தமிழ்நாட்டை பொறுத்தவரையில் தற்சமயம் வெப்பச்சலனம் காரணமாக, அடுத்த நான்கு தினங்களுக்கு மழை பெய்வதற்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் தமிழ்நாட்டில் வெப்பச்சலனம் காரணமாக, 31 5 2021 முதல் 1-6- 2021 வரையில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கின்ற மாவட்டங்கள் தமிழக மாவட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மற்ற மாவட்டங்களில் புதுவை, காரைக்கால், போன்ற பகுதிகளிலும் வறண்ட வானிலை நிலவும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
2-6- 2021 முதல் 3-6- 2021 வரை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கின்ற மாவட்டங்கள் மற்றும் தமிழக மாவட்டங்கள் கடலோர மாவட்டங்களிலும் மற்றும் புதுச்சேரி, காரைக்கால், போன்ற இடங்களிலும் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும், மற்ற மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
சென்னையை பொருத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் தெளிவாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை ஆக 29 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
தமிழகத்தில் பெய்யப் போகும் மழை! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!
இறப்பு சான்றிதழ் வாங்க முடியாமல் மக்கள் அவதி! மருத்துவமனைகளின் அலட்சியம் காரணமா??
சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் இறந்தவர்களின் விபரங்களை மாநகராட்சியிடம் ஒப்படைக்க வில்லை என இறப்பு சான்றிதழ் தர முடியவில்லை என குற்றம் சாடியுள்ளது. அதனால் பொதுமக்கள் இறப்பு சான்றிதழ் பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.
சாதாரனமாக சென்னையில் வீட்டில் இறப்பு ஏற்பட்டால் மாநகராட்சிக்கு அறிவித்து, மயான இடங்களில் தரும் சான்றிதழை சமர்பித்து இறப்பு சான்றிதழுக்கு விண்ணப்பிக்கலாம்.
மருத்துவமனையில் இறப்பு ஏற்பட்டால் இறந்தோர் விபரங்களை அந்த மருத்துவமனை மாநகராட்சியின் இணையத்தில் பதிவு செய்யும். அதன்பின் மாநகராட்சி இறப்பு சான்றிதழை வழங்கும்.
அதன் பின் மாநகராட்சி சுகாதார அலுவலர் கையொப்பமிட்ட சான்றிதழைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
கடந்த ஒரு மாதமாக மருத்துவமனைகளில் இறப்பவர்களின் விவரங்களை மருத்துவமனைகள் மாநகராட்சி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யாமல் இருப்பதால் இறப்புச் சான்றிதழைப் பெற முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து சுகாதாரத் துறை கூறியதாவது, சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகள் இறந்தவர்களின் விவரங்களை இன்னும் பதிவேற்றம் செய்யாமல் உள்ளது. பேச்சுவார்த்தை நடத்திய பின்னர்தான் ஏப்ரல் 25 ஆம் தேதி முதல் 28ம் தேதி வரை உள்ள இறந்தவர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்து, 28ஆம் தேதி முதல் மே 8ஆம் தேதி வரை உள்ள விவரங்களை நேரடியாக சமர்ப்பித்துள்ளது. அவர்கள் பதிவேற்றம் செய்தால் தான் எங்களால் சான்றிதழ் தர முடியும். அவர்களிடம் கேட்டு காரணம் கேட்டால் 50 சதவீத பணியாளர்கள் மட்டுமே மருத்துவமனை வருகின்றனர் என்று அவர்கள் கூறுகின்றனர். இதை சுகாதாரக் துறை தான் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று கூறியுள்ளனர்.
விபத்தில் சிக்கிய திமுக சட்டசபை உறுப்பினர்! அதிர்ச்சியில் திமுக தலைமை!
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சட்டசபை தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி அடைந்தவர் மகாராஜன் இவர் நேற்று மதியம் ஒரு மணியளவில் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகில் பயணம் செய்து கொண்டிருந்தார்.
