Sunday, July 20, 2025
Home Blog Page 4574

ஆன்லைனில் மது விற்க அனுமதி – அரசு அதிரடி அறிவிப்பு!!

0

ஆன்லைன் மூலமாக மது ஆர்டர் செய்யும் மக்களுக்கு வீட்டிற்கு சென்று டெலிவரி செய்ய டெல்லி அரசு அனுமதி வழங்கியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா என்ற எமனின் பிடியில் சிக்கி துக்கத்தில் ஆழ்த்தி வருகிறது. கொரோனாவின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வரும் நிலையில் பல மாநிலங்கள் கொரோனாவின் பரவலைத் தடுக்க ஊரடங்கு விதிக்கப்பட்டு வருகின்றன.

அதேபோல் டெல்லியிலும் கொரோனா பாதிப்பு அதிகமாகி கொண்டே தான் செல்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தலைமையில் அரசு பல கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது.

அதன்படி அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் பணிபுரிய அனுமதி வழங்கியது. மருந்தகங்கள் மற்றும் பால் மளிகை கடை உள்ளிட்ட அத்தியாவசியமான கடைகள் மட்டுமே இயங்க அனுமதி வழங்கப்பட்டது.

மக்கள் பெரும் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும் என்பதற்கு இந்த மதுபான விற்பனைக்கு டெல்லியில் தடை விதிக்கப்பட்டிருந்தது. மது பிரியர்கள் மது அருந்த முடியாமல் மிகவும் வேதனைக்கு உள்ளாக்கி வருகின்றனர். அதனால் டெல்லி அரசு ஒரு முடிவுக்கு வந்துள்ளது.

மது பிரியர்கள் வேண்டுகோளுக்கு இணங்க டெல்லி அரசு ஆன்லைன் மூலமாக மது விற்பனை செய்யலாம் என அனுமதி கொடுத்துள்ளது. அதனால் மது வாங்க நினைப்பவர்கள் வீட்டில் இருந்தபடியே அதற்கான மொபைல் எண் அல்லது செயலி இருந்தால் அதனை பயன்படுத்தி ஆர்டர் செய்து கொள்ளலாம்.

அதுமட்டுமின்றி அனைத்து மது கடைக்காரர்களும் இந்த விற்பனையில் ஈடுபடும் முடியாது என்றும் , எல்- 13 என்ற சான்றிதழ் உள்ளவர்கள் மட்டுமே மொபைல் செயலி அல்லது ஆன்லைன் வழியாக ஆர்டர் செய்பவர்களுக்கு உபயோகிக்க முடியும் என்ற கட்டுப்பாடு விதித்துள்ளது.

பாபா ராம்தேவ் மன்னிப்பு கேட்க வேண்டும்! டாக்டர்கள் கண்டனம்!

0

பாபா ராம்தேவ் அவர்களை கண்டித்து டாக்டர்கள் இன்று கருப்பு தினம் அனுசரிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

சில தினங்களுக்கு முன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற யோகா குரு பாபா ராம்தேவ் அவர்கள் அலோபதி மருத்துவம் மிகவும் முட்டாள்தனமானது என்ற கருத்தை வெளியிட்டார்..

இதற்கு டாக்டர்கள் அனைவரும் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கண்டனம் தெரிவித்த பின்னர் ராம்தேவ் மன்னிப்பு கேட்டு கடிதம் அனுப்பினார்.

உத்தரகாண்ட் மாநிலம் இந்திய மருத்துவ கவுன்சில் பாபா ராம்தேவுக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது.

அதேபோல பாபா ராம்தேவை கண்டித்து ஜூன் 1-ஆம் தேதி கருப்பு தினமாக அனுசரிக்கப்படும் என டாக்டர் சங்க கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

அதன்படி இன்று டில்லியில் உள்ள மருத்துவர்கள் கருப்பு தினத்தை அனுசரித்து வருகின்றனர்.

மருத்துவ சங்க கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில்,

டாக்டர்கள் குறித்தும் அலோபதி மருத்துவம் பற்றியும் தவறான வகையில் கருத்து தெரிவித்த ராம்தேவை கண்டித்த ஜூன் ஒன்றாம் தேதி கருப்பு தினத்தை முடிவு செய்துள்ளோம். அன்றைய தினத்தில் நோயாளிகளுக்கு அனைத்தும் நடைபெறும். எந்தப் பிரச்சினையும் இல்லாமல், எந்த தடையும் இல்லாமல் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கப்படும்.

