Sunday, July 20, 2025
Home Blog Page 4566

இவருக்கு மகனா? ஆச்சரியமூட்டும் புகைப்படம்!

0

தமிழ் திரையுலகில் சிறுசிறு வேடங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் பெரிய அளவில் இடம் பிடித்தவர் நடிகர் கிங்காங். இவரை தற்போது பெரிய அளவில் திரைப்படங்களில் காணமுடிவதில்லை. ஆனால் இவர் தற்சமயம் சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருப்பதாக சொல்கிறார்கள்.

இந்த நிலையில், நேற்றைய தினம் இவருடைய மகனுக்கு பிறந்தநாள் என்று சொல்லப்படுகிறது. ஆகவே தன்னுடைய மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இவர் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்து தன்னுடைய மகனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த புகைப்படம் தற்சமயம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

குழந்தைகளை தாக்கிய புதுவகை கொரோனா வைரஸ்! பூனேவில் கண்டுபிடிப்பு!

0

பூனாவில் உள்ள சாசோன் பொது மருத்துவமனையில் குரோனா வைரஸ் மற்றும் இணைக்கப்பட்ட அழற்சி நோய் ஒன்று குழந்தைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 15 நாட்களில் ஏழு முதல் எட்டு குழந்தைகள் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் இது ஒரு அறிவிக்க தக்க நோயாக மாற்றப்படலாம் என்பதற்கான அறிகுறியாக மத்திய சுகாதார அமைச்சகம் மாநிலங்களில் குழந்தைகளில் மல்டி சிஸ்டம் அழற்சி நோய் , குரோனா வைரஸ் உடன் இணைக்கப்பட்ட நோயை கவனிக்கும் படி மேலும் அதற்கான தக்க நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

இந்திய மருத்துவ சங்கத்தின் குழந்தை மருத்துவர் டாக்டர் சஞ்சீவி ஜோஷி கூறுகையில் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்ட பெரியவர்களின் வீட்டில் உள்ள சிறு குழந்தைகளுக்கு இந்த விதமான நோய் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இதற்கு காரணமாக அந்த குழந்தைகள் ஆன்டிபாடிகளை உருவாக்கி இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதனால் வீட்டில் உள்ள பெற்றோர்கள் குழந்தைகளுக்கு கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளார்கள்.

இதற்கான அறிகுறிகளாக காய்ச்சல், சுவாசிப்பதில் சிரமம் ,கடுமையான உடல் சோர்வு ,வயிற்று வலி ,தோலின் நிறம் மற்றும் நகரங்களின் நிறங்கள் மாறுவது, உறுப்புகள் மற்றும் திசுக்களில் வீக்கம், போன்றவை அறிகுறிகளாக கூறப்படுகிறது. கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் என வந்தாலும் இது போன்ற அறிகுறிகள் இருந்தால் MIS- C நோய்க்கான சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான குழந்தைகளுக்கு லேசான நோய் மட்டுமே உள்ளது. ஆனால் இந்த எம் ஐ எஸ் சி உருவாகும் குழந்தைகளில் இதயம், நுரையீரல், ரத்த நாளம், சிறுநீரகங்கள், செரிமான அமைப்பு, மூளை தோல் அல்லது கண்கள் போன்ற சில உறுப்புகளின் திசுக்கள் கடுமையாக பாதிப்படைகின்றன.

எனவே பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும். குழந்தைகளை கண்காணிக்க வேண்டும். ஆனால் யாரும் பயப்பட வேண்டாம். பெரும்பாலான பாதிக்கப்பட்ட குழந்தைகள் காய்ச்சலுடன் ஒரு லேசான நோயை தான் பெறுகிறார்கள். எவ்வாறாயினும் நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். எச்சரிக்கையோடு அறிகுறிகளை கவனிக்க வேண்டும் என்று டாக்டர் ஒஸ்வால் கூறியுள்ளார்.

கே ஜி எஃப் யாஷ் செய்யும் செயல்! குவிந்து வரும் பாராட்டுக்கள்!

