தயாரிப்பு நிறுவனத்தின் அதிரடி! நீங்கள் பயன்படுத்த தேவை இல்லை!
இந்தியாவில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பலரது செல்போன் உரையாடல்கள் ஒட்டுக் கேட்டதன், காரணமாக இந்த விஷயம் நாடாளுமன்றத்தில் பலமாக எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. அதிலும் முக்கியமான எதிர்க்கட்சித் தலைவர்கள் பத்திரிக்கையாளர்கள் நீதிபதிகள் சமூக ஆர்வலர்கள் போன்றோரின் செல்போன்கள் உளவு பார்க்கப்பட்டதால் பலரும் இந்த பெகாசஸ் விசயத்தில் சர்ச்சைகளை எழுப்பி வருகின்றனர். இதை தெரிவித்தது ஒரு அமெரிக்க நிறுவனம் ஆகும்.
எதிர்க்கட்சிகள் இந்த விஷயத்தை கையில் எடுத்ததன் காரணமாக, 10 நாட்களாக மழை கால கூட்டத் தொடர் நடந்தபோதும், நாடாளுமன்றம் முடங்கியே உள்ளது. இதற்கான தீர்வு சொல்லுங்கள் என எதிர்க்கட்சிகள் மிகவும் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். ஆனால் மத்திய அரசோ இது குறித்து பேசகூட தயாராக இல்லை. யாருடைய அனுமதியும் இன்றி அது எப்படி செயல்படும் என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். முக்கியமாக மோடி அரசை குற்றம் சாட்டி வருகின்றனர்.
மேலும் இதை யாராலும் ஜீரணித்துக் கொள்ள முடியாத அளவுக்கு உள்ளதால், வாதங்கள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன. இந்நிலையில் இந்த உளவு மென்பொருளை தயாரிக்கும் என்.எஸ்.ஓ குழுமம் இதன் காரணமாக திடீர் அதிரடியில் இறங்கியுள்ளது. சில நாடுகளில் அரசு அமைப்புகள் இந்த பெகாசஸ் உளவு மென்பொருளை பயன்படுத்துவதை அந்த நிறுவனமே தடை செய்துள்ளது.
குறிப்பாக சவூதி அரேபியா, துபாய், மெக்சிகோ நாட்டின் அரசு அமைப்புகள் தடை பட்டியலில் இடம் பெற்றிருப்பதாக தி வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. முதன் முதலில் நமக்கு பெகாசஸ் மூலம் ஒட்டு கேட்கப் பட்டது என்ற விஷயத்தை சொன்னது கூட இதே செய்தி நிறுவனம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.