Sunday, July 20, 2025
Home Blog Page 4575

தமிழகத்தில் மூன்று நாட்கள் இந்த பணிகள் நிறுத்தம்! அரசு நடவடிக்கை!

0

தமிழகத்தில் மூன்று நாட்கள் இந்த பணிகள் நிறுத்தம்! அரசு நடவடிக்கை!

கொரோனா இரண்டாம் அலையின் தீவிரம் தமிழகத்தில் அதிகரித்து வருவதை தொடர்ந்து மாநில, மத்திய அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு கட்டமாக முழு ஊரடங்கும், ஒருபுறம் தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரமாக நடைபெறுகிறது.

கொரோனாவின் தடுப்பு பணிகள் தமிழகத்தில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில் சென்னை தேனாம்பேட்டையில், கொரோனா தடுப்பூசி சேமிப்பு கிடங்கில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

அதன் பின் நிருபர்களை சந்தித்த அவர், இவ்வாறு கூறினார்:

தமிழகத்தில் தற்போதைய கையிருப்பாக 4.93 லட்சம் தடுப்பூசிகள் உள்ளன. அதில் சுமார் 2.69 லட்சம் தடுப்பூசிகள் 18 வயது முதல் 45 வயதுக்குட்பட்டோருக்கும், 2.24 லட்சம் தடுப்பூசிகள் 45 வயதுக்கு மேற்பட்டோருக்குமான ஒதுக்கீடு ஆகும். நாளொன்றுக்கு 2.5 லட்சம் முதல் 3 லட்சம் வரை தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் தற்போது, சென்னை மற்றும் இதர மாவட்டங்களில் தேவையான தடுப்பூசிகள் நாளையுடன் (இன்று) முடிந்துவிடும். மாவட்ட ஒதுக்கீடு என்ற அளவிலும் தடுப்பூசிகள் முடிந்துள்ளன. எனவே நமக்கு கிடைத்த தடுப்பூசிகள் முழுமையாக பயன்படுத்தி முடிப்பதற்கான உரிய அறிவுரைகள் மாவட்ட கலெக்டர்களுக்கும் வழங்கப்பட்டு இருக்கின்றன.

மேலும் இந்த மாதம் (மே) நமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தடுப்பூசிகள் எண்ணிக்கை 20.43 லட்சம். இதுவரை நமக்கு வந்தது 18.68 லட்சம். இன்றைய நிலவரப்படி, நமக்கு 1.74 லட்சம் தடுப்பூசிகள் கொடுக்கவேண்டியது உள்ளது. அவை எப்போது வரும்? என்பதை இன்னும் நமக்கு சொல்லவில்லை.

மத்திய சுகாதாரத்துறை செயலாளருடனான காணொலிக்காட்சி கூட்டத்தில், ஜூன் மாதத்தில் 42.58 லட்சம் தடுப்பூசிகள் நமக்கு ஒதுக்கீடு செய்யப்படும் என மத்திய அரசு தகவல் சொல்லியிருக்கிறது என்றும், ஆனால் முதல் சப்ளை ஜூன் 6-ந்தேதிக்கு பிறகும், இன்னொரு சப்ளை ஜூன் 9-ந்தேதியும் வரும் என்று சொல்லியிருக்கிறார்கள்.

இந்தியா முழுவதும் எல்லா மாநிலங்களுக்கும் தடுப்பூசி வழங்கும் பணி என்பதால், தமிழகத்துக்கு படிப்படியாக தடுப்பூசி வழங்கப்படும் என்றும், கடந்த மாதத்தை விட 2 மடங்கு கூடுதலாக ஒதுக்கீடு அளிக்கிறோம் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த ஒதுக்கீடு ஜூன் 2-வது வார தொடக்கத்திலேயோ, அல்லது இம்மாதத்தில் 15 நாட்களுக்கு பிறகோ கிடைக்கப்பெறும் என்று சொல்லியிருக்கிறார்கள். அந்தவகையில் முதற்கட்டமாக 3 லட்சம் தடுப்பூசிகள் நமக்கு வர இருக்கிறது.

ஏற்கனவே கூடுதல் தடுப்பூசி கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார்.ஆரம்பத்தில்  சுணக்கம் காட்டியிருந்தாலும், தற்போது தமிழக மக்கள் மிக ஆர்வமாக தடுப்பூசி போட்டுக் கொண்டு வருகிறார்கள்.

