Sunday, July 20, 2025
Home Blog Page 4577

ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த வரலட்சுமி சரத்குமார்!

0

தமிழ்சினிமாவில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான போடா போடி திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானவர் வரலட்சுமி. இதனையடுத்து கதாநாயகியாகவும், வில்லியாகவும், பல துணிச்சலான வேடங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடம் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்து இருக்கின்றார் நடிகை வரலட்சுமி.

அவர் தமிழில் மட்டும் அல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், போன்ற மற்ற மொழிகளிலும் நடித்து வருகின்றார். நடிகை வரலட்சுமி வசம் காட்டேரி, கலர்ஸ், யானை, பாம்பன் போன்ற திரைப்படங்கள் கைவசம் இருக்கிறது, இவ்வாறு பிசியாக இருக்கும் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் வரலட்சுமி சமூக வலைதளங்களில் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பார் என்று சொல்லப்படுகிறது.

அந்த விதத்தில் அவர் தன்னுடைய சமூக வலைதள பதிவில் அவ்வப்போது ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை தன்பக்கம் வைத்திருந்தார். இந்த நிலையில், நடிகை வரலட்சுமி தான் செல்லமாக வளர்க்கும் நாய் குட்டியை தன்னுடைய மகன் என்று தெரிவித்து அறிமுகப்படுத்தியிருக்கிறார். இந்த காணொளி காட்சி அவர் தன்னுடைய வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

தடுப்பூசிகள் போதுமான கையிருப்பு இல்லை! சுகாதார அமைச்சர் சுப்பிரமணியன் அறிவிப்பு

0

தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கம் ஓரளவு குறைந்து வரும் நிலையிலும், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சில மாவட்டங்களில் தடுப்பூசி பற்றாக்குறை இருப்பதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பு ஊசிகள் இன்னும் இரண்டு நாட்களுக்கு மட்டுமே கையிருப்பு உள்ளதாக சுகாதார அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை நந்தம்பாக்கத்தில் அமைக்கப்பட்ட கொரோனா மையத்தில் ஆய்வு செய்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், தமிழகத்தில் உள்ள மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கி அவர்களை மகிழ்ச்சி படுத்தியுள்ளார் முதல்வர் ஸ்டாலின் என கூறினார்.

மேலும் சுகாதார துறை செயலாளரும் நானும் போகின்ற இடம் எல்லாம் அனைத்து மருத்துவர்களும் செவிலியர்களும் அரசுக்கு நன்றியைத் தெரிவித்து வருகின்றனர். கொரோனா தொற்று சற்றே அதிகமாக உள்ள கோவை மாநிலத்தில் முதல்வர் கோவையில் உள்ள அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சென்று நோயாளிகளிடம் நலம் விசாரித்தார்.

தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மட்டுமே போதுமான தடுப்பூசி கையிருப்பு இருப்பதாகவும், 25 லட்சம் தடுப்பூசிகள் தர இருந்த நிலையில் 13 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே மத்திய அரசு அளித்துள்ளது என்று கூறினார்.

மனைவியை கொல்ல சதி திட்டம்! ஏழு பேர் படுகாயம்!! கணவனின் வெறிச்செயல்!

0

மனைவியை கொல்ல சதி திட்டம்! ஏழு பேர் படுகாயம்!! கணவனின் வெறிச்செயல்!

பெண்களின் மீது வஞ்சம் வைத்து பழிவாங்கும் செயல்கள் பல நடந்தேறிக் கொண்டே உள்ளது நம்மை வருத்தத்தில் ஆழ்த்துகிறது.ஏதோ ஒரு முனையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நடந்து கொண்டேதான் உள்ளது.

சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் நான்ஜிங் நகரில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் மீது திடீரென கார் ஒன்று அதிவேகமாக வந்து பலமாக மோதியது.  இதில், ஒரு பெண், அவரது தோழி மற்றும் மேலும் ஒரு நபர் பலத்த காயமடைந்துள்ளனர்.

காரில் வந்த நபர் பெண் மீது தாக்குதல் நடத்த முயன்றுள்ளார்.  அவரை தடுத்த பெண்ணின் தோழி மற்றும் அங்கிருந்தவர்களை, அந்நபர் கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியுள்ளார்.  இதில் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த தாக்குதலில் காயமடைந்த 7 பேரும் மற்றும் தாக்குதல் நடத்திய நபரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த ஒரு வாரத்திற்குள் நடந்த 2வது பழிவாங்கும் தாக்குதல் இதுவாகும்.  இதே போல், கடந்த வாரம், சீனாவின் வடகிழக்கே டாலியன் நகரில் நடந்து சென்று கொண்டிருந்த கூட்டத்தில் நபர் ஒருவர் காரை மோத செய்ததில் 5 பேர் கொல்லப்பட்டனர்.

