Sunday, July 20, 2025
Home Blog Page 4578

தமிழக அரசு மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்த பாஜகவின் எல்.முருகன்!

0

மத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைத்து இரண்டாவது முறையாக பதவியேற்ற இரண்டு வருடங்கள் நிறைவடைந்ததை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சியினர் சேவை தினமாக கொண்டாடி வருகிறார்கள். அந்த விதத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் முருகன் சென்னை அமைந்தகரையில் நிவாரண பொருட்களை வழங்கி இருக்கிறார்.

அதன்பிறகு பத்திரிக்கையாளர்களிடம் உரையாற்றிய முருகன் சென்னையில் தற்சமயம் நோய் தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டாலும் மற்ற மாவட்டங்களில் இந்த நோய்த்தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்த திட்டத்தை தமிழக அரசு எடுத்த நடவடிக்கை தான் காரணம் கட்டுப்பாடுகள் என்ற பெயரில் ஒரே நாளில் எல்லா கடைகளும் திறந்து மாவட்டங்களுக்கு பேருந்துகளை இயக்கி சென்னையில் பரவியிருந்த நோய் தொற்று நோய் மற்ற மாவட்டங்களிலும் பரவ வழி செய்துவிட்டார்கள் என்று குற்றம்சாட்டி இருக்கிறார் முருகன்.

சுமார் நான்காயிரம் பேருந்துகளை ஒரே நாளில் இயக்கச் செய்து 6 லட்சம் பேர் வெளி ஊர்களுக்கு சென்று இருக்கிறார்கள். இதன் காரணமாக, நோய்த் தொற்று பரவல் சென்னையை அடுத்து மற்ற மாவட்டங்களிலும் பரவ திமுக காரணமாகி விட்டது என்று தெரிவித்திருக்கிறார் பாஜகவின் மாநில தலைவர் முருகன்.

மத்திய அரசு தமிழக அரசுக்குக் கொடுத்த தடுப்பூசிகளை மாநில அரசு சரிவர பயன்படுத்தவில்லை என்று தெரிவித்திருக்கிறார். இருந்தாலும் மத்திய அரசு மாநில அரசுக்கு தடுப்பு ஊசிகளை கொடுத்து தான் வருகிறது. நோய்க்கு தடுப்பூசி இந்தியாவில் கொண்டுவரப்படும் சமயத்தில் அதனை கடுமையாக விமர்சனம் செய்தவர்கள் இன்று தடுப்பூசி பற்றாக்குறை என்று விமர்சனம் செய்து வருகிறார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார் எல். முருகன்

சென்னை பிஎஸ்பிபி பண்ணி விவகாரத்தில் தவறு செய்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இருந்தாலும் பள்ளி நிர்வாகத்தை சார்ந்தவர்கள் மீது குற்றம் சுமத்துவதை ஏற்றுக்கொள்ள இயலாது. அரசுப்பள்ளிகளில் குற்றங்கள் நடைபெற்றால் அதற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பொறுப்பை ஏற்றுக் கொள்வாரா என்று முருகன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு மட்டுமே மது விற்பனை!

0

உத்திரப்பிரதேச மாநிலத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு மட்டும் மது விற்பனை செய்ய வேண்டும் என மது கடை உரிமையாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா வின் இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில், பல்வேறு மாநிலங்களில் தொற்று குறைந்த எண்ணிக்கையில் பாதிப்படைந்துள்ளது. கேரளா தமிழ்நாடு கர்நாடகா மகாராஷ்டிரா உள்ளிட்ட ஒருசில மாநிலங்களில் மட்டுமே சற்று அதிகரித்து வருகிறது. இருப்பினும் ஒரு சில தினங்களாக குறைந்து வருவதை காணலாம்.

இந்நிலையில் கொரோனா தொற்றை தடுப்பதற்கு மத்திய அரசு கோவாக்ஷின் மற்றும் கோவிசில்டு தடுப்பூசி மருந்துகளை மக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது. இருப்பினும் ஒரு விழிப்புணர்வு இல்லாமையால் மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆர்வம் காட்டாமல் இருக்கின்றனர்.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் மேலும் ஒரு படி சென்று கடந்த சில தினங்களுக்கு முன் பாரபங்கி என்ற மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்திற்கு தடுப்பூசி போட சென்றனர். அதிகாரிகளைப் பார்த்ததும் கிராம மக்கள் அருகில் உள்ள ஆற்றில் குதித்து தலைதெறிக்க ஓடி விட்டனர். இதனால் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய பின் தடுப்பூசி போடப்படும் எனக் கூறி அவர்கள் சென்றனர்.

