார்.

அரசுக்கு நன்கொடை வழங்கிய சிறுமி! நெகிழ்ந்து போன உதயநிதி செய்த செயல்!

0

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று அதிகரித்து வருகிறது ஸ்டாலின் தலைமையில் புதிதாக பொறுப்பேற்றிருக்கும் தமிழக அரசு நோய் தடுப்பு பணிகள் முழுவீச்சில் செயல்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் நோய் தடுப்பு நடவடிக்கை களுக்கு பொருளாதார ரீதியாக தமிழக அரசுக்கு உதவும் விதமாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்க வேண்டும் என்று தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் வைத்திருந்தார். இதனை தொடர்ந்து பல தரப்பினரும் நிதி உதவி அளித்து வருகிறார்கள்.

அதேபோல சிறுவர்கள், சிறுமிகள் உள்ளிட்டோரும் தங்களுடைய தேவைக்காக சேர்த்து வைத்திருந்த சிறிய அளவிலான தொகைகளையும், முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கி வருகிறார்கள். அந்த விதத்தில் சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த யோகிதா என்ற 9 வயது சிறுமி நோய்த்தொற்று தடுப்பு பணிக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ஆயிரம் ரூபாய் வழங்கி இருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து அந்த சிறுமிக்கு பல தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். இந்த சூழ்நிலையில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாள் தினமான நேற்றைய தினம் அந்த சிறுமிக்கு சைக்கிளை பரிசாக அளித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டசபை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டு தெரிவித்திருக்கிறார்.

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தலாமா? மேற்கொண்ட ஆய்வு முடிவுகள்!

0

தமிழ்நாட்டில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துவதற்கு 60 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்திருப்பதாக பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிபிஎஸ்சி பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு இருக்கின்ற சூழலில் நாட்டில் இருக்கக்கூடிய பல மாநிலங்களும் மாநில அளவில் நடத்தப்படும் பொது தேர்வை ரத்து செய்து வருகின்றன.

தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் மருத்துவ வல்லுநர்கள் கருத்து கேட்பு நடத்தி அதன் அறிக்கையை சமர்ப்பிக்க முதலமைச்சர் ஸ்டாலின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு உத்தரவு வழங்கியிருக்கிறார்.

அதன் அடிப்படையில், மாணவர்களுக்கு தேர்வு நடத்தலாம் அல்லது ரத்து செய்யலாமா என்பது தொடர்பாக கருத்து கேட்கும் வேலைகள் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து இன்று மாலை கல்வியாளர்கள் பெற்றோர் நலச் சங்கத்தினர் ஆசிரியர் மற்றும் மாணவர் அமைப்பினர் உள்ளிட்டோரிடம் அமைச்சர் ஆலோசனை நடத்த இருப்பதாக தெரிகிறது.

இதற்கிடையில் மாணவர்களின் உயர் கல்வியையும், வேலைவாய்ப்பையும், மனதில் கொண்டு தேர்வு நடத்தப்பட வேண்டும் இணையதளம் மூலமாக தேர்தல் நடத்தப்படலாம். மூன்று மணி நேர தேர்வை 9 மணி நேரமாக குறைத்து அதற்கேற்றவாறு வினாத்தாள்களை தயார் செய்து தேர்வு நடத்தலாம், அதேபோல தேர்வு மையங்களை அதிகரித்து பணிகளை மேற்கொள்ளலாம் என்று பல கல்வியாளர்களும், பெற்றோர்களும் தெரிவித்து வருகிறார்கள்.

இப்படி 60% நபர்கள் பொதுத் தேர்வை நடத்து வதற்கு விருப்பம் தெரிவித்திருப்பதாக பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கிறது. அதே சமயத்தில் தற்சமயம் கிராமப்புறங்களில் நோய் தொற்று பரவல் அதிகமாக இருப்பதால் மாணவர்களின் உடல் நலன் முக்கியம் என்று தெரிவித்து தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று சில பெற்றோர்கள் தங்களுடைய கருத்துக்களை முன்வைத்து இருக்கிறார்கள்.

மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்த ஸ்டாலின்! என்ன கேட்டார் தெரியுமா?

0

மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்த ஸ்டாலின்! என்ன கேட்டார் தெரியுமா?

