பிரதோஷ வழிபாடு செய்யும் முறை!

0
183

தேவர்களும் அசுரர்களும் அமுதம் வேண்டும் என்று திருப்பாற்கடலை கடைந்த சமயத்தில் ஆலகால விஷம் வெளிப்பட்டது. உலகத்தை அழிக்க வந்த அந்த விஷத்தை சிவபெருமான் அருந்தினார். அது அவருடைய கழுத்திலேயே நின்றுபோனது விஷத்தின் தாக்கம் காரணமாக, மயங்கிய சிவபெருமான் அந்த விஷத்தின் தாக்கத்திலிருந்து மீண்டு வந்த சிவபெருமான் நந்தியின் கொம்புகளுக்கு இடையே ஆனந்த தாண்டவம் ஆடி அருள்பாலிக்கிறார். அதுதான் தற்போது பிரதோஷம் என்று சொல்லப்படுகிறது இதற்கு தோஷம் இல்லாத நேரம் என்று பொருள் என சொல்லப்படுகிறது.வளர்பிறை, தேய்பிறை ஆகிய இரண்டு பட்சங்களிலும் வரும் திரயோதசி திதி அன்று பிரதோஷம் வரும். சூரியன் மறைவதற்கு முன்பாக மூன்றே முக்கால் நாழிகை சூரியன் மறைவுக்கு பின்னர் மூன்றே முக்கால் நாழிகையும் கொண்டது பிரதோஷ நேரம் சுமார் மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையில் என்று சொல்லப்படுகிறது.

வழக்கமாக இடமிருந்து வலமாக சுற்றி வந்துதான் இறைவனை நாம் வணங்குகிறோம். ஆனாலும் பிரதோஷ சமயத்தில் வலமும் இடமும் மாறி, மாறி வந்து ஈசனை வணங்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. இதற்கு சோம சுக்தப் பிரதட்சணம் என்று பெயர் என்று சொல்லப்படுகிறது.வில்வ இலையால் தொடுக்கப்பட்ட மாலையை சிவபெருமானுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.இந்தப் பிரதோஷ காலத்தில் நந்திக்கும், சிவபெருமானுக்கும், அபிஷேகங்களும், ஆராதனைகளும் செய்யப்படும் அதன் பின்னர் நந்தி வாகனத்தில் சிவபெருமானும், பார்வதியும் அமர்ந்து ஆலயத்தை மூன்று முறை வலம் வருவதை பிரதோஷ பூஜை என்று சொல்லப்படுகிறது. அப்படி வலம் வரும் சமயத்தில் வேதங்களை பாராயணம் செய்வதும், நாதஸ்வரம் இசைப்பதும், இறைவனை வணங்கும் செயலாகும் என்று சொல்லப்படுகிறது

விஷமருந்தி அதிலிருந்து மீண்ட பின்னர் சிவபெருமான் ஆடிய நடனம் நிகழ்ந்தது ஒரு சனிக்கிழமை என்று சொல்லப்படுகிறது. ஆகவே சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பு வாய்ந்தது என்று சொல்லப்படுகிறது. சிவப்பு அரிசி, நெய் விளக்கு, அருகம்புல் மாலை உள்ளிட்டவற்றால் நந்திக்கு பூஜிக்கவேண்டும். அதன்பின்னர் நந்தியின் இரு கொம்புகளுக்கு இடையே ஒரு பிடி அருகம்புல்லை வைத்து வணங்க வேண்டும். இதனால் சனியால் ஏற்படும் இன்னல்கள் விலகும் என்று சொல்லப்படுகிறது.

சித்திரை மாத வளர்பிறை திரயோதசி திதியில் வரும் பிரதோஷம் மகா பிரதோஷம் என்று சொல்லப்படுகிறது. சனி பிரதோஷம், சோமவார பிரதோஷம், தவிர்த்து 20 வகையான பிரதோஷங்கள் இருக்கின்றன.இந்த விரதம் இருப்பவர்கள் பகல் முழுவதும் சாப்பிடாமல் இருந்து பிரதோஷ வேளையில் சிவாலய தரிசனத்தை முடித்தபின்னர் உணவருந்த வேண்டும். தொடர்ச்சியாக பிரதோஷ விரதம் மேற்கொள்ள நினைப்பவர்கள் சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை உள்ளிட்ட நான்கு மாதங்களில் ஒன்றில் வரும் சனி பிரதோஷ நாளில் விரதத்தை ஆரம்பிக்கலாம் என்று சொல்லப்படுகிறது.