இந்த நிலையில், வத்தலகுண்டு சாலையில் சென்று கொண்டிருந்த சமயத்தில் மகாராஜனின் கார் மீது எதிரே வந்த வாழைக்காய் ஏற்றி வந்த மினி லாரி மோதியது. இந்த விபத்தில் திராவிடர் முன்னேற்ற கழகத்தின் சட்டசபை உறுப்பினர் மகாராஜன் அதிர்ஷ்டவசமாக எந்தவிதமான காயமும் இல்லாமல் தப்பித்துக் கொண்டார். சட்டசபை உறுப்பினர் மகாராஜன் காரின் முன்பகுதியில் பெரிய அளவில் சேதம் உண்டாகி விட்டது.
எதிரே வந்த மினி லாரியில் இருந்து ஐந்து பெண் தொழிலாளர்களுக்கு லேசான காயம் உண்டானது. தகவலறிந்து வத்தலகுண்டு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வருகைதந்து போக்குவரத்தை ஒழுங்கு படுத்தி இருக்கிறார்கள். அதோடு விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது. திராவிடர் முன்னேற்ற கழகத்தின் சபை உறுப்பினரின் கார் விபத்தில் சிக்கி இருப்பது வத்தலகுண்டு பகுதியில் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
2 அடி 5.5 கிலோ எடையுடன் பிறந்த குழந்தை!
பிரிட்டனில் ஒரு இளம் பெண் இரண்டு அடி 5.5 கிலோ உள்ள குழந்தையை பெற்றெடுத்துள்ள சம்பவம் மிகவும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ஜாக் ஏமி என்ற தம்பதியினர் ஐரோப்பிய நாடான பிரிட்டனின் பக்கிங்கம்ஷைர் பகுதியில் வசித்து வருகின்றனர்.
ஏமிக்கு வயது 27. இவர் கர்ப்பம் தரித்திருந்த நிலையில் சமீபத்தில் லண்டன் மருத்துவமனையில் ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
அவர் இரண்டு அடி உயரமும் 5.5 கிலோ எடையுள்ள குழந்தையையும் பெற்றெடுத்துள்ளார். குழந்தை சராசரி குழந்தைகளின் எடையை விட இரண்டு மடங்கு பெரியதாகும். அறுவை சிகிச்சையின் பொழுது ஒரு டாக்டரால் தூக்கமுடியாமல் இரு டாக்டர்கள் தூக்கி எடை இயந்திரத்தின் மேல் வைத்தனர் என்று கூறப்படுகிறது. அவ்வளவு பெரியதாக இருந்துள்ளது. அந்த குழந்தைக்கு ஜாக்ரீஸ் என்ற பெயரும் சூட்டப்பட்டுள்ளது.
இதைப்பற்றி ஏமி கூறியதாவது, குழந்தை உயரமாக பிறக்கும் என்பது ஏற்கனவே எனக்கு தெரியும். ஸ்கேன் செய்த பிறகு குழந்தை பெரியதாக இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால் இவ்வளவு உயரமாக பிறக்கும் என்பதை நான் அறியவில்லை. என்று அவர் கூறினார்.
இதேபோல் மத்திய பிரதேசத்திலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அந்த குழந்தை 5.1 எடை இருந்துள்ளது. சாதாரணமாக குழந்தைகள் 2.5- 3.7 கிலோ அளவுதான் இருக்கும்.
அதிமுகவின் முன்னாள் அமைச்சர் தலைமறைவு? அதிர்ச்சியில் அதிமுக தலைமை!
நாடோடிகள் திரைப்படத்தில் நடித்த துணை நடிகை சாந்தினி முன்னாள் அமைச்சர் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்துவிட்டு தற்சமயம் திருமணம் செய்ய மறுப்பதாக காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
இயக்குனரும் நடிகருமான சசிகுமார் நடித்த நாடோடிகள் திரைப்படத்தின் பணக்கார வீட்டு காதலர்களாக நடித்து இருந்த துணை நடிகை சாந்தினி பல திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்து இருக்கிறார். சில காலங்களாக பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருக்கும் அவர் திடீரென்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வந்து புகார் ஒன்றை கொடுத்து மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார்.
