Monday, July 21, 2025
Home Blog Page 4580

1500 படங்களுக்கு மேல் நடித்து சாதனை செய்த நடிகை! மக்களின் மனதில் மறக்க முடியாதவர்!

1500 படங்களுக்கு மேல் நடித்து சாதனை செய்த நடிகை! மக்களின் மனதில் மறக்க முடியாதவர்!

இந்திய திரையுலகில் சாதனை புரிந்த நடிகை ஆட்சி என அனைவராலும் பெயர் பெற்றவர் ஆவார்.50 ஆண்டுகளாக திரைத்துறையில் முத்திரை பதித்த நடிகை ஆவார்.

அவருடைய இயற்பெயர் கோபி சாந்தா ஆகும்.அவர் பிறந்தது மன்னார்குடி என்றாலும் அவரின் சிறு வயதில் குடும்பகஷ்டம் காரணமாக மன்னார்குடியில் இருந்து மன்னார்குடியில் இருந்து காரைக்குடி அருகில் உள்ள பள்ளத்தூரில் குடி பெயர்ந்தது.

அவர் தாயாரின் உடல்நிலை சரி இல்லாத காரணத்தினாலும், குடும்ப வறுமை காரணமாகவும் 12 வயதில் இருந்து மேடை நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார்.அப்போது அவர் நடித்த ஒரு கதாபாத்திரமான மனோரமா அவரின் பெயரானது.

அதன் பிறகு பல மேடை நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார்.அந்த நடிப்பில் அவர் தன்னை நிரூபித்தார். எந்த குடும்ப பின்னணியும் இல்லாத நிலையில் கவிஞர் கண்ணதாசன் திரையுலகத்திற்கு அறிமுகம் செய்தார்.

அவர் தனது டிராமா குழுவின் மேனேஜர் எஸ்.எம்.ராமநாதன் என்பவரை காதலித்து 1954 ம் ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்தார்.1955 ம் ஆண்டு அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான்.பூபதி என பெயரிட்டார்.ஆனால் அவரது காதல் வாழ்க்கையோ சொல்லும் அளவுக்கு இல்லாமல் மனம் ஒத்துபோகாததால் 1956 ம் ஆண்டே விவாகரத்தும் ஆனது.

1958 ம் ஆண்டு மாலையிட்ட மங்கை என்ற திரைப்படத்தில் மனோரமா அறிமுகம் செய்யப்பட்டார்.அதன் பிறகு கொஞ்சும் குமரி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதைத்தொடர்ந்து அவர் நடித்த அனைத்து கதாபாத்திரங்களும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.அதிலும் குறிப்பாக தில்லான மோகனாம்பாள் திரைப்படத்தில் அவர் ஏற்று நடித்த ஜில் ஜில் ரமாமணி கதாபாத்திரம் சிவாஜி கணேசன் மற்றும் பத்மினிக்கு இணையாக பேசப்பட்டது, இன்று வரை பேசப் பட்டும் வருகிறது.

பாட்டி சொல்லை தட்டாதே, சின்ன கவுண்டர், நடிகன், மைக்கேல் மதன காமராஜன், சிங்காரவேலன், சிங்கம் போன்ற படங்களில் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்தார்.

கடைசியாக அவரது 78 வயதில் உடல்நிலை சரி இல்லாத காரணத்தினால் இயற்கை எய்தினார்.இவர் கடைசியாக சிங்கம் 2 படத்தில் நடித்தார் என்பது அனைவரும் அறிந்ததே.

விருதை திருப்பி அளிப்பதாக கவிஞர் வைரமுத்து அறிவிப்பு!

0

ஓ .என்.வி இலக்கிய விருது வைரமுத்துவிற்கு அறிவிக்கப்பட்ட நிலையில் அதை ஓ .என்.வி கல்சுரல் அகாடமிக்கே திருப்பித் தருகிறேன் என வைரமுத்து அறிவித்துள்ளார். மேலும் அவருக்கு பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்ட 3 லட்சம் ரூபாயை முதல்வர் நிவாரண நிதிக்காக தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

அறிக்கையில் அவர் கூறியதாவது, ஓ .என்.வி இலக்கிய விருது என்பது கேரளாவின் பெருமைமிக்க விருது. ஓ .என்.வி இலக்கிய விருது இந்த ஆண்டு எனக்கு அளிப்பதாக ஓ .என்.வி கல்சுரல் அகாடமி அறிவித்தது. நானும் அதை நன்றியுணர்வோடு வரவேற்றேன். ஆனால் ஒரு சிலரின் காழ்புணர்ச்சியான செயல் குறுக்கிட்டதால், விருதை மறுபரிசீலனை செய்யப்படும், பின்னர் அறிவிக்கப்படும் என ஓ .என்.வி தெரிவித்தது.