மேலும் ராம்தேவ் அவர்கள் பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா!! கொண்டாடும் தனுஷ் ரசிகர்கள்!!

0

சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா!! கொண்டாடும் தனுஷ் ரசிகர்கள்!!

தனுஷ் ரசிகர்கள் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ திரைப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகி உள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்க வைக்க இப்படியொரு டிரைலர் போதும் அந்த அளவுக்கு அதிரடியாக உள்ளது ஜகமே தந்திரம் திரைப்படத்தின் டிரைலர்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் அவர்கள் நடித்திருக்கும் ஜகமே தந்திரம் திரைப்படம் கொரோனா பரவல காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில் நேராக நெட்ஃபிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் இந்த படம்  ரிலீஸ் ஆகா உள்ளது. மேலும் இந்தப் படம் ஜூன் 18 ஆம் தேதி ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது. அதே போல், இதுவரை பார்த்திடாத புதிய தனுஷைக் கண் முன் நிறுத்தியுள்ளார் இயக்குனர் கார்த்தி சுப்புராஜ்.

இந்த படம் ஒரு கேங்ஸ்டர் படமாக உருவாக்கப்பட்டிருப்பது ட்ரைலர்  பார்க்கும் போதே தெரிகிறது. மேலும்  தனுஷ் அவர்கள் லண்டனில் எப்படி தாதாவாக மாறுகிறார் என்பதை வைத்து இப்படம் உருவாக்கப்படுள்ளது. மேலும் இந்த படத்தில் சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா எனறு தனுஷ் கூறியுள்ளார். மேலும் லண்டனில் ஜோஜு ஜார்ஜ் மற்றும் ஜேம்ஸ் காஸ்மோ இருவர் கேங்குக்கும் இடையே ஏற்படும் சண்டை காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இந்த படத்தின் ரிலீஸ்க்கு தனுஷ் ரசிகர்கள் மிகவும் எதிர்ப் பார்ப்புடன் உள்ளனர்.

வற்புறுத்திய காதலி! விஷ ஊசி போட்டு கொலை செய்த காதலன்!

0

நோயால் பாதிக்கப்பட்டிருந்த காதலி திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியதால் காதலன் விஷ ஊசி போட்டு அந்த காதலியை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மும்பையில் பன்வேல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதிய விமான நிலையம் அமையவிருக்கும் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணின் சடலம் மே 29-ஆம் தேதி கண்டறியப்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் அந்த சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அந்தப் பெண்ணை பரிசோதித்த பொழுது உடலில் எந்தவிதமான காயங்களும் இல்லை. அதுபோல அந்த பெண்ணின் அருகில் எந்த ஒரு சான்றும் கிடைக்கவில்லை. எதுவும் கிடைக்காததால் இறந்தவர்கள் யார் என அடையாளம் தெரியாமல் இருந்து வந்தது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அன்று ஆட்டோ டிரைவர் ஒருவர் தன் கண்டெடுத்த ஒரு பொருளை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

அந்த பையில் பர்ஸ் மற்றும் சில துணிகள் ஆதார் கார்டு போன்றவை இருந்துள்ளன. பின் ரமேஷ் தோம்ப்ரே என்ற ஒரு இளைஞர் காவல் நிலையத்திற்கு வந்து அந்த உடல் தனது சகோதரி என்றும், அந்த பை தன்னுடைய சகோதரிக்கு சொந்தமானது என்றும் கூறி, மருத்துவமனைக்கு சென்று சடலத்தை பார்த்து தன்னுடைய சகோதரி தான் என்பதையும் உறுதி செய்துள்ளார்.

அதன்பின் ரமேஷ் விசாரித்த காவல்துறை யினர், அதில் ரமேஷ் பன்வேலில் உள்ள ஒரு மருத்துவமனையில் சந்திரகாந்த் என்ற ஒரு நபருடன் சகோதரிக்கும் அவருக்கும் இடையே காதல் இருந்ததாக கூறினார். மேலும் அவர்களுக்குள் சண்டை நிகழ்ந்ததாக தனக்கு தெரியும் என்பதையும் பற்றி கூறினார்.

அதன்பின் சந்திரகாந்த் காவல்துறையினர் விசாரித்தபோது தான் அந்த பெண்ணை சந்திரகாந்த் கொலை செய்தது தெரியவந்தது.