எனவே இந்த நேரத்தில் இது நமக்கு சவாலாக இருக்கப்போகிறது. எனவே இருக்கும் தடுப்பூசிகளை பிரச்சினையின்றி முழுமையாக பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. அடுத்தக்கட்ட தடுப்பூசிகள் வந்தவுடன் அந்தந்த மாவட்டங்களுக்கு பிரித்து கொடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

அதை தொடர்ந்து நிருபர்களுடன் சிறிது நேரம் கலந்துரையாடினார்.

முனுசாமியின் மூலம் பிரதிபலித்த ஈபிஎஸ் மன எண்ணம்!

0

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் துணை ஒருங்கிணைப்பாளர் என்று பல தலைமை இருந்து வருகிறது. இவற்றையெல்லாம் தவிர்த்துவிட்டு ஒற்றை தலைமையின் கீழ் கொண்டுவர வேண்டும் அதாவது பொதுச் செயலாளர் என்ற பதவியை மறுபடியும் உருவாக்க வேண்டும் என்று நினைத்து வருகிறார்கள் பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமியும், ஆனால் பொதுச்செயலாளர் யார் என்ற கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் இரண்டு திசையில் பயணித்துக் கொண்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த இருவருக்கும் இருக்கும் பனிப்போரை பயன்படுத்திதான் ஒருசிலர் சசிகலாவை வைத்து அரசியல் லாபம் பார்க்க நினைக்கிறார்கள். அவர் அதற்கு இரையாகி விடக் கூடாது என்று சொல்கிறார் அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி.

பன்னீர்செல்வம் மற்றும் பழனிச்சாமி ஆகியோர் இடையே இருக்கும் பனிப்போர் தொடர்பான செய்திகள் தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில்தான் கஷ்டப்பட்டு வளர்த்தெடுத்த கட்சியின் வீண் ஆவதைப் பார்த்துக் கொண்டிருக்க இயலாது. நோய் தொற்று பரவல் முடிவுக்கு வரட்டும் நான் நிச்சயம் வருகிறேன் என்று சசிகலா பேசியிருப்பது அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆனால் அதில் ஒலித்தது சசிகலாவின் குரல் தான் இருந்தாலும் சசிகலா பேசியது அதிமுகவினர் இடம் கிடையாது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருப்பவரிடம் தான் என்று தெரிவிக்கிறார் கேபி முனுசாமி. அதன் பிறகு அவரே அவர் தனக்கு சாதகமாக உள்ள சிலரை வைத்துக்கொண்டு அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கிறார் அவருடைய எண்ணம் எப்போதும் ஈடேராது என்று தெரிவித்திருக்கிறார்

சசிகலா உடைய இந்த ஆடியோ விவரம் குறித்து அதிமுகவினர் இடையே மிகப் பெரிய சலசலப்பு உண்டாகி வருகிறது. இந்த நிலையில் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி இடம் இது தொடர்பாக ஆலோசனை செய்து விட்டு அந்த ஆலோசனையில் எடுக்கப்பட்ட முடிவின் காரணமாக தான் கேபி முனுசாமி அப்படி உரையாற்றியதாக தகவல் கிடைத்திருக்கிறது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்கு முன்பு இருந்தே அதிமுகவில் சசிகலாவின் தொடர்பை எதிர்த்து வருகின்றார். அதன் காரணமாகத்தான் சசிகலாவை எதிர்த்து பன்னீர்செல்வம் தர்மயுத்தம் ஆரம்பித்தபோது அவர் பின்னால் நின்றார் கேபி முனுசாமி. பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமி அணிகளின் இந்த பின்னரும்கூட சசிகலா எதிர்ப்பில் உறுதியாக இருந்தார்.

ஆனாலும் அன்று சசிகலாவை எதிர்த்த பன்னீர்செல்வம் இன்று அவரை சந்திக்கவும், அவரை கட்சிக்குள் கொண்டு வருவதற்கு முயற்சி செய்வதாக தகவல் கிடைக்கின்றன. அதனால்தானோ என்னவோ தெரியவில்லை சசிகலாவின் ஆடியோ விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிப்பதற்கு அவர் பன்னீர்செல்வத்தின் ஆலோசனையை கேட்கவில்லை என்று தெரிவிக்கிறார்கள்.