 

இது என்னையும் கவிஞர் ஓ .என்.வி அவர்களையும் , அவரது குழுக்களையும் சிறுமை படுத்துவதாக எண்ணுகிறேன். அறிவு மிகுந்த நடுவர் குழுக்களும் இந்த இக்கட்டான சூழலுக்கு உள்ளாக்கப் படக்கூடாது என்று கருதுகிறேன். இவ்வளவு சர்ச்சையிலும் அந்த விருதை பெறுவதை தவிர்க்க விரும்புகிறேன். நான் உண்மையானவன் அதை யாரும் உரசிப் பார்க்கத் தேவை இல்லை. என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.

 

மேலும் எனக்கு அளிப்பதாக இருந்த ஓ.என்.வி. இலக்கிய விருது அறிவிப்பை நான் ஓ.என்.வி. கல்சுரல் அகாடமிக்கே திருப்பி அளிக்கிறேன். எனக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட பரிசுத்தொகை மூன்று லட்சம் ரூபாயை, கேரள முதல்வர் நிவாரண நிதியில் சேர்க்க வேண்டும் என வேண்டுகிறேன்.

மேலும் இரு மாநிலங்களில் சகோதர உணர்வு நீடிக்கட்டும். எனக்கு வாழ்த்து கூறிய முதல்வர் மற்றும் உலகத் தமிழர் அனைவருக்கும் எனது நன்றி என்று அவர் கூறியுள்ளார்.

 

TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

0

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 8 முதல் ஜூன் 11 வரை நடக்கவிருந்த போக்குவரத்து வாகன ஆய்வாளர் இரண்டுக்கான நேர்முகத் தேர்வை தள்ளிவைத்துள்ளது.

 

தற்போது கொரோனா பரவல்களின் நிலை அதிகமாக காணப்படுவதால், மேலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் கொரோனா பரவலின் அச்சம் காரணமாக நேர்முகத் தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது என அறிவித்துள்ளது.

 

இன்னும் இது போன்று உதவி பொறியாளர், உதவி மின் ஆய்வாளர், தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி இயக்குனருக்கான கலந்தாய்வு பணி நேர்முகத்தேர்வுகளும் தள்ளி வைக்கப்படுகிறது என அறிவித்துள்ளது.

 

மேலும் தேர்வுகளும் ஒத்தி வைக்கப் பட்டுள்ளன என அறிவித்துள்ளது. ஜூன் 20 முதல் 30 வரை நடக்கவிருந்த துறை தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுகள் ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறும் என்றும், தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

 

 

அரியலூர் அரசு மருத்துவமனையில் வேலை நேர்காணல் மட்டும்தான்!

0

கொரோனா தொற்று காரணமாக மருத்துவர் அதிகமாக தேவைப்படுவதால் மருத்துவர்களின் பணிக்கு காலி பணி இடங்களை அறிவித்துள்ளது அரியலூர் மருத்துவமனை.

 

அங்கு அதிகமாக காலி பணியிடங்கள் இருப்பதாகவும் அதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். ஆன்லைன் மூலமும் நேர்காணல் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளனர்.

 

கல்வி தகுதியாக அரசு/ மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் MBBS பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம் என தெரிவித்துள்ளது.

 

தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஊதியமாக 60,000 வரை சம்பளம் கொடுக்கப்படும் என அறிவித்துள்ளது.

 

அனைவரும் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார். காலி பணியிடங்கள் நிரப்பும் வரை நேர்காணல் நடைபெறும் என தெரிவித்து உள்ளனர்.

 

அம்மருத்துவமணையில் இன்னும் காலியிடங்கள் நிரம்பாததினால், விரைவாக நேர்காணலில் கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

9 விரல்களுடன் பிறந்த அதிசிய குழந்தை!

0

கர்நாடகாவில் ஒரு கால்களில் மற்ற 9 விரலுடன் குழந்தை பிறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

எப்பொழுதும் இயற்கைக்கு எதிராக இந்த மாதிரி நிகழ்வுகள் நடப்பது அதிசியம். இப்படி நடந்த பல விசயங்கள் அந்த குழந்தையின் உயிருக்கு பாதிப்பு ஏற்படும் அளவிற்கு இருக்கும். ஆனால் இந்த குழந்தை மிகவும் ஆரோக்கியமாக இருப்பதை கண்டு மருத்துவர்கள் ஆச்சரியமாக பார்க்கின்றனர்.