கொரோனா தொற்றானது இன்றளவும் முடிவிற்கு வராத நிலையில் அடுத்தடுத்தாக புதிய தொற்றுகள் உருவாகி பரவி வருகிறது.கொரோனா தொற்றினால் நாம் அனைவரும் பல உயிர்களை இழந்து நிற்கிறோம்.அந்தவகையில் கருப்பு பூஞ்சை என்ற தொற்று தற்போது அதிகளவு பரவி வருகிறது.சேலம்,காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பிற்குள்ளாகி உயிரிழந்து வருகின்றனர்.இத்தொற்றானது காற்றின் மூலம் பரவுகிறது என கூறுகின்றனர்.

இத்தொற்று சர்க்கரை நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகப்படியாக பரவுகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.அதனால் சர்க்கரை நோய் உள்ளவர்கள் தங்களின் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுரை கூறி வருகின்றனர்.அந்தவகையில் இத்தொற்றால் தற்போது அதிகளவு மக்கள் பாதிப்பிற்குள்ளாகி வருவதால் அதற்கான தடுப்பு மருந்தை உடனடியாக தமிழகத்திற்கு அனுப்புமாறு மத்திய சுகாதரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில் தற்போது தமிழகத்தில் 673 பேருக்கு இந்த கருப்பு பூஞ்சை தொற்று பாதிக்கப்பட்டுள்ளது.அதற்கான 30,000 தடுப்பு மருந்து குப்பிகளை தமிழகத்திற்கு அனுப்புமாறு கேட்டுக்கொண்டார்.இத்தடுப்பு மருந்தால் பாதிக்கப்பட்ட மக்கள் உயிரிழப்பு போன்ற அசம்பாவிதத்திலிருந்து காப்பாற்றலாம்.

இவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும்! ஸ்டாலின் அதிரடி உத்தரவு!

0

தமிழ்நாட்டின் நோய்த்தொற்றை இரண்டாவது அறையில் மிகவும் தீவிரமான பாதிப்புகளை உண்டாக்கி வருகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு போடப்பட்டிருக்கிறது. இந்த ஊரடங்கு பலன் காரணமாக, சென்னை உள்பட பல மாவட்டங்களிலும் இந்த நோய் தொற்று பரவ கட்டுக்குள் இருப்பதாக கருதுகிறார்கள். ஆனாலும் நோய்தொற்று காலத்தில் ஏழை, எளிய மக்கள் எந்தவிதமான அவஸ்தையையும் பட்டு விடக்கூடாது என்ற காரணத்திற்காக, தமிழக அரசு 4 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்க உத்தரவிட்டது.

அதன்படி முதல்கட்டமாக எல்லா அரிசி கார்டுதாரர்களுக்கும் 2000 ரூபாய் வழங்கப்பட்ட நிலையில்,, தற்சமயம் இரண்டாவது கட்டமாக 2000 ரூபாய் பணம் மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்குவதற்கான திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதோடு மட்டுமல்லாமல் முன்கள பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் நோய்த் தொற்று பரவ காரணமாக, பலியாகும் முன் களப் பணியாளர்களுக்கு நிவாரணத்தொகை ஆலயத்தில் நிலையான மாத ஊதியம் இல்லாமல் பணியாற்றி வரும் பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் மற்றும் இதர பணியாளர்களுக்கு நான்காயிரம் ரூபாய் 10 கிலோ அரிசி மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பையும் வழங்குவதற்கு ஆணையிட்டிருக்கிறார்.

ஆகவே தமிழக அரசு பேருந்துகளில் இதற்கு முன்னரே மகளிர் பயணம் செய்ய இலவச அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அதே போல தங்களுக்கும் இலவச பயண திட்டத்தை அறிவிக்க வேண்டும் என்று திருநங்கைகள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அதற்கு உரிய அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்த முதல் அமைச்சர் ஸ்டாலின் திருநங்கைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளும் இலவசமாக பயணம் செய்யலாம் என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதனையடுத்து திருநங்கைகளின் இன்னொரு கோரிக்கைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அனுமதி வழங்கியிருக்கிறார். அதாவது ரேஷன் அட்டைதாரர்களுக்கு நிவாரணமாக நான்காயிரம் ரூபாய் வழங்கப்படுவதைப் போல தங்களுக்கும் நோய்த்தொற்று நிவாரண நிதி உதவி வழங்க வேண்டும் என்று திருநங்கைகள் கோரிக்கை விடுத்திருந்தர். தமிழ்நாட்டில் மொத்தம் 11 ஆயிரத்து 449 திருநங்கைகள் இருக்கின்ற சூழலில் முதல் கட்டமாக ரேஷன் அட்டை வைத்திருக்கும் 2,956 திருநங்கைகளுக்கு நிவாரண நிதி வழங்குவதற்கு தமிழக அரசு சார்பாக உத்தரவிடப்படுகிறது.