0

நாடு முழுவதும் வால்பேப்பர் பரவல் காரணமாக, பலர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலையில், கடந்த சில நாட்களாக நோய்களின் தாக்கம் குறைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இருந்தாலும் தற்சமயம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பொருளாதார ரீதியாக பின்னடைவில் நாடு சென்று கொண்டிருக்கிறது. கேஜிஎப் திரைப்படத்தின் மூலமாக தேசிய அளவில் பிரபலமான நடிகர் யாஷ் கன்னட திரைப்படத் தொழிலாளர்களின் திரைப்பட கணக்குகளில் ஐந்தாயிரம் ரூபாய் வழங்குவதற்கு ஏற்பாடு செய்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்காக நடிகர் யாஷ் தன்னுடைய சொந்த செலவில் இருந்து ஒரு கோடி ரூபாய் பணம் வழங்கி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த பணம் அவர்களுக்கு பெரிய அளவில் தீர்வை கொடுத்து விடாது. ஆனாலும் அவர்களுக்கு ஒரு நம்பிக்கை தரும் விதமாக இருக்கும் என்று நடிகர் யாஷ் தெரிவித்திருக்கிறார். அவருடைய இந்த செயலை பாராட்டி பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

பல்வேறு ஆசிரியர் பணிக்கு 170 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு!

சுவாமி ஆத்மானந்த் ஆங்கிலப் பள்ளியில் ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. தகுதி மற்றும் ஆர்வமுள்ள நபர்கள் 5. 6. 2021 அன்று க்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 170 ஆசிரியர் மற்றும் மற்ற உதவி பணிகளுக்கு காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது. இந்த வேலைக்கான கூடுதல் தகவல்களை அறிய கீழே குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள் உங்களுக்காக.

பள்ளியின் பெயர்: Swami Atmanand English Medium School.

பணியிடம்: சத்தீஸ்கர்.

காலி பணியிடம்: 170

எண்ணிக்கை – ஒரு பதவிக்கான காலியிடங்களின் பெயர் மற்றும் எண்ணிக்கை கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.
1. விரிவுரையாளர் – 70
2. தலைமை வாசகர் – 10
3. ஆசிரியர் – 25
4. உதவி ஆசிரியர் – 25
5. கணினி ஆசிரியர் – 05
6. PD ஆசிரியர் – 05
7. ஆய்வக உதவியாளர் – 15
8.. நூலகர் – 05
9. உதவியாளர் (தரம் 2) – 05
10. உதவியாளர் (தரம் 3) – 05.

சம்பளம் / ஊதியம்:

விரிவுரையாளர், தலைமை வாசகர் பதவிகளுக்கு, சம்பளம் ரூ .35,400 – 38,100,
ஆசிரியர், PD ஆசிரியர், கணினி ஆசிரியர் பதவிகளுக்கு, சம்பளம் ரூ .35,400,
உதவி ஆசிரியர், ஆய்வக உதவியாளர், உதவியாளர் தரம் 2 பதவிகள், ரூ .25,300,
நூலகர் பதவிக்கு சம்பளம் ரூ .22,400,
உதவி தரம் 3 பதவிக்கு, சம்பளம் மாதத்திற்கு ரூ .19,500. சம்பள விவரங்கள் பற்றிய கூடுதல் தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

வயது வரம்பு: வயது 21 – 35 வயதுக்கு இடையில் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதிகள் : இந்த பதவிகளுக்கான கல்வித் தகுதி விவரங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.
விரிவுரையாளர் / தலைமை வாசகர் / ஆசிரியர் – {B.Ed}
உதவி ஆசிரியர் – {D.Ed / DLEd}
கணினி ஆசிரியர் – computer B.E / B.Tech / M.Sc in computer science / information technology / MCA}
உடல் ஆசிரியர் – {BPEd}
ஆய்வக உதவியாளர் / உதவியாளர் (தரம் 2) – {12 வது தேர்ச்சி}
நூலகர் – library நூலக அறிவியலில் பட்டப்படிப்பு / டிப்ளோமா}
உதவியாளர் (தரம் 3) – {10 வது தேர்ச்சி}.

