நோய்த்தொற்று பரவல் காரணமாக சிறிது காலம் பொறுத்து தான் ஆக வேண்டும்! அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி!

0
98

வழக்கமாக ஜூன் மாதம் 1ஆம் தேதி ஆண்டுதோறும் கல்வி ஆண்டு ஆரம்பிக்கும் நிலையில், 2020 மற்றும் 21 ஆம் ஆண்டிற்கான கல்வி ஆண்டு, 12ஆம் வகுப்பு தேர்வு தொடர்பாக உரையாற்றிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாணவர்களின் எதிர்காலம் எந்த அளவிற்கு முக்கியமாக இருக்கிறதோ, அதே அளவிற்கு அவர்களுடைய உடல் நலனும் முக்கியம் என்று தெரிவித்திருக்கிறார்.

நோய் தொற்றின் இரண்டாவது அலையின் எதிரொலியாக தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் மாநில பாடத்திட்டம் மற்றும் சிபிஎஸ்சி மாணவர்களுக்கான பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. வழக்கமாக ஜூன் மாதம் ஒன்றாம் தேதி புதிய கல்வி வருடம் ஆரம்பமாகும். இந்த சூழ்நிலையில், புதிய கல்வியாண்டு ஆரம்பித்திருக்கின்ற நிலையில், கல்லூரி போக வேண்டிய மாணவர்களுக்கு எப்போது பொது தேர்வு நடைபெறும் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

ஆகவே இதுகுறித்து திருச்சியில் நேற்று பத்திரிகையாளர்களிடம் உரையாற்றிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நோய்த் தொற்று பரவல் காரணமாக, எல்லா துறையினருக்கும் நடைமுறைச் சிக்கல் இருந்து வருகிறது. நோய்த்தொற்று பரவல் காரணமாக, ஒரு குறிப்பிட்ட காலம் வரையில் நாம் பொறுமையாக தான் இருந்தாக வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.

நோய்த்தொற்று பரவாமல் எந்த அளவிற்கு சீக்கிரமாக குறைகிறதோ அதற்கேற்றவாறு விரைவாக பொதுத் தேர்வு நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.மாணவர்களின் எதிர்காலம் எந்த அளவிற்கு முக்கியமானதாக இருக்கிறதோ அதே அளவிற்கு அவர்களுடைய உடலும் உயிரும் முக்கியமானதுதான் என்று தெரிவித்திருக்கிறார்.

இதற்கு முன்னதாக நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வருவதால் சிபிஎஸ்சி, ஐசிஎஸ்சி பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துவது குறித்து உச்சநீதிமன்றத்தில் மாணவர்களுடைய பெற்றோர்கள் சார்பாக வழக்கு போடப்பட்டு இருக்கிறது.

இந்த வழக்கை நேற்று விசாரணை செய்த உச்சநீதிமன்றம் மாணவர்களின் நலனை கருத்தில் வைத்து இந்த விவகாரத்தில் கொள்கை ரீதியான முடிவை இரண்டு நாட்களுக்குள் அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு அறிவுறுத்தி வழக்கு விசாரணையை ஜூன் மாதம் 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்து இருக்கிறது.