நோய் தொற்று குறித்து பரபரப்பு பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர்!

0

புதுக்கோட்டை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருக்கின்ற நோய் தொற்று சிகிச்சை மையத்தை முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்றைய தினம் ஆய்வு செய்து இருக்கிறார். அதன் பின்னர் அவர் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார். அந்த சமயத்தில் அவர் தெரிவித்ததாவது தமிழ்நாட்டின் நோய்த் தொற்று பாதிப்பு குறைந்து வருவது நமக்கு சற்று நிம்மதியைத் தந்தாலும் நோய் தொற்று பாதிப்பு குறைந்து வரும் சமயத்தில் இழப்பு சற்று அதிகமாக இருப்பது கவலை தருகிறது என்று தெரிவித்திருக்கிறார்.

இதன் காரணமாக, இறப்பு விகிதத்தை குறைப்பதற்காக தமிழக அரசு உடனடியாக அதிக கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் தமிழ்நாட்டில் அதிகமாகி வரும் நோய் பாதிப்பைக் கட்டுப்படுத்த தமிழக அரசு அதிக கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருக்கிறார். இதன் காரணமாக, பாதிக்கப்பட்டவர்களுக்கு எல்லாவிதமான மருந்துகளையும் தயார் நிலையில் வைத்திருந்து ஏற்படும் இழப்புகளை தடுத்து நிறுத்த வேண்டும் என கூறியிருக்கிறார்.

கிராமங்களில் அரசு அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் இருக்கின்ற தடுப்பூசியை தயார் செய்யும் மையத்தை உடனடியாக செயல்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என்பதை மொத்த தமிழக மக்களின் விருப்பமாக இருக்கிறது. அந்த மையத்தை அதிமுக ஆட்சியில் ஆய்வு செய்து செயல்படுத்துவதற்கு மத்திய அரசிற்கு கோரிக்கை வைத்தோம் ஆகவே இந்த மையத்தை எடுப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.

கருப்பு பூஞ்சை பாதிப்பு யாருக்கு எதனால் ஏற்படுகிறது? பாதுகாத்துக் கொள்வது எப்படி?

கருப்பு பூஞ்சை பாதிப்பு யாருக்கு, எதனால் ஏற்படுகிறது, அதிலிருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி?: பத்திரிகை தகவல் அலுவலகம் (PIB) ஏற்பாடு செய்த இணைய கருத்தரங்கில் நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

கொவிட்-19 பாதிப்புகளோடு ஒப்பிடும்போது மிகக் குறைவான அளவில் மட்டுமே கருப்பு பூஞ்சை எனப்படும் மியுகோர்மைகோஸிஸ் தொற்று பரவல் உள்ளதாக இரைப்பை மற்றும் குடலியல் நிபுணர் டாக்டர் ராஜீவ் ஜெயதேவன் கூறினார். ‘கொவிட்-19 தொடர்புடைய மியுகோர்மைகோஸிஸ் மற்றும் வாய் சுகாதாரம்’ எனும் தலைப்பில் பத்திரிகை தகவல் அலுவலகம் இன்று ஏற்பாடு செய்த இணைய கருத்தரங்கில் பேசிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பல் சிகிச்சை நிபுணர் டாக்டர் நீதா ராணாவும் இதில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் மருத்துவர்கள் பேசியதிலிருந்து சில முக்கிய அறிவுரைகள் மற்றும் கருத்துக்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன.

கருப்பு பூஞ்சை பாதிப்பு எதனால் ஏற்படுகிறது?