தேர்வு முறை :

சுவாமி ஆத்மானந்த் ஆங்கில நடுத்தரப் பள்ளியில் ஆட்சேர்ப்புக்கு, கணினி அடிப்படையிலான ஆன்லைன் தேர்வு, திறன் சோதனை மற்றும் பின்னர் தனிப்பட்ட நேர்காணலில் அவர்களின் செயல்திறன் அடிப்படையில் வேட்பாளர் தேர்வு செய்யப்படுவார். நேர்முகத் தேர்வுக்கு வேட்பாளர்கள் தயாராக இருக்க வேண்டும்.

பணி அனுபவம் : பணி அனுபவம் தேவையில்லை. புதிய வேட்பாளர்கள் மற்றும் அனுபவம் இல்லாத வேட்பாளர்கள் இந்த ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை : ஆர்வமுள்ள அனைத்து வேட்பாளர்களும் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பிலிருந்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். https://deobalodabazar.com/index.php/add-form
மற்றும். https://cdn.s3waas.gov.in/s304ecb1fa28506ccb6f72b12c0245ddbc/uploads/2021/05/2021052568.pdf

கடைசி தேதி: 05.06.2021

இவருக்காக தான் ரிஸ்க் எடுத்தேன்! நடிகை பிரியாமணி!

0

தமிழ் திரையுலகில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த பருத்தி வீரன் திரைப்படத்தின் மூலமாக பிரபலமானவர் நடிகை பிரியாமணி இதனையடுத்து பல திரைப்படங்களில் நடித்து வந்த அவர் திருமணம் செய்து கொண்டு சினிமாவிலிருந்து ஒதுங்கிக் கொண்டார். அதன் பிறகு மறுபடியும் திரைத்துறையில் என்ட்ரி கொடுத்த பிரியாமணி தமிழ், இந்தி ,கன்னடம் தெலுங்கு, போன்ற மொழிகளில் திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகின்றார்.

அதோடு இவர் பி ஃபேமிலி நேம் என்ற வெப்சீரிஸ் தொடரிலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. தற்சமயம் அசுரன் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கான நாரப்பா திரை படத்தில் பிரியாமணி நடித்து வருவதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் அண்மையில் பேட்டி கொடுத்த நடிகை பிரியாமணி இரண்டாவது இன்னிங்சில் வலுவான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகின்றேன். நாரப்பா திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். எனக்கு நடிகர் வெங்கடேஷ் உடன் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்ற ஆசை இதுவரையில் மூன்று முறை அவருடன் ஒன்றிணைந்து நடிப்பதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் கால்ஷீட் பிரச்சனையின் காரணமாக, நடிக்க இயலவில்லை இதன் காரணமாக, கைவசம் பல திரைப்படங்களில் இருந்த சமயத்தில் கூட நாரப்பா திரைப்பட வாய்ப்பு வந்தபோது மற்ற திரைப்படங்களுக்கு கொடுத்த கால்ஷீட்டை வாங்கி இந்த திரைப்படத்திற்கு கொடுத்துவிட்டேன். நடிகர் வெங்கடேஷ் திரைப்படம் என்பதால் மட்டும் தான் இந்த ரிஸ்க்கை நான் எடுத்திருக்கிறேன் என்று தெரிவித்து வருகிறார் பிரியாமணி.

ஏற்பட்ட திடீர் மரணம் சோகத்தில் திரையுலகினர்!

0

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த கல்யாணராமன், மீண்டும் கோகிலா, கடல் மீன்கள், மகராசன், போன்ற திரைப்படங்களை இயக்கியவர் ஜி என் ரங்கராஜன். இவர் இன்று காலை 8.30 மணியளவில் அவருடைய வீட்டில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவருடைய மகன் ஜிஎன்ஆர் குமரவேலன் நினைத்தாலே இனிக்கும், யுவன் யுவதி போன்ற திரைப்படங்களை இயக்கி இருக்கின்றார்.

