இந்திய வீரர் வென்ற பதக்கத்தை திரும்பப்பெற்றது ஒலிம்பிக் கமிட்டி!

0
121

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பதினோராவது பாராலிம்பிக்ஸ் போட்டி நடைபெற்று வருகிறது மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டியில் 162 நாடுகளைச் 4 ஆயிரத்து 403 வீரர் வீராங்கனைகள் பங்கேற்று இருக்கிறார்கள்.

இதில் பாரா ஒலிம்பிக் போட்டியில் நேற்று காலை நடந்த மகளிர் ஒற்றையர் டென்னிஸ் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை என்ற இடத்தை பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்..

அதோடு உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் வினோத் குமார் வெள்ளிப்பதக்கம் வென்றார். இன்று 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்திய வீராங்கனை அவனி லேகாரா தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார். இந்தியாவிற்கு இது முதல் தங்கப்பதக்கம் ஆகும்.

அதோடு வட்டு எறிதலில் இந்திய வீரர் லோகேஷ் வெள்ளி பதக்கம் வென்றிருக்கிறார், ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவிற்கு இரட்டை பதக்கங்களை பெற்று தந்திருக்கிறது. ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர்கள் தேவேந்திர செசாரியா வெள்ளிப் பதக்கமும் சுந்தர்சிங் வெண்கலப் பதக்கமும் வென்று இருக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில், வட்டு எறிதல் எப் 52 பிரிவில் இந்திய வீரர் வினோத்குமார் வெண்கல பதக்கம் வென்றதாக நேற்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதே சமயம் இந்த பிரிவுக்கான வெற்றி நிறுத்தப்பட்டுவிட்டது.

அதற்குக் காரணம் இந்திய வீரர் வினோத் குமார் வட்டு எறிதல் f52 பிரிவில் பங்கேற்பதற்கான தகுதி இல்லை என்று ஒலிம்பிக் கமிட்டி குழு தெரிவித்து இருந்தது. இது தொடர்பாக ஆய்வு செய்து பின்னர் முடிவு அறிவிக்கப்படும் என்றும் சொல்லப்பட்டு இருக்கிறது.

இந்த சூழ்நிலையில், பாரா ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற வினோத்குமாரின் பதக்கத்தை திரும்பப் பெறுவதாக ஒலிம்பிக் கமிட்டி தற்போது தெரிவித்திருக்கிறது. வட்டு எறிதல் 52 பிரிவில் பங்கேற்பதற்கான தகுதி வினோத்குமாருக்கு இல்லை என்று ஒலிம்பிக் கமிட்டி குழு தெரிவித்திருக்கிறது.