Saturday, July 19, 2025
Home Blog Page 4567

இந்த மாநிலங்களில் ஜூன் 5 வரை கனமழைக்கு வாய்ப்பு!

0

சமீபத்திய வானிலை கணிப்பின்படி கேரளா மகே மற்றும் லட்சத்தீவில் ஜூன் 5 வரை அதிக மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூன் மாதத்திலிருந்து பருவமழை தொடங்குவதால் கேரளாவில் சாதகமான சூழ்நிலைகள் உருவாகி உள்ளது. மேலும் தென்மேற்கு பருவக்காற்று பலப்படுத்த படுவதாலும், மாநிலம் முழுவதும் மழை அதிகரிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு பருவக்காற்று வலுவடைந்த உள்ளதாகவும், அதற்கான சூழல் கேரளாவில் பரவலான விரிவாக்கம் காரணமாக ஜூன் 3 அன்று இருந்து தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான நிலைகள் உள்ளன என்று வானிலை செய்திகள் அறிவித்தது.

ஆனால் IMD இந்தியாவில் பருவமழை தொடங்கியது என இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

பருவமழையில் தொடக்கத்தை அறிவிக்க கேரளாவில் உள்ள 14 மற்றும் அதற்கு மேற்பட்ட வானொலி நிலையங்கள் தொடர்ச்சியாக இரண்டு நாட்களுக்கு 25 மில்லி மீட்டர் மற்றும் அதற்கும் மேற்பட்ட மழைப்பொழிவை பதிவு செய்ய வேண்டும் என்பதற்கான நிலையான அளவுகோல்களை கொண்டுள்ளதாக வானிலை துறை பின்பற்றுகிறது.

அதுமட்டுமின்றி ஒரு அவதானிப்பின் அடிப்படையில் கேரளா கடற்கரையிலும் வெளிச்செல்லும் கதிர்வீச்சிலும் மேற்கு திசையிலிருந்து காற்று வீசுவதை கருத்தில் கொண்டு பருவமழை தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனால் சமீபத்திய கணக்கின்படி கேரளா மகே மற்றும் லட்ச தீவுகளில் அதிகமான மழைபொழிவு ஜூலை 5ஆம் தேதி வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் மழையின் தீவிரத்தை தெரியபடுத்த, மழைக்கால வருகையை குறிக்கும் விதமாக மற்றொரு அறிகுறி அரேபியக் கடலில் இருந்த நிலப் பகுதிகளுக்கு மேற்கிலிருந்து காற்று வீசுவது பலமாக உள்ளது.

தென்மேற்கு மற்றும் மேற்கு மத்திய அரேபியக் கடலில் இருந்து மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும். இதுபோன்று காற்றின் வேகம் ஜூன் 5ஆம் தேதி வரை இருக்கும் என்றும், மன்னார் வளைகுடா மற்றும் கொமொரின் வளைகுடாவில் இதே போன்று காற்றின் வேகம் அதிகரிக்கும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

அதனால் சனிக்கிழமை வரை மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஜூன் 1-ல் இருந்து தென் மாநிலங்களில் பருவமழை வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பினும், பருவமழை தொடங்காததற்கு காரணம் தேதி தீர்மானிப்பதில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக அரசு வெளியிட்ட புதிய அரசாணை

0

ஆறு ஜாதிப் பிரிவினருக்கு தேவேந்திர குல வேளாளர் என்ற பெயரில் ஜாதி சான்றிதழ் வழங்குவதற்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

பள்ளர் , தேவேந்திர குலத்தார், காலாடி, பண்ணாடி குடும்பை பெயர் கொண்ட ஆறு ஜாதிப் பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திர குல வேளாளர் சாதி சான்றிதழ் பெற ஆட்சியாளர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. அதோடு துறை தலைவர்கள் அதிகாரம் பெற அதிகாரிகள் நடைமுறை பின்பற்ற தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

தேவேந்திர குல வேளாளர் என்ற பெயரில் ஜாதி சான்றிதழ் வழங்குவதற்கு அரசாணை வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த சட்டத் திருத்தத்திற்கு கடந்த ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கினார். இந்த நிலையில், இன்று அந்த சட்டம் நடைமுறைக்கு வந்திருக்கிறது

கலைஞரின் 98 ஆவது பிறந்த நாள்! உதயநிதியின் உணர்ச்சி மிகுந்த பதிவு!