இந்த சூழ்நிலையில், பிரபல இயக்குனர் j16 ரங்கராஜன் மறைவு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. தற்சமயம் அவருடைய மறைவிற்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த வருடத்தில் பல திரைப்பிரபலங்கள் அடுத்தடுத்து உயிரிழந்திருக்கிறார்கள். அதோடு நாள்தோறும் மரண செய்திகள் வந்த வண்ணம் தான் இருந்து வருகிறது. இது திரைத்துறை ரசிகர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது. நேற்று நடிகரும் தயாரிப்பாளருமான ஜி ராமச்சந்திரன் இயற்கை எய்தினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கணவனை தவிக்கவைத்து ஆசிரியர் செய்த வேலை! காவலின் வலை!

0

கணவனை தவிக்கவைத்து ஆசிரியர் செய்த வேலை! காவலின் வலை!

ஹரியானாவின் பானிபட் நகரில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவனுடன் ஆசிரியர் மாயமானதால் மாணவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில் கொரோனா காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளதால் ஆன்லைன் வகுப்பு மாணவர்களுக்கு எடுக்கப்பட்டு வருகிறது கடந்த 3 மாதங்களாக அந்த ஆசிரியர் தனது மகனுக்கு அவரது வீட்டில் நான்கு மணி நேரம் பாடம் எடுத்து வந்ததாக கூறியுள்ளார் இந்நிலையில் கடந்த வாரம் 17 வயதான மகன் தேஷ்ராஜ் ஆசிரியர் வீட்டிற்கு சென்றுள்ளார் ஆசிரியரும் மாணவருக்கு பாடம் எடுத்துள்ளார்.

இதையடுத்து அன்று மாலை மகன் வீட்டிற்கு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் ஆசிரியரின் குடும்பத்தை தொடர்பு கொண்டு விசாரித்துள்ளனர். இந்நிலையில் கணவனை பிரிந்து வாழும் அந்த ஆசிரியர் அவருடைய பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து பெற்றோர் கேட்ட பொழுது அவர்கள் எந்த பதிலும் தெரிவிக்காமல் போனை வைத்துள்ளனர். இந்நிலையில் மாணவனின் பெற்றோர் தரப்பில் இருந்து காவல் நிலையத்தி புகார் அளிக்கப்பட்டது.

புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஆசிரியர் மீது கடத்தல் வழக்கு பதிவு செய்தனர். மேலும் அவருடைய மொபைல் எண்ணை வைத்து காவல்துறையினர் தேட முயற்சி செய்துள்ளனர்.இந்நிலையில் அவர் மொபைல் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்கள் இருக்கும் இடம் தெரியவில்லை என்று பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.

இதுபற்றி போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இவர்களையும் முன்கள பணியாளர்களாக அறிவியுங்கள்! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

0

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வருகின்ற நிலையில், ஆக்ஸிஜன் தட்டுப்பாடும் கடந்த மாதத்தில் உண்டானதால் சென்னை உயர்நீதிமன்றம் தாமாகவே முன்வந்து வழக்குப்பதிந்து விசாரிக்க தொடங்கியது

இந்த வழக்கில் இன்று தினம் நடைபெற்ற விசாரணையில் சிறை பணியாளர்களையும் முன்தலை பணியாளர்களாக கருதி தடுப்பூசி செலுத்தவேண்டும் என்றும் எல்லா சிறைகளிலும் இருக்கின்ற பணியாளர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்றும் அதோடு பிரிவினை பணிபுரிந்து வரும் பணியாளர்களில் 800 நபர்களுக்கும் அதிகமானவர்களுக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது என்று தெரிவித்திருக்கிறது.

நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வரும் பட்சத்தில் சிறையில் இருக்கும் கைதிகளை பரோலில் விடுதலை செய்ய வாய்ப்பு இருக்கின்ற குற்றவாளிகள் தொடர்பான தகவல் அறிக்கையை தயார் செய்ய தமிழக அரசுக்கு அறிவுறுத்தி இருக்கின்றோம் என்று தெரிவித்த நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டு இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் கனமழை எச்சரித்த சென்னை வானிலை ஆய்வு மையம்!

0

தமிழ்நாட்டில் வெப்பச்சலனம் காரணமாக, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல் போன்ற சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது. தர்மபுரி, நாமக்கல், சேலம், திருப்பூர், திருச்சி, கரூர் ,பெரம்பலூர், அரியலூர், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, போன்ற மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஜூன் மாதம் ஆறாம் தேதி தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால், போன்ற பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.

