நயன்தாராவின் பணத்தை சுருட்டிய பிரபுதேவா…? – வெளியான தகவல் ஷாக்கான ரசிகர்கள்!!

0
450
#image_title

நயன்தாராவின் பணத்தை சுருட்டிய பிரபுதேவா…? – வெளியான தகவல் ஷாக்கான ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருவர் நடிகை நயன்தாரா. இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. தமிழ் சினிமாவில் ‘ஐயா’ படத்தின் மூலம் அறிமுகமானார். இதனையடுத்து, ‘சந்திரமுகி’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் அதிர்ஷ்டம் பெற்றார். இதனையடுத்து, இவர் அஜித், விஜய், சிம்பு உட்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்து நட்சத்திர நடிகையாக வலம் வருகிறார்.

ஒரு காலத்தில் நடிகை நயன்தாராவும், பிரபுதேவாவும் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். ஆனால், இவர்களுடைய காதல் ஏதோ ஒரு காரணத்திற்காக திருமணம் வரை சென்று தடைப்பட்டது.

இது குறித்து நயன்தாராவின் உறவினர்கள் நயன்தாராவிடம் எக்கச்சக்க பணத்தை பிடுங்கிக் கொண்டு பிரபுதேவா ஏமாற்றியதாக குற்றம் சாட்டி பேசினர்.

இதுதொடர்பாக அவர்கள் பேசுகையில், நயன்தாராவை கல்யாணம் செய்து கொள்வதாகக் கூறிவிட்டு, வேறு பெண்ணுடன் பிரபு தேவா நெருக்கம் காட்டுவதால் இந்த பிரிவு வந்ததாக தெரிவித்தனர். நயன்தாரா பிடிவாத குணம் அதிகம் என்று சொல்வதெல்லாம் தவறு. அவள் ஒரு அப்பாவி. யாரையும் எளிதில் நம்பிவிடுவாள். முதலில் சிம்புவிடம் ஏமாந்து நின்றார். பின்னர் பிரபு தேவாவிடம் ஏமாந்து போனாள். நடிகர் சிம்பு வல்லவன் படம் எடுக்கும் போது அவருக்கு பணப்பிரச்சினை ஏற்பட்டது. அவருக்கு நயன்தாரா கொடுத்து உதவினார். உதவி வாங்கிக்கொண்டு நயன்தாராவை சிம்பு ஏமாற்றிவிட்டார். இதன் பிறகு, பிரபுதேவாவை நம்பினாள். பிரபுதேவாவும் எங்கேயும் காதல் படத்துக்காகவும் நயன்தாரா பணம் வாங்கி ஏமாற்றிவிட்டார். அவர்களுக்கெல்லாம் பணம்தான் முக்கியமாக இருந்ததே தவிர, நயன்தாரா மேல் பாசம் கிடையாது. எல்லா பணத்தையும் ஏமாற்றி வாங்கிவிட்டனர் என்று தெரிவித்தனர்.

இந்த காதல் பிரச்சினையிலிருந்து மீண்டு வந்த நயன்தாரா சினிமாவில் என்ட்ரி கொடுத்து விட்ட இடத்தை பிடித்து லேடி சூப்பர் ஸ்டார் என்று மக்களின் அமோக ஆதரவைப் பெற்று நட்சத்திரமாக உயர்ந்துள்ளார்.

மேலும், இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து குடும்பம், பிள்ளை என தன் வாழ்க்கையை சிறப்பாக வாழ்ந்து வருகிறார்.