கொவிட்-19 பாதிப்போடு நீரிழிவு நோய் மற்றும் ஸ்டீராய்டுகளின் பயன்பாடு கலக்கும் போது நோய் எதிர்ப்பு தன்மை பெரியளவு பாதிப்புக்குள்ளாகிறது என்று கூறிய டாக்டர் ஜெயதேவன், நீரிழிவுக்கும் கருப்பு பூஞ்சைக்கும் தொடர்பு இருப்பதாக தெரிவித்தார்.

நமது நாட்டில் பலருக்கு சர்க்கரை நோய் இருக்கிறது. எனவே அவர்களில் சிலருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்படுகிறது என்றும் அவர் கூறினார். பெருந்தொற்றின் போது பல்வேறு கட்டுரைகள் எழுதியுள்ள டாக்டர் ஜெயதேவன், அவரைப் பொருத்தவரை, கொவிட்-19 பாதிப்புகளோடு ஒப்பிடும்போது மிகக் குறைவான அளவில் மட்டுமே மியுகோர்மைகோஸிஸ் பாதிப்புகள் உள்ளதாக கூறினார்.

மேலும் பேசிய அவர், “நீரிழிவு உள்ளவர்கள் அல்லது உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் அதிக அளவில் கருப்பு பூஞ்சையால்  பாதிக்கப்படுகிறார்கள். இத்தகைய பாதிப்புகள் இல்லாதவர்களிடையே ஏற்படும் கருப்பு பூஞ்சை தொற்று குறித்து நாம் ஆராய வேண்டும்,” என்றார்

நீரிழிவு மற்றும் மியுகோர்மைகோஸிஸ்:

“நீரிழிவு நோயாளிகளின் ரத்த குளுக்கோஸ் அளவு கட்டுப்பாட்டில் இல்லாமல் போகும்போது அவர்களது நோய் எதிர்ப்பு அமைப்பு சரியாக வேலை செய்யாது. நீரிழிவு நோய் தீவிரமாகும் போது நோயை எதிர்த்து போராடும் செல்கள் பாதிக்கப்படுகின்றன. இதன் காரணமாக கருப்பு பூஞ்சை தொற்று ஏற்படலாம்,” என்று டாக்டர் ஜெயதேவன் கூறினார்.

நமது ரத்த செல்களை பூஞ்சை ஆக்கிரமிக்கும் போது திசுக்களுக்கு ஆக்சிஜன் விநியோகம் கிடைக்காமல் இறக்கின்றன. அவ்வாறு ஏற்படும் போது அவை கருப்பு நிறமாக மாறுகின்றன. இதன் காரணமாகவே இந்த பாதிப்பு கருப்பு பூஞ்சை என்று அழைக்கப்படுகிறது என்று அவர் விளக்கினார்.

வாய் சுகாதாரமும் மியுகோர்மைகோஸிசும்:

கருத்தரங்கில் பேசிய பல் சிகிச்சை நிபுணர் டாக்டர் நீதா ராணா, “நல்ல வாய் சுகாதாரம் மற்றும் கொரோனா பாதிப்புக்கு இடையே கட்டாயமாக தொடர்பு உள்ளது. பற்கள் மற்றும் ஈறுகள் உள்ளிட்டவற்றை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால் வைரஸ் தொற்று ஏற்படுவதற்கு குறைந்த அளவிலேயே வாய்ப்புகள் உள்ளன. அவ்வாறு இல்லையேல் கருப்பு பூஞ்சை தொற்று ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன,” என்றார்.

தடுப்பு மருந்தும் மியுகோர்மைகோஸிசும்:

தடுப்பூசி செலுத்தி கொண்ட பின்னரும் உங்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால், அதன் அளவு பெரும்பாலானவர்களில் மிகவும் குறைவாகவே இருக்கும் என்று டாக்டர் ஜெயதேவன் கூறினார். லேசான கொவிட் பாதிப்புகளுக்கு மருந்துகள் தேவையில்லை என்றும், எனவே ஸ்டீராய்டு மூலமாக உருவாகும் கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றும் அவர் கூறினார்.