சென்னையை பொருத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஆகியவை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

வன்னியர் இட ஒதுக்கீட்டை புறக்கணித்த திமுக! செயல்படுத்த வேண்டி வன்னியர் அமைப்பு கோரிக்கை

வன்னியர் இட ஒதுக்கீட்டை புறக்கணித்த திமுக! செயல்படுத்த வேண்டி தமிழக முதல்வருக்கு வன்னியர் அமைப்பு கோரிக்கை

கடந்த அதிமுக ஆட்சியில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் கொடுத்த அழுத்தத்தின் பேரிலும் அப்போதைய சட்டத்துறை அமைச்சரான சி.வி.சண்முகம் முயற்சியாலும் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது.ஆரம்பம் முதல் இடத்திற்கு ஏற்ற வகையில்  மாறுபட்ட கருத்துக்களை கூறி திமுக இதை எதிர்த்தே அரசியல் செய்து வந்தது.இந்நிலையில் ஆட்சியமைத்துள்ள திமுக சமீபத்தில் வெளியான இரு அறிவிப்புகளில் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை புறக்கணித்துள்ளது வன்னிய சமுதாய மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதை எதிர்த்து ஏற்கனவே பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில் தற்போது பல்வேறு வன்னிய அமைப்புகள் இதை கண்டித்து அறிக்கை வெளியிட்டு வருகின்றனர்.அந்த வகையில் அகில இந்திய வன்னியர் குல சத்திரிய சங்கங்களின் பேரமைப்பு சார்பாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.வன்னியர் உள் ஒதுக்கீட்டை செயல்படுத்த வேண்டி வெளியிட்டுள்ள அந்த கோரிக்கையில் கூறியுள்ளதாவது.

எங்கள் பேரமைப்பு சார்பாக தாங்கள் முதல் அமைச்சர் ஆனதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். கடந்த விக்கிரவாண்டி இடைதேர்தலில் திமுக ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுப்போம் என்று கூறினீர்கள். அதை இந்த நோய்தொற்று காலத்தில் நாங்கள் கேக்கவில்லை.ஆனால், எங்களுக்கு கடந்த ஆட்சியில் கொடுக்கப்பட்ட கல்வி & வேலைவாய்ப்பு உள் இட ஒதுக்கீடு 10.5 % இடஒதுக்கீடு உங்கள் ஆட்சி அமைந்த பிறகு இந்த கல்ல்லுரி ஆண்டில் அம்பேத்கார் சட்ட பல்கலை கழக மாணவர் சேர்க்கையில் தங்கள் அரசாங்கம் தனியாக MBC(V) குறிப்பிட்டு இருந்தது.

Dr Ramadoss with Edappadi Palanisamy
Dr Ramadoss with Edappadi Palanisamy

அதை தற்போது நீதிமன்ற வேலை வாய்ப்பில் தங்கள் அரசாங்க அறிவிப்பில் இது வெளியாகாமல் இருக்கிறது. தங்கள் அரசு MBC துறை அமைச்சர் இதில் நீதிமன்ற வழக்கு இருப்பதால் அதை முறையாக அறிவிக்க இயலவில்லை என்று கூறி இருக்கின்றார். அவர் இந்த முறை தான் அமைச்சர் ஆகி இருக்கின்றார். நீங்கள் அனுபவம் வாய்ந்த அமைச்சர் மற்றும் முன்னாள் துணை முதல் அமைச்சர் , தற்போதைய முதல் அமைச்சர்., உங்களுக்கு தெரியாமல் தான் இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கும் என்று நாங்கள் கட்சி சாரா வன்னியர் சங்கங்களின் பேரமைப்பு நினைகின்றோம்.