0

மறைந்த முன்னாள் திமுக தலைவரும் முன்னாள் அமைச்சருமான கருணாநிதியின் 98வது பிறந்தநாளை கொண்டாட படுகிறது என்று திராவிட முன்னேற்ற கழகத்தின் சட்டசபை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் பெரியாரின் பகுத்தறிவு தமிழ்நாடு தந்த அண்ணாவின் மாநில சுயாட்சி இவற்றை பாதுகாத்து இந்திய ஒன்றிய மாநிலத்திற்கு வழிகாட்டும் அரசனாக நம்முடைய முத்தமிழ் அறிஞரின் 98வது பிறந்த நாளில் அவர் வழியில் தலைவர் ஸ்டாலின் அவர்கள் கரத்தை வலுப்படுத்துவோம் என்று பதிவிட்டிருக்கிறார்

 

https://twitter.com/Udhaystalin/status/1400304125829550082?s=20

அவர் தன்னுடைய வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் பதிவில் நவீன தமிழ் நாட்டின் தந்தை முத்தமிழறிஞர் கலைஞரின் 98-வது பிறந்த நாளில் மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் அமைச்சர்கள் கழக நிர்வாகிகளுடன் கலைஞரின் ஓய்விடத்தில் மரியாதை செலுத்தினோம். எளியோர் மேன்மையை அடிநாதமாக வைத்து உழைத்த அவருடைய வழியில் பயணிப்போம் என்று பதிவிட்டிருக்கிறார்.


அதேபோல மாநில நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தங்கிய வலைதள பக்கத்தில் அரசியல் செல்வாக்கிற்கு என்னை அழைத்து வந்து செயல் காரணமாக, என்னுடைய முன்னோர்களைப் போல புண்ணியம் செய்ய வைத்த நவீன தமிழ்நாட்டின் சிற்பி பெருமைமிகு தலைவர் கலைஞரின் 98-வது பிறந்த நாளில் நன்றியுடன் வணங்குகிறேன் அவர் சென்ற திசையில் கழகம் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் அரசும் எப்போதும் பயணம் செய்து கொண்டிருக்கிறார்.

திராவிடர் முன்னேற்ற கழகத்தின் வழக்கறிஞர் அணியை சார்ந்த தமிழன் பிரசன்னா தங்களை தெரிந்துகொள்ள இவர்களுக்கு இந்த பிறவி போதாது. உங்களை எதிர்ப்பவர்களின் வேர்களுக்கும் நீர் ஊற்றி வளர்த்தீர்கள் பிறந்தநாள் வாழ்த்துகள் அப்பா என பதிவிட்டிருக்கிறார்.

பயனர்களை வாட்ஸ் அப்! கட்டாயப்படுத்துகிறது ! டெல்லி அரசு !

0

வாட்ஸ்அப் செயலியானது தனது பயனர்களுக்கு அவ்வப்போது நோட்டிபிகேஷன்களை தந்து பிரைவசி பாலிசியை ஏற்கும்படி கட்டாயப்படுத்துகிறது என்று டெல்லி அரசு நீதிமன்றத்தில் கூறியுள்ளது.

சந்தேகத்திற்கு இடமின்றி தற்போதுள்ள பயனர்களுக்கு வாட்ஸ்அப் அதனுடைய டிஜிட்டலில் வலிமையை காமித்து வருகிறது. அத்துடன் அத்தகைய அறிவிப்பை சரியான நேரத்தில் நோடிஃபிகேஷன் மூலம் அவர்களுக்கு அனுப்பி பிரைவசி பாலிசியை ஏற்கும்படி கட்டாயப்படுத்த விரும்புகிறது என்று அரசாங்கம் கூறியுள்ளது.

வியாழக்கிழமை அன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் வாட்ஸ்அப் தனது புதுப்பிக்கப்பட்ட தனியுரிமை கொள்கை அதாவது பிரைவசி பாலிசியை பயனாளர்களிடம் இருந்து ஒப்புதல் வாங்குவதற்காக அவ்வப்போது சரியான இடைவெளிகளில் நோட்டிபிகேஷன் களை தந்து அதை பயனர்கள் ஒப்புதல் அளிப்பதற்காக தந்திர முறையில் செயல்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

2021 புதுப்பிக்கப்பட்ட வாட்ஸ்அப் தனியுரிமைக் கொள்கையை ஏற்றுக் கொள்ளாத பல மில்லியன் வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு தினசரி அடிப்படையில் அறிவிப்புகளை அனுப்பி வருகிறது.