லேசான கொரோனா பாதிப்பை, தானாகவே குணமடைய விடாமல் மருந்துகளை ஒருவர் தேவையில்லாமல் சுயமாக எடுத்துக் கொண்டாரேயானால், பூஞ்சை பாதிப்புக்கான அடித்தளத்தை அவர் ஏற்படுத்தலாம் என்று மருத்துவர் மேலும் தெரிவித்தார்

கொவிட்டுக்கு பிந்தைய மியுகோர்மைகோஸிஸ்:

கொவிட் சிகிச்சையின் தாக்கம் உடலில் சிறிது காலம் இருக்கும் என்பதால் சில வாரங்களுக்கு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். உங்களது உடலை எந்த விதமான சாகசத்துக்கும் உட்படுத்த வேண்டாம் என்று டாக்டர் ஜெயதேவன் கூறினார். நோய் எதிர்ப்பு தன்மை குறைவாக உள்ள நபர்களுக்கு ஏற்படும் கருப்பு பூஞ்சை பாதிப்பு குறித்து பேசிய அவர், “நமது உடலில் இருக்கும் நல்ல பாக்டீரியா, கெட்ட பாக்டீரியாவால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து உடலைக் காக்கிறது. நீண்ட காலத்திற்கு மற்றும் தேவையின்றி ஆன்டிபயாடிக்ஸ் பயன்படுத்துவது பூஞ்சை அல்லது பாக்டீரியா தொற்றுகளுக்கு வழிவகுக்கும்,” என்றார். நமது நாட்டில் உள்ள நிறைய பேர் சுயமாக மருந்துகளை எடுத்துக் கொள்வதாக கூறிய அவர், மருத்துவர் சொல்வதை மட்டுமே கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

சுற்றுப்புறங்களின் மூலமாக கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்படுமா?

நம்மை சுற்றி எல்லா இடங்களிலும் பூஞ்சை இருக்கிறது. எனவே, வெளியில் அடி எடுத்து வைத்தால் பூஞ்சை பாதிப்பு வந்துவிடுமோ என்று அச்சப்பட வேண்டாம். கருப்பு பூஞ்சை என்பது வெகு சிலருக்கே ஏற்படும் மிகவும் அரிதான பாதிப்பாகும் என்று டாக்டர் ஜெயதேவன் கூறினார்.

பெருந்தொற்றின் போது வாய் சுகாதாரம்:

“உங்கள் பல் மருத்துவருடன் தொடர்பில் இருங்கள். தொலைபேசி மூலம் தொடர்பில் இருந்தாலே பெரும்பாலானவர்களுக்கு போதுமானதாகும். பல் மருத்துவமனைகளில் வழிகாட்டுதல்கள் முழுமையாக பின்பற்றப்பட வேண்டும். மருத்துவமனைக்கு நேரில் செல்ல வேண்டுமென்றால்  மருத்துவரின் அறிவுரையை பின்பற்றவும்,” என்று டாக்டர் நீத்தா கூறினார்.

கொவிட்டுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை எத்தனை காலத்திற்கு தடுப்பு மருந்து வழங்கும்?

தடுப்பு மருந்து மூலம் ஏற்படும் நோய் எதிர்ப்பு சக்தி நீண்ட காலத்திற்கு நமது உடலில் இருக்கும் என்று நிறைய விஞ்ஞானிகள் நம்புவதாக டாக்டர் ஜெயதேவன் கூறினார். நோய் தீவிரம் அடைவது மற்றும் உயிரிழப்பு ஆகியவற்றிலிருந்து தடுப்பு மருந்து பாதுகாப்பதாக அவர் தெரிவித்தார்.

கொவிட் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கான அறிவுரை:

“பாதிப்பை லேசாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அதே சமயம் அச்சப்படவும் தேவையில்லை. 5 அல்லது 6 நாட்களுக்கு பிறகு  அறிகுறிகள் தீவிரமானாலோ, அல்லது உங்களுக்கு மூச்சுவிட சிரமம் ஏற்பட்டு உணவு உண்ண முடியாமல் இருந்தாலோ, அல்லது நெஞ்சுவலி ஏற்பட்டு அசவுகரியமாக உணர்ந்தாலோ மருத்துவமனைக்கு சென்று மருத்துவரை பார்க்கவும். அல்லது தொலை மருத்துவ வசதியின் மூலமும் மருத்துவரை தொடர்பு கொள்ளலாம்,” என்று டாக்டர் ஜெயதேவன் கூறினார்.