 

கர்நாடகாவில் உள்ள ஹோசாபெட் என்ற பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணிற்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ஒரே காலில் 9 விரல்களுடன் பிறந்து அதிசிய குழந்தையாகப் பார்க்கப்படுகிறது . இடது காலில் மட்டும் 9 விரல்கள்.

 

குழந்தைக்கு ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர்கள் குழந்தை ஆரோக்கியமாக உள்ளது என தெரிவித்து உள்ளனர். அந்த விரல்களால் எந்த பாதிப்பும் ஏற்படாது. என தெரிவித்து உள்ளனர்.

 

இந்நிகழ்வை பற்றி மருத்துவர்கள் கூறியதாவது, இது மிகவும் அதிசியம் என்றே கூறலாம். தாயும் சேயும் நலமுடன் இருக்கின்றனர். நாங்கள் குழந்தையை விரலை ஸ்கேன் செய்து பாதிப்பு இல்லை என பெற்றோர்களுக்கு புரிய வைத்துள்ளோம். குழந்தை வளரும் போது 9 விரல்களுடன் நடக்க பழகி கொள்ளும் என தெரிவித்தனர்.

 

 

அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் மறைவு!

0

அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தராக பணியாற்றிய அனந்த கிருஷ்ணன் , 93 வயதுடைய இவர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.

 

இவர் கான்பூரில் உள்ள ஐஐடியில் தலைவராக பதவி வகித்தவர்.

 

பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்யும்படி இருந்த செயல்பட்ட குழுவில் இருந்தவர்களில் இவரும் ஒருவர்.

 

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக இரண்டு முறை பதவி வகித்துள்ளார்.

 

அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் கலந்தாய்வுக்கு ஒற்றை சாளர முறையில் எளிமையாக கலந்தாய்வு நடத்தும் திட்டத்தை வழிமுறை படுத்திய பெருமை இவரைச் சேரும்.

 

எந்தவித கட்டமைப்பு மில்லாமல் செயல்பட்ட 44 நிகர்நிலை பல்கலைக் கழகங்களை உரிமையை ரத்து செய்யக்கோரி பரிந்துரைத்த குழுவில் இவர் முக்கிய பங்காற்றியுள்ளார்.

பள்ளிக் கல்வித்துறையின் புதிய பாடத் திட்டத்திற்கு தயாரித்த இவரின் பணி மிகவும் பாராட்டத்தக்கதாகும் இருந்தது.

 

கணினி இணையத்தில் தமிழ் மொழியை எளிமை ஆக்குவதற்கு ஒருங்கிணைந்த தமிழ் மொழியை உருவாக்க உறுதுணையாக இருந்தவர் இவர்.

 

அரசியல் பின்புலம் மிகுந்தவர்கள் துணைவேந்தராக நியமிக்கப்பட வேண்டும் என சூழ்நிலைகள் இருந்தபோதிலும் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆன்லைனில் விண்ணப்பம் பெற்று தகுதியானவரை துணை வேந்தராக நியமித்த பெருமை அவரைச் சேரும்.

நாய்களிடம் இருந்து 8 பேருக்கு பரவிய கொரோனா தொற்று!!

0

மலேசியாவில் 8 பேருக்கு நாய்களிடம் இருந்து பரவிய கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மிகவும் அதிர்ச்சியை அளிக்கிறது.

ஐரோப்பிய நாட்டில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் பேராசிரியர் டாக்டர் கிரிகோரிகிரே இதைப் பற்றி கூறியுள்ளார்,
தென் கிழக்காசிய நாடான மலேசியாவில் நாய்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. நாய்களுக்கு இது வருவது புதிதல்ல, என்று கூறினர்.

மேலும் அவர், நான் மாணவர்களுடன் சேர்ந்த ஒரு கருவியை கண்டுபிடித்தேன் . அது எந்த மாதிரியான வைரஸ் செய்யும் கண்டுபிடிக்க முடியும்.
அப்பொழுது மலேசியாவில் உள்ள சர்வெக்கில் அப்பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளை பரிசோதிக்க பொழுது நாய்களிடம் இருந்து அவருக்கு பரவியது கண்டுபிடிக்கப்பட்டது என்று கூறினார்.