இதனை தொடர்ந்து உத்தரப்பிரதேச மாநிலத்தில் எடவா என்ற மாவட்டத்தில் மாஜிஸ்திரேட் அதிகாரி ஹேம்சிங் என்பவர் ஆய்வு மேற்கொண்டார். மது விற்பனை செய்யும் உரிமையாளர்களிடம் 45 வயதுக்கு மேல் உள்ளவர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கும் மட்டுமே மது விற்க வேண்டும் என்றும். தடுப்பூசி போட்டுக்கொண்ட சான்றிதழ்களை காட்டினால் மதுவை விற்கலாம் என்றும் கூறினார். மது வாங்க வரிசையில் நின்றவர்களிடம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வில்லை என கூறி அவர்களை திருப்பி அனுப்பினார்.

அதேபோல் பிரோசாபாத் மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டால் மட்டுமே அவர்களுக்கு மே மாத சம்பளம் கிடைக்கும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் 45 வயது மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள தடுப்பூசி உள்ளதா என்பதை அதிகாரிகள் சோதித்து வருகின்றனர்.

ஆடியோ லீக்கான விவகாரம்! விளக்கம் அளித்த அதிமுக!

0

அதிமுகவின் ஒரே ஒரு தொண்டர் கூட சசிகலாவிடம் உரையாற்றவில்லை அதிமுகவை சார்ந்தவர்களிடம் சசிகலா தான் பேசி வருகின்றார். சசிகலாவிடம் உரையாற்றியதாக சொல்லப்படும் நபர்கள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்தவர்கள், அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு அவர்கள் முயற்சிக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார் அதிமுகவின் முனுசாமி.

சசிகலாவின் எந்த ஒரு எண்ணமும் இங்கே ஈடாகப்போவதில்லை சசிகலாவின் பேச்சுக்கு அதிமுகவைச் சேர்ந்தவர்கள் யாரும் இசை அளிக்க போவதில்லை. ஜெயலலிதாவின் ஆன்மா சாந்தி அடைய வேண்டும் என்றால் சசிகலாவின் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் அதிமுகவில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி வேப்பனஹள்ளியில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார்.

நான் மீண்டும் கட்சிக்கு வருகை தருவேன் கண்டிப்பாக கட்சியை சரிசெய்துவிடலாம் நோய்த்தொற்று முடிவடைந்ததும் நான் வந்து விடுவேன் என்று சசிகலா உரையாற்றிய ஆடியோ கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் வைரலாகி அதிமுகவில் அதிர்வலைகளை உண்டாக்கி வருகிறது.

அந்த ஆடியோவில் சசிகலாவுடன் உரையாற்றிய அவர் அதிமுகவைச் சேர்ந்தவர் எனவும், நேற்று தகவல் கிடைத்தது. தஞ்சாவூர் மாவட்டம் செங்கமங்கலம் கிராமத்தைச் சார்ந்த அதிமுகவின் ஐடி விங் அமைப்பாளர் வினோத் எனவும், இவரிடம்தான் சசிகலா உரையாற்றியிருக்கிறார். அதற்கான ஆடியோ தான் தற்சமயம் வெளியாகி அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது எனவும். தகவல் கிடைத்தது.

அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் ஐடியில் இருந்தாலும் கூட கட்சியின் நிலவரம் தொடர்பாக சசிகலாவிற்கு கடிதம் எழுதுவேன் அவர் பதில் கடிதம் அனுப்புவார் திடீரென அவர் போன் செய்து என்னிடம் உரையாற்றினார். நோய்த்தொற்று முடிவுக்கு வந்த பிறகு அதிமுகவை ஒற்றை தலைமையின் கீழ் கொண்டு வருவேன் என்று தெரிவித்ததாக அவர் கூறியிருக்கிறார். அதோடு சசிகலா விடுதலையான சமயத்தில் அவருக்கு ஆதரவாக போஸ்டர் அடித்து ஒட்டியதற்கே என் மீது கட்சியின் தலைமை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், அவ்வாறு இருக்கையில் தற்போது நான் சசிகலாவிடம் உரையாற்றியது தொடர்பாகவும், என் மீது கட்சி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காது என்று உறுதியுடன் தெரிவித்திருக்கிறார் வினோத்.

ஆனாலும் அதனை அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி அறவே மறுத்திருக்கிறார். இதன்மூலம் வினோத் அதிமுகவில் சார்ந்தவரா? அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்தவரா? என்ற சந்தேகம் பொதுமக்களிடையே எழுந்திருக்கிறது.

ஒரு சில தளர்வுகள் உடன் இன்று முதல் இவை இயங்க அனுமதி!

0

தமிழகத்தில் இன்று முதல் முழு ஊரடங்கில் மேலும் ஒரு சில துறைகள் இயங்க அரசு அனுமதி அளித்துள்ளது.

தமிழகத்தில் இன்று காலை 6 மணி முதல் ஜூன் 7ம் தேதி மாலை 6 மணி வரை ஊரடங்கு போடப்பட்டதால் கோயம்பேடு மற்றும் சுற்றுப் பகுதிகளில் காய்கறி பூ சந்தைகள் மட்டுமே இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மொத்த காய்கறி பூ சந்தைகளுக்கும் மட்டுமே அனுமதி கிடைத்த நிலையில், சில்லரை வியாபாரிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே, விமானம் மற்றும் துறைமுகங்களில் ஏற்றுமதி இறக்குமதி பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. தொலைதொடர்பு, அஞ்சல் துறை ஊழியர்கள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ரத்த வங்கிகள் இயங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், உணவு வழங்கும் பணியை இ-பதிவு செய்து தங்களது பணிகளை மேற்கொண்டு செயல்படலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா அதிகம் பாதித்த கோவை, திருப்பூர், சேலம், கரூர், ஈரோடு, நாமக்கல் திருச்சி மற்றும் மதுரை மாவட்டங்களில் தவிர மற்ற மாவட்டங்களுக்கு 50 விழுக்காடு பணியாளர்களுடன் தொழிற்சாலைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மளிகை கடை வியாபாரிகள் அந்தந்த பகுதிகளில் உள்ள உள்ளாட்சி மூலம் அனுமதி பெற்று குடியிருப்புகள் சென்று வாகனங்கள் அல்லது தள்ளு வண்டிகளில் மூலம் விற்பனை செய்யலாம். அல்லது தொலைபேசி ஆன்லைன் மூலம் மளிகை பொருட்களை பதிவு செய்து டோர் டெலிவரி செய்யலாம், அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு! வீடு தேடி வரும் மளிகை பொருட்கள்!

0

தமிழ்நாட்டில் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த முழு ஊரடங்கு ஆனது முதலில் மே மாதம் 31ம் தேதி வரையில் அமல்படுத்தப்பட்டது. இந்தநிலையில், நோய்த்தொற்று பரவலின் தீவிரத்தை உணர்ந்த மாநில அரசு கடந்த வாரம் இந்த ஊரடங்கை ஜூன் மாதம் ஏழாம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டிருக்கிறது. இந்த ஊரடங்கில் காய்கறி, பழங்கள் கடைகள் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு கூட அரசு அனுமதி கொடுக்கவில்லை. இந்த முறையும் அதற்கான அனுமதி வழங்கப்படாத சூழலில் மாவட்ட ஆட்சியர்களின் அனுமதி பெற்று வீடு வீடாக சென்று தள்ளுவண்டிகளில் விற்பனை செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதுபோல் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரையில் வீடுகளுக்குச் சென்று மளிகை பொருட்களை டெலிவரி செய்யலாம் என்று தமிழக அரசு அனுமதி கொடுத்திருக்கிறது. இதற்கிடையில் கோயம்பேடு காய்கறி சந்தை மற்றும் மற்ற மாவட்டங்களில் இருக்கின்ற காய்கறி சந்தைகளில் மொத்த விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. சில்லரை விற்பனைக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. இதன் காரணமாக, சில்லறை வியாபாரிகள் மொத்த விற்பனை வியாபாரிகளிடமிருந்து மளிகை பொருட்களை வாங்கி மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி வாங்கிய பின்னர் தள்ளுவண்டிகளில் பொருட்களை விற்பனை செய்து வருகிறார்கள்.

தற்போது விதிக்கப்பட்டிருக்கும் ஊரடங்கு காரணமாக, பொதுமக்கள் பாதிக்காத வகையில் பொருட்களை வீடு வீடாக சென்று விற்பனை செய்வதற்கு தமிழக அரசு அனுமதி கொடுத்த சூழலில் இதற்கான சிறப்பு ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் முன்னெடுத்து வருகின்றன. இந்த நிலையில், அனுமதிக்கப்பட்ட இடங்களில் இன்று காலை முதல் பொருட்களை விற்பனை செய்ய தொடங்கியிருக்கிறார்கள் இது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு இருப்பதாக தெரிவிக்கிறார்கள்.

ஆயிரக்கணக்கில் செத்துக் கிடக்கும் மீன்கள்! துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதி!

0

தர்மபுரி மாவட்டத்திலுள்ள கடத்தூர் இல் அய்யனார் ஏரியில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதக்கின்றன. இதனால் துர்நாற்றம் வீசுகிறது, என அதை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கக்கோரி கோரிக்கை விடுத்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கடத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ஒரு பகுதியில் கடத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து தர்மபுரி செல்லும் சாலையின் வலது புறத்தில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் அய்யனார் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரிதான் நிலத்தடி நீர் கிடைக்கும் ஆதாரமாக விளங்கி வருகிறது.

இது கடத்தூர் பேரூராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருவதால் மீன்பிடிக்க ஏலம் விடப்பட்டு வருவாய் வந்து கொண்டிருக்கிறது.

கொரோனா காரணமாக ஊரடங்கு என்பதால் ஏரியை ஏலம் விடாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் மக்கள் தங்களுக்கு ஏற்றவாறு வலைகளிலும் தூண்டில்களிலும் மீன்களை பிடித்து வந்து விற்பனை செய்தும் உணவாகவும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் மீன் பிடிப்பதில் இரு பிரிவினருக்கிடையே தகராறு வந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

இரு பிரிவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் ஒரு பிரிவினர் ஏரியில் விஷம் கலந்து இருக்கலாம் என புகார் எழுந்துள்ளது. இதனால் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மீன்கள் பாதிப்படைந்து செத்து மிதந்து வருவதாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் புகார் தெரிவித்திருக்கின்றனர்.

பேரூராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் புகார் தெரிவித்த நிலையிலும் நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தன போக்கு காட்டி வருவதாக மக்கள் மீன்பிடிப்பவர்கள் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். பொதுமக்கள் நலன் கருதி தர்மபுரி மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மது பிரியர்களுக்கு இனி இது அவசியம்!அரசு அதிரடி உத்தரவு!

0

மது பிரியர்களுக்கு இனி இது அவசியம்!அரசு அதிரடி உத்தரவு!

கொரோனா இரண்டாம் அலையின் பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல் படுத்தி வருகிறது.

ஆனாலும் தொற்றின் விகிதம் என்னவோ அதிகரித்து தான் வருகிறது.இதை தடுக்க அரசு முழு ஊரடங்கு பிறப்பித்து உள்ளது.மாநில அரசுகள் ஒரு புறம் தடுப்பூசிகளை செலுத்தி வருகிறது.

இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலத்தில் எட்டவா மாவட்டத்தில் சைஃபா என்ற இடத்தில் மதுபான விற்பனை நிலையங்களில் ஒரு அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது.

அதில் மதுபானம் வாங்க வேண்டுமானால் தடுப்பூசி சான்றிதழ் இருந்தால் மட்டுமே மது விற்கப்படும் என உள்ளது.மேலும் சான்றிதழ் இல்லாதவருக்கு கட்டாயம் மது விற்பனை இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

எட்டவா மாவட்ட கூடுதல் நிர்வாக அதிகாரி ஹேம்குமார் சிங் அவர்களின் அறிவுறுத்தல் படி இந்த அறிவிப்புகள் செயல்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடப்பட்டது.

இது குறித்து அவர் கூறுகையில் அனைத்து விற்பனையகங்களிலும் இது கட்டாயமாகக் பின்பற்றப்படும் என்றும், மீறினால் கடுமையான தண்டனை பெறுவார்கள் என்றும் கூறியுள்ளார்.

கோரோனாவை ஒழிக்கவே இந்த திட்டங்கள் செயல் படுத்தப்படுகிறது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

முஸ்லிம் குழந்தைகளுக்கு ஏற்பட்ட அவல நிலை! பின்னணியின் மர்மம் என்ன?

0

முஸ்லிம் குழந்தைகளுக்கு ஏற்பட்ட அவல நிலை! பின்னணியின் மர்மம் என்ன?

கொரோனா தொற்றானது அனைத்து நாடுகளிலும் ஆட்டி படைத்து வருகிறது.இதற்கிடையே புயல்,பூகம்பம் என இயற்கை சீற்றங்களையும் அனைவரும் எதிர் கொண்டு வருகிறோம்.அந்தவகையில் ஆப்ரிக்கா நாடுகளில் ஒன்று தான் நைஜீரியா.நைஜீரியா நாட்டில் நைஜீரியா நகரத்தில் தெகினா என்ற பகுதி உள்ளது.அந்த தெகினா பகுதியில் சாலிகோ டாங்கோ என்ற முஸ்லிம் பள்ளி ஒன்று செயல்பட்டு  வருகிறது.

அந்த பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.திடீரென்று அந்த பகுதியிலுள்ள முஸ்லிம் பள்ளியில் மோட்டார் வாகனத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் வந்தனர்.அவர்கள் கையில் எடுத்து வந்த துப்பாக்கியால் அங்குள்ள ஒருவரை முதலில் சுட்டுக்கொன்றனர்.அதனைபார்த்த மாணவர்கள் அலறியடித்து கூச்சலிட்டனர்.அவரை கொன்றதை அடுத்து அந்த மர்ம நபர்கள் துப்பாக்கி காட்டி அங்குள்ள மாணவர்களை கடத்தி சென்றனர்.அங்கு மொத்தம் 200 மாணவர்களை கடத்தி சென்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

மாணவர்களை கடத்தி சென்றதை தொடர்ந்து அங்குள்ள போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.போலீசார் 200 மாணவர்கள் தான் கடத்தப்பட்டார்களா என உறுதிபடுத்தும் படி விசாரணை நடத்தி வருகின்றனர்.ஆப்ரிக்கா நாட்டில் ஒன்றான நைஜீரியாவில் உள்ள பள்ளிகளில்  புகுந்து தொடர்ந்து மாணவர்கள் கடத்தப்படுவது முடிவில்லா தொடர் கதையாகவே தான் உள்ளது.கடத்தியவர்களிடம் அரசாங்கம் பேச்சு வாரத்தை நடத்தி விடுவித்து கொண்டு வருவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!

0

நாமக்கல் மாவட்டத்தில் ஒரு வாரத்தில் நோய்த்தொற்று இருக்கு 5 ஆயிரத்து 825 பேர் பாதிக்கப்பட்டிருப்பது பொது மக்களிடையே மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

நாமக்கல் மாவட்டத்தில் சென்ற ஒருவாரத்திற்கு முன்னர் நோய் தொற்று பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து வந்ததாக தெரிகிறது. ஒருநாள் பாதிப்பு 300 ஆக இருந்திருக்கிறது. இந்த சூழ்நிலையில், தற்போது நோய்த்தொற்று பாதிப்புக்கு ஆளாகும் எண்ணிக்கை சற்று அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக, ஒரே தினத்தில் நோய்தொற்று பாதிப்பிற்கு 700க்கும் மேற்பட்டோர் ஆளாகியிருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து கடந்த மே மாதம் 22ஆம் தேதி வரையில் நாமக்கல் மாவட்டத்தில் மொத்தமாக 24 ஆயிரத்து 598 பேர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டு இருந்தார்கள் இந்த நிலையில் நேற்றைய சர்வே படி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்து 423 ஆக உயர்ந்து இருக்கிறது.

இதனையடுத்து ஒரே வாரத்தில் மாவட்டம் முழுவதும் 5825 பேர் இந்த நோய் தொற்றுக்கு பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் 49 பேர் சிகிச்சை பலனில்லாமல் பலியாகி இருக்கிறார்கள். இதன் காரணமாக, இதுவரையில் நோய் தொற்றிற்கு 234 பேர் பலியாகியிருக்கிறார்கள். இதனை தொடர்ந்து மூச்சுத் திணறல் காய்ச்சல் தலைசுற்றல் போன்ற அறிகுறிகள் இருப்பவர்கள் உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தி இருக்கிறது. அதோடு 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

வாகன ஓட்டிகளுக்கு கவலையளிக்கும் பெட்ரோல் டீசல் விலை!

0

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்திய நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை என்னை நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. அந்த விதத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஆக இருக்கும் இந்தியன் ஆயில் பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற எண்ணெய் நிறுவனங்களால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகின்றன. நோய் தொற்று காரணமாக, மார்ச் மாதம் முதல் மே மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படாமல் இருந்தது. அதோடு தமிழகம், புதுவை உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல்களிலும் இந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் இருந்ததற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்து இருக்கிறது. அதாவது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 25 காசுகள் உயர்ந்து 95 ரூபாய் 76 காசுகளும்,டீசல் விலை லிட்டருக்கு 58 காசுகள் உயர்ந்து 89 ரூபாய் 90 காசுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை நிலவரம் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்திருக்கிறது.