அந்த மருத்துவமனையில் வார்டு பாயாக பணிபுரிந்து வரும் சந்திரகாந்த் மற்றும் கொலை செய்த பெண் இருவரும் 6 மாதமாக காதலித்து வந்ததாகவும், அதன் பின்னர் அந்தப் பெண்ணுக்கு பெரிய நோய் இருப்பது பரிசோதனையில் தெரிய வந்ததாகவும், தனக்கு கொடிய நோய் இருப்பதால் தன்னை சீக்கிரம் திருமணம் செய்து கொள்ளுமாறு அந்தப் பெண் மிரட்டியதாகவும், வேறு வழியில்லாமல் கொலை செய்ததாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்தப் பெண்ணிற்கு சிகிச்சை அளிப்பதாக கூறி நான்கு 4 விஷ ஊசிகளை அவருக்கு செலுத்தினேன். அதனால் அவருக்கு உயிர் பிரிந்தது. மேலும் அவருடைய பையை தூக்கி எறிந்து விட்டேன் என்று விசாரணையில் சந்திரகாந்த் கூறினார்.

சந்திரகாந்த் மீது கொலை உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

பள்ளிகள் திறப்பு! தொடக்கக்கல்வி இயக்குனர் வெளியிட்ட முக்கிய தகவல்!

0

தமிழ்நாட்டில் நோய் தொற்று பரவ காரணமாக, சென்ற வருடம் மார்ச் மாதத்திலிருந்து பள்ளிகள் அனைத்தும் முழுமையாக மூடப்பட்டு இருக்கிறது. அதோடு மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையதளம் மூலமாக வகுப்புகள் நடந்து வருகிறது.

தமிழ்நாட்டில் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டு நோய்த்தொற்று பரப்பு அதிகரித்து வருவதால் இந்த தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.

அந்தவகையில், 2021 2022 ஆம் ஆண்டுக்கான கல்வி ஆண்டு இன்று முதல் ஆரம்பம் ஆவதால் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகி இருக்கிறது. பள்ளிகள் திறப்பது தொடர்பாக தொடக்கக்கல்வி இயக்குனர் தெரிவித்திருப்பதாவது, முழு ஊரடங்கு முடிவடைந்த பின்னர் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு அறிவிக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.

பள்ளிகள் திறந்தவுடன் இலவச பாடப்புத்தகங்கள் மற்றும் மற்ற நலத்திட்ட உதவிகள் வழங்குவது தொடர்பாக அறிவிக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார். அதோடு இது தொடர்பாக தொடக்கக்கல்வி இயக்குனர் மாவட்ட அளவிலான கல்வி இயக்குனருக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

முதலமைச்சரின் அறிவிப்பிற்கு பாராட்டு தெரிவித்த கவிஞர் வைரமுத்து!

0

நோய் தொற்று பரவ காரணமாக பெற்றோரை பிரிந்து வாடும் குழந்தைகளுக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அளிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார். வங்கி வைப்பு நிதியாக இந்த தொகை வழங்கப்படும் என்று மோடி உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

வைப்புத் தொகையாக அளிக்கப்படும் நிதி 18 வயது முதிர்வு தொகையாக அவர்களுக்கு வழங்கப்படும் என்று அறிவித்தார். கேந்திர வித்யாலயா பள்ளிகளில் இலவச கல்வி வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. தனியார் பள்ளிகளின் கல்வி பயின்றான் பி எம் கேர் நிதியிலிருந்து அவர்களுக்கு நிதி வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி உத்தரவு பிறப்பித்திருக்கிறார். புத்தகங்கள் பள்ளி உடைகள் போன்ற செலவுகளையும் மத்திய அரசு ஏற்றுக் கொள்ளும் எனவும், அவர் உத்தரவிட்டிருக்கிறார்.

அதே போன்று தமிழ்நாட்டில் நோய் தொற்று பரவ காரணமாக, பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகளின் பெயரில் தலா ஐந்து லட்சம் ரூபாய் வைப்பு நிதியாக செலுத்தப்படும் என்ற புலவர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அரசின் இல்லங்களில் அதோடு முடிவுகளிலும் விடுதிகளிலும் முன்னுரிமை அடிப்படையில் இடம் வழங்கப்படும். குழந்தைகளின் பெயரில் செலுத்தப்படும் ஐந்து லட்சம் ரூபாய் வைப்பு நிதியில் அவர்கள் 18 வயது நிறைவடைந்த உடன் எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவித்திருக்கிறார்.


இந்த சூழ்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் இந்த அறிவிப்பிற்கு கவிஞர் வைரமுத்து பாராட்டு தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் தன்னுடைய வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு இருக்கின்ற பதிவில் கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு 5 லட்சம் ரூபாய் முதலீடு செய்து தாயுமானவர் ஆகி இருக்கின்றார் முதலமைச்சர் ஸ்டாலின் என்று தெரிவித்திருக்கிறார்.