அவர் கொடுத்த இருக்கின்ற புகாரில் தெரிவித்திருப்பதாவது, முன்னாள் அமைச்சரான மணிகண்டன் ஐந்து வருடங்களாக திருமணம் செய்யாமல் தன்னுடன் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்துவிட்டு தற்சமயம் திருமணம் தொடர்பாக பேச்சு எடுத்தால் தன்னை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுப்பதாகவும் தன்னுடைய ஆபாச புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக வலை தளங்களில் பதிவேற்றி விடுவேன் என்றும் மிரட்டல் விடுப்பதாக அவர் அந்த புகாரில் குறிப்பிட்டு இருக்கின்றார். ஆகவே இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதனையடுத்து முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. நடிகை சாந்தினி அளித்த புகாரின் பேரில் திமுகவின் முன்னாள் அமைச்சர் மருத்துவர் மணிகண்டன் மீது பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது .
இந்த சூழ்நிலையில், நடிகை சாந்தினி கொடுத்த புகாரில் கைது செய்யப்படுவது உறுதி என்று தெரியவந்ததால் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட ஐந்து கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முதல்வருக்கு நன்றி தெரிவித்த ஓபிஎஸ்! காரணம் இதுதான்!
நோய்த்தொற்று காரணமாக பெற்றோரை இழந்த குழந்தைகளின் பெயரில் ஐந்து லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அந்த அறிவிப்பானது பல்வேறு தரப்பினராலும் பாராட்டப்படும் ஒரு விஷயமாக இருக்கிறது. பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகளுக்கு அரசின் இல்லங்களிலும் மற்றும் விடுதிகளிலும் முன்னுரிமை அடிப்படையில் இடம் வழங்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
இந்த குழந்தைகளின் பெயரில் செலுத்தப்படும் ஐந்து லட்சம் ரூபாய் டெபாசிட் தொகையை அவர்களுடைய 18 வயது பூர்த்தியான பின்னர் பெற்றுக்கொள்ளலாம் 18 வயது பூர்த்தி ஆகும் சமயத்தில் 5 லட்சம் ரூபாய் டெபாசிட் தொகை மாற்றி தொகையுடன் சேர்த்து கொடுக்கப்படும். குழந்தைகளுக்கு பட்டப்படிப்பு வரையிலான கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணங்கள் போன்றவற்றை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளும் என்று தெரிவித்திருக்கிறார்.
நோய்த்தொற்றினால் தாய் அல்லது தந்தையை இழந்து வாடும் குழந்தைகளின் தாய் அல்லது தந்தைக்கு உடனடியாக 3 லட்சம் ரூபாய் வழங்கப்படும். பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகளுக்கு உறவினர்கள் அல்லது பாதுகாவலரின் ஆதரவில் இருக்கும் குழந்தைகளுக்கு மாதம்தோறும் பராமரிப்பு தொகையாக 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.
எனது வேண்டுகோளை ஏற்று அதற்கான அறிவிப்பினை 29.5.2021 அன்று வெளியிட்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
— O Panneerselvam (@OfficeOfOPS) May 30, 2021
இந்த சூழ்நிலையில், இந்த அறிவிப்பிற்கு முன்னாள் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கின்ற வலைதள பதிவில் நோய் தொற்று காரணமாக, பெற்றோர்களை இழந்து பாதுகாப்பு இல்லாத நிலையில் இருக்கும் குழந்தைகளுக்கு தேவையானவற்றை செய்து கொடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 28 5 2021 அன்று அறிக்கையின் மூலமாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை கேட்டுக்கொண்டேன்.
என்னுடைய வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு அதற்கான அறிவிப்பினை 29 5 2021 ஆண்டு வெளியிட்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு என்னுடைய நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டு இருக்கிறார்
மக்களுக்காக தான் அரசு என்பதை ஸ்டாலின் நிரூபித்திருக்கிறார்! வைகோ பாராட்டு!
