தமிழக அரசை ரைட் லெஃப்ட் வாங்கும் ராமதாஸ்! விவசாயிகளுக்கு அழுத்தம் கொடுத்து வேடிக்கை பார்க்கிறதா?
விவசாயிகள் தாங்கள் பயிரிடப்படும் பயிர்கள் பாதுகாப்பாக இருக்குமா என்ற நோக்கில் அரசு அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக அறிவித்தது தான் பயிர் காப்பீட்டு திட்டம்.ஏனென்றால் எதிர்கொள்ளும் இயற்கை சீற்றங்களால் எது வேண்டுமானாலும் நடக்கும்.இதனால் விவசாயிகள் அதிக அளவு பாதிக்கப்படுவர்.இவர்களுக்கு நம்பிக்கை கூட்டும் விதமாக அரசு அமர்த்தியா திட்டம்தான் பயிர் காப்பீடு. இந்தத் திட்டத்தில் ப்ரீமியம் செலுத்துவதற்கு ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுத்துள்ளனர்.இந்த கால அவகாசம் போதுமானதாக இல்லை மேலும் இரு வாரங்களுக்கு கால அவகாசத்தை நீடிக்குமாறு பாமக தலைவர் ராமதாஸ் தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார். அதேபோல இந்த காப்பீடு ஆனது குறுவை பருவத்தில் பயிரிடப்படும் மக்காச்சோளம் ,உளுந்து ,துவரை போன்ற பயிர்களுக்கு மட்டுமே ஊறியது எனக் கூறினர்.
அதனால் அதனை பயிரிடும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.ஆனால் குறுவை பருவத்தில் பயிரிடப்படும் நெல், தட்டைப்பயிறு ஆகியவற்றிற்கு பயிர் காப்பீடு வழங்கப்படாது என தமிழக அரசு கூறியிருந்தது.அந்தப் பயிர்களை பயிரிடும் விவசாயிகளுக்கு அது ஏமாற்றத்தையே அளித்தது.நாம் உண்ணும் உணவான நெல் பயிருக்கு காப்பீடு வழங்காமல் மற்ற பயிர்களுக்கு தமிழக அரசு காப்பீடு வழங்குவது அவர்களுக்கு எந்தவித பயனும் இல்லை என ராமதாஸ் அறிவுறுத்தினார்.அதேபோல குறுவை பருவத்தில் காப்பீடு செய்யப்படும் பயிர்களை விட நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளே அதிகம்.
எனவே அதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு அதற்கும் பயிர் காப்பீடு அளிக்க வேண்டும் என்றார்.தற்பொழுது 5 லட்சம் ஏக்கர் பரப்பு வரை குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டு இருக்கிறது. வரும் காலங்களில் ஏற்படும் இயற்கை சீற்றங்களால் ஏதேனும் பாதிப்புகள் இந்த குறுவை சாகுபடி செய்பவர்களுக்கு உண்டாகும். அப்பொழுது அவர்களுக்கு மாநில பேரிடர் நிதியிலிருந்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு கொடுத்தாலும் ,பயிர் காப்பீடு திட்டத்தின் மூலம் கொடுக்கப்படும் தொகையை ஒப்பிட்டு பார்க்கும்போது பேரிடரின் போது மாநிலங்களவை நிதியிலிருந்து கொடுக்கும் தொகை மிகவும் குறைவானதே.அந்தத் தொகை அவர்கள் பயிரிட வாங்கிய பொருள்களின் விலைக்கு கூட ஈடாகாது என்றார்.தற்பொழுது மத்திய அரசின் பயிர் காப்பீட்டு திட்டத்தை தமிழக அரசு கொண்டுவர நேர்ந்தால் பல நெருக்கடிகளை சந்திக்க நேரிடும்.
ஏனெ்றால் முதலில் மத்திய அரசு 40 விழுக்காடு அளவிற்கு காப்பீட்டு பங்கை அளித்தது. ஆனால் தற்போது 25 முதல் 30 சதவீதம் என்ற அளவிற்கு குறைத்து விட்டது. இதுபோன்ற பல காரணங்களால் தமிழக அரசு நெல் பயிர் சாகுபடி காப்பீட்டு திட்டத்தை கொண்டு வர முடியவில்லை. இருப்பினும் இதனை அனைத்து சூழ்நிலைகளையும் கடப்பது அரசனுடைய வேலை என்று கூறினார். அதற்குப் பதிலாக நெல் சாகுபடிக்கு காப்பீடு தொகை வழங்காமல் உழவர்களுக்கு அழுத்தம் கொடுப்பதும் வேதனைக்குரிய விஷயமாக உள்ளது என்றார். இத்தகைய நிலையை தமிழக அரசு மாற்ற வேண்டும். மேலும் குறுவை நெல் சாகுபடிக்கும் ,தட்டை பயிருக்கும் பயிர் காப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.