அத்தோடு ஒரு தலைமுறையின் தலைவன் தான் என்று இரைந்து வினை பெற்று உயர்ந்து நிற்கின்றார். குழந்தைகளின் கண்ணீர் துளிகளை முத்தாக்கும் வித்தை தெரிந்த முத்துவேலர் பேரனை வாழ்த்துகிறேன் என்று தெரிவித்திருக்கிறார் கவிஞர் வைரமுத்து.

1 முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி!! அதிரடி அறிவிப்பு

0

ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் 2020 21 ஆம் கல்வியாண்டு அனைத்துவகை பள்ளிகளிலும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு அமலில் இருப்பதால் ஊரடங்கு முடிந்த பின்னர் பள்ளிகள் திறப்பது குறித்து பேசப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா பாடப் புத்தகங்களும் மற்றும் இதர நலத் திட்டங்கள் பற்றியும் , ஊரடங்கும் முடிந்தபின்னர் பள்ளிகள் திறந்த உடன் வழங்குவது குறித்தும் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் எந்த ஒரு மாணவர்களையும் தேக்க நிலையில் வைக்கக்கூடாது என்றும், பள்ளியை விட்டு வெளியேற்றக் கூடாது என்றும், தலைமை ஆசிரியர்கள் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை பதிவேட்டில் பதிவிட வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்ன செய்ய முடியும் மோடி சார்! பிரதமர் மோடியை உருக வைத்த காணொளிப் பதிவு!

0

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த ஆறு வயது சிறுமி தனக்கு வெகு நேரமாக இணையதள வகுப்புகள் எடுக்கப்படுவதாக பிரதமர் மோடியிடம் புகாரளிக்கும் காணொளி ஒன்று தற்சமயம் வைரலாகி வருகிறது.

நோய்த்தொற்று பரவல் காரணமாக, உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்க கூடிய சூழ்நிலை உருவாகியிருக்கிறது. இது எல்லோருடைய தினசரி வாழ்க்கையிலும் மாற்றங்களை உண்டாக்கி இருக்கிறது. நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் இணையதளத்தில் படிக்கும்போது ஜம்மு காஷ்மீரில் 6 வயது சிறுமி நீண்ட நேரம் எடுக்கப்படும் இணையதள வகுப்புகள் காரணமாக, சோர்ந்து போயிருக்கிறார். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியிடம் புகார் அளிக்க முடிவு செய்து வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டிருக்கிறார்.

அந்த சிறுமி வெளிப்படுகின்ற காணொளியில் தன்னுடைய இணையதள வகுப்பு அவனது காலை 10 மணிக்கு ஆரம்பித்து மதியம் 2 மணி வரை நடைபெறுகிறது. கணிதம், ஆங்கிலம் உருது டிவிஎஸ் மற்றும் கணினி போன்ற வகுப்புகள் இணையதளத்தில் நடத்தப்படுகிறது. குழந்தைகளுக்கும் நிறைய வேலை இருக்கிறது என்று கைகளைப் பயன்படுத்தி ஒவ்வொரு நாளும் சிறுமிகள் எதிர்கொள்ளும் மன அழுத்தத்தை சுட்டிக்காட்டுகிறார் அந்த சிறுமி.

அத்தோடு சிறிய குழந்தைகள் ஏன் இவ்வளவு வேலைகளையும் சமாளிக்க வேண்டும் என்று அவருடைய மழலை மொழியில் கேள்வி கேட்டு என்ன செய்ய வேண்டும் மோடி சார் தெரிவித்துவிட்டு பை சொல்லிவிட்டு முடிவடைகிறது அந்த காணொலி.

தற்போது இந்த காணொளி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த காணொளியை 57 ஆயிரம் பேர் பார்த்திருக்கிறார்கள் 5000 பேர் விருப்பம் தெரிவித்து இருக்கிறார்கள். 1200 பேர் ரீட்டிவிட் செய்து இருப்பது மட்டுமல்லாமல் சிறுமியின் புகாருக்கு பதிலும் தெரிவித்து இருக்கிறார்கள்.

அந்த சிறுமி பரதம் அவருக்காக வெளியிட்ட இந்த வீடியோவிற்கு பிரதமர் நரேந்திரமோடி இதுவரையில் எந்த ஒரு பதிலும் தெரிவிக்கவில்லை ஆனாலும் காஷ்மீரில் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்கா தன்னுடைய அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் இந்த வீடியோவை பகிர்ந்திருக்கிறார்.