இந்த கல்வி & வேலைவாய்ப்புகள் கிடைக்க இருபத்தி ஒரு உயிர்கள் பலியாக இந்த வன்னியர் சமூகம் கொடுத்து இருக்கிறது. ஆறு பேர் நிரந்தர மாற்று திறனாளிகள் என்று இருகின்றார்கள். இவர்கள் அனைவரும் வன்னியர்கள். தங்கள் தந்தை முதல்வர் பொறுப்பில் இருந்த போது தாங்கள் முதல் சட்டமன்ற உறுபினராக இருந்த காலத்தில்தான் போராட்டம் செய்யாத வன்னியர் இல்லாத நூற்றி ஏழு சாதிகளை சேர்த்து இடஒதுக்கீடு என்று பசிக்கு கஞ்சி கேட்டவர்களுக்கு தங்கள் தந்தை நீரும் கஞ்சியும் சேர்த்து 108 சாதிகளை சேர்த்து ஒண்ணுக்கும் உதவாதா இடஒதுக்கீடு ஒன்றை கொடுத்தார்.

அன்றையதினம் மருத்துவர் ராமதாஸ் மற்றும் முன்னாள் அமைச்சர் சேலத்து சிங்கம் தெய்வத்திரு. வீரபாண்டியார் அவர்களின் நிர்பந்தம் காரணமாக அதை ஏற்று கொண்டு உடன்படிக்கை ஆனது. அப்போது தங்கள் தந்தை சொன்னது : இப்பொது இந்த பழத்தை சுவையுங்கள், பிடிக்கவில்லை என்றால் மாற்று பழம் ஏற்பாடு செய்து தருகின்றோம் என்று கூறினார். இதான் அன்றைய இடஒதுக்கீடு வரலாறு. இது உண்மையா பொய்யா என்று உங்கள் கட்சி பொது செயலளார் மாண்புமிகு ஐயா. துரைமுருகன் அவர்களை கேட்டு பாருங்கள். உங்களுடன் இப்பொது உங்கள் கூட்டணியில் இருக்கும் சி.என்.ராமமூர்த்தி தான் அன்றும் தங்கள் தந்தையுடன் சேர்ந்து உடன்படிக்கை ஒப்பந்தம் கையெழுத்து போட்டார். அன்றே எந்த வித கோரிக்கை மற்றும் போராட்டம் செய்யாத 107 சாதிகளை சேர்த்து எங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது.

அதற்க்கு பிறகு 2006 தங்கள் ஆட்சியில் நிபந்தனை அற்ற ஆதரவு என்று வன்னியர் தனி இட ஒதுக்கீடு கேக்காமல் மருத்துவர் ராமதாஸ் தங்கள் தந்தை மீது கொண்ட பாசத்தால் அதை ஐந்து ஆண்டு காலம் ஆதரவு கொடுத்தார். விவரம் இல்லாமல் அப்போதும் மருத்துவர் ராமதாஸ் செய்து விட்டார். அந்த நேரத்தில் தான் தங்களுக்கும் துணை முதல் அமைச்சர் பதவியை கொடுக்க சொல்லி தங்கள் தந்தையிடம் வலியுறுத்தி அதை தங்களுக்கு துணை முதல் அமைச்சர் பொறுப்பும் வாங்கி கொடுத்தார். அப்போது கூட மருத்துவர் ராமதாஸ் எந்த நிபந்தனையையும் தங்கள் தந்தையிடம் கொடுக்கவில்லை.

அதன் பின்னர் அதிமுக ஆட்சி வந்த பிறகு பல்வேறு வன்னியர் அமைப்புகள்தான் அதிமுக முதல்வரிடம் எடுத்து கூறி அதை நடைமுறையில் கொண்டு வர முயற்சி செய்தனர். பின்னர் அப்போதைய முதல்வர் செல்வி.ஜெயலலிதா அவர்கள் தான் இந்த உள் இட ஒதுக்கீடு கொடுக்க ரெடி செய்து வைத்தார். பிறகு அவர் மறைவிற்கு பிறகு வந்த முன்னாள் முதல்வர் திரு.எடப்பாடி பழனிசாமி அவர்கள் இதை 2018 ஆண்டே கொடுக்க இருந்தார், அப்போது தான் பாரளமன்ற தேர்தல் வந்ததால் அப்போது அது நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் இந்த தேர்தல் கடைசி நேரத்தில் அவர்கள் மனசு வந்து வன்னியர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக 10.5% உள் இட ஒதுக்கீடு கொடுத்தார்கள், அதற்கான அரசாணையை தமிழக அரசு இதழில் பிரசுரம் செய்து இருகின்றார்கள். முறையாக எல்லா வேலைகளும் நடந்து இருக்கிறது. இதை வைத்து தான் உங்கள் அம்பேத்கார் சட்ட பல்கலை கழக சேர்க்கையில் குறிப்பிட்டு இருந்தது.

