நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான அடுக்குமாடி வீடுகளை பிரதமர் மோடி நேற்றைய தினம் காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்திருக்கின்றார்.
டெல்லி பிடி மார்க் பகுதியில் இருக்கின்ற 80 வருட பழமையான 8 பங்களாக்கள் இருந்த பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வசிப்பதற்காக 76 குடியிருப்புகள் கட்டப்பட்டு இருக்கின்றன. மழைநீர் சேகரிப்பு, சூரிய மின்சக்தி, மற்றும் எரிசக்தி சேமிப்பு போன்ற முறைகளை பின்பற்றும் வகையில் கட்டப்பட்ட இருக்கின்ற இந்த குடியிருப்புகளை நேற்றைய தினம் ஒரு நிகழ்ச்சியில் காணொளி காட்சி மூலமாக பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இந்த விழாவில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சியின்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இந்த அடுக்குமாடி குடியிருப்புகளில் பசுமை கட்டடத்திற்கான விதிமுறைகள் பின்பற்றப்பட்டது இந்த புதிய அடுக்குமாடி வீடுகள் குடியிருப்புவாசிகள், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, பாதுகாப்பும், ஆரோக்கியமும், அளிப்பதாக இருக்கும் என்று தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தங்கும் இடவசதி அளிப்பது நெடுங்காலமாக ஒரு பிரச்சனையாக இருந்து வந்த நிலையில், இப்போது அதற்கான தீர்வு காணப்பட்டு இருக்கின்றது என்று தெரிவித்த பிரதமர், நாடாளுமன்ற செயல்பாடுகளில் ஆக்கப்பூர்வமாக ஒத்துழைப்பு அளித்து வரும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இப்போது புதிய வசதி கிடைத்து இருக்கின்றது என்று தெரிவித்தார்.
இளைஞர்களுக்கு 16 முதல் 18 வரையிலான வயது வரை ஒரு முக்கிய காலகட்டமாக கருதப்படுகிறது. என்று தெரிவித்த பிரதமர், நாம் 16வது மக்களவை பதவி காலத்தை 2019ஆம் ஆண்டு நிறைவு செய்து இருக்கின்றோம் எனவும், இந்த காலகட்டம் நாட்டுடைய முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றது எனவும், தெரிவித்தார். 17வது மக்களவையின் பதவிக்காலம் 2019ஆம் ஆண்டு ஆரம்பித்தது எனவும், இந்த காலகட்டத்தில் மக்களவையில் ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவுகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கின்றன என்று குறிப்பிட்டார் பிரதமர்.
தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலருக்கு டெல்லியில் குடியிருப்புகள் ஒதுக்கப்படவில்லை எனவும், அந்த குடியிருப்புகள் தங்களுக்கு வசதியாக இல்லை எனவும், தகவல்கள் வெளியாகின. ஆகவே தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்து நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்துகொண்டு வந்தனர். இந்த நிலையில், இப்போது அடுக்குமாடி குடியிருப்புகள் திறக்கப்பட்டு இருப்பதால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிம்மதியாக இருப்பார்கள் என்று தெரிவித்தார் பிரதமர்.