இதற்கு முன்னர் சசிகலாவின் ஆதரவு நிலையில் இருந்தாலும்கூட தற்சமயம் தீவிர சசிகலாவின் எதிர்ப்பில் இருப்பதால்தான் எடப்பாடி பக்கம் முனுசாமி சாய்ந்து இருப்பதாக சொல்கிறார்கள். அதன் காரணமாக தான் அவரிடம் மட்டும் ஆலோசனை செய்து விட்டு கேபி முனுசாமி பேட்டி கொடுத்திருக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது.

எந்த ஒரு சூழ்நிலையிலும் சசிகலா அதிமுகவிற்க்குள் நுழைந்துவிட இயலாது.ஜெயலலிதா ஆன்மா சாந்தியடைய வேண்டுமானால் சசிகலாவின் குடும்பம் அதிமுகவை விட்டு தள்ளியே இருக்க வேண்டும் என்பது முனுசாமியின் முடிவா? அதிமுகவின் முடிவா என்று தொண்டர்கள் குழப்பத்தில் இருந்து வருவதாக சொல்லப்படுகிறது

ஆக்சிஜன் அளவு 90% மற்றும்  94% உள்ளவர்களை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கத் தடை!!

0

ஆக்சிஜன் அளவு 90% மற்றும்  94% உள்ளவர்களை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கத் தடை!!

கொரோனா வைரஸ் 2 ஆம் அலை தமிழகத்தில் மிக வேகமாக பரவி வருகிறது. இதற்காகத் தமிழக அரசு பல கட்டுபாடுகளை மேற்க் கொண்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்ததைத் தொடந்த்து தமிழகத்தில் முழு ஊரடங்கு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து ஆக்சிஜன் தட்டுப்பாடு மேலும் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் ஆக்சிஜன் அளவு 90% அல்லது அதற்க்கு மேல் 94% ஆக இருபவர்களை அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் சேர்க்க அனுமதி கிடையாது என அரசு கூறியுள்ளது.

மேலும் இது குறித்து தமிழக அரசின் மாநில மக்கள் நலவாழ்வுத் துறை தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சை முறைகள் தொடர்பாக பல புதிய நெறி முறைகளை அறிவித்துள்ளது. அந்த புதிய வழிகாட்டு நெறிமுறைகளில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் முதலில் அருகில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அருகில் இருக்கும்  கொரோனா சிகிச்சை மையத்தை அணுகவேண்டும். மேலும் அங்கு அவர்களின் உடல் நிலையைக் குறித்த முதற்கட்டப் பரிசோதனை வழங்கப்படும். அந்தப் பரிசோதனையில்  கொரோனா வைரஸ்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின்  உடலில் ஆக்சிஜன் அளவு 90% அல்லது அதற்க்கு மேலாக 94 % ஆக இருக்கும் பட்ச்சத்தில்  அவர்கள் மருத்துவரின் அறிவுரைப் படி மாத்திரைகளை மேற்க்கொண்டு தங்களது வீட்டிலேயே தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும். வீட்டுத் தனிமையில் இருக்கும் நேரத்தில் அவர்களின் ஆக்சிஜன் அளவு மாறும் பட்ச்சத்தில் உடனடியாக கொரோனா சிகிச்சை மையத்தை அணுகவேண்டும். பிறகு  அங்குள்ள மருத்துவரின் ஆலோசனையின் படி அங்கு உள்ள மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும் .

மேலும் கொரோனா வைரஸ்த் தொற்று தீவிரமாகப் பாதிக்கப்படுபவர்களின்  ஆக்சிஜன் அளவு 90 % கீழ் செல்லும் பட்ச்சத்தில் மட்டுமே அந்த நோயாளிகளை மருத்துவமனையில் அனுமதிக்கவேண்டும். மேலும் ஆக்சிஜன் அளவு சீராக இருக்கும் மக்கள் பலர் அச்சத்திலேயே மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகிறார்கள். இதனால் கொரோனாத் தொற்றால் தீவிரமாகப் பாதிக்கப்படும் சிலருக்கு அவசர தேவைகளுக்குக் கூட மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதி கிடைப்பதில்லை. எனவே தமிழக அரசு இந்த புதிய நெறிமுறைகளை அமல்ப்படுத்தி உள்ளது.

விரைவில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்! முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட புதிய காணொளி!

0

தற்போது போடப்பட்டிருக்கும் ஊரடங்கை நீட்டித்துக்கொண்டே போக முடியாது விரைவில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என தெரிவித்திருக்கிறார் ஸ்டாலின் .