அவரை கைது செய்து விசாரித்ததில், அவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதற்கு சமூகத்தில் உள்ளவர்களை பழிவாங்குவது என்ற முடிவுக்கு வந்துள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது.

திடீரென அதிரடி முடிவை எடுத்த முக்கிய நடிகை! இணையத்தில் வைரலாகும் பதிவு!

0

பிரபல நடிகை தன்னுடைய பெயரில் இருந்த ஜாதி அடையாளத்தை நீக்கி இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. இது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி.

தமிழ் சினிமாவில் இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளிவந்த அவன் இவன் திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானவர் ஜனனி அய்யர் இதையடுத்து அதே கண்கள், போன்ற திரைப்படங்களில் நடித்து வந்த அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று கொண்டதன் மிகவும் பிரபலமாக உருவெடுத்தார்.

இதனையடுத்து அவர் தற்சமயம் சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த சூழ்நிலையில், ஜனனி அய்யர் தன்னுடைய பெயரில் உள்ள ஜாதி அடையாளத்தை நீக்கி இருப்பதாக சொல்லப்படுகிறது.

அதன் அடிப்படையில் மாற்றம் ஒன்றே மாறாதது என்றும் ஒற்றுமையுடன் என்று குறிப்பிட்டு இருக்கின்ற ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் தன்னுடைய பெயரை ஜனனி என்று மட்டும் குறிப்பிட்டு இருக்கிறார். அவருடைய இந்த திடீர் முடிவிற்கு காரணம் என்ன என்று அவர் எந்தவிதமான பதிலும் தெரிவிக்கவில்லை. அவர் வெளியிட்டிருக்கும் இந்த பதிவை தற்சமயம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது.

படுகுஷியில் ஏ.எல். விஜய் காரணம் இதுதான்!

0

தமிழ் திரையுலகைப் பொறுத்தவரையில் இயக்குனர் விஜய் தெய்வத்திருமகள், தாண்டவம், மதராசப்பட்டினம், போன்ற திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். தற்சமயம் இவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை காட்சிப்படுத்தும் விதமாக உருவாகி இருக்கின்ற தலைவி திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இருந்த சூழலில் நோய் தொற்றுக் காரணமாக, வெளியீட்டு தேதி நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. அதோடு இயக்குனர் ஏ எல் விஜய் கடந்த 2014ஆம் ஆண்டு நடிகை அமலாபாலை காதல் செய்து திருமணம் செய்து கொண்டார். ஆனாலும் அவர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர்.

இதன் பிறகு நடந்த 2019ஆம் ஆண்டு அவருக்கு ஐஸ்வர்யா என்பவருடன் திருமணம் நடந்தது இதனைத் தொடர்ந்து இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இந்த சூழலில் நிலையில் விஜய் தன்னுடைய மகன் துருவா விஜய்யின் முதல் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி இருக்கிறார். கற்பனை பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன.

சீரியலில் குடும்ப குத்துவிளக்காக இருக்கும் ஜெனியாவா இது?

0

தற்போது விஜய் தொலைக்காட்சியை பொருத்தவரையில் பாக்கியலட்சுமி நெடுந்தொடருக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது. அதில் மோனாஹெட்ரி என்பவர் கதையின் துணை நாயகனுக்கு மாமியாராக நடித்து வருகின்றார்.

அவருடைய மகள் ஜெனனி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை திவ்யா இந்த தொடரின் மூலமாக மிகப்பெரிய வரவேற்பை பெற்று இருக்கிறார். அனேக தொடர்களில் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களை ஏற்று அவர் நடித்திருக்கிறார்.

https://www.instagram.com/p/COk2VrThKuO/?utm_source=ig_embed&ig_rid=ca1ccb30-c64f-4e22-b62e-886244b3a4c3


இருந்தாலும் அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வெளியிடும் புகைப்படங்கள் எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தும் முறையில் இருந்து வருகிறது. தற்சமயம் நடிகை திவ்யா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடல் உடையில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சென்னை அருகே பள்ளி வளாகத்தில் கொலை செய்யப்பட்ட இளைஞர்! பின்னணி என்ன?

0

சென்னை புறநகர் பகுதியாக இருக்கும் மணலி பாடசாலைப் பகுதியில் இருக்கின்ற அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று ஊரடங்கு காரணமாக, மூடப்பட்டு இருக்கிறது.மாணவர்களுக்கு இணையதளம் மூலமாக வகுப்புகள் நடந்து வருகின்றன.