நோய் தொற்று காரணமாக, பெற்றோர்களை இழந்து விட்ட ஆதரவில்லாத குழந்தைகளுக்கு அவர்கள் பெயரில் தலா 5 லட்சம் ரூபாய் காப்பீடு வழங்கப்படும். குழந்தைக்கு 18 வயது முடியும்போது அந்த தொகை குழந்தைக்கு வட்டியுடன் கொடுக்கப்படும். பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகளுக்கு காப்பகம் மற்றும் விடுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தங்குவதற்கு இடம் வழங்கப்படும். இந்த குழந்தைகளுக்கு பட்டப்படிப்பு வரையிலான கல்விக் கட்டணம் விடுதிக் கட்டணம் போன்ற அனைத்து செலவையும் தமிழக அரசே ஏற்கும் என்று ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்.
அத்துடன் இந்த நோய் தொற்றினால் தாய் அல்லது தந்தையை இழந்து தவிக்கும் குழந்தைகளுடன் இருக்கும் தாய் அல்லது தந்தைக்கு உடனடியாக நிவாரணத் தொகையாக 3 லட்சம் ரூபாய் வழங்கப்படும் .அரசு காப்பகம் அல்லது விடுதிகளில் இல்லாமல் உறவினர் மற்றும் பாதுகாவலரின் ஆதரவில் இருந்துவரும் குழந்தைகளுக்கு பராமரிப்பு காரணங்களுக்காக மாதம் 3000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். அது அவர்கள் 18 வயது நிறைவடையும் வரை வழங்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார். முன்னரே தாய் அல்லது தந்தையை இழந்து தற்சமயம் நோய்த்தொற்று காரணமாக, பெற்றோரில் மற்றொருவரை பிறந்த குழந்தைகளுக்கு ஐந்து லட்சம் ரூபாய் அவர்களுடைய வங்கிக் கணக்கில் டெபாசிட் வைக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.
தமிழக அரசு தற்போது அறிவித்திருக்கும் இந்த நலத் திட்டங்களால் இந்த குழந்தைகளுக்கும் கணவன் அல்லது மனைவியை இழந்து குழந்தையுடன் இருக்கும் பெற்றோருக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் மணிமேகலை காப்பியத்தில் கையில் அமுதசுரபி உடன் காணார், கேளார், போன்ற ஆதரவு இல்லாதவர்களுக்கு அள்ளி வழங்கியதைப் போல தமிழக அரசு அமுதசுரபியாக மாறியிருக்கிறது. மக்களுக்காக தான் அரசு என்பதை நிரூபணம் செய்திருக்கிறது. மனித நேயத்தின் மறுபாதி ஆக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுடைய தமிழக அரசு செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது. என்பதை எவ்வளவு பாராட்டினாலும் தகும் என்று தெரிவித்திருக்கிறார்.
இந்த ராசிகாரர்களுக்கு பணவரவு உண்டு! இன்றைய ராசி பலன்கள்
இந்த ராசிகாரர்களுக்கு பணவரவு உண்டு! இன்றைய ராசி பலன்கள்
மேஷ ராசி:
உங்களின் உழைப்பு சிறப்பானதாக இருக்கும்.எந்த செயல் செய்தாலும், மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் செய்வீர்கள்.அதன் மூலம் நன்மை விளையும்.உறவு நட்பானதாக இருக்கும்.பண வரவு திருப்தி தரும்.
ரிஷப ராசி:
செயல் திறனை மேம்படுத்துவதன் மூலம் வெற்றி அடைய முடியும்.பனியின் காரணமாக பயணம் ஏற்படலாம்.உங்கள் பணியில் மாற்றங்கள் ஏற்படும்.பெற்றோர்களுடன் பொறுமையாக பேசுங்கள்.பண வரவு ஓரளவு ஏற்படும்.
மிதுன ராசி:
இன்று எதிர்பாராத நன்மைகள் ஏற்படும்.முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம்.அதிக வேலைப்பளு இருக்கும்.பொறுமையாக இருக்க வேண்டும்.யாரிடமும் பேசும் முன் யோசித்து பேசவும்.செலவுகளை கட்டுபடுத்தவும்.