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் காணொளி ஒன்றில் நோய் பெற்று ஒருவரிடமிருந்து மற்றவர் இடம் பரப்பும் அதன் காரணமாக நீங்கள் எல்லோரும் கவனமாக இருங்கள். அதே போல மற்றவருக்கு பரவாமல் இருக்க நீங்கள் கவனமாக இருக்கவேண்டும் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவக்கூடிய சங்கிலியை உடைத்தால் நோய் தொற்று தானாக குறைந்துவிடும்.

நோய் தொற்று பரவல் காரணமாக, கடந்த மே மாதம் 24ஆம் தேதி முதல் மொழி ஊரடங்கு தளர்வு எதுவும் இல்லாமல் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அந்த ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு ஜூன் மாதம் அதுமட்டுமில்ல ஏழாம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. கடந்த மே மாதம் 24 ஆம் தேதி முதல் இந்த ஊரடங்கு காரணமாக, தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் நோய்த் தொற்று பரவும் குறைந்து வருகிறது என்று தெரிவித்திருக்கிறார்.


முழு ஊரடங்கு காரணமாக, ஒரு சிலர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதை எந்த விதத்திலும் மறுப்பதற்கான காரணம் இல்லை அதன் காரணமாக, அரசு சார்பாக முதல் கட்டமாக 2000 ரூபாய் நோய்த்தொற்று நிவாரணத் தொகை வழங்கப்பட்டு இருக்கிறது. அதற்காக அங்கு ஊரடங்கை நீட்டித்துக் கொண்டே செல்ல இயலாது. முழு ஊரடங்கிற்கு விரைவாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதோடு அதற்கு அரசு விதித்திருக்கும் கட்டுப்பாடுகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். ஒரு சிலர் இதனை மீறினால் கூட ஊரடங்கின் முழுமையான பலனை நாம் பெற இயலாது என்று தெரிவித்து இருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

லேகியதுக்கு அரசு அனுமதி! கொரோனா குணமாகும் என அறிவிப்பு!

0

லேகியதுக்கு அரசு அனுமதி! கொரோனா குணமாகும் என அறிவிப்பு!

கொரோனாவின் இரண்டாம் அலையின் தாக்கம் இந்தியாவில் அதிக அளவு பாதிப்புகளையும், உயிரிழப்பையும் ஏற்படுத்தி வருகிறது.இதற்கு மத்திய மாநில அரசுகள் பல திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில், தற்போது தடுப்பூசிக்கு அனுமதியும், முழு ஊரடங்கும் அமல் படுத்தி உள்ளது.

இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில், நெல்லூர் மாவட்டத்தில், கிருஷ்ணபட்டினம் முத்துகூறு கிராமத்தை சேர்ந்தவர், போகினி ஆனந்தையா என்பவர், பல ஆண்டுகளாக மக்களுக்கு ஆயுர்வேத மருந்துகளை தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடப்பட்டது.

தற்போது இவர் கொரோனா நோயாளிகளுக்கு ஆயுர்வேத முறையில் மருந்து ஒன்றை தயாரித்தார்.அது கோரோனாவிற்க்கு நல்ல தீர்வாக இருந்ததால் மக்கள் இவரை தேடி படையெடுத்து வந்தனர்.

இதனை அறிந்த ஆந்திர முதல்வர், ஜெகன்மோகன் மருந்தை ஆராய்ச்சி செய்யவும், மக்களுக்கு தர கூடாது எனவும் ஆணை பிறப்பித்தார்.அதன்படி திருமலா திருப்பதி தேவஸ்தானத்தின் மூலம் அங்குள்ள ஆயூர்வேத மருத்துவர்கள் சோதனை செய்து பார்த்து, தற்போது லேகியதிற்கு மட்டும் அனுமதி அளித்துள்ளது.

அதன் காரணமாக ஆந்திர அரசும் அதை அனுமதி அளித்துவிட்டது.ஆனால் சொட்டு மருந்துக்கு தடை விதித்து உள்ளது.மேலும் இந்த மருந்தில் தேன், வால் மிளகு, மற்றும் ஒரு வகையான கத்தரிக்காயின் கூழ் போன்றவை சேர்ந்து முழுக்க ஆயிர்வேத முறையில் தயாரிக்கப்பட்டது என அதிகாரபூர்வ அறிவிப்பு தந்துள்ளது.