பள்ளி மூடப்பட்டு இருப்பதால் சில மர்மநபர்கள் பள்ளி வளாகத்தில் சுற்றி திரிந்ததாக தெரிவிக்கிறார்கள். இந்த நிலையில், நேற்று மாலை பள்ளி வளாகத்தில் 35 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்ததாக சொல்லப்படுகிறது. அவருடைய தலை, முதுகு, போன்ற இடங்களில் பலத்த வெட்டுக் காயங்கள் இருந்ததாக தெரிந்திருக்கிறது.

இதனை தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் அடிப்படையில் அங்கே வந்த காவல்துறையினர் அந்த பிரேதத்தை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.முதல்கட்ட விசாரனையில் இறந்தது மணலி அன்பழகன் தெருவை சார்ந்த சாக்ரடீஸ் என்று தெரிய வந்திருக்கிறது.

மூடியிருந்த பள்ளியில் அந்தப்பகுதியில்.சிலர் கஞ்சா படிப்பதற்காக வருகை தந்து இருக்கலாம். அப்போது போதையில் ஏற்பட்ட தகராறில் பெயரில் இவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற விதத்தில் காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள். ஆனாலும் கவர்ச்சியாக விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று தெரிகிறது.

வித்யாஷ்ரம் பள்ளி மீது 900 முன்னாள் மாணவர்கள் பாலியல் புகார்!

0

சென்னையில் உள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி மீது 900 முன்னாள் மாணவர்கள் பாலியல் புகார் அளித்துள்ளனர்.

சென்னையில் உள்ள அண்ணாமலை புரம் பகுதியில் உள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள் என முன்னாள் மாணவர்கள் 900 மேற்பட்டோர் கையெழுத்திட்டு புகார் அளித்துள்ளனர்.

கேகே நகரில் உள்ள பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது பாலியல் புகார் கொடுத்த நிலையில் அவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதேபோல சேத்துப்பட்டு மகரிஷி வித்யா மந்திர் பள்ளியிலும், செயின்ட் ஜார்ஜ் பள்ளிகளிலும் பாலியல் புகார் எழுந்துள்ள நிலையில் அந்த பள்ளிகளுக்கு குழந்தை உரிமை மற்றும் பாதுகாப்பு ஆணையம் அந்த பள்ளிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி 900 மேற்பட்ட மாணவர்கள் கையொப்பமிட்டு புகார் அளித்துள்ளனர்.
900- க்கும் மேற்பட்ட வித்யாஷ்ரம் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் குழந்தைகள் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு ஆணையருக்கு புகார் அளித்துள்ள நிலையில் மாணவிகள் மீதான பாலியல் துன்புறுத்தல் குறித்து பல்வேறு புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த புகாரில், பாலியல் ரீதியாகவும் உடல் அமைப்பு பற்றியும் கெட்ட வார்த்தைகளால் திட்டியும் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து பல ஆண்டுகளாக புகார் அளித்த நிலையும் நிர்வாகம் எந்த ஒரு உரிய விசாரணைகள் நடத்தப்படவில்லை, என்பது கண்டனம். ஆசிரியர் மற்றும் ஆசிரியர் இல்லாத பலரின் மீது கொடுக்கப்பட்ட புகார்கள் கூட இதுவரைக்கும் எந்த ஒரு விசாரணையும் நடத்தப்படவில்லை.

இதுபோன்ற குற்றம் சுமத்தப்பட்ட ஆசிரியர்கள் மீது தாமதமில்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போல பாதிக்கப்பட்ட மாணவர்களையும் அழைத்து தேவையான ஆலோசனை வழங்க வேண்டும் என்றும், மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு பள்ளி நிர்வாகம் முழு பொறுப்பை ஏற்கவேண்டும் என்றும், பழைய புகார்கள் இருந்தாலும் அதைப் பற்றியும் முழுமையாக விசாரிக்க வேண்டும் என்றும் மாணவர்களின் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புகாரை ஏற்றுக்கொண்ட தமிழ்நாடு குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு ஆணையம், செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வரும் ஜூன் 8-ஆம் தேதி விசாரணைக்கு வரவேண்டும் என்று சம்மன் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஓ.டி.டி. ரீலிஸ்க்கு படங்கள் ரெடி! குடும்பத்தோடு பார்க்கலாம்!

ஓ.டி.டி.  ரீலிஸ்க்கு படங்கள் ரெடி! குடும்பத்தோடு பார்க்கலாம்!

