தனுசு -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மனதில் இனம் புரியாத சந்தோஷம் குடிகொள்ளும் நாள்!!

தனுசு -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மனதில் இனம் புரியாத சந்தோஷம் குடிகொள்ளும் நாள்!!

தனுசு ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மனதில் இனம் புரியாத சந்தோஷம் குடிகொள்ளும் நாள். கணவன் மனைவியிடையே அதி அற்புதமான ஒற்றுமை நிலவும். ஆகையால் வெளியிடங்களுக்கு சென்று மகிழ்வீர்கள்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரலாம். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் சுபிட்சகரமாக நடைபெறும். உடல் ஆரோக்கியம் சீராக ஆனந்தமாக காணப்படுவீர்கள். இல்லத்தில் நல்ல காரியங்கள் நடைபெற்றதற்கு உண்டான அறிகுறிகள் வந்து சேரும். மாணவ மாணவிகள் கல்வியில் திறம்பட செயலாற்றுவார்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனுகூலமாக செயல்படுவார்கள். கொடுக்கல் வாங்கல் மிகச் சிறப்பாக இருக்கும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு சந்தோஷமான செய்தி ஒன்று வந்து சேரும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு கணவனின் அன்பு ஆதரவும் சந்தோஷத்தை கொடுக்கும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சாம்பல் நிற ஆடை அணிந்து ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.