இந்த மருந்து கள்ள சந்தையில்,ஒரு பாக்கெட்டின் விலை, ரூ.1500 முதல் ரூ.2000 வரை விற்கப்படுகிறது எனவும் தெரிகிறது.இந்த மருந்துக்கு எதுவும் பக்கவிளைவுகள் இல்லை என்றும், ஆயுஷ் அமைச்சகம், ஐசிஎம்ஆர் மற்றும் திருப்பதி தேவஸ்தான ஆயுர்வேத நிபுணர்கள் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது என்ன அவர் தொகுதியா கேள்வி கேட்ட பிரபலம்! கொந்தளித்த திமுகவினர்!

0

ஒரு சட்டசபை உறுப்பினர் தமிழகம் முழுவதும் சென்று மருத்துவமனைகளில் ஆய்வு செய்வதும் திட்டப்பணிகளை ஆரம்பித்து வைப்பதும் அமைச்சர்கள் அவரை அடிபணிந்து அழைத்து செல்வதையும் பார்த்தோமானால் தமிழ்நாட்டின் முதலமைச்சர் யார் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது என்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகர் காயத்ரி ரகுராம் தெரிவித்திருக்கிறார். அதோடு அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, உதயநிதி என்ன சூப்பர் பவர் முதலமைச்சரால் அமைச்சர்களை அருகில் வைத்துக்கொண்டு சட்டசபை உறுப்பினராக இருப்பவர் திட்டப் பணிகளை ஆரம்பித்து வைப்பதும், ஆய்வு செய்வதும், அதிகார துஷ்பிரயோகம் கிடையாதா அமைச்சரவைக்கு அவமதிப்பு கிடையாதா இதுதான் சூப்பர் முதலமைச்சரின் பவரா எனவும், கேள்விகளை அடுக்கடுக்காக எழுப்பியிருக்கிறார்.

அவருடைய இந்தக் கேள்விகளுக்கு திராவிட முன்னேற்ற கழகத்தினர் ஒருசிலர் அவருடைய தொகுதிக்குள் சென்று ஆய்வு செய்கிறார். அந்த துறை அமைச்சர் இருக்கிறார் எனவும், அவர் தேர்தலில் நின்று தமிழகம் முழுவதும் பொது மக்களை சந்தித்து ஓட்டு வாங்கி வெற்றி பெற்ற மக்கள் பிரதிநிதி. இதனை எல்லாம் கேள்வி கேட்க நீங்கள் யார் என்று ஆவேசமாகி இருக்கிறார்கள்.

அதே சமயத்தில் அண்ணாநகர் சட்டசபை தொகுதியில் உதயநிதியின் செயல்பாட்டையும், அது தொடர்பான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு உதயநிதி அண்ணாநகர் சட்டசபை உறுப்பினர் அண்ணன் எம் கே மோகன் அவர்களின் ஏற்பாட்டில் அண்ணாநகர் பெருவிரல் மருத்துவமனை வளாகத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 100 படுக்கைகள் கொண்ட நோய்த்தொற்று சிகிச்சை மையத்தை திறந்து வைத்து அங்கே இருக்கின்ற சுகாதார பணியாளர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினோம் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

 

https://twitter.com/BJP_Gayathri_R/status/1399330577543618560?s=20

அத்துடன் ஆக்ஸிஜன் வசதிகளைக் கொண்ட பேருந்து சிகிச்சை வசதிகளை ஆரம்பித்து வைத்திருக்கிறோம் இந்த நிகழ்வில் அண்ணன்கள் மாண்புமிகு அமைச்சர் பிகே சேகர்பாபு,தயாநிதிமாறன் போன்றோர் பங்கேற்பார்கள் என்ற உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டு அண்ணா நகர் தொகுதி என்ன உதயநிதி தொகுதியா? என்றும்,காயத்ரி தெரிவித்தது உண்மைதானே இதற்கு ஏன் அந்த கட்சியை சார்ந்தவர்கள் ஆவேசம் உடைக்கிறார்கள் எனவும், இணையதள வாசிகள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

 

 