டெல்லி அரசானது பயனர்களை கவரும் விதமாக அடிக்கடி நோட்டிபிகேஷன்களை பிளாஸ் செய்து வாட்ஸ்அப் தனது தனியுரிமைக் கொள்கையை பயனர்கள் ஒப்புதல் அளிக்கும் விதமாக அவர்களை கட்டாயப்படுத்துகிறது என்று கூறியது.

இது ஒரு திட்டமாக இருக்கிறது. அதாவது பாதுகாப்பு மசோதா சட்டமாக மாறுவதற்கு முன்பே புதுப்பிக்கப்பட்ட 2021 தனியுரிமைக் கொள்கையில் பயனர்களை முழுவதையும் மாற்றிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் வாட்ஸ்அப் செயல்படுவதாக அரசு கூறியுள்ளது.

வாட்ஸ்அப் பயனர்களுக்கு அறிவிப்புகளை அனுப்புவதை தடுக்க நீதிமன்றத்திலிருந்து உத்தரவுகளை நாடி, வாட்ஸ் அப்பின் நடவடிக்கைகள் மார்ச் 24 இந்திய போட்டி ஆணையத்தில் உத்தரவின் படி முதன்மையான கருத்துக்கு எதிராக வாட்ஸ்அப் உள்ளது என அரசாங்கம் வாதிட்டது.

வாட்ஸ்அப் தனது தனியுரிமை கொள்கை 2011 ஐடி விதிகளை மீறுவதாகவும், யூனியன் அரசாங்கம் மார்ச் மதத்தில் நீதிமன்றத்தில் தெரிவித்தது. அதுமட்டுமில்லாமல் செய்தியிடல் பயன்பாட்டை நடைமுறைப்படுத்துவதை தடுக்குமாறு வலியுறுத்தியது..

பல்வேறு சமூக வலைத்தளங்களில் மற்றும் செய்தியின் பயன்பாடுகள் சேகரிக்கப்பட்ட பயனர்களின் தனியுரிமை டேட்டாவை பாதுகாக்க வேண்டும். எனவே அதன் வழிகாட்டுதல்களை வடிவமைக்க கூறும் ஒரு பொதுநல மனுவுக்கு பதில் அளிக்கும் வகையில் செய்யப்பட்டுள்ளன.

போராளியின் வழியில் தொடரும் வெற்றி பயணம்!

0

முன்னாள் அமைச்சர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய நினைவிடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார் கருணாநிதியின் 98வது பிறந்தநாளை முன்னிட்டு மெரினா கடற்கரையில் இருக்கின்ற அவருடைய நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர் துரைமுருகன், டி ஆர் பாலு, கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் போன்ற திமுக முக்கிய நிர்வாகிகளும் மரியாதை செலுத்தி இருக்கிறார்கள். கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு 38 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை கடற்கரையில் தொடங்கிவைத்தார் முதலமைச்சர். 38 மாவட்டங்களிலும் வனத் துறை சார்பாக ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படுகின்றன முன்கள பணியாளர்களுக்கு மளிகை பொருட்கள் உள்ளிட்ட உதவிகளையும் வழங்கினார் ஸ்டாலின்.

இதற்கிடையில் கருணாநிதியின் 98வது பிறந்தநாளை முன்னிட்டு போராளியின் வழியில் தொடர் வெற்றிப் பயணம் என்று சென்னை மெரினா கடற்கரையில் இருக்கின்ற கருணாநிதியின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது.

பொது இடங்களில் இனி இவையெல்லாம் செய்தால் அபராதம்! மாநகராட்சியின் புது திட்டம்!

0

பொது இடங்களில் இனி இவையெல்லாம் செய்தால் அபராதம்! மாநகராட்சியின் புது திட்டம்!

கொரோனா நோய் தொற்றின் காரணமாக பல திட்டங்களை அரசுகள் செய்து வருகின்றன.அதன் காரணமாக முன்கள பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் போன்றோர் தன் உயிரையும் பணயம் வைத்து சேவை செய்து வருகின்றனர்.

மும்பை பொது இடங்களில் அசுத்தம் செய்பவர்கள் மீது மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் எச்சில் துப்பினால் ரூ.200 அபராதமாக வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் இந்த அபராத தொகையை ரூ.1,200 ஆக அதிகரிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளளது. இதுகுறித்து மாநகராட்சி வெளியிட்டுள்ள தகவலில், அபராதத்தை அதிகரிக்கும் திட்டத்துக்கு சமீபத்தில் கமிஷனர் இக்பால் சகால் ஒப்புதல் அளித்ததாக கூறப்பட்டுள்ளது.

