ஜம்மு-காஷ்மீர் இளைஞர்களை பற்றி பேசிய ரெயினா

0
194
சுரேஷ் ரெய்னா உத்தர பிரதேச மாநிலத்தில் வசித்து வருகிறார். இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக களம் இறங்கி விளையாடி வந்தவர் சுரேஷ் ரெய்னா. இவர் ஜம்மு-காஷ்மீரில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள சிறுவர்களுக்கு பயிற்சி அளித்து திறமைகளை வெளிக்கொண்டு வர விரும்புவதாக தெரிவித்துள்ளார். இதற்காக அம்மாநில போலீஸ் டிஜிபி-யிடம் அனுமதி கோரியுள்ளார். நான் 15 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட் துறையில் ஒரு அடையாளத்தை பதித்துள்ளேன்.
இதனால் நான் பல ஆண்டுகளாக கற்றுக்கொண்ட அறிவு மற்றும் திறன்களைப் பயன்படுத்திக்கொண்டு அடுத்த தலைமுறைக்கு அதை கொண்டு செல்ல விரும்புகிறேன். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள இளைஞர்களை திறமைகளை வெளிக்கொண்டு வருவதுதான் என்னுடைய நோக்கம். ஏற்கனவே நான் காஷ்மீர் பண்டிட்தான். எனது அப்பா திரிலோக் சந்த் அங்கிருந்து வந்தவர்தான். அம்மா தரம்சாலா மாநிலத்தைச் சேர்ந்தவர்’’ எனத் தெரிவித்துள்ளார்.
Previous articleகோடிக்கணக்கில் மோசடி செய்த செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றம் கொடுத்த ஷாக்!!
Next articleநான் சந்தித்த வேகப்பந்து வீச்சாளர்களில் சிறந்தவர் இவர்தான் – விராட் கோலி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here