வீடு தேடி வரும் டோக்கன்! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

0

நியாயவிலை கடைகளில் பொதுமக்கள் ஒன்று சேர்வதை தவிர்ப்பதற்காக நிவாரணத்தொகை வழங்குவதற்கான நோக்கங்கள் வழங்கப்படுவது மாற்றப்பட்டிருக்கிறது. அதாவது நிவாரணத் தொகை வழங்குவதற்கு டோக்கன்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் தேதியில் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். அதன்படி இன்று முதல் டோக்கன் வினியோகம் ஆரம்பிக்க இருக்கிறது. அத்துடன் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கும் டோக்கன் விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நோய்த்தொற்று நிவாரண நிதியாக நான்காயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் அறிவித்தார். அதன்படி மே மாதம் அந்த நிவாரணத் தொகையை முதல் தவணையாக 2000 ரூபாய் வழங்கப்பட்டது. இந்த நிலையில், இம் மாதம் மூன்றாம் தேதி கருணாநிதியின் பிறந்த நாளன்று அந்த நிவாரணத் தொகையின் இரண்டாவது தவணை வழங்கப்படும் என்று முன்பே அறிவித்திருந்தார். நாளை மறுநாள் நிவாரண தொகை கொடுக்க இருக்கும் நிலையில், இன்று அதற்கான டோக்கன் விநியோகம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த சூழ்நிலையில், நியாய விலை கடை ஊழியர்கள் வீடுகளுக்கு சென்று டோக்கன்களை விநியோகம் செய்ய இருக்கிறார்கள். குறிப்பிட்ட சமயத்தில் குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில், வரும் 5-ஆம் தேதி முதல் ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. அதே நேரம் துவரம் பருப்பு மற்றும் ஒரு சில காரணங்களால் ஜூன் மாதம் 7ஆம் தேதியன்று நியாயவிலை கடைகளில் வினியோகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல முதல்வர் நிவாரண தொகை பெறாதவர்கள் இந்த மாதம் வாங்கிக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்து இருக்கிறது

கலெக்டர்களுக்கு 3 விஷயம் சொன்ன முதல்வர் ஸ்டாலின்!

0

கோவையில் 5 மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசித்த முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மூன்று முக்கியமான விஷயங்களை கலெக்டர்கள் செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

தமிழகத்தில் சென்னையை விட கோவை திருப்பூர் ஈரோடு சேலம் கரூர் போன்ற ஐந்து மாவட்டங்களில் கொரோணா தொற்று அதிகமாக பரவி வருகிறது. மேலும் உயிர் பலியும் இந்த ஐந்து மாவட்டங்களில் அதிகமாக உள்ளது.
அதனால் தொற்று பரவலை கட்டுபடுத்த முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஐந்து மாவட்ட ஆட்சியர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

ஐந்து மாவட்ட ஆட்சியர் களையும் கோவைக்கு அழைத்து ஆலோசித்த முதல்வர், கொரோனா பரவியிருக்கும் விகிதம், உயிர்பலி மற்றும் ஆக்சிஜன் படுக்கைகளின் விவரம், கிராமங்களில் தொற்று அதிகமாக பரவுவதற்கான காரணம் என அனைத்தையும் கேட்டறிந்த அவர், ஆக்சிஜன் படுக்கைகளை அதிகமாக்க் உத்தரவிட்டார். ஆக்சிஜன் இல்லாமல் தான் உயிர் இழந்தார்கள் என எந்த ஒரு தகவலும் வரக்கூடாது. அதனால் ஆக்சிஜன் படுக்கைகளை அதிகப்படுத்தும் பணிகளில் ஈடுபடுங்கள் என்று கூறியுள்ளார்.

இரண்டாவதாக சென்னையில் உள்ள ‘வார் ரூம் ‘ போல இங்கும் ‘வார் ரூம் ‘ உருவாக்கி அந்த எண்ணை மக்களுக்கு சேர்ப்பிக்க வேண்டும். மக்கள் தொடர்பு கொள்ளுமாறு அந்த ‘வார் ரூம்’ இருக்க வேண்டும்.

மூன்றாவதாக அனுமதிக்கப்படாத தொழிற்சாலைகள் இயங்குகிறதா என்பதை பற்றி கண்காணிக்க வேண்டும். அரசால் அனுமதிக்கப்பட்ட அத்தியாவசியமான தொழிற்சாலைகளாக இருந்தாலும் தொழிலாளர்களை கூட்டிச் செல்ல வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா என்பதையும் கவனிக்க வேண்டும்.அல்லது அந்த நிறுவனத்திலேயே தங்க வைத்துக் கொண்டு தொழிலாளர்களை வேலை செய்கிறார்களா என்பதைப் பற்றி கவனிக்க வேண்டும். அவர்களால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு விடக்கூடாது. என முதல்வர் வலியுறுத்தியுள்ளார்

 

நோய்த்தொற்று பரவல் காரணமாக சிறிது காலம் பொறுத்து தான் ஆக வேண்டும்! அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி!