மேலும் அதிகாரி ஒருவர் கூறும்போது, இந்த திட்டத்துக்கு மாநகராட்சி பொதுக்குழு ஒப்புதல் வழங்க வேண்டும். அதற்கு முன் மாநில அரசும் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

பொது இடங்களில் எச்சில் துப்பினால் அபராதமாக கடந்த பல ஆண்டுகளாக ரூ.200 வசூலிக்கப்பட்டு வருகிறது. ஒரு மனு தொடர்பான விசாரணையின் போது, பொது இடங்களில் அத்துமீறுபவர்கள் மீது போலீசார் ரூ.1,200 அபராதம் விதிக்கும் போது, மாநகராட்சி மட்டும் எச்சில் துப்பினால் ஏன் ரூ.200-ஐ வசூலித்து வருகிறது என மும்பை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி இருந்தது.

ஆனால் அபராதத்தை அதிகரிக்க மாநகராட்சிக்கு ஐகோர்ட்டு உத்தரவிடவில்லை என்றார். இந்தநிலையில் கடந்த 6 மாதத்தில் மும்பையில் பொது இடங்களில் எச்சில் துப்பியவர்களிடம் இருந்து ரூ.28 லட்சத்து 67 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

இதில் அதிகபட்சமாக குர்லா, சாக்கிநாக்கா உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய எல் வார்டில் ரூ.4¾ லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

0

புதுச்சேரி மாநிலத்தில் உயரமான சட்டசபை உறுப்பினர்களின் நியமனம் செல்லும் என்று நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது புதுச்சேரி மாநிலத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 30 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி 10 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து மே மாதம் 7ஆம் தேதி முன்னாள் காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார் ஒரு சில வரிகளிலேயே நோய் கட்டுப்பாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அந்த சமயத்தில் புதுச்சேரி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பாக வெங்கடேசன், வீசி இராமலிங்கம், அசோக் பாபு, நடித்த வரை சட்டமன்ற உறுப்பினராக இருந்த உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டுமென தெரிவித்து புதுச்சேரி கரிக்கலாம்பாக்கம் முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் ஜெகநாதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.. இந்த உத்தரவு அரசியல் சாசனத்திற்கு எதிராக இருக்கிறது என்று தன்னுடைய மனுவில் தெரிவித்து இருக்கின்றார். அவர் சட்டப்படி பொருளாதார வல்லுநர்கள், அறிவியலாளர்கள், சீர்திருத்தவாதிகள் நியமன சட்டசபை உறுப்பினராக நியமிக்க வேண்டும் என்றும் இது தவறானது என்றும் தெரிவித்தார்.

அரசியல் சாசன மரபுப்படி நியமன சட்டசபை உறுப்பினர்கள் தொடர்பாக மாநில அமைச்சரவை துணைநிலை ஆளுநருக்கு பரிந்துரை வழங்கும் ஆளுநர் அதனை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்து அதன் பிறகு நியமன உத்தரவு பிறப்பிக்கப்படும் இந்த உத்தரவு தற்சமயம் பின்பற்றப்படாத காரணத்தால், 3 நியமன சட்டசபை உறுப்பினர்கள் தொடர்பான உத்தரவை செல்லாது என்று அறிவித்து அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரிக்கை வைக்கப்படுகிறது.

கடந்த மே மாதம் 20ஆம் தேதி இந்த வழக்கில் நீதிபதி அனிதா மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி உள்ளிட்டோர் அமர்வு விசாரணை செய்தது அந்த சமயத்தில் அரசு வேலைகளில் இருப்பவர்களை நியமனம் சட்ட சபை உறுப்பினர்களாக நியமிக்க மட்டுமே தர இருப்பதாகவும், இந்த நியமனத்தில் எந்தவிதமான சட்ட விரோதம் என்று தெரியாது என்று மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன் உள்ளிட்டோர் வாதிட்டார்கள்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் தீர்ப்பை ஒத்திவைத்தார் கொண்ட நிலையில் இந்த வழக்கு நேற்றையதினம் தீர்ப்பு கொடுக்கப்பட்டது. அதில் புதுச்சேரி சட்டசபைக்கு நியமன சட்ட சபை உறுப்பினர்களை மத்திய அரசு நியமித்தது செல்லும் என்று உத்தரவிட்டு இந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து இருக்கிறார்கள்

தயவு செய்து இந்த உணவுப் பொருளை குழந்தைகளுக்கு கொடுக்காதீர்கள்!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் மேகி நூடுல்ஸ் உடலுக்கு கேடு என அதை தயாரிக்கும் நெஸ்லே நிறுவனமே ஏற்றுக் கொண்ட அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.