ஸ்டெர்லைட் போராட்டத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு கடந்த ஆட்சியில் வேலை கொடுத்தார்கள் , உங்கள் புதிய ஆட்சியில் வேலையை கல்வி தகுதி பார்த்து கொடுத்து இருகின்றீர்கள். அதுபோல் இடஒதுக்கீட்டுக்கு போராட்டம் செய்த தியாகிகளுக்கு வேலை கொடுக்குமாறு தங்களை மிக தாழ்மையுடன் கேட்டு கொள்கின்றோம். அப்படி கொடுத்தால் தான் அது சமூக நீதி பாராட்டும் அரசாக உங்கள் அரசு அமையும். இல்லை என்றால் ஒரு தலைபட்சமான அரசு என்ற பொருள் படும்படி ஆகிவிடும்.அம்பேத்கார் சட்ட பல்கலை கழகம் சேர்க்கையில் இருக்கும் உள் இட ஒதுக்கீடு எப்படி வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு கிடைக்கவில்லை என்பது ஏதாவது அரசியல் உள் காரணங்கள் இருக்கின்றதா என்று தெரியவில்லை.

ஏற்கனவே எங்கள் வன்னியர் சமூக மக்கள் ஒரு விசயத்தை பொது வெளியில் பேசிக்கொண்டு இருகின்றார்கள். அது என்ன என்றால் ஏழு சட்டமன்ற உறுபினர்களை கொண்ட வெள்ளாளர் சமூகத்தில் நான்கு அமைச்சர்கள் நீங்கள் கொடுத்து இருகின்றீர்கள் , ஆனால் 22 சட்டமன்ற உறுபினர்களை கொண்ட வன்னியர் சமூகத்திற்கு 3 அமைச்சர் பதவி மட்டுமே கொடுத்து இருகின்றீர்கள் என்று பேசிக்கொண்டு இருகின்றார்கள். இந்த வேளையில் இந்த வேலைவாய்பு அறிவிப்பில் வன்னியர் உள் இட ஒதுக்கீடு கிடைக்கவில்லை என்று வன்னியர்கள் ஆதங்கம் படுகின்றார்கள். உயிரை கொடுத்த சமூகம் இன்னமும் சரியான சமூக நீதியை பெற முடியவில்லையே என்று அனைவரும் மிக மிக மன வேதனையில் இருகின்றார்கள்.

தங்களின் மேலான பார்வைக்கு சில தகவல்கள் :
#1994 முதல் 27 ஆண்டுகளாகவே தமிழகத்தின் 69% இடஒதுக்கீட்டுக் எதிராக வழக்கு நடைபெறுகின்றது.
#2008 – 2019 வரை SCA இடஒதுக்கீட்டுக்கு எதிராக வழக்கு நடைபெற்றது.
#2019 முதல் EWS எதிராக வழக்கு நடைபெற்று வருகின்றது.
ஆனால் வழக்கு காரணம் காட்டி எந்த வித உள் இட ஒதுக்கீடும் தீர்ப்பு வரும் வரை நிறுத்தி வைக்காமல் தமிழக அரசு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு முறையை அமுல்படுத்தி இருக்கிறது என்பது வரலாற்று உண்மை.

அதனால் தாங்கள் முறையாக கடந்த ஆட்சியில் கொடுக்கப்பட்ட உள் இட ஒதுக்கீடு 10.5% முறையை நீதிமன்ற வேலைவாய்ப்புகளில் முறையாக தங்கள் அரசாங்கம் அமுல்படுத்தும் என்று நம்புகின்றோம். தாங்கள் இதை செய்து கொடுத்து உண்மையான சமூக நீதியை வன்னியர் சமூக மக்களுக்கு கொடுக்குமாறு தங்களை தாழ்மையுடன் கேட்டு கொள்கின்றேன் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.