மேலும், நாங்கள் பரிசோதித்தால் மற்றும் மாதிரிகளை எடுத்தால் 301 மாதிரிகளை அமெரிக்காவில் உள்ள ஓஹியோ பல்கலைக்கழகத்தின் பிரபல தொற்று நோய் ஆராய்ச்சியாளர் அனஸ்தேசியா விளாசோவாவுக்கு அனுப்பினோம்.
அனஸ்தேசியா விளாசோவாவுக்கு கூறியதாவது, “நாய்களிடம் இருந்து மனிதர்களுக்கு அவ்வளவு எளிதாக கொரோனா பரவாது. அவ்வாறு பரவினாலும் மனிதர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தாது என்று அவர் கூறினார். அதனால் யாரும் பயப்பட தேவையில்லை” என்று கூறினார்.

கர்ப்ப காலத்தில் எச்சரிக்கை வேண்டும்! அறிகுறிகள் தெரியும் முன்பே வைரஸ் பரவலாம்!

0

Corona இரண்டாவது அலையில் வளர்ச்சி அடைந்த குழந்தைகள் மட்டுமில்லாமல் குறை பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகள் பாதிக்க படுகின்றனர்.

பிரசவத்தின் கடைசி வாரத்தில் corona தொற்று ஏற்படும் பொழுது, மன அழுத்தம் மற்றும் சரியான நேரத்தில் பரிசோதனைக்கு செல்ல முடியாமல் அவதிப்படும் பொழுது குறை பிரசவம் ஆகலாம். இது குழந்தைகளுக்கு வீட்டில் உள்ளவர்களிடம் இருந்து பரவலாம். இல்லை தாயின் தொப்புள் கொடி மூலம் பரவலாம்.

எனவே எச்சரிக்கை உடன் செயல்படுவது நல்லது. பச்சிளம் குழந்தைகளுக்கு அதிக பதிப்பு ஏற்படுவதால் அம்மா அப்பா தவிர வேறு யாரும் அருகில் செல்ல வேண்டாம். அவர்களும் முககவசம் அணிந்து கொள்ள வேண்டும்.

எனவே கர்ப்ப காலத்தில் சிறு அறிகுறிகள் இருந்தாலும் corona பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

ஒரு சிலருக்கு குழந்தை பெற்ற ஒரு சில நாட்களிலேயே corona உறுதி செய்யபடுகிறது. இது எப்பொழுது வந்தது என தெரியவில்லை என்று சொல்லுவார்கள். கடந்த ஒரு சில வாரமாக அறிகுறிகள் தென்படும் முன்பே தொற்று பரவுகிறது. தாய்பால் கொடுப்பதன் மூலம் corona பரவுகிறது என்பதற்கான சான்றுகள் இல்லை. எனவே தாய்பால் கொடுப்பது தவிர்க்க கூடாது. முக கவசம் அணிந்து கொள்ள வேண்டும்.

 

குறை பிரசவ குழந்தையைப் பொறுத்தவரை, நுரையீரல் முழு வளர்ச்சி அடைந்து இருக்காது. மூச்சு திணறல், செரிமான மண்டலம் கோளாறு, இதய கோளாறு இருப்பதும் இயல்பு. இதில் சில கொரோனா அறிகுறிகளாகவும் இருக்கலாம்.

 

முதல் அலை போன்று இல்லாமல் அறிகுறிகள் மாறுபடுகின்றன. முதல் அலையை விட இப்பொழுது தோலில் தடிப்பு, செரிமான கோளாறு, கண்களில் தொற்று வருகிறது.குறை பிரசவ கோளாறுக்கு மூன்று நாட்கள் சிகிச்சை செய்தும் எதிர்பார்த்த முன்னேற்றம் இல்லாவிட்டால், கொரோனா பரிசோதனை அவசியம். டாக்டர் தீபா ஹரிஹரன் பச்சிளம் குழந்தைகள் சிறப்பு மருத்துவர் கூறியுள்ளார்.

 

 

 

இந்த ராசிக்காரர்கள் கடினமாக போராட வேண்டும்! இன்றைய ராசி பலன்கள்

0

இந்த ராசிக்காரர்கள் கடினமாக போராட வேண்டும்! இன்றைய ராசி பலன்கள்

மேஷ ராசி:

     இன்று உங்களுக்கு சுமாரான பலன்களே ஏற்படும்.உங்கள் திட்டம் வெற்றி பெற திட்டம் போட வேண்டும்.கடினமாக போராடினால் சுலபமாக வெற்றி அடையாலாம்.உங்கள் துணையுடன் பொறுமையாக பேசுங்கள்.