பல்வேறு நாடுகளில் உலகங்களில் தனது தயாரிப்பு மையங்களை அமைத்து நெஸ்லே நிறுவனம் உணவுப் பொருட்களை தயாரித்து வருகிறது. அடிக்கடி தரம் பற்றிய சர்ச்சையில் சிக்கிக் கொண்டாலும், அந்நிறுவனம் இரண்டே நிமிடங்களில் தயார் ஆகி உலகம் முழுவதும் பரப்பி சிறுவர்கள் மட்டுமின்றி பெரியவர்களும் அதை விரும்பி உண்ண ஆரம்பித்து விட்டார்கள்.

இதற்கிடையே அந்த நிறுவனத்தின் அதிகாரிகளே அவர்களின் உணவுப் பொருள்களின் தரத்தை அறிக்கையாக வெளியிட்டு உள்ளார்கள். அதை சமர்ப்பித்தும் உள்ளார்கள். அதில் திடுக்கிடும் தகவல்களும் உள்ளது. அவர்கள் தயாரிக்கும் 60 சதவீத உணவுப் பொருட்கள் ஆரோக்கியமற்றது அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அந்த நிறுவனம் தயாரிக்கும் ஐஸ்கிரீம், மேகி நூடுல்ஸ் உட்பட பல உணவுப் பொருட்கள் ஆரோக்கியமற்றதாம். இந்த அறிக்கை வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

மேலும் இது ஆரோக்கியம் சம்பந்தமான விஷயம் என்பதால் அதை சுவையுடன் தயார் செய்வதற்கான மாற்றங்கள் கொண்டுவரப்படும் என நெஸ்லே நிறுவனம் கூறியுள்ளது.

இதனால் குழந்தைகளுக்கு இந்த உணவு தருவதை தவிர்த்தால் குழந்தைகள் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

தொற்று குறைந்துள்ள இந்த மாவட்டங்களுக்கு தளர்வுகள் இருக்கலாம்!

0

வருகின்ற ஜூன் 7 ஆம் தேதியுடன் முழு ஊரடங்கு முடியப் போகும் நிலையில் நோய் தொற்று குறைந்துள்ள காஞ்சிபுரம் சென்னை செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் தளர்வுகள் கொடுத்து ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

தொற்று குறைந்துள்ள சில மாவட்டங்களில் தளர்வுகள் கொடுக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த மாதம் 24 ஆம் தேதி முதல் தளர்வுகள் இல்லாமல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வெளியே செல்ல அனுமதி வழங்கப்பட்டது. எனினும் காய்கறி பழங்கள் மற்றும் மளிகை பொருட்கள் வாகனங்கள் மூலமாக அந்தந்த ஊர்களுக்கு சென்று விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டது. இதனால் பெருவாரியாக தொற்று குறைந்துள்ளது.

ஜூன் 7-ஆம் தேதி உடன் ஊரடங்கு முடிவதால் முதலமைச்சர் அவர்கள் நேற்று புதன்கிழமை சுகாதார அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். அந்த ஆலோசனை கூட்டத்தில் தடுப்பூசி செலுத்துவது குறித்து , காய்ச்சல் முகாம் நடத்துவது குறித்தும் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தொற்று வெகுவாக குறைந்து உள்ள செங்கல்பட்டு காஞ்சிபுரம் சென்னை மற்றும் பெண்களுக்கு ஒரு சில கட்டுப்பாடுகளுடன் தளர்வு அளிக்கப்பட்டு ஊரடங்கு இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது. இருப்பினும் தொற்று பாதிப்பு அதிகமுள்ள திருப்பூர் கோவை சேலம் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மூன்றாவது அலையின் காரணமாக அதற்கான முன் ஏற்பாடுகளை தமிழக அரசு விரைவாக செய்து வருகிறது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் கொரோனா 12 நாட்களாக குறைந்து வருகிறது. மாநிலம் முழுவதும் தோற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 21 , 48 , 364 உள்ளது. அதேபோல் ஒரே நாளில் 483 பேர் உயிரிழந்துள்ளனர். அதனால் இறப்பு எண்ணிக்கை 25200 ஆக உள்ளது.