0

வழக்கமாக ஜூன் மாதம் 1ஆம் தேதி ஆண்டுதோறும் கல்வி ஆண்டு ஆரம்பிக்கும் நிலையில், 2020 மற்றும் 21 ஆம் ஆண்டிற்கான கல்வி ஆண்டு, 12ஆம் வகுப்பு தேர்வு தொடர்பாக உரையாற்றிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாணவர்களின் எதிர்காலம் எந்த அளவிற்கு முக்கியமாக இருக்கிறதோ, அதே அளவிற்கு அவர்களுடைய உடல் நலனும் முக்கியம் என்று தெரிவித்திருக்கிறார்.

நோய் தொற்றின் இரண்டாவது அலையின் எதிரொலியாக தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் மாநில பாடத்திட்டம் மற்றும் சிபிஎஸ்சி மாணவர்களுக்கான பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. வழக்கமாக ஜூன் மாதம் ஒன்றாம் தேதி புதிய கல்வி வருடம் ஆரம்பமாகும். இந்த சூழ்நிலையில், புதிய கல்வியாண்டு ஆரம்பித்திருக்கின்ற நிலையில், கல்லூரி போக வேண்டிய மாணவர்களுக்கு எப்போது பொது தேர்வு நடைபெறும் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

ஆகவே இதுகுறித்து திருச்சியில் நேற்று பத்திரிகையாளர்களிடம் உரையாற்றிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நோய்த் தொற்று பரவல் காரணமாக, எல்லா துறையினருக்கும் நடைமுறைச் சிக்கல் இருந்து வருகிறது. நோய்த்தொற்று பரவல் காரணமாக, ஒரு குறிப்பிட்ட காலம் வரையில் நாம் பொறுமையாக தான் இருந்தாக வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.

நோய்த்தொற்று பரவாமல் எந்த அளவிற்கு சீக்கிரமாக குறைகிறதோ அதற்கேற்றவாறு விரைவாக பொதுத் தேர்வு நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.மாணவர்களின் எதிர்காலம் எந்த அளவிற்கு முக்கியமானதாக இருக்கிறதோ அதே அளவிற்கு அவர்களுடைய உடலும் உயிரும் முக்கியமானதுதான் என்று தெரிவித்திருக்கிறார்.

இதற்கு முன்னதாக நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வருவதால் சிபிஎஸ்சி, ஐசிஎஸ்சி பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துவது குறித்து உச்சநீதிமன்றத்தில் மாணவர்களுடைய பெற்றோர்கள் சார்பாக வழக்கு போடப்பட்டு இருக்கிறது.

இந்த வழக்கை நேற்று விசாரணை செய்த உச்சநீதிமன்றம் மாணவர்களின் நலனை கருத்தில் வைத்து இந்த விவகாரத்தில் கொள்கை ரீதியான முடிவை இரண்டு நாட்களுக்குள் அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு அறிவுறுத்தி வழக்கு விசாரணையை ஜூன் மாதம் 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்து இருக்கிறது.

தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல் டீசல் விலை!

0

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணையின் விலை நிலவரத்தை பொறுத்து நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் நிர்ணயம் செய்து வருகின்றன.

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஆக இருந்து வரும் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம், போன்ற எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயம் செய்து வருகிறார்கள். நோய்த்தொற்று காரணமாக, கடந்த மார்ச் மாதம் இறுதி முதல் மே மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படாமல் இருந்தது. இந்த நிலையில் ஜூன் மாதம் முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகிறது


சமீபத்தில் நடைபெற்ற தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் வரை உயரமாலிருந்த இந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த மே மாதம் இரண்டாம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மே மாதம் 4ஆம் தேதியில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரிக்கத் தொடங்கிவிட்டது.இந்த சூழ்நிலையில், சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து இருக்கிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 20 காசுகள் உயர்ந்து 95 ரூபாய் 99 காசுக்கும், டீசல் விலை ஒரு லிட்டருக்கு 22 காசுகள் உயர்ந்து 90 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. இந்த விலை நிலவரம் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.