ரிஷப ராசி:

     இன்று உங்கள் பொறுமையின் மூலம் வெற்றி அடைவீர்கள்.பணி விசயங்களில் தாமதம் ஏற்படும்.நிதிவசதி குறைவாக இருக்கும்.உடல் நலனில் அக்கறை தேவை.

மிதுன ராசி:

     உங்கள் அணுகுமுறை மூலம் வெற்றி காண்பீர்கள்.செயல்திறன் சிறப்பாக இருக்கும்.உங்கள் வீட்டில் மகிழ்ச்சி நிலவும்.பண வசதி சிறப்பாக இருக்கும்.

கடக ராசி:

     உங்களுக்கு சாதகமான நாள்.புது நண்பர்கள் கிடைப்பார்கள்.உங்கள் உழைப்பு நல்ல பலன்களை தரும்.பணியில் உற்சாகம் காட்டுவதன் மூலம் வெற்றி அடைவீர்கள்.இன்று இனிமையான தருணங்கள் அமையும்.

சிம்ம ராசி:

     இன்று எல்லா விசயங்களிலும் எச்சரிக்கை தேவை.திட்டமிட்டு செயல்பட வேண்டும்.நன்மதிப்பிற்கு களங்கம் வரும்.விழிப்புடன் இருக்கவும்.பணத்தேவைகள் பூர்த்தி ஆகும்.

கன்னி ராசி:

     இன்று உங்களுக்கு தடைகள் ஏற்படும்.பொறுமையை கையாளுங்கள்.இன்று அதிக பணி காணப்படும்.பணம் காரணமாக .

துலாம் ராசி:

     உங்கள் ஆர்வத்தை பெருக்கும் நாள்அன்பான உணர்வுகளை நான் மதிக்கிறேன் உங்கள் மதில் இப்படி தான் செய்யலாம்.

விருச்சிக ராசி:

எச்சரிக்கையான நாள்.விழித்து இருப்போம்,முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம்.பணியிட சூழலில் வெளியே செல்ல வேண்டாம்.வார்த்தைகளை கவனமாக பயன்படுத்துங்கள்.

தனுசு ராசி:

முயற்ச்சியில் கவனம் தேவை.உங்கள் பணியை நம்பிக்கையுடன் மேற்கொள்ளவும்.உங்கள் துணையுடன் உற்சாகமாக இருக்கலாம்.ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது.

மகர ராசி:

இன்று புத்திசாலியாக இருக்க வேண்டிய நாள்.இந்த போக்கு நற்பலன்களை ஏற்படுத்தும்.பணிசுமை கவலை அளிக்கும்.துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம்.

கும்ப ராசி:

உற்சாகமான நாளாக இருக்கும்.சூழ்நிலை இனிமையாக இருக்கும்.கடின உழைப்பிற்கு பலன் கிடைக்கும்.பணப்புழக்கம் சீராக இருக்கும்.மகிழ்ச்சியான நாளாக இருக்கும்.

மீன ராசி:

     இன்று நாள் மகிழ்ச்சியாக காணப்படும்.முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம்.உங்கள் திறமை மூலம் பணிகள் விரைவில் முடியும்.பண வரவு இருக்கும்.ஆரோக்கியமாக இருப்பீர்கள்.

பாபா செய்த லீலை! பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!

0

பாபா செய்த லீலை! பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!

ராஜஸ்தானில் பாபா சன்யாசி என்பவரால் தொடங்கப்பட்ட முகுந்த்புரா என்ற ஆசிரமம் உள்ளது.இது ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரை யடுத்த பங்கரோட்டா என்ற இடத்தில் உள்ளது.

இந்த இடத்திற்கு தினமும் 100 பேர் வந்து செல்வது வாடிக்கையான நிலையில், அந்த ஆஸ்ரமம், தற்போது பாபாவின் மகனான யோகிராம் மேத்தாவினால் நடத்தப்படுகிறது.

இந்நிலையில் யோகிராம் மீது ஒரு பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.அதில் 25 வருடங்களாக ஒரு பெண் அந்த ஆசிரமத்திற்கு வந்து சென்று கொண்டு இருந்தார்.

அப்போது அந்த பெண்ணிற்கு கடவுளின் பிரசாதம் என கூறி கஞ்சா கலந்த இனிப்புகளை வழங்கி யோகேந்திர மேத்தா அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த பெண் அவர் மீது புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.

இதே போல் பல பெண்கள் அவரால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறினார்.இந்த புகாரின் காரணமாக தலைமறைவாகி உள்ள பாபாவை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.