தினசரி தொற்று எண்ணிக்கையில் கோவை தான் முதலிடத்தில் உள்ளது. திருப்பூர் ஈரோடு சேலம் மாவட்டங்களில் ஆயிரத்திற்கும் மேல் தினசரி தொற்றுகள் உறுதியாகியுள்ளது.

சின்ன குழந்தை என்று கூட பார்க்காமல் இராணுவ வீரர் செய்த கொடூரம்! கொடுமையின் உச்ச கட்டம்!

0

சின்ன குழந்தை என்று கூட பார்க்காமல் இராணுவ வீரர் செய்த கொடூரம்! கொடுமையின் உச்ச கட்டம்!

மனிதர்கள் அனைவரும் தன் மனசாட்சியை கழட்டி வைத்து விட்டனர் போன்று தெரிகிறது நடக்கும் சம்பவங்களை எல்லாம் பார்க்கும் போது பெண் குழந்தைகள் உள்ள பெற்றோர் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் இந்த சமுதாயத்தில் இருந்து.

கோவாவில் இருந்து நிஜாமுதீன் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில், ஒரு 8 வயது சிறுமி மற்றும் அவளது குடும்பமான தந்தை, தாய், அண்ணன், மற்றும் தங்கையுடன் டெல்லிக்கு சென்று கொண்டு இருந்தனர்.

அதே ரயிலில் 33 வயது மதிக்கத்தக்க பிரபு மல்லப்பா என்ற இராணுவ வீரரும் வந்துள்ளார்.இந்த சிறுமி தன் முன்பதிவு செய்த இருக்கையில் அயர்ந்து தூங்கி உள்ளாள்.

அந்த எக்ஸ்பிரஸ் ரயில் சத்தாரா மாவட்டம் லோனாட்-சல்பா ரயில் நிலையத்திற்கு அருகில் சென்று கொண்டு இருந்தது.அப்போது அந்த குட்டி பெண்னின் இருக்கைக்கு அருகே இருந்த பிரபு மல்லப்பா அந்த குழந்தையை கழிவறைக்கு தூக்கி சென்றுள்ளான்.

அங்கே வைத்து சிறுமியை கற்பழிக்க முயன்றுள்ளான்.ஆனால் சிறுமி கண்விழித்து கத்த ஆரம்பித்ததை தொடர்ந்து என்ன செய்வதென்று தெரியாமல் சிறுமியை தூக்கி ரயிலின் வெளியே எரிந்து விட்டான் அந்த ஆசாமி.

அந்த சிறுமி தண்டவாளத்தின் அருகே பலத்த காயங்களுடன் நடு காட்டில் விழுந்து கிடந்துள்ளாள்.மறுநாள் காலை அந்த வழியே சென்ற ஊர் பொது மக்கள் சிறுமியை பார்த்து மீட்டு மருத்துவமனையில் சேர்த்ததின் காரணமாக குழந்தை உயிர் பிழைத்தது.

பின் இந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் தெரிவிக்கப்பட்டது.அதன் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.சிறுமியை தூக்கி வீசும் போது ரயில் மெதுவாக சென்றதால் மட்டுமே உயிர் பிழைத்து உள்ளாள்.

இதுகுறித்து, சிறுமி இடம் விசாரிக்கும் போது, அவர் ஒரு இராணுவ வீரர் என்பது மட்டுமே தெரிந்தது.அதனால் அந்த பெட்டியில் பயணம் செய்தவர்களின் விவரங்களை சேகரித்த போது சந்தேகத்திற்கு இடமாக 4 பேர்  பெயர்கள் இருந்தது.

பின் போலீசார் பிரபு மல்லப்பாவை கண்டுபிடித்தனர்.அந்த நபர் பணி நிமித்தமாக உத்திர பிரதேச மாநிலத்தில் ஜான்சிக்கு சென்று கொண்டு இருப்பது தெரியவந்தது.

உடனே போலீசார் ஜான்சிக்கு விரைந்து சென்று அந்த பிரபு மல்லப்பாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் என்னவென்றால் அந்த 8 வயது குழந்தையின் தந்தையும் ஒரு முன்னால் இராணுவ வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தமாதிரி மனிதர்கள் எப்போதுதான் திருந்துவார்கள், சட்டங்கள் கடுமையாகும் வரை எதுவும் மாற வாய்ப்பில்லை என தெரிகிறது.அரசாங்கம் இந்த விசயங்களை கருத்தில் கொள்ள வேண்டும்.