அதோடு அவர் தெரிவித்திருப்பதாவது மிகவும் ஏற்றுக்கொள்ளக்கூடிய புகார் பள்ளி குழந்தைகள் மீதான வீட்டுப் பாடங்களின் சுமையைக் குறைப்பதற்கு 48 மணி நேரத்திற்குள் முடிவு எடுக்குமாறு பள்ளிக்கல்வித்துறைக்கு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. குழந்தைப்பருவம் கடவுளின் பரிசு மற்றும் அவர்களுடைய நாட்கள் கலகலப்பாகவும், மகிழ்ச்சியாகவும், ஆனந்தமும், நிறைந்ததாக இருக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.

மத்திய அரசு சதி செய்கிறதா?? தமிழகத்தில் நீடிக்கும் தடுப்பூசி தட்டுப்பாடு!!

0

மத்திய அரசு சதி செய்கிறதா?? தமிழகத்தில் நீடிக்கும் தடுப்பூசி தட்டுப்பாடு!!

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் மேற்கொண்டு வருகிறது.  தற்போது 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளதால் தற்போது தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளப் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில வாரங்கலாகவே தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருகிறது. நேற்று தமிழக அரசு கையிருப்பில் சுமார் 5 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் மட்டுமே இருந்தன. மேலும் இந்த கையிருப்புத் தடுப்பூசிகளை அடுத்து வரும்  2 நாட்களுக்கு மட்டுமே செலுத்த முடியும் என சுகாதாரத் துறை தெரிவித்திருந்தது.

மேலும் இந்த நிலையில் மத்திய அரசு தரப்பிலிருந்து தமிழகத்திற்கு இன்று வரவிருந்த  1.70 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வந்து சேரவில்லை  என  தமிழக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. தற்போது நோய் தொற்று அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக சில நாட்களில் தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தப்படும் சூழல் கூட ஏற்பட வாய்ப்பு உள்ளது. ம்மேலும் பல இடங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக தடுப்பூசிப் போடும் பனி நிறுத்தப்படும் உள்ளது என  நேற்று சுகாதாரத்துறை தெரிவித்தது.

மேலும் மத்திய சுகாதாரத்துறை இன்று அனுப்ப வேண்டிய  1.70 லட்சம் தடுப்பூசிகளை கருத்தில் கொண்டு  தமிழகத்தில் பல இடங்களில்  தடுப்பூசி போடும் முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் மத்திய அரசு இன்று தடுப்பூசி அனுப்பாத காரணத்தால் இனி வரும் நாட்களில் தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.

ரூ. 2000 நிவாரணம் இன்னும் வாங்கலையா? இந்த மாதம் வாங்கிக்கலாம்!

0

முதல்வர் ஸ்டாலின் கொடுத்த கொரோனா நிவாரண உதவி தொகை 2000 ரூபாயை கடந்த மாதத்தில் வாங்காதவர்கள் இந்த மாதம் வாங்கிக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.

இதன் தொடர்பாக அரசு வெளியிட்ட செய்தியில், தமிழகத்தில் மொத்தம் 2.09 கோடி அரிசி ரேஷன் கார்டுளுக்கு மே 15 முதல் நிவாரண தொகை முதல் தவணையாக 2000 ரூபாய் வழங்கப்பட்டது.

நேற்றுவரை 98.4 சதவீதம் குடும்பத்தினர் உதவி தொகை பெற்று உள்ளனர். மீதம் இருக்கின்ற குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு, தனிமை படுத்தப்பட்டு, அல்லது முழு ஊரடங்கு, சொந்த ஊருக்கு சென்ற அவர்கள், முகவரி மாற்றம் உடையவர்கள், போக்குவரத்து வசதி இல்லாததால் ரேஷன் கடைக்கு செல்ல முடியாத நிலையில் இருப்பவர்கள், இதுபோல் உள்ளவர்கள் மட்டுமே நிவாரண உதவித்தொகை பெறவில்லை எனத் தெரிவித்துள்ளது.

இது அரசின் கவனத்திற்கு சென்றுள்ளதால் நிவாரண தொகையை போன மாதம் வாங்காதவர்கள், இந்த மாதம் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளில் வாங்கி கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. அதேபோல் கடந்த மாதம் வாங்க முடியாமல் போன ரேஷன் பொருட்களையும் இந்த மாதம் சேர்த்து வாங்கிக்கொள்ள அரசு உதவ வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.