மிக நீண்ட இடைவேளைக்குப் பின்னர் குறைந்த பெட்ரோல் டீசல் விலை!

0
204

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த விதத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் நிர்ணயம் செய்து வருகின்றன.

இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஆக இருந்து வரும் பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயம் செய்கின்றன. நோய்த்தொற்று காரணமாக, சென்ற மார்ச் மாதம் முதல் மே மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் ஒரே விலையில் நீடித்தது. இந்த நிலையில், ஜூன் மாதம் முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன.

இந்த சூழ்நிலையில், தமிழ்நாட்டில் நீண்ட தினங்களுக்கு பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்திருக்கிறது. ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 12 காசுகள் குறைந்து 99 08 காசுக்கும், ஒரு லிட்டர் டீசலின் விலை 14 காசுகள் குறைந்து 93 38 காசுக்கும் விற்பனையாகி வருகின்றது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்து இருக்கிறது.

Previous articleஅப்பாடா ஒரு வழியா முடிஞ்சது! 17 மாதங்களுக்குப் பிறகு நேரடி விசாரணையில் இறங்கிய உச்சநீதிமன்றம்!
Next articleமது பிரியர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த தமிழக அரசு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here