கொரோனா இரண்டாம் அலை காரணமாக இந்தியாவின் பொருளாதார நிலை அதல பாதாளதிற்க்கு சென்று கொண்டு இருக்கிறது.பொது மக்களின் நிலையோ அதற்கு மேல் உள்ளது.

தற்போது முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் மக்கள் எங்கும் செல்லாமல் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.அனைத்து மால்கள், தியேட்டர்கள் என கூட்டம் சேரும் இடங்கள் அனைத்தும் அரசின் உத்தரவால் மூடப்பட்டு உள்ளது நாம் அனைவரும் அறிந்ததே.

கடந்த ஒரு வருடமாகவே இதே நிலை தொடர்ந்தாலும், வருட கடைசியில் சில தளர்வுகள் பிரப்பிக்கப்பட்டது குறிப்பிடப்பட்டது. ஆனாலும் திரைத்துறையினரும் பெருமளவில் பாதிப்புக்கு உள்ளானார்கள்.

எனவே நடிகர் சூர்யாவின் தயாரிப்பில் வந்த பொன்மகள் வந்தாள் முதல் ஓ.டி.டி. திரைப்படம் ஆகும்.இதன் மூலம் தியேட்டர் உரிமையாளர்களுடன் சில, பல கருத்து மோதல்கள் வந்தாலும் நிலைமையை அனைவரும் ஏற்று கொண்டனர்.

அதே போல்  தமிழில் சூரரை போற்று,  பூமி, மூக்குத்தி அம்மன், பொன்மகள் வந்தாள், பென்குயின், க.பெ.ரணசிங்கம், லாக்கப், டேனி, பரமபதம் விளையாட்டு உள்ளிட்ட பல படங்கள் ஓ.டி.டி. யில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது இதே போல் தனுஷ் நடிப்பில் ஜெகமே தந்திரம் படம் அடுத்த மாதம் வெளி வர உள்ள நிலையில், மேலும் மூன்று படங்கள் வெளி வர உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

அதை தொடர்ந்து நரகாசுரன், வாழ், எப்.ஐ.ஆர் ஆகிய படங்கள் வெளிவருவதாக அதிகார பூர்வ தகவல்கள் கிடைத்துள்ளன.

நரகாசுரன் படம் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்தசாமி நடிக்க தயாராகி உள்ளது. இந்த படம் பண பிரச்சினைகளால் நீண்ட காலமாக முடங்கி கிடக்கிறது. வாழ் படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். அருவி படம் மூலம் பிரபலமான அருண் புருஷோத்தமன் இயக்கி உள்ளார். எப்.ஐ.ஆர். படத்தில் விஷ்ணு விஷால், கவுதம் மேனன் இணைந்து நடித்துள்ளனர்.

இந்தியன் 2 பேச்சுவார்த்தை ! நீதிமன்றம் முடிவை எதிர்ப்பார்க்கும் படக்குழு!

0

லைகா தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் மற்றும் காஜல் அகர்வால் பலர் நடித்து வரும் படம் தான் இந்தியன் 2.
இந்த படம் தொடர்பான விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் இந்த படத்தை முடிக்காமல் இயக்குனர் ஷங்கர் வேறு எந்த படத்தையும் இயக்க செல்லக்கூடாது என்று லைகா தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

பின்னர் லைகா மற்றும் இயக்குனருடன் எவ்வளவு பேச்சுவார்த்தை நடந்த பின்னரும் பயனளிக்காமல் மீண்டும் நீதிமன்றத்தையே படக்குழுவினர் நாடி உள்ளனர்.

தேர்தல் முடிவுகள் வந்த பிறகு கமலஹாசன் இந்த விவகாரத்தில் லைகா நிறுவனத்திடமும், இயக்குநர் ஷங்கரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் என்று கூறப்படுகிறது. ஆனால் அவருடைய பேச்சு சுமூகமாக முடிய வில்லை என்று வட்டாரத்தில் பேசிக் கொள்கிறார்கள். இதனால் நீதிமன்றம் என்ன சொல்கிறதோ அதன்படி அனைவரும் நடந்து கொள்ளலாம் என முடிவெடுத்து விட்டாராம்.

நீதிமன்றம் இயக்குனர் ஷங்கரிடம் இப்படத்தை முடிக்க வேண்டும் அதன் பின்னால் வேறு படத்திற்கு செல்ல வேண்டும் என்று உத்தரவிட்டால், படத்தில் தொடர்ந்து நடிப்பாராம், அதற்கான தேதிகளையும் கமலஹாசன் அவர்கள் தருவாராம்.

இல்லையெனில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாரித்து வரும் விக்ரம் படத்தில் நடிக்க போய்விடுவார் என்று கோலிவுட் வட்டாரங்கள் பேசிக்கொள்கிறார்கள்.