கடக ராசி:
இன்று உங்களுக்கு சாதகமான நாள்.நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள்.தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.குடும்பத்தில் அமைதி நிலவும்.பண வரவு சிறப்பாக இருக்கும்.
சிம்ம ராசி:
முயற்சியின் மூலம் வெற்றி கிடைக்கும் நாள்.பயணங்கள் ஏற்படும்.பணியிட சூழல் திருப்தியாக இருக்கும்.இன்று மகிழ்ச்சி நிலவும் நாள்.பணவரவு அதிகமாக இருக்கும்.
கன்னி ராசி:
இன்று உங்களது நோக்கம் நிறைவேறும்.அதனால் நற்பலன்கள் ஏற்படும்.உங்களின் திறமைகளை வெளிக்காட்ட வாய்ப்புகள் அதிக அளவில் இருக்கும்.பங்குகளில் முதலீடு செய்யலாம்.
துலாம் ராசி:
இன்று உங்களுக்கு துடிப்பான நாளாக இருக்கும்.உங்கள் தேவைகள் அனைத்தும் நிறைவேறும்.உங்கள் திறமை அனைவராலும் அறியப்படும்.ஓரளவிற்கு பண வரவு இருக்கும்.
விருச்சிக ராசி:
இன்று உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும்.உங்கள் நலனிற்காக முக்கிய முடிவுகளை எடுக்கலாம்.பணி சீராக நடைப்பெறும்.எளிதாகவும் இருக்கும்.வீட்டில் மகிழ்ச்சி நிலவும்.பண வரவு சிறப்பாக இருக்கும்.
தனுசு ராசி:
உங்கள் செயல்களில் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும்.நீங்கள் செய்யும் செயல்களுக்கு உடனடி பலன்கள் கிடைக்காது.பணிச்சுமை அதிகமாக இருக்கும்.பேச்சில் கவனம் தேவை.பணவரவு குறைந்து இருக்கும்.
மகர ராசி:
இன்று சுமாரான நாளாக இருக்கும்.தொழிலில் சிறப்பாக முன்னேற்றம் இருக்கும்.அதிக லாபாம் கிடைக்கும்.வேலை செய்பவருக்கு அங்கீகாரம் கிடைக்கும்.குடும்ப உறவில் மகிழ்ச்சி இருக்கும்.
கும்ப ராசி:
முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம்.இன்று வேலை அதிகமாக இருக்கும்.நீங்கள் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.குடும்பத்தில் பொறுமையாக பேச வேண்டும்.செலவுகள் அதிகமாக இருக்கும்.
மீன ராசி:
இன்று உங்களுக்கு சாதகமாக இருக்கும்.உங்கள் வீட்டில் நடக்கும் விசயங்களால் மகிழ்ச்சி அடைவீர்கள்.பண வரவு அதிகமாக இருக்கும்.மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
மேடம்! பட்டன் போட மறந்துட்டீங்க! ரைசா ஃபோட்டோ உள்ளே!
பிக்பாஸ் சீசன் 1 அறிமுகமான ரைசா, அதனைத்தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வேலையில்லா பட்டதாரி படத்தில் நடித்தார். அதன் பின்னர் யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் உருவான பியார் பிரேமா காதல் படத்தில் கதாநாயகியாக தன்னுடன் பிக்பாஸ் சீசன் இருந்த ஹரீஷ் கல்யாண் உடன் அறிமுகமானார். காதலிக்க யாருமில்லை, எப்.ஐ.ஆர் உள்ளிட்ட நான்கிற்கும் மேற்பட்ட படங்களில் ரைசா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் தோல் மருத்துவர் தவறான சிகிச்சை செய்து விட்டதாக கூறி வீங்கிய முகப் புகைப்படத்தையும் வெளியிட்டு, ரைசாவின் இடது பக்க கன்னம் வீங்கி. குறிப்பாக கண் அருகில் கொப்பளம் போல் வீக்கம் ஏற்பட்டு இருந்தது. பின் மறுபடியும் சிகிச்சை பெற்ற பின் முகம் பழைய நிலைக்கு மாறியது.
சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ரைசா தற்போது தனது அழகான புகைப்படங்களை வெளியிட்டு உள்ளர்.
இதில் இவர் பட்டன் எதும் போடாமல் உள் அழகு தெரியும் படி போஸ் கொடுத்துள்ளார். அதை கண்டு ரசிகர்கள் திக்குமுக்காடி வருகின்றனர்.
இதைப்பார்த்த நெட்டிசன்கள் என்னமா ரைசா, இது என்ன மா டிரஸ், அதையும் காண்பித்திருக்கலாம், மேடம் பட்டன் எங்க மேடம் மறந்துட்டீங்களா? என்றெல்லாம் திட்டி வருகின்றனர்.
https://www.instagram.com/p/CPfaSjODk5D/?utm_medium=copy_link
கொரோனா நோயாளிகளின் ஆக்ஸிஜன் இணைப்பை துண்டித்த ஆம்புலன்ஸ் டிரைவர்
இரண்டு மூன்று நாட்களாக அந்த மருத்துவமனையில் யாரும் சாகவில்லை அதனால் ஆக்சிஜன் இணைப்பைத் துண்டித்தேன் என ஆம்புலன்ஸ் டிரைவர் ஒருவர் கூறிய சம்பவம் ஹைதராபாத்தில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடே கொரோனா என்னும் எமனின் பிடியில் சிக்கி பரிதவித்து வருகிறது.ஆக்சிஜன் பற்றாக்குறையால் பல மக்கள் உயிருக்கு போராடி வரும் நிலையில் இந்த மாதிரியான சம்பவம் ஏற்பட்டுள்ளது. ஆக்சிஜன் கிடைக்காமல் பல நாடுகளிலிருந்து கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எத்தனையோ பேர் ஆக்சிஜன் படுக்கைகள் கிடைக்காமல் ஆம்புலன்ஸில் உயிரை விட்டவர்களை பார்த்து இருக்கிறோம்.
இந்நிலையில் தெலுங்கானா மாநிலம் நிசாமாபாத் மாவட்டத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் திடீரென்ற ஆக்சிஜன் கிடைக்காமல் நோயாளிகள் அனைவரும் திணறி உள்ளனர். என்னவென்று சென்று பார்த்த பொழுது தான் ஆக்சிஜன் இணைப்பு துண்டிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
ஆனால் இந்த கேவலமான செயலை யார் செய்து இருப்பார்கள் என்று சிசிடிவி கேமராக்களில் சோதனை செய்த பொழுது அங்கு பணி செய்யும் ஆம்புலன்ஸ் டிரைவர் ஒருவர் இந்த காரியத்தை செய்தது அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
மருத்துவ வளாகம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கவே போலீசார் அந்த ஆம்புலன்ஸ் டிரைவரை அடித்து உதைத்துள்ளனர். இரண்டு மூன்று நாட்களாக இந்த மருத்துவமனையில் யாரும் சாகவில்லை, காசு இல்லாமல் தவித்து வந்ததால், இந்த மாதிரியான செயலில் ஈடு பட்டேன் என்று ஆம்புலன்ஸ் டிரைவர் கூறியுள்ளார். போலீசார் அவனை லத்தியால் மரண அடி அடித்து உயிரின் மதிப்பை புரிய வைத்தனர்.
அவனை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்த வீடியோ இணையதளத்தில் மிக வேகமாக பரவி வருகிறது. இதைப்பார்த்த இணையதள வாசிகள் அந்த ஆம்புலன்ஸ் டிரைவருக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.தன் உயிரை கூட மதிக்காமல் பிற உயிர் காக்க வேண்டும் என்று மருத்துவமனைக்கு சரியான நேரத்தில் கொண்டு சேர்க்கும் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் இருக்கும் பொழுது இப்படியும் ஒருவரா என்